திங்கள், 26 டிசம்பர், 2016

எஸ்.செந்தில்குமார்

புத்தகத்தின் பெயர் சிக்கிமுக்கி சிறுகதைகள். Chikkymukky.com மின்னிதழில் வெளிவந்த கதைகளின் தொகுப்பு என்பதால்  அதற்கு  அப்படியொரு பெயர். புதுமைப்பித்தன் பதிப்பகம். தாராகணேசன் தொகுப்பு.இத்தொகுப்பில் பிரபஞசன்,  வண்ணதாசன், நாஞ்சில் நாடன், சமயவேல் , லக்ஷ்மி சரவணக்குமார், என பலர் எழுதிய கதைகளின் தொகுப்பு இந்நூல். எஸ்.செந்தில்குமாரின் கதை  ஒன்றும் அதில் இடம்பெற்றிருக்கிறது.அக்கதை அதிகாலைத் தற்கொலையின் கதை. இக்கதைப்பற்றி சொல்லியாக வேண்டும்.  சரஸ்வதி, தியாகராஜன் இருவரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். சரஸ்வதியின் கொழுந்தன் தியாகராஜன். கணவன் இருக்கையில் கணவனின் தம்பியை சேர்த்துகொள்கிறாள் சரஸ்வதி. இதனால் கணவன் தற்கொலை செய்துகொள்கிறார். தந்தை இறக்க காரணமான அம்மாவையும், சித்தப்பாவையும் மகள்கள் அடித்து விரட்டுகிறார்கள். காலத்தின் பிற்பகுதியில் அவளது மருமகன்களில் ஒருவர் படி தாண்டி மாமியாரிடம் ' நீ புருஷன் இருக்கையில் இன்றொருத்தனை சேர்த்துகொண்டதைப் போல நீ பெத்தவள் நான்  இருக்கையில் வேறொருத்தனிடம் படுத்திருக்கிறாள்...என்ன வளர்ப்போ...ஆ...த்தூ.. ' எனத்துப்பிச் செல்கிறான். இந்த அவமானம் இருவரையும் தற்கொலை க்கு தூண்டியிருக்கிறது. அதற்கு பிறகும் கதை தேவையின் பொருட்டு நீண்டாலும் விமர்சனம் தன் மேல் விழுந்த அதே பலி மகள் மீது விழுகையில் பெண்களால் பொறுத்துக்கொள்ளமுடிவதில்லை என்பதை காட்டி நிற்கிறது. நல்ல கதை. எஸ்.செந்தில்குமார்  அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

1 கருத்து: