ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

தமிழ் வளர்ச்சித்துறை நூல் போட்டி

தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்படும், சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு போட்டிக்கு 2016ல் வெளியிடப்பட்ட நூல்கள், 33 வகைப்பாடுகளின் கீழ் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு வகைப்பாட்டில், ஒரு நூல் தேர்வு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு 30 ஆயிரம் ரூபாய்; பதிப்பகத்தாருக்கு, 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் விபரங்களை, www.tamilvalarchithurai.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை எழும்பூர், தமிழ் சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்திலும், நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, விண்ணப்பம் பெறலாம்; ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சனி, 29 ஏப்ரல், 2017

பயனுள்ள இணைய தளங்கள்

சான்றிதழ்கள் :- 1) பட்டா / சிட்டா அடங்கல் http://taluk.tn.nic....chitta_ta.html… 2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட http://taluk.tn.nic...._ta.html?lan=ta 3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet...n/EC.asp?tams=0 4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் http://www.tn.gov.in...forms/birth.pdf http://www.tn.gov.in...forms/death.pdf 5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ் http://www.tn.gov.in...t-community.pdf 6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ் http://www.tn.gov.in...cert-income.pdf C. E-டிக்கெட் முன் பதிவு 1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு http://tnstc.ticketc...in/TNSTCOnline/ http://www.irctc.co.in/ http://www.yatra.com/ http://www.redbus.in/ 2) விமான பயண சீட்டு http://www.cleartrip.com/ http://www.makemytrip.com/ http://www.ezeego1.co.in/ D. E-Payments (Online) 1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி http://portal.bsnl.i...iles/login.aspx 2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி https://www.oximall.com/ http://www.rechargeitnow.com/ http://www.itzcash.com/ 3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி http://www.itzcash.com/ https://www.oximall.com/ http://www.rechargeitnow.com/ 4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி 5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி http://www.ebay.co.in/ http://shopping.indiatimes.com/ http://shopping.redi...ping/index.html 6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி http://www.icicidirect.com/ http://www.hdfcsec.com/ http://www.religareonline.com/ http://www.kotaksecurities.com/ http://www.sharekhan.com/ E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online) 1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் https://www.sbi.co.in/user.htm… http://www.indianbank.in/education.php http://www.iob.in/vidya_jyothi.aspx http://www.bankofind.../eduloans1.aspx http://www.bankofbar...fs/eduloans.asp http://www.axisbank....cation-Loan.asp http://www.hdfcbank....n/el_indian.htm 2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி http://www.tn.gov.in/dge/ http://www.tnresults.nic.in/ http://www.dge1.tn.nic.in/ http://www.dge2.tn.nic.in/ http://www.Pallikalvi.in/ http://www.results.southindia.com/ http://www.chennaionline.com/results 3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய http://www.tn.gov.in/dge 4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி http://www.classteacher.com/ http://www.lampsglow.com/ http://www.classontheweb.com/ http://www.edurite.com/ http://www.cbse.com/ 5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய http://www.kalvisolai.com/ 6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி http://www.tnpsc.gov.in/ http://www.tnpsctamil.in/ http://www.upsc.gov.in/ http://upscportal.com/civilservices/ http://www.iba.org.in/ http://www.rrcb.gov.in/ http://trb.tn.nic.in/ http://www.tettnpsc.com/ 7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி http://www.employmentnews.gov.in/ http://www.omcmanpower.com/ http://www.naukri.com/ http://www.monster.com/ .இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய http://www.ssbrectt.gov.in/ http://bsf.nic.in/en/career.html http://indianarmy.nic.in/ 9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய http://nausena-bharti.nic.in/ 10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி http://www.skype.com/ http://www.gmail.com/ http://www.yahoochat.com/ http://www.meebo.com/ F. கணினி பயிற்சிகள் (Online) 1) அடிப்படை கணினி பயிற்சி http://www.homeandlearn.co.uk/ http://www.intelligentedu.com/ http://www.ehow.com/...c-computer-tra… 2) சிறார்களுக்கு கணினி பயிற்சி http://www.ehow.com/...ter-training-c… 3) இ – விளையாட்டுக்கள் http://www.zapak.com/ http://www.miniclip.com/ http://www.pogo.com/ http://www.freeonlinegames.com/ http://www.roundgames.com 4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள் http://www.google.com/ http://www.wikipedia.com/ http://www.hotmail.com/
இளவேனில் பதிப்பகம் நடத்தும் எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவுத் சிறுகதைப்போட்டி பரிசுகள் ₹ 5000, ₹3000,₹2000 கடைசி நாள் 30.06.2017 மின்னஞ்சலில் மட்டும் கதை அனுப்பப்பட வேண்டும் iectvdm@gmail.com நன்றி வே.ரத்தினசபாபதி சென்னை

வியாழன், 27 ஏப்ரல், 2017

நூல்கள் வரவேற்கப்படுகின்றன

பாரதி கலை இலக்கியப் பேரவை சிறுகதை, கவிதை, கட்டுரை நூல்களுக்கானப் போட்டி 2015 முதல் 2017 ஜூலை மாதம் வரை வெளியிட்டுள்ள நூல்கள் பரிசுகள் தலா ₹4000 , ₹2000 மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும். கடைசி தேதி 15.7.2017 முகவரி கவிஞர் பரதன் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை பாரதி அச்சகம் , அமராவதி திரையரங்கச் சந்து கம்பம் 625516 உத்தமபாளையம் வட்டம் தேனி மாவட்டம்

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2017 எட்டு பக்கங்களுக்கு மிகாமல். கடைசி தேதி ஜூன் 15. பரிசுகள் ₹ 10000 , ₹7000,₹5000. முகவரி அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி 2017 கல்கி பில்டிங்க்ஸ் 47 NP ஜவாஹர்லால் சாலை ஈக்காடுதாங்கல் சென்னை 32. தகவல்- கல்கி வார இதழ்.

திங்கள், 24 ஏப்ரல், 2017

பொன்.குலேந்திரன் - கனடா எழுத்தாளர். அக்னிக்குஞ்சு இணைய இதழ் வழியே இவரது படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்து பல கதைகளை உடனுக்குடன் விமர்சனம் செய்திருக்கிறேன். அவரது விதி என்கிற ஒரு கதையை சற்று ஆழமாக விமர்சனம் செய்யப்போய் நேரடி அழைப்பிற்கு வந்தார். அவ்வபோது அவரது படைப்புகளை இணைய வழியில் அனுப்பி வந்தவர் அவரது நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சமீபத்தில் அவர் வெளியிட்ட இரண்டு நூல்களை எனக்கு அனுப்பி வைத்தார். 1. Generation ( the story of a estate worker) 2. Strange Relationship Generation நாவலை முதலில் ஆங்கிலத்தில் எழுதி பிறகு அதை தமிழில் குறுநாவலாக வடிவாக்கம் செய்ததை எனக்கு அனுப்பி வைத்தார். நான் அதை ஒவ்வொரு அத்யாயமாக வாசித்து விமர்சனம் எழுதிக்கொண்டு வந்தேன் . கனடாவிலிருந்து அவர் எழுதியிருந்தாலும் கதை நமூர் திருநெல்வேலி வழியே சிலோனில் அடைக்கலம் கொள்கிறது. சிங்களர்கள் இவருடைய பார்வையில் வேறொரு விதமாகத் தெரிகிறது. எனது தாத்தா கண்டியில் தேயிலைத் தோட்டத்தில் வேலைப்பார்த்ததும் என் அம்மா கண்டியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டதன் அடிப்படையில் தலைமுறை நாவலை ஒப்பிட்டு வாசித்தேன். வாசித்ததன் அடிப்படையில் எந்த ஒளிவுமறைவும் அற்று இந்நாவலைக் குறித்து விமர்சனம் எழுதியிருக்கிறேன்.
தலைமுறைகள் தலைமுறை நாவல் குறித்த விமர்சனம்.  அத்யாயம் 1 வீராசாமி பற்றிய அறிமுகமே அசத்தலாக  இருக்கிறது.  தங்கையின் மகளை மணந்துகொள்வது எங்கள் ஊர் பகுதியிலும் உண்டு . அப்படியானால் வீராசாமிக்கும் அவளது மனைவி நாச்சியாருக்கும் இடைப்பட்ட கால இடைவெளி புருவத்தை ஏற்றியிறக்க வைக்கிறது. முத்துக்குளித்தல் சம்பவம் பற்றிய காட்சி வடித்தலும் மண்பாடு ஊர் பெயர்காரணமும் அதன் வழியே கதையின் போக்கும் பெரிய எதிர்பார்ப்பை கூட்டுகிறது.  அத்யாயம் 2 கதை தலைமுறை கடந்து பாய்ச்சல் எடுக்கிறது. கதை சொல்லி வகை புதினமாக இருக்கக்கூடுமென தெரிகிறது . வீராசாமியின் மகன் கண்ணன் அவருடைய மகன் செல்லச்சாமி, வள்ளியம்மா என ஒரு அத்யாயத்திற்குள் மூன்று தலைமுறை உள்ளடக்க ஏன் இத்தனை பாய்ச்சல்.  முத்துக்குளியலிருந்து உப்பளத்திற்கு கண்ணன் கொண்டுவரப்படுவது தலைமுறை மாற்றம். உப்பளத்திலிருந்து இலங்கைக்கு இடம் பெயர்வதையும் அப்படியாக எடுத்துகொள்ளலாம். ஆனால் அக்காலத்தில் இலங்கை கண்டி என்றல்லவா அழைக்கப்பட்டிருக்க வேண்டும். உப்பளத்திலிருந்து எதிரொளிக்கும் சூரிய ஒளி கண்ணைப் பாதிக்கும் என்பது புது தகவல். கண்ணன் மீனாட்சி நட்பு இன்னும் கொஞ்சல் காதலழகு படுத்திருக்கலாம். அத்யாயம் இரண்டு பாத்திரங்களை அறிமுகம் செய்யும் வேலையைச் செய்திருக்கிறது. ஆனாலும் வாசிப்பு ஓட்டத்தில் தொய்வு  ஏற்படவில்லை. அத்யாயம் 3 தகிலுடையதாக இருக்கிறது. தூத்துக்குடி வழியாக இராமேஸ்வரம் சென்று அங்கேயிருந்து ஒரு படகு மூலமாக சிலோன் செல்கிறார். கடல் வழிப் பயணத்தின் போது ஒரு சிறுவன் தவறி கடலுக்குள் விழுந்துவிட அவனை கண்ணன் காப்பாற்றுமிடம் சிலிர்க்க வைக்கிறது. முத்து குளிக்க பழக்கப்பட்ட கண்ணனுக்கு இது சாத்தியமான ஒன்றுதான். ஏழு தீவுகள் அதிலொரு தீவு நயினாத்தீவுக்கு சென்றடையும் கண்ணனுக்கு படகோட்டி மூலம் ஒரு கோயிலுக்குள் தங்கும் வாயப்பு கிடைப்பதும் பிறகு ஒரு நகைக்கடையில் வேலைக் கிடைப்பதும் ஆறுதல் தருகிறது. ஏழு தீவுகளின் பெயர்களை ஆசிரியர் பட்டியலிட்டிருக்கலாம்....  அத்யாயம் நான்கு மற்றும் ஐந்து. நான்காவது அத்யாயம் கோவில் வருமானம் நகைக்கடை வருமானத்தை விடவும் தேயிலை தோட்டத்தில் வேலை  செய்தால் அதிக சம்பளம் கிடைக்கும் என்பதை வாசகர்களுக்கு புரிய வைக்கிறது. அத்யாயம்  ஐந்து மிகச்சிறப்பானப் பதிவு. தேயிலைத் தோட்டத்தினை குதிரையில் சுற்றிவந்த திருப்தியைத் தருகிறது. குறிப்பாக ஒரு அறைக்குள் நான்கைந்து குடும்பங்கள் தங்குவதும் பாலியல் சீண்டலும் கழிப்பறை , குளியலறை  அற்ற வசதியும் நாவலில் சுருக்கமாகவும் அதே நேரம் அடர்த்தியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோன் கதாபாத்திரம் நாவலுக்கு ஒரு வலுவைக்கொடுக்கிறது. கண்ணனின் குடும்பம் இணைந்திருப்பது ஆறுதல் தருகிறது. அத்யாயம் ஆறு , ஏழு  நாவலில் முக்கியக் கதாப்பாத்திரம் யாரென்று தெரியாதளவிற்கு பாத்திரத்தின் பெருக்கம் கூடிக்கொண்டே போகிறது. வீராசாமி - கண்ணன்- செல்லச்சாமி - வேலுச்சாமி கதையின் ஓட்டத்தில் பாத்திரப்படைப்பு மனதில் நிற்பதில் குழப்பம் வருகிறது.  மங்கேலியா புலூம்பீல்ட் தேயிலைத் தோட்டம் செல்லசாமிக்கு தபால் துறையில் வேலைக்கிடைப்பது , சரஸ்வதியுடன் திருமணம் வீரசாமியின் மரணம் தாய் சொந்த மண்ணை விட்டு வர அடம் பிடிப்பது போன்ற காட்சிகள் வெகுவாக மனதைக் கவர்கிறது. வேலுச்சாமி எடுக்கப்போகும் முடிவை அறிந்துகொள்ள அடுத்த  அத்யாயம் நோக்கி உந்துதலை  கொடுக்கிறது. நின்று எழுதவேண்டிய நாவலை ஓடிக்கொண்டு எழுதியிருப்பதாக நினைக்கத்தோன்றுகிறது. பார்க்கலாம். அத்யாயம்  எட்டு மற்றும் ஒன்பது வேலுச்சாமியை முக்கியப் பாத்திரமாகக் கொண்டு நகர்கிறது. அவனது கணித அறிவு மற்றும் சமயோசிதப் பேச்சு அவனை மேற்படிப்பை நோக்கித் தள்ளுகிறது. முதலில் வேலைக்காரனாக சேர்த்துக்கொள்ளப்படும் அவன் வீட்டின் முதலாளியே அவனைக் கொண்டுபோய் ஒரு பள்ளியில் சேர்ப்பதும் அவனது புத்திக் கூர்மையைப் பாராட்டுவதும் முதலாளி தொழிலாளி  உளவியலுக்கு முரணான ஒன்று. இவர்கள் இருவரும் தமிழர்கள் என்பதால் இனம் ரீதியில் அச்சிறுவனை அவன் கொண்டாடச் செய்திருக்கலாம். இந்த இடத்தில் ஒரு பிரபலமான ஒரு சிறுகதை  ஒன்றைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.  இஸ்மத் சுக்தாய் எழுதிய கல்லு என்கிற உருது சிறுகதை.  தொழிலாளி -முதலாளி பந்தத்தின் உளவியலை மிகச்சரியாக படம் பிடித்த சிறுகதை இது.   தன் வீட்டில் வேலைக்காரனாக இருந்த ஒருவன் படித்து உயர் பதவியில் அமர்ந்து அந்த வீட்டில்  பால்ய பருவத்தில் விளையாடித்திருந்த வீட்டு எஜமானியின் மகளை பெண் கேட்டு வர எஜமானியின்  சுயமரியாதை  அவனுக்கு இடம் கொடுக்காது.  அவனை உதாசீனப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றுவாள். நிஜ வாழ்வில் இது உண்மை. ஆனால் தலைமுறை  நாவலில் வேலுச்சாமி முதலாளியால் பெருதும் கொண்டாடப்பட  தமிழினம் என்கிற ஒற்றை  உணர்வைத் தவிர வேறொன்றையும் பெரிதாக யோசிக்கமுடியவில்லை. அவன் பெரியப் பொறுப்பிற்கு சென்றதன் பிறகு நேர்மையோடு செயல்படுவதும் அவனது மேஜையில் கோப்புகள் தங்காமல் பார்த்துகொள்வதும் விலைப் போகாமல் இருப்பதும் கதையின் போக்கை அழகுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் செய்கிறது. கதையில் சிங்களவர்களின் குறுக்கீடுகளும் வரம்பு மீறல்களும் இல்லாமல் இருப்பது நாவல் மீதான பெருத்த எதிர்ப்பார்ப்பை குறைப்பதாக இருக்கிறது.   தொடரும்.....பதாக நினைக்கத்தோன்றுகிறது. பார்க்கலாம். இறுதிப்பகுதி வேலுச்சாமி தேயிலைத் தொழிலாளர்களுக்கு பிரச்சனையை தலைமையேற்று பேசுகையில் சுருக்கெழுத்து பாத்திரமாக சிங்களப் பெண் தாரகா  அறிமுகமாகிறாள்.அவள்  சிலோனை கடைசியாக ஆண்ட சிங்கள வம்சத்தின் குடும்பப்பெண்ணுடன் ஒப்பீடு செய்யப்படுகிறாள். இருவரும் குடும்ப ஒத்துழைப்புடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். கலப்பு திருமணம் எங்கு நடந்தால் என்ன வரவேற்கப்பட வேண்டிய  ஒன்றுதான். அத்யாயம் பதினொன்று நாவலின் மிக முக்கியமானது. இந்த நாவல் எழுதப்படுவதற்கான நோக்கம் இதுதான் எனத் தெரியவருகிறது. தேயிலைத் தோட்டத்தில் வேலைச் செய்பவர்களுக்கு வீடு , கழிவறை மற்றும் குளியலறை, பென்சன் , குழந்தைகள் கல்விக்கற்க பள்ளிக்கூடம் , மது கட்டுப்பபாடு , மருத்துவ வசதிகள் செய்துதரப்படும் என கொள்கை முடிவு எடுப்பது நாவலின் மைய நீரோட்டத்தை கனம் கொள்ள வைக்கிறது.  வேலுச்சாமி தம்பதிக்கு ஒரு மகன் பிறக்கிறான். அவன் ஈ.வெ.ராமசாமி பிறந்த நாளன்று பிறந்ததால் அப்பெயர் சூட்டப்படுகிறது. அவன் எழுத்தாளர்  ஆகிறான். அவன்தான்  தேயிலைத் தொழிலாளர்களின் இன்னல்களை கருத்தில் கொண்டு அவர்கள் வாழ்ந்த இடங்களை  நேரில் பார்த்து தலைமுறை என்கிற நாவலை எழுதுகிறான்.  கடைசி அத்யாயம் கர்ப்பம் தரித்த வரலாற்றைக் கொண்டுள்ளது. வீராசாமியில் தொடங்கி இராமசாமியில் முடியும்  இந்நாவலின் எழுதப்படாத முன் பகுதிகளும் வீராசாமிக்கு முந்தைய தலைமுறை தாத்தா வீரபாண்டிய கட்டப்பொம்மன் படையில் போர் வீரனாக இருந்ததையும் முக்குலத்தோரின் வியப்பான சாகசங்களை எடுத்துச்சொல்வதாகவும் இருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சியை கட்டப்பொம்மன் ஏன் தேர்வு செய்தான் என்பதற்கு நாவலுக்குள் வந்துபோகும்  நரியை முயல் விரட்டியக் கதை அழகையும்  வியப்பையும் அளிக்கிறது.  திருச்சந்தூர் முருகன் மீதான பக்தி,  ஆறு நாட்களில் எழுப்பப்பட்ட அரண்கள் யாவும் நாவலில் வியப்பைக் கூட்டுகிறது. அத்தகைய வீர குலத்தில் பிறந்த பெருமையுடன் ராமசாமி தலைமுறை நாவலை முடித்து மூதாதையர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.  நாவல் கடைசி பாத்திரம் நாவலின் நிஜ ஆசிரியர் பொன்.குலேந்திரனாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.  நாவலின் மிக முக்கியமான  இடமாக நான் பார்ப்பது சூரிய உதய் திட்டம் அத்யாயத்தைதான். நாவல் முடிந்திருக்க வேண்டிய இடமும் அதுதான். குல பெருமை பேசும்படியான கடைசி அத்யாயம் சற்று முந்தைய  அத்யாயத்தில் வைத்திருக்க வேண்டிய ஒன்று.  உழைக்கும் மக்களின்  ஏக்கத்தை துயரத்தை துடைத்த ஒரு கை இன்ன சமூகத்தின் கை எனத் தெரிய வருகிற பொழுது துயரம் சிறுத்து பெருமை தலையெடுக்கிறது.   உழைக்கும் மக்களுக்கான நாவல் கடைசி அத்யாயத்தில் ஒரு குலப்பெருமையை பேசக்கூடிய நாவலாக மாறுவதால் ஈரம் பிடிக்கவேண்டிய இடத்தை வீரம் பிடித்துகொள்கிறது. முற்றும்.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

கவிதைப்போட்டி முதல் பரிசு ₹5000 இரண்டாவது பரிசு ₹3000 மூன்றாவது பரிசு ₹2000 கவிதை செய்யுள் பத்தி கொண்டதாக இருக்க வேண்டும். 16 - 24 வரிகள். கடைசி தேதி 07.05.2017 முகவரி நம் உரத்த சிந்தனை 6, வீரசவார்கார் தெரு இரமணா நகர் பெரம்பூர் சென்னை 11

சனி, 22 ஏப்ரல், 2017

சிறந்த சிறுகதை நூலுக்கான விருது 2016 ஆம் ஆண்டு வெளியான நூல்கள் மட்டுமே. மூன்று பிரதிகள். கடைசி தேதி ஜுலை 31 வாழ்க்கை சட்டம் பப்ளிகேஷன் & மீடியா எண் 18 / 3 காவிரி தெரு சாலிகிராமம், சென்னை - 93 04445510282

சிறுகதைப்போட்டி 2017

வானதி விருது சிறுகதைப் போட்டி - 2017 முதல் பரிசு - ₹ 5000 இரண்டாம் பரிசு - ₹ 3000 மூன்றாம் பரிசு - ₹ 2000 மேலும் இருபது சிறுகதைகளுக்கு விருதுகள் பக்க அளவு 5-8 கடைசி தேதி - 31.07.2017 vanathinovels@gmail.com Skr.light1966@gmail.com

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

வா.செ.குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை சார்பில் தமிழ் மேம்பாட்டு விருதுக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. தொல்லியல் கல்வெட்டியல் நாணயவியல் அகழ்வாய்வு பல்தொழில் துறை மொழிச்சீர்த்திருத்தம் முன்னேற்ற சிந்தனை கொண்ட முத்தமிழ் படைப்புகள். பரிசுத்தொகை ₹20000 2016 ஆம் ஆண்டில் வெளியான நூல்கள் மட்டும். முகவரி ப.தங்கராசு தலைவர் டாக்டர்.வா.செ.குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை தமிழ் மேம்பாட்டு விருது 5/45 ,எல்ஆர்ஜி நகர் ஆண்டாங்கோவில் கிழக்கு கரூர் 639008 கடைசி திகதி ஏப்ரல் 30
ஃபர்ஸானே கொஜண்டி (far Zanetti khojandi) தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். அவரது மொழிப்பெயர்ப்பு கவிதைகள் சில நன்றி தி இந்து. ஆசை.

வியாழன், 13 ஏப்ரல், 2017

சு.வேணுகோபால் கணையாழி இதழில் 'மறைந்த பின்னும் பறக்கும் பறவை' குறுநாவல் வாசித்தேன். ஒரு ஓவியக் கலைஞனின் வாழ்க்கை அவனது ஏமாற்றம், குடும்ப சூழலை இந்நாவல் கனத்துடன் பதிவு செய்திருந்தது. நாவல் வால்பாறை சுற்றுலா கொண்டாட்டத்துடன் தொடங்கியது. கல்லூரி மாணவர்கள் டீச்சரின் அந்தரங்க உறுப்புகள் உட்பட பலதையும் கேலி செய்து அவர்கள் பெற்ற தண்டனைகளுடன் நகரும் கதை ஓரிடத்தில் யாரென்று தெரியாத ஒருவர் தற்கொலைச் செய்துகொள்ள அதை அவர்கள் காவல் துறையிடம் முறையிட காவலர்கள் அவர்களின் மீது சந்தேகம் கொள்ள என திகிலுடன் நகரும் கதை தற்கொலை செய்துகொண்டவர் யாரென தெரியவருகிற பொழுது மனது கனத்து விடுகிறது. தற்கொலைஞன் தமுஎகச, கலை இலக்கிய கூட்டங்களுக்கு ஓவியம் வரையும் மணிமாறனாக இருக்கிறான். ஓவியம் இனி தீட்டவேண்டாம் என்றும் மகள் பூப்பெய்துவிட்டதால் தினக்கூலி வேலைக்கு போக வேண்டும் என அவரது மனைவி பணிக்கிறாள். அவருக்கு ஒரு கலை இலக்கியக் கூட்டத்திலிருந்து ஓவியம் தீட்ட அழைப்பு வருகிறது. மனைவி தடுக்கிறாள். இதற்கிடையில் அவள் தினக்கூலிக்கு வேலைக்குச் செல்லுமிடத்தில் ஒருவன் உன் மகளுக்கு நான் நகை எடுத்து தருவதாகவும் உனக்கு எப்பொழுது பணம் கிடைக்கிறதோ அப்பொழுது பணம் தந்தால் போதுமென்று சொல்லியச்செய்தியை அவள் கணவனிடம் பகிர்ந்து கொள்கிறாள். ஒரு பக்கம் ஓவியம் தீட்ட போக முடியாமையும் இன்னொரு பக்கம் மூன்றாவது ஒருவன் மனைவியை வளைக்கப்பார்ப்பதும் அவனுக்குள் உள்ளக்கிடக்கை கிடந்து அடித்துகொள்கிறது. வால்பாறை சுரங்கத்திற்குள் இறங்கி அவரை அள்ளி வருகிறார்கள். அவர் மகளின் பூப்பெய்தல் சடங்கைக் கூட செய்து முடிக்காமல் மனைவியின் ஓலத்தோடு இடுகாட்டிற்கு தூக்கிச்செல்லப்படுகிறார். நாவல் தொடக்கத்தில் குதூகலத்தையும் இறுதியில் ஒரு கலைஞனின் துயர் வாழ்வையும் எழுதிச்செல்லும் இந்நாவல் கலைஞர்களுக்கான நாவல். சு.வேணுகோபால் மற்றும் கணையாழி இதழ் இருவருக்கும் எனது வணக்கங்கள்.
நூல் போட்டி -2017 €€€€€€€€€€£££££££££££££££££££££££££££££₹₹₹₹₹ 2015 , 16 , 17 ஆண்டுகளில் வெளியான கவிதை, கட்டுரை, சிறுகதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன. பரிசுகள் முறையே ₹5000,₹3000,₹2000 கடைசி தேதி மே 30 - 2017 முகவரி @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ டாக்டர். எ.பி.ஜோதிலிங்கம் சியோ அறக்கட்டளை 1268 சி, பகுதி 2 50 - தெரு சதுவாச்சாரி வேலூர் -9 குறிப்பு- வாட்ஸ்அப் பகிர்வு செய்தி.
தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2017 - (குறும்படங்களுக்கு மட்டும்) நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ் ஸ்டுடியோ. நான்காம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி நடைபெறவிருக்கிறது. விருதுத் தொகை: ரூபாய் 25000/- தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். கலந்துக்கொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே ஒரு குறும்படம் மட்டுமே விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும். விதிமுறைகள்: * பாலுமகேந்திரா விருதுக்கு குறும்படங்களை அனுப்ப நுழைவுக் கட்டணம் ரூபாய் 250/- "PADACHURUL" என்கிற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க DD யாக, கீழ்க்கண்ட முகவரிக்கு படங்களோடு சேர்த்து அனுப்ப வேண்டும். காசோலை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நேரில் பியூர் சினிமா புத்தக அங்காடியில் படத்தை கொடுக்க விரும்புபவர்கள், 250 பணத்தை கொடுத்து அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம். * குறும்படங்கள் (Short Films) எந்தக் கருப்பொருளிலும் எடுக்கப்பட்டிருக்கலாம். * குறும்படங்கள் 30 நிமிடங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். * குறும்படங்கள் டி.வி.டி அல்லது வி.சி.டி. யில் தரமாகப் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். * இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரம், இணைத்து அனுப்பப்படுதல் வேண்டும். * குறும்படத்தின் கதைச் சுருக்கம் (Synopsis), முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Still Photos) மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். * முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள், திரைப்படக் கலைஞர்கள் முன்னிலையில் சென்னையில் திரையிடப்பட்டு விருதுக்குரிய குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும். * குறும்படங்கள் 01.01.2012 க்குப் பிறகு எடுக்கப்பட்டனவாக இருத்தல் வேண்டும். ஒருவர் எத்தனை குறும்படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் ஒரு குறும்படத்திற்கு 250 ரூபாய் நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். * விருது தொடர்பாக நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. போட்டி தொடர்பாகக் கடிதப் போக்குவரத்துகள், அலைப்பேசி அழைப்புகள் அனுமதிக்கப்படமாட்டாது. * ஆவணப்படங்கள் (Documentary Films) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. * தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது. * பரிசுகள் பாலுமகேந்திரா பிறந்த தினமான மே 19ஆம் தேதி, (மே 19 வேலை நாளாக இருந்தால், அதற்கடுத்து வரும் வார இறுதிநாளில் வழங்கப்படும்) * விருதுக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : மே 03, 2017 * குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண் 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600026. --

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

குறைந்தப்பட்சத் தேவை ஒரு பிணம்.

மூன்று மாத வயதுடைய ஐந்து குஞ்சுகளுடன் ஒரு தாய்க்கழுகு மனிதப் பார்வைக்கு எட்டாத உயரத்தில் தன் விசாலமான இறக்கையை அகல விரித்து பறந்துகொண்டிருந்தது. தாயானதற்குப்பிறகு தன் குஞ்சுகளுடன் இரை தேடி வலசை செல்வது இதுவே முதன் முறை. ஐந்து குஞ்சுகளில் மூன்றின் கழுத்துகள் வெள்ளைப் பட்டைகளாக இருந்தன. பிணம் தின்னும் கழுகுகளில் வெண் கழுத்து கழுகுகள் ஆண் கழுகுகள். அமெரிக்காவின் தேசியச்சின்னம் அக்கழுகுதான். சூடான் நாட்டினை ஒட்டி மலைகள் சூழ்ந்த காடுகளுக்கிடையில், ஓர் உயர்ந்த மரமொன்றின் உச்சியில் கூடு கட்டி வாழ்ந்து வந்த அக்கழுகு முட்டைகளிட்டு குஞ்சுகள் பொறித்திருந்தது. ஆறு முட்டைகளிருந்து ஐந்து குஞ்சுகள் வெளிவந்திருந்தன. வெளிவந்த நாட்களிலிருந்து மூன்று மாதங்களாக அக்குஞ்சுகளுக்குத் தேவையான உணவுகள், மாமிசத் துண்டுகளைத் தேடிப்பிடித்து, ஊட்டிக்கொண்டிருந்தது அத்தாய்க்கழுகு. அக்கழுகிற்கும் அதன் குஞ்சுகளுக்கும் தேவையான உணவுகள் மனிதப்பிணங்களாக சூடானைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறையக் கிடைத்தன. ஆற்றின் விளம்புகள், பள்ளத்தாக்கு பகுதிகளில் கேட்பாரற்று பல பிணங்கள் தண்ணீரில் மிதந்தன. அப்பிணங்கள் கழுகுகளுக்கு பெருத்தத் தீனியாக இருந்தன. ஒரு பிணத்தை அதன் கூட்டிற்கு தூக்கி வந்து தாயும் அதன் குஞ்சுகளும் தின்றுக் கொழுத்திருந்தன. பிணங்களை தன் குஞ்சுகளுக்கு கொடுத்து வளர்த்துவந்த அக்கழுகு குஞ்சுகளை அழைத்து கொண்டு தென் மேற்கு நோக்கி தன் பயணத்தைத் தொடங்கியது. சூடான் தன் நிலம், வளம், வாழ்வாதரங்களை கழுகு தேசத்திற்கு கொடுத்ததன் பிறகு அந்நாட்டில் பசியும், பஞ்சமும், பட்டினி மட்டுமே தலைவிரித்திருந்தது. ஒவ்வொரு நாளும் குழந்தைகள் பசி, பட்டினியால் இறந்துகொண்டிருந்தார்கள். அப்படிச் சாகும் குழந்தைகளின் வீட்டை அடையாளம் கண்டு காத்திருந்து ஏதேனும் ஒரு குழந்தையை பிணமாகத் தூக்கி வந்தது. அப்படி ஒருநாள் ஒரு குழந்தைக்காக காத்திரிக்கையில்தான் தென் ஆப்பிரிக்கா புகைப்பட கலைஞர் கெவின் கார்ட்டரின் கேமராவில் சிக்கும்படியானது. வயிறு ஒட்டிப்போய் முதுகு மற்றும் விலா எலும்புகள் தெரிய , நடக்கத் தீராணியற்று, தலையை நிமிர்த்த முடியாமல் தரையோடு தரையாக குனிந்து சுட்டெரிக்கும் வெயிலில் தவழ்ந்தக் குழந்தையை இரையாகப் பார்த்தக் கழுகு உலகை ஒரு உலுக்கு உலுக்கியது. அக்குழந்தையுடன் கூடிய கழுகு புகைப்படம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் முதற்பக்கத்தில் அலங்கரித்தது. ஐம்பதாயிரம் டாலர் பரிசும் , புலிட்சர் விருதும் பெற்றது. குழந்தையுடன் கூடிய அக்கழுகினைப் படம் பிடித்து உலகின் சிறந்த புகைப்படக் கலைஞர் என அறியப்பட்ட கார்ட்டர் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணமாக இருந்ததும் அக்கழுகுதான். ‘குழந்தையின் துன்பத்தைப் போக்காமல் அவள் படும் துயரத்தை சரியான கோணத்தில் படமெடுக்கும் பொருட்டு தன் புகைப்படக் கருவியின் லென்சைச் சரிசெய்து கொண்டிருக்கும் கார்ட்டர் இன்னொரு கொலையாளியாகத்தான் இருக்க முடியும். காட்சியின் இன்னொரு கழுகு அவர் ’ என பலரும் விமர்சிக்கப்போய் தானும் அக்கழுகும் ஒன்றுதானோ...! என்கிற குற்றவுணர்வு அவரைக் குடைய ஒரு நாள் இரவு தற்கொலை செய்துகொள்ளும்படியானது. இதெல்லாம் அக்கழுகுவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதற்கும் அதன் இனத்திற்கும் தேவையான உணவு எங்கே கிடைக்கும், எத்தனை காலத்திற்குப் பிறகு கிடைக்கும், எத்தனைக் காலம் வரைக்கும் போன்ற விடயங்கள் மட்டும் அக்கழுகு தெரிந்து வைத்துகொண்டு மூக்கு வியர்க்கும் திசையை நோக்கி அக்கழுகு பறந்து கொண்டிருந்தது. தன் எடையை விடவும் மூன்று மடங்கு எடையைத் தூக்கிச்செல்லுமளவிற்கு வலுவான கால்களைக் கொண்டது. எழுபத்து இரண்டு வகை கழுகு இனங்களில் சக இனத்தை கொன்று தின்னும் அசாத்தியம் பிணம் தின்னும் கழுகுவிற்கு மட்டுமே உண்டு. கழுகின் அலகு வலுவானது. ஒரு பாறையைக் குடைந்தெடுக்கும் அளவிற்கு கூர்மையானது. கழுகின் வயதை பிரதிபலிக்கும் அளவுகோல் அதன் அலகுதான். அலகினை முற்றிலும் இழந்தால் கழுகு இறந்துவிடும். இழந்த அலகு மீண்டும் வளரத் தொடங்கினால் அக்கழுகு பிழைத்துக்கொள்ளும். அலகினை விடவும் அதன் கால்கள் வலுவானவை. அதை விடவும் வலுவானவை அதன் நகங்கள். அவை கத்திகளைப்போல கூர்மையானவை. சத்ரபதி சிவாஜி, படையெடுத்து செல்கையில் எதிராளி மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கழுகின் நகங்கள்தான். சோமாலியாவில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை தூக்கிச்சென்று கண்களை மட்டும் கொத்தி விழுங்கிவிட்டு அக்குழந்தையை தன் குஞ்சுகளுக்காக பத்திரப் படுத்தி வைத்திருந்தக் கழுகினை வேட்டையாடப் போய் சோமாலியர்கள் கழுகு தேசத்தால் மிரட்டப்பட்டார்கள். கழுகு அமெரிக்காவின் அடையாளம். போர்க்கருவிகளின் அலங்காரம். ஆகவே கழுகுகளை பிடிக்கவும், கூண்டில் அடைக்கவும், வேட்டையாடவும் தடை விதிக்கப்பட்டிப்பதால் பிணம் தின்னிக்கழுகுகளின் எண்ணிக்கை கட்டுக்குள் அடங்காமல் மலைகள் சூழ்ந்த பகுதிகள், காடுகள் என்பதையெல்லாம் கடந்து இப்பொழுது சமவெளி பக்கம் படையெடுக்கத் தொடங்கி விட்டிருந்தன. இலங்கை உள்நாட்டு போரின் போது வானத்தில் பறந்த போர் விமானங்களை விடவும் இவ்வகை கழுகுகள் அதிகம். போபாலில் நடந்தேறிய சயனைடு கசிவு கோரச்சம்பவத்தின் போது இந்தியாவில் குடியேறியக் கழுகுகள் பேரன் , பேத்திகள் எடுத்து ஆப்பிரிக்க நாடுகளை நோக்கி வலசைச் சென்றன. அவ்வாறு வலசைச் சென்ற கழுகின் கொள்ளு, எள்ளுப் பேரன், பேத்திகள்தான் இப்பொழுது ஆலவட்டமடிக்கும் தாயும், அதன் குஞ்சுகளும். மனித அரவம் சற்றும் தென்படாத இடங்களில் கூட்டமாக வாழக்கூடிய கழுகுகள் மனிதர்களால் பார்க்க முடியாத உயரத்தில் பறந்துகொண்டிருந்தன. மனிதப்பிணமே அதற்கு பிடித்த உணவு. மனித குடலையும், ஈரலையும் தின்னுகையில் அதற்குள் அத்தனை ஆரவாரம் பீறிட்டு எழும். உயரத்தில் பறந்து கொண்டிருந்த கழுகுகளின் இறக்கைகள் மற்ற கழுகுகளை விடவும் நீள, அகலத்தில் பிரமிப்பைக் கொடுத்தன. ஒரு மனிதன் கால் நீட்டிப் படுக்கும் அளவிற்கு இறக்கையின் நீளமிருந்தது. புறாவின் இறகினைப்போல அடர்த்தியான மயிர்களைக் கொண்ட இறகு கழுகுவுடையது. இரண்டிற்குமான ஒரு வித்தியாசம் புறாவின் இறகு மிருதுவானது. கழுகின் இறகு ஒரு விலங்கின் தோளினை அறுக்குமளவிற்கு அரமிக்கது. எதையும் கொத்திக்கிழிப்பதற்கு உகந்தது அதன் அலகு. கீழ் அலகு தசையைக் குத்திப் பெயர்க்கக் கூடியதாகவும், மேலலகு கொத்திக் கிழிப்பதற்கு உகந்ததாகவும் இருந்தது. அரை கிலோ மாமிசத்தை ஒரே கொத்தில் கொத்தி கிழித்து விழுங்குமளவிற்கு அதன் அலகு குறுகி வளைந்திருந்தது. மின்னல் வேகத்தில் பறக்க அதன் வாலும் இருநூறு கல் தூரம் வேகத்தில் இறங்கி இரையைத் தூக்கிச் செல்லுமளவிற்கு அதன் குதிக்கால்களும் இருந்தன. மீன் , தன் குஞ்சுகளைக் கண்களால் வழிநடத்துவதைப்போல கழுகு அதன் நிழலில் குஞ்சுகளை வழிநடத்திக்கொண்டிருந்தன. அதற்கான இரையை அதுவே தேடிக்கொள்ளும் வரைக்கும் இந்த கண்காணிப்பை நீட்டிக்கக் கூடியது. தாயின் நிழலைக் குஞ்சு அறியும். பாம்பின் கால் பாம்பு அறிவதைப்போல! தாயின் நிழல் தன் மீது விழுமாறு குஞ்சுக்கழுகுகள் பார்த்துகொண்டன. தாய் திரும்புமிடத்தில் நிழல் திரும்பியது. நிழலைப்பார்த்து குஞ்சுகள் திரும்பின. கழுகளின் மொழி இறக்கைகளில் இருந்தன. இறக்கையின் ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு மொழி இருப்பதை குஞ்சுகள் அறிந்திருந்தன. வலது பக்க இறக்கை அசைந்தால் , இடது இறக்கை வேகமாகத் துடித்தால், வேகமாக அடித்துகொண்டால், உதறினால்.....என ஒவ்வொரு அசைவிற்கும் ஒவ்வொரு கற்பிதங்களைக் குஞ்சுகள் அறிந்து வைத்திருந்தன. குஞ்சுகள் பறந்துகொண்டே பூமியைக் கூர்ந்து கவனித்து வந்தன. அதன் பந்து முனைக் கருவிழிகளில் விழும் பிம்பங்களை தாயிடம் இறக்கை அசைவுகளால் பகிர்ந்துகொண்டன.. ‘ ஒரு குளம் தெரிகிறது....’ ‘ குளத்தில்....?’ ‘ நிறைந்த தண்ணீர் இருக்கிறது’ ‘ அதற்குள்...?’ ‘ மீன்கள் துள்ளிக்குதிப்பது தெரிகிறது’ ‘ மீன்கள் மட்டும்தானா....?’ ‘ கரையில் ஒன்றிரண்டு கொக்குகள் நிற்பது தெரிகிறது’ ‘ வேறு...?’ ‘ குளத்தில் நான்கு கரைகள்..’ ‘ கரைகளில்...?’ ‘ ஒரு கரையில் பெண்கள் குளிக்கிறார்கள்....’ ‘ இன்னொன்றில்....?’ ‘ ஆடு, மாடுகள் தண்ணீர் குடிக்கின்றன...’ ‘ பிறகு...?’ ‘ இன்னொரு கரையில் சிறுவர்கள் துள்ளிக்குதிக்கிறார்கள். மற்றொன்றில் தாமரைகளும், அல்லிகளும் பூத்து குலுங்குகின்றன..’ தாய்க்கழுகு அதன் புத்திசாலி குஞ்சுகளை நினைத்து மகிழ்ந்தது. ஆனந்தத்தில் இறக்கைகளை வேகமாக அடித்துகொண்டன. ‘ வேறு என்னவெல்லாம் தெரிகிறது...?’ ‘ எங்கும் பச்சைமயமாக இருக்கிறது...’ ‘ பச்சையில்....?’ ‘ ஒன்று முளை விடும் பச்சையாகவும் மற்றொன்று அறுவடைக்காலப் பச்சையாகவும் தெரிகின்றது’ தாயும் அதன் குஞ்சுகளும் வட்டமிட்டவாறு வெட்டவெளியை வலம் வந்தன. அதன் கண்கள் கீழ்நோக்கி ஒரு புள்ளியில் குவிந்திருந்தன. . எங்கும் பச்சையும் மஞ்சள் கலந்த நிறப்பிரிகை. தங்கம் முளைத்த நெற்மணிகள். வானுயர்ந்த தென்னை, தேக்கு, பனை மரங்கள். மலை அளவிற்கு பெரிய வைக்கோல் போர். அதன் மீது காக்கைக்குருவிகள். சிறுவர், சிறுமிகள் அதைச்சுற்றி ஓடி ஒழிந்து விளையாடுவது தெரிந்தது. களத்து மேட்டில் பெண்கள் சூழ்ந்திருந்தார்கள். ஒரு தரப்பினர் கதிர்களை அறுக்க , வேறொரு தரப்பினர் நெற்களைத் தூற்ற, அள்ள, அளக்க, சாக்கில் நிரப்ப, வண்டியில் ஏற்ற,...என இருந்தனர். எங்கும் மனிதத் தலைகள். அத்தனைத் தலைகளும் உயரத்தில் பறந்த கழுகுகளுக்கு இரைகளாகவேத் தெரிந்தன. பூமித்தாயின் கன்னத்தில் விழுந்த மச்சமாக உளுந்து குவியல் இருந்தது. அதையொட்டி கத்தரி, வெண்டை, தக்காளி, தட்டை, பாசி பயிறுகள் தெரிந்தன. அறுவடை முடிந்த நிலத்தில் மந்தைகளாக ஆடுகள், மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. மாடுகள் பல இன வகை கொம்புகளைக் கொண்டிருந்தன. அலை கொம்பு. ஆட்டுக்கொம்பு. காடு பார்த்தக்கொம்பு. கிளிக்கொம்பு, குத்துக்கொம்பு, கூடு கொம்பு, கொள்ளி கொம்பு. இதுதவிர அபூர்வமான சுருட்டை, பூ, பொத்தை, மட்டி, மாடக்கொம்புகளும், முன் கொம்பு, விரி கொம்புகளுடன் கூடிய மாடுகளும் மேய்ந்துகொண்டிருந்தன. ஒரு காளை ஒரு பசுவை விரட்டுக்கொண்டிருந்தது. ஒரு ஆடு நான்கு குட்டிகளுக்கு பால் ஊட்டிக்கொண்டிருந்தது. அவை புற்கள் தந்த நிலத்திற்கு விசுவாசமாக சாணியைக் கொடுத்து புற்களை மேய்ந்துகொண்டிருந்தன. ஒரு காளையின் தலையின் காக்கை இருந்தது. இன்னொன்றின் தலையில் கரிச்சான் குருவிகள் இருந்தன. ஒரு பசு வாலைத் தூக்கி மூத்திரம் பெய்தது. ஒரு காளை பசு அரையின் பிளவில் நாசியை வைத்து கிளிர்ச்சி ஊட்டியது. பசு முகத்தில் வெட்கம். வெளியிடும் ‘புஸ்..புஸ்...’ காற்று நாசியைத் தகித்தது. பசு வெட்கத்தால் முறுக்கிண்டு ஓடியது. காளை, ஓடும் பசுவை விடாது விரட்டியது. ஓட, ஓட பசுவிற்கு சுகமாக இருக்கிறது. விரட்டவிரட்ட காளைக்கு பசி எடுக்கிறது. நாவில் சுரக்க வேண்டிய உமிழ்நீர் பசுவின் பின் பக்க அரையில் சுரந்தது. காளை அதற்குள் எழும் தாகத்தை அரையில் தணித்தது. நாசியின் வெதுப்பில் பசுவின் அரைசுரப்பு. இரண்டு கால்களையும் தூக்கி பசுவின் பிட்டத்தில் வைத்தது காளை. பசுவின் மீது அதன் முன்னங்கால்கள் மெல்ல , மெல்ல ஊர்ந்தன. காளையின் உறுமலும் பசுவின் சிணுங்களும் ஒரு புள்ளியில் குவிய , வயிறு நிறைந்த உணர்வு பசுவிற்கு. ஒரு மாதப் பசியை தணித்தச் சுகம் காளைக்கு. தாய்க்கழுகு கேட்டது. ‘ வேறென்ன தெரிகிறது....?’. ‘ நிறையத் தெரிகிறது..’ என்றவாறு குஞ்சுகள் தரையைப் பார்த்தன. சிறுவர், சிறுமிகள் கடலைக்கொல்லைக்குள் திருட்டுத் தனமாக நுழைந்தார்கள்.. சுற்று முற்றும் பார்க்கிறார்கள். மெல்ல உட்காருகிறார்கள். கடலைக்கொடிகளைப் பிடுங்காமல் வேரினைச்சுற்றிய மண்ணைக்கிளறி அதன் வேரிடத்தில் இருக்கும் கடலைகளை ஆய்ந்து அவரவர் கால்ச்சட்டை பைக்குள் நிரப்பிக்கொண்டு புழுதி பறக்க ஓடுகிறார்கள். சோள விதை தோல் உடைந்து முளை விடும் அரவம் ‘டப்...டப்....’எனச் சன்னமாகக் கேட்கின்றன. தென்னைகள் ஒன்றுடன் ஒன்று உரசி கைக்குலுக்கி நலம் விசாரித்துகொள்கின்றன. சவுக்குகள் எப்படியும் வானத்தைத் தொட்டுவிட வேணும் என்கிற உத்வேகத்தில் வானோக்கி வளர்ந்திருக்கின்றன.. ‘ வேறு என்னத் தெரிகிறது....?’ ஒரு பக்கம் உழவர்கள் காளைகள் பூட்டிய ஏரில் ஆழ உழுகின்றனர். இன்னொரு பக்கம் ஒரு இயந்திரம் கொண்டு நிலத்தை அகல உழுகிறது. குறுக்கு மறுக்காக வரப்புகள். வரப்புகளைக் கழித்து புதிய மண் வரப்பில் சாத்தப்பட்டிருக்கிறது. பூப்படைந்த பெண்ணின் முகக்களை வரப்பிற்கு. தலைக்குப்புறப் பாய்கிறது தண்ணீர். ஒருவர் கிணற்றில் இரண்டு மாடுகளைப் பூட்டி சாலில் தண்ணீர் இரைத்தபடி இருக்கிறார். ஒரு பக்கம் காவிரியின் கடை மடை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்னொரு பக்கம் ஊரணியின் ஓடம். இதுதவிர மின் இயந்திரங்கள் தண்ணீரை வாறி இரைக்கின்றன. லாரிகள் நின்று மூச்சு வாங்கி நெல் மூட்டைகளைத் தன் முதுகில் சுமந்துகொள்கின்றன. இயந்திரங்கள் நெற்கதிர்களை அடித்து வைக்கோல், நெற்கள் எனத் தனித்தனியே பிரிக்கின்றன. நிலங்களைச் சுற்றிலும் மயில், மைனா, குருவிகள். எலி வளை, நண்டு வளை பாம்பு வளையென வயற்காடுகள் முழுவதும் வளைகளாக இருக்கினறன. . மொத்த நெல்லையும் நின்று நிதானித்து உருவி தின்னுகிறது மயில். தானொரு தேசிய பறவை என்கிற அகங்காரம் அதற்கு. ஒரே ஒரு நெல்லை மட்டும் வாயில் கவ்விக்கொண்டு ஓடி ஒழிகிறது அணில். உயரத்தில் பறந்த கழுகுகளுக்கு ஓடும் அணில் தெரிகிறது. அது ஓடும் திசையில் கழுகின் பார்வையும் ஓடுகிறது. உரங்களை மலையைப்போல குவித்து மண்வெட்டியால் கலந்து கூடையில் அள்ளி விட்டெறிகிறார் ஒருவர். இன்னொருவர் மருந்து தெளிக்கிறார். ஊர்கள் இருக்கின்றன. வீடுகள் தெரிகின்றன. தெருக்கள் வரிசையாக இருக்கின்றன. சாலைகள் வளைந்து நெழிந்து செல்கின்றன. சாலைகளில் தானியங்கள் காய்கின்றன. காக்கைக்குருவிகள் போட்டிப்போட்டுக்கொண்டு மேய்கின்றன. ஒரு மூதாட்டி அவற்றை விரட்ட முடியாமல் விரட்டிக்கொண்டிருக்கிறாள். ‘ அம்மா....என் இறக்கை அளவிற்கு பச்சையாக ஒன்று தெரிகிறதே அது என்னவாம்...?’ ஒரு குஞ்சு தாயிடம் கேட்டது. ‘ அதுதான் வாழை’ ‘ அதற்கு அடுத்து என் கால்களைப்போல வளர்ந்திருக்கிறதே அது....?’ ‘ அது தேக்கு’ ‘ என் கண்களைப்போல குமிழ் குமிழாக தெரிவது...?’ ‘ அது கத்தரி’ தாயும் அதன் குஞ்சுகளும் வயல்களில் தெரிவதை ஒவ்வொன்றாக பார்த்துகொண்டு வந்தன. ஓரிடத்தில் அதன் மூக்கு வியர்த்தது. அந்த இடத்தில் தன் இறக்கைகள் இரண்டையும் அகல விரித்து வட்டம் கட்டி, தரையைக் கூர்ந்து கவனித்தன. கண்ணுக்கு எட்டியத் தொலைவு பச்சைகளுக்கிடையில் ஓர் புள்ளியில் தார் பாலைவனம் அளவிற்கு வறட்சி தெரிந்தது. புல் , பூண்டுகள் முளைக்காமல் வறட்சித் தட்டியிருந்தது. தாய்க்கழுகும் அதன் குஞ்சுகளும் தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக்கொண்டு உடம்பை மேலும் குறுக்கி ஏவுகணைகளைப்போல அதை நோக்கி கீழே இறங்கின. கால்களை விசாலமாக நீட்டி, ஆறாயிரம் அடியிலிருந்து மேல் நோக்கி நீண்டிருக்கும் ஆழ்த்துளை குழாயின் மீது உட்கார்ந்தன. இப்போதைக்கு அக்கழுகுகளுக்குத் தேவை ; குறைந்தது ஒரு பிணம்! .

திங்கள், 3 ஏப்ரல், 2017

அமரர் செம்பியன் செல்வன்
 ( ஆ.இராஜகோபால் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி )
அனுசரணை - செம்பியன் செல்வன் குடும்பத்தினர்
முதல், இரண்டாம்,மூன்றாம் பரிசுகள் முறையே
ரூபா 5000,3000,2000
ஏனைய பரிசுகள் ஏழு சான்றிதழுடன்

முகவரி
ஞானம் அலுவலகம்
3B, 46 ஆவது ஒழுங்கை
கொழும்பு 06

கடைசி தேதி மே 31 - 2017
குறிப்பு - இலங்கை வாழ் தமிழ் எழுத்தாளர்கள் மட்டும்

சனி, 1 ஏப்ரல், 2017

புலியூர் முருகேசன் வாயிலாக ' புழுதி' இதழ் கைக்கு வந்திருந்தது. பிப்ரவரி - 2017 மாதத்தின் இதழ் அது. ஆசிரியர் கு.ஜெயபிரகாஷ். இளம் படைப்பாளிகளின் படைப்புகளை கொண்டாட வேண்டும் என்கிற கோணத்தில் இதழ் கொண்டுவந்திருப்பதாக இதழ்முகம் எழுதியிருந்தது.
 இந்த இதழின் ஒரு கவிதையைப் பற்றி   உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.

கண்மணிராசாவின் கவிதை அது.
தலைப்பு - அப்பாவுக்கு

அப்பா...அம்மாவோட போட்டோ
புடிக்கனுமாம்.
தப்பாம உங்கள கூட்டிக்கிட்டு
வரனுமாம்.

எல்லாப் புள்ளைகளும்
நல்லபடியாக தெரியனும்னு
ஹெட்மாஸ்டர் சார்
சொல்லிவிட்டாங்கப்பா.....!

புதுசா துணிமணி
இருந்தாத்தான்
போட்டோவுல நல்லா
தெரியும்னு
பவிசா பேசி அவங்கப்பன்கிட்ட
பாவாட சட்ட வாங்கிட்டா
பவுன்தாயி

செருப்பில்லாம போஸ்
கொடுத்தா
சின்னப் புள்ளயா தெரியும்னு
அரியா அரிச்சு
அவங்கப்பன்கிட்ட
புதுச்செருப்பு வாங்கிட்டா
பூமாரி

களையா முகம் தெரியனும்னு
கறுப்பு பாசிய வீசிப்புட்டு
கண்ணக் கசக்கி அவங்கப்பன்கிட்ட
கவரிங் செயின் வாங்கிட்டா
கஸ்தூரி

செருப்பு...செயினு.....சட்டனு...
உன்ன
சிரமப்படுத்த மாட்டேம்பா..
கும்பிட்டு கேக்குறேன்.
போட்டோ எடுக்க குடிக்காம வாப்பா.
அதுபோதும்!