தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்படும், சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு போட்டிக்கு 2016ல் வெளியிடப்பட்ட நூல்கள், 33 வகைப்பாடுகளின் கீழ் வரவேற்கப்படுகின்றன.
ஒவ்வொரு வகைப்பாட்டில், ஒரு நூல் தேர்வு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு 30 ஆயிரம் ரூபாய்; பதிப்பகத்தாருக்கு, 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.
விண்ணப்பம் மற்றும் விபரங்களை, www.tamilvalarchithurai.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சென்னை எழும்பூர், தமிழ் சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்திலும், நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, விண்ணப்பம் பெறலாம்; ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார் - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...
கருத்துகள்
கருத்துரையிடுக