முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விமர்சனத்தின் மீது விமர்சனம்


தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. அருமையான  அலசல்.
எனது கதைகள் சாதாரணமாக பெண்களுக்குத்தான் பிடித்தமானவை. ஆண்களை நான் மட்டம் தட்டுவதாக எண்ணிக் குமுறுவர். நீங்களாவது புரிந்துகொண்டது நிறைவாக இருக்கிறது.
`ஒரு எழுத்தாளர்..' கதை வெளியானதும், ஒரு வாசகி இரவெல்லாம் தூம்மம் வராமல் தவித்ததாகச் சொல்லி, என்னை அதிகாலையிலேயே தொலைபேசிமூலம் எழுப்பி, `பெண்கள் உரிமையைப்பற்றி எழுதும் நீங்கள்கூட இப்படி எழுதலாமா?' என்று மிகவும் வருந்தினாள். `நாமும் இப்படி இருக்கக்கூடாது என்று எடுத்துக்கொள்ளுங்களேன்!' என்றேன்.  ஆனால் உங்களுக்குப புரிந்திருக்கிறது..

நிர்மலா ராகவன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...

சிறுகதைப் போட்டி

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் சரசு இராமசாமி அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிறுகதைப்போட்டி முதல் பரிசு ₹ 6000 இரண்டாம் பரிசு ₹ 4000 மூன்றாம் பரிசு ₹ 2000 ஆறுதல் பரிசு மூன்று பேருக்கு ₹ 1000 கடைசி தேதி ஏப்ரல் 30 முகவரி முனைவர் இரா. செல்வி C/O  திருமதி ரேணுகா நாகராஜ் 55, திரு.வி.க வீதி ஹோல் காலேஜ் பீளமேடு கோவை 641014 r.selvi1957@gmail.com