சனி, 1 ஏப்ரல், 2017

புலியூர் முருகேசன் வாயிலாக ' புழுதி' இதழ் கைக்கு வந்திருந்தது. பிப்ரவரி - 2017 மாதத்தின் இதழ் அது. ஆசிரியர் கு.ஜெயபிரகாஷ். இளம் படைப்பாளிகளின் படைப்புகளை கொண்டாட வேண்டும் என்கிற கோணத்தில் இதழ் கொண்டுவந்திருப்பதாக இதழ்முகம் எழுதியிருந்தது.
 இந்த இதழின் ஒரு கவிதையைப் பற்றி   உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது.

கண்மணிராசாவின் கவிதை அது.
தலைப்பு - அப்பாவுக்கு

அப்பா...அம்மாவோட போட்டோ
புடிக்கனுமாம்.
தப்பாம உங்கள கூட்டிக்கிட்டு
வரனுமாம்.

எல்லாப் புள்ளைகளும்
நல்லபடியாக தெரியனும்னு
ஹெட்மாஸ்டர் சார்
சொல்லிவிட்டாங்கப்பா.....!

புதுசா துணிமணி
இருந்தாத்தான்
போட்டோவுல நல்லா
தெரியும்னு
பவிசா பேசி அவங்கப்பன்கிட்ட
பாவாட சட்ட வாங்கிட்டா
பவுன்தாயி

செருப்பில்லாம போஸ்
கொடுத்தா
சின்னப் புள்ளயா தெரியும்னு
அரியா அரிச்சு
அவங்கப்பன்கிட்ட
புதுச்செருப்பு வாங்கிட்டா
பூமாரி

களையா முகம் தெரியனும்னு
கறுப்பு பாசிய வீசிப்புட்டு
கண்ணக் கசக்கி அவங்கப்பன்கிட்ட
கவரிங் செயின் வாங்கிட்டா
கஸ்தூரி

செருப்பு...செயினு.....சட்டனு...
உன்ன
சிரமப்படுத்த மாட்டேம்பா..
கும்பிட்டு கேக்குறேன்.
போட்டோ எடுக்க குடிக்காம வாப்பா.
அதுபோதும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக