வெள்ளி, 30 டிசம்பர், 2016

2016 ஆம் ஆண்டு நான்....

 2016 ஆம்  ஆண்டு இலக்கியத்துறையில் நான்..
இவ்வாண்டின் தொடக்கத்தில் ‘ லெக்கிங்ஸ்’ என்கிற சிறுகதை வண்ணக்கதிரில் பிரசுரமானது. கடைசியாக  ‘ ம்...’ கதைசொல்லி மாத இதழில்.
இவ்வாண்டில் பிரசுரமான மொத்தச் சிறுகதைகள்   - 19
கட்டுரைகள்   -      5
நூல் வெளியீடு - 1
ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை ( சிறுகதைத் தொகுப்பு) - இருவாட்சி பதிப்பகம்.
பரிசுகள்  பெற்ற விபரம்
1. ஆஸ்திரேலியா- அக்னிக்குஞ்சு இணைய இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு
2. வெண்மணி அறக்கட்டளை நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு ( பரிசு இதுநாள் வரைக்கும் வழங்கப்படவில்லை)
3. அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு
4. டி.வி.ஆர் நினைவுச் சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு
5. காரைக்குடி உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய     சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு
6. வானதி சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு
7. லண்டன் புதினம் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு
திற - சிறுகதைத் தொகுப்பிற்காக...
8. கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் சிறப்பு பரிசு
9. ஈரோடு தமிழ் சங்கம் மூன்றாம் பரிசு.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் 4 படைப்புகள் அதிகம்.
மன நிறைவு தந்த நிகழ்வு
கோவை இலக்கிய சந்திப்பு
ஏமாற்றம்
லண்டன் பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள முடியாதது
2016 ஆம் ஆண்டினை இன்முகத்துடன் அனுப்பி வைக்கிறேன்.....



புதன், 28 டிசம்பர், 2016

போடோ மொழி சிறுகதை


போடோ-கக்சாரிசு என்று அழைக்கப்படும் போடோ மொழி அசாமில் பிரம்புத்திரா பள்ளத்தாக்கு பகுதிகளில் பேசக்கூடிய பழங்குடியின மொழி. அரிதான மக்களால் பேசப்பட்டு வந்த இம்மொழி பேசும் மக்களால் மொழியின் அவசியத்தை உணர்ந்து எழுத்து மொழியாகவும் , தொடக்கக்கல்வி மொழியாகவும் கடைப்பிடித்து பத்து ஆண்டுகளாக உயர்க்கல்வி மொழியாகவும் விளங்கிறது.
இம்மொழியின் முதல்  இலக்கிய  இதழ் 1955 ஆம் ஆண்டு சதீசு சந்திர பசுமதாரி என்பவரால் கொண்டுவந்த போடோ என்கிற இதழ்தான். இம்மொழியின் முதல் சிறுகதை 1930 ஆம் ஆண்டு இசான் முசாகாரி என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. அக்கதை ' அபரி   '. இக்கதை அதே ஆண்டு காதார்கிலா என்கிற இதழில் பிரசுரமாகியிருக்கிறது. 
     
அபரி பதினெட்டு வயதுடைய பெண்.அவளுக்கு வரன் தேடுகிறான் சகோதரன் உலி. அபரிக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை.  மாப்பிள்ளை முதுகில் கூன் விழுந்து போய் பார்க்க கிழவன் மாதிரி தெரிகிறான். மாப்பிள்ளை பிடிக்கவில்லை  என்கிற தகவலை அவள் சகோதரனிடம் சொல்கிறாள். உலி , ' நீ ஊனம் என்பதால் உனக்கு இப்படியாகப்பட்ட மாப்பிள்ளைதான் கிடைப்பான் ' என்கிறான். அவனை மணக்க முடியாது ' என்கிறாள் அபரி. மாப்பிள்ளையிடம் கை நீட்டி வளையல் வாங்கியாகி விட்டது  ( வளையல் வாங்கினால் சம்மதம் ) என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறான் உலி. கடைசியில் அவனது இன்னொரு சகோதரியை மணம் முடித்துகொடுக்கிறான்.
       அபரியின் பரிதாபமான நிலையைப்பார்த்து அவ்வூர் இளைஞன் ஒருவனுக்கு அவள் மீது காதல் வருகிறது. திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத அபரி மீது சகோதரன் உலியும் சொந்தங்களும் எரிந்து விழுகிறார்கள். ஒரு நாள்  உலி விஷம் வாங்கிகொடுத்து இன்றைக்குள் செத்துவிட வேண்டும் என்கிறான். சரி என விஷத்தை வாங்கி வைத்துக்கொள்ளும் அவள் இரவு வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன்  ஊரை விட்டு ஒதுங்குகிறாள்.
          போடோ மொழியின் முதற்கதையே பெண்ணடிமை , அதை உடைக்கும் பெண்ணெழுச்சியாக படைக்கப்பட்டிருப்பது ஆரோக்கியமானதாக இருக்கிறது.
          சாகித்ய அகாதெமி வெளியீடாக போடோ சிறுகதைகள் எனும் பெயரில் வெளியாகியிருக்கும் இந்நூல் ஆங்கிலத்தில் ஜெய்காந்த சர்மா என்பவர் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். தமிழில் இரா.குருநாதன் மொழிபெயர்த்திருக்கிறார்.
இத்தொகுப்பில் மொத்தம் 11 கதைகள் உள்ளன. அத்தனையும் பெண்களின் மீதான ஒடுக்கு முறையையும் அதற்கு எதிரான குரலையும் உரக்கச்சொல்கிறது.
       இத்தொகுப்பில் வேறொரு முக்கியமான சிறுகதை வேறு வழி  என்கிற சிறுகதை. பகுண்டா விறகு வியாபாரி. விறகு விற்றுவந்தால்தான் அன்றைக்கு சாப்பிட முடியும். விறகு  விற்காமல் வீடு திரும்புகிறான்  பகுண்டா. முடியாமல் படுத்துவிடுகிறான். மூன்று குழந்தைகளுக்கும் பசி. மறுநாள் மனைவி மூத்த மகள் தார்லியை வீட்டில்  விட்டுவிட்டு  இரண்டு பிள்ளைகளுடன்  அவள் பிச்சை எடுத்து வர செல்கிறாள். தார்லி வீட்டில் இருக்கிறாள். ஒரு சாராய வியாபாரி  அத்தெருவின் வழியே வருகிறான். அவனிடம் நேற்றைய தினம் நான்  உன் முகத்தில் விட்டெறிந்த நூறு ரூபாயை தரச்சொல்லி அவனை வீட்டிற்குள் இழுத்துச் செல்கிறாள். அப்பன் படுக்கையில் குமறுகிறான். இக்கதையை எழுதியவர் அரேச்வர் பசுமதாரி.

பேயோன் பக்கம்

வாழ்க்கையின் அர்த்தம் என்றொரு நூல் மின் பக்கத்தில் வாசிக்க கிடைத்தது. பேயோன் , ஆனந்த விகடன் மூலமாக  அறியப்பட்டிருக்கிறேன். பத்தி எழுத்தாளர். சோபாவில் ஒரு ஆசிரியர் என்றொரு அனுபவக் கட்டுரை. மாணவனாக இருந்த பொழுது சரியாக எழுத்தப்படாத நோட்டை ஆசிரியர் கிழித்து எறிகிறார். அதே ஆசிரியரை பல்லாண்டு கழித்து  ஒரு வங்கியில்  சந்திக்கிறார். தான் உங்கள் மாணவன் என அறிமுகம் செய்துகொண்டு அவன் எழுதிய நூலினை அவரிடம் கொடுக்கிறான். ஆசிரியர்  அதை அப்பொழுதே பிரித்து வாசிக்கிறார். என்ன நீ எழுதியிருக்கிறாய்....என அந்நூலை ஆசிரியர் கிழித்து எறிகிறார். இப்படியாக முரண்பட்ட நகைப்பான கதைகளின் கட்டுரைத் தொகுப்பு.

செவ்வாய், 27 டிசம்பர், 2016

My old bones creak along this same route ten, twenty times a day. It starts with me flickin' up too fast from the fancy electric recliner the kids all chipped in and got me, and it ends in the loo. Well, it usually does if I'm lucky, but I guess it's not my lucky day because halfway there I've gone arse up. Now I'm stuck, layin' here in the hallway flat as a tack, the weight of my body pressing on my damn bladder. Nothin' hurts, there's no pain at all but by god I can't find the strength to get up. To think I used to wrestle rams and now I'm here, 'bout to piss myself on this shitty wool carpet. With my face shoved into the stuff I can still smell the sheep on it, the sweat and skin of the animal. I move my head back, really arch my neck till it burns, and then I see her, my Margie. The photo's all brown with age, but she's still shinin', perched on a motorbike. She's lookin' down on me, one of her oversized pregnant dresses hitched up to her knees as she straddles the beast, showing me the curve of those calves.



I married her, the first woman who loved me, and if things were tense sometimes it's only 'cos I was sure she'd come to her senses one day. But ten kids is what happened, a couple of 'em made from sweat and hard liquor, the rest from Margie's sweet iced tea. She only put the stuff out to brew when she wanted me, my siren of the paddocks. I'd be in the doorway of our room, headin' out before dawn sliced everything through, and she'd say to me, maybe with one of the little ones tucked up next to her: “Iced tea'll be on today.” In a few hours it'd be ready, and so would my darlin', just enough sugar.



She put the tea outside to get strong in the sun, the lemons turnin' to sludge, the liquid goin' this delicious, ugly brown. Sometimes I was sure I could smell it all the way down by the shearing shed, or when I was screwin' round with the tractor - a smell so sweet at the edge of all the grease and the shit caught in the undercarriage. I'd come home for smoko no matter what I was up to, no matter what I tell ya, and I dunno how she did it so synchronised 'cos on a normal day it was pure chaos, but the young 'uns, they'd all be asleep, not a peep from 'em, and the rest of the brood would be at school. And she wanted me, by god she wanted me, those sweet iced tea mornings.



We started with a glass of it on the back porch. Her little pot plants were dotted all around, sproutin' colour no matter the time of year, thrivin' off bath water well-seasoned by a relay of grubby kids. We'd sit under the cover I built, the plastic one that amplified the first spots of a rain, sometimes sendin' the lot of us out in the middle of the night, faces pointed at the sky. We sat there and we'd cheers our glasses together. It'd be ten in the mornin' and the flies'd be nuzzlin' into our eyes, little buggers, and she'd drink her tea so quick. Too quick for me, 'cos I liked to sit there and look at her, taste that drink long and deep and just sit, knowin' something even sweeter was on its way.

We'd be talkin' about Tommy's spelling, or the problems her sister Mauve was havin' with cash flow, about a ewe I'd found by the dam, back leg all bent up, or one turned to fluff balls by a fox. Just chattin', the way it was with her and me, our lives squished together, so much in common, every little thing about her being a big thing for me, and vice versa. I might be mid-sentence, half my iced tea left and the rest of hers would go down the gullet. Her empty glass made this chime sound on the little wrought-iron table set out there, the ornate one that dug into ya bum - we couldn't get rid of it 'cos it'd belonged to her mother. The glass'd chime and it was all systems go. We'd keep talkin' the same stuff but quieter as we scraped those darned chairs from under us and headed inside. I closed the fly-scre

விமர்சனத்தின் மீது விமர்சனம்


தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. அருமையான  அலசல்.
எனது கதைகள் சாதாரணமாக பெண்களுக்குத்தான் பிடித்தமானவை. ஆண்களை நான் மட்டம் தட்டுவதாக எண்ணிக் குமுறுவர். நீங்களாவது புரிந்துகொண்டது நிறைவாக இருக்கிறது.
`ஒரு எழுத்தாளர்..' கதை வெளியானதும், ஒரு வாசகி இரவெல்லாம் தூம்மம் வராமல் தவித்ததாகச் சொல்லி, என்னை அதிகாலையிலேயே தொலைபேசிமூலம் எழுப்பி, `பெண்கள் உரிமையைப்பற்றி எழுதும் நீங்கள்கூட இப்படி எழுதலாமா?' என்று மிகவும் வருந்தினாள். `நாமும் இப்படி இருக்கக்கூடாது என்று எடுத்துக்கொள்ளுங்களேன்!' என்றேன்.  ஆனால் உங்களுக்குப புரிந்திருக்கிறது..

நிர்மலா ராகவன்

திங்கள், 26 டிசம்பர், 2016

எஸ்.செந்தில்குமார்

புத்தகத்தின் பெயர் சிக்கிமுக்கி சிறுகதைகள். Chikkymukky.com மின்னிதழில் வெளிவந்த கதைகளின் தொகுப்பு என்பதால்  அதற்கு  அப்படியொரு பெயர். புதுமைப்பித்தன் பதிப்பகம். தாராகணேசன் தொகுப்பு.இத்தொகுப்பில் பிரபஞசன்,  வண்ணதாசன், நாஞ்சில் நாடன், சமயவேல் , லக்ஷ்மி சரவணக்குமார், என பலர் எழுதிய கதைகளின் தொகுப்பு இந்நூல். எஸ்.செந்தில்குமாரின் கதை  ஒன்றும் அதில் இடம்பெற்றிருக்கிறது.அக்கதை அதிகாலைத் தற்கொலையின் கதை. இக்கதைப்பற்றி சொல்லியாக வேண்டும்.  சரஸ்வதி, தியாகராஜன் இருவரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். சரஸ்வதியின் கொழுந்தன் தியாகராஜன். கணவன் இருக்கையில் கணவனின் தம்பியை சேர்த்துகொள்கிறாள் சரஸ்வதி. இதனால் கணவன் தற்கொலை செய்துகொள்கிறார். தந்தை இறக்க காரணமான அம்மாவையும், சித்தப்பாவையும் மகள்கள் அடித்து விரட்டுகிறார்கள். காலத்தின் பிற்பகுதியில் அவளது மருமகன்களில் ஒருவர் படி தாண்டி மாமியாரிடம் ' நீ புருஷன் இருக்கையில் இன்றொருத்தனை சேர்த்துகொண்டதைப் போல நீ பெத்தவள் நான்  இருக்கையில் வேறொருத்தனிடம் படுத்திருக்கிறாள்...என்ன வளர்ப்போ...ஆ...த்தூ.. ' எனத்துப்பிச் செல்கிறான். இந்த அவமானம் இருவரையும் தற்கொலை க்கு தூண்டியிருக்கிறது. அதற்கு பிறகும் கதை தேவையின் பொருட்டு நீண்டாலும் விமர்சனம் தன் மேல் விழுந்த அதே பலி மகள் மீது விழுகையில் பெண்களால் பொறுத்துக்கொள்ளமுடிவதில்லை என்பதை காட்டி நிற்கிறது. நல்ல கதை. எஸ்.செந்தில்குமார்  அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

விருதுகள் அறிவிப்பு

தமுஎகச கலை இலக்கிய விருது
கட்டுரை,நாவல்,சிறுகதை, கவிதை, விமர்சனம்,மொழிபெயர்ப்பு,குழந்தை இலக்கிய நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
2016 ஆம் ஆண்டில் வெளியான நூல்கள் மட்டும்...
கடைசி தேதி - மார்ச் 31 -2017
இரண்டு பிரதிகள் மட்டும்...
முகவரி
பொதுச்செயலாளர்
தமுஎகச
57/1,மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி
(தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  அலுவலகம் )
மதுரை 625001
( நன்றி - தீக்கதிர் 26 டிசம்பர்

வெள்ளி, 23 டிசம்பர், 2016



மலேசியா பெண் எழுத்தாளர் நிர்மலா ராகவனின் சிறுகதைத்தொகுப்பு' நான் பெண்தான் ' வாசித்தேன். அத்தனையும் பெண் வலி சார்ந்தக் கதைகள். ஒரு எழுத்தாளர் மனைவியாகிறாள் என்று ஒரு சிறுகதை. ஒரு பெண்  எழுத்தாளராக பிரபலமடைகிற பொழுது  ஆண் ஆதிக்க சமூகத்தில் அவளுடைய கணவன் எத்தகைய மனநிலைக்கு உள்ளாவான் என்பதை அக்கதை மிகச் சிறப்பாக கண் முன் காட்டுகிறது. கதையின் முடிவு கண்களில் கண்ணீர் துளிர்க்க வைக்கிறது. 
     நான் பெண்தான்  என்ற சிறுகதை சிங்கப்பூரில்  பல முறை தற்கொலை முயற்சிக்கு உள்ளான ஒரு திருநங்கை மாற்று அறுவைச்சிகிச்சை செய்துகொண்ட நபரைப்பற்றியக் கதை. வாரிசு என்ற கதை மாதருபாகன் நாவல் கதையின் மையோட்டத்தை நினைவுப்படுத்துகிறது. மொத்தத்தில் இத்தொகுப்பு பெண் பால் பிரச்சினைகளை  வலியின் அதிர்வை ஆண்களும்  உணரும் வகையில் படைக்கப்பட்டிருக்கிறது. கடல் கடந்து  அவரது கரங்களைக் குலுக்கத் தோன்றிருக்கிறது. எழுத்தாளர் நிர்மலா
ராகவன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

செவ்வாய், 13 டிசம்பர், 2016

நவம்பர் புதுப்புனல் இதழில் பிரசுரமான சிறுகதை நிஷாந்தி என்கிற பணிப்பெண்

வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு...
      நிஷா என்கிற நிஷாந்தி புது வரவு பணிப்பெண். இருபத்து இரண்டு வயது மதிக்கத்தக்கவள். கேரளா பெண்களுக்குரிய நிறமும், சாயலும் கொண்டவள். மெல்லிய தேகம். உயரம் ஆறடி ஏழு அங்குலம். எடை நாற்பது கிலோ.
      சீருடை ஒன்றே அணிவாள். மேலாடை நீலமும் வெண்மையும் கலந்த பனியன். கழுத்திடத்தில் அவளுடையப் பெயரும் அதற்குச் சற்று கீழாக பெரிய எழுத்தில் கம்பெனியின் பெயரும் அச்சிடப்பட்டிருக்கும். கீழாடை தொடைகளை இறுகப்பிடிக்கும் லெக்கிங்ஸ். காலில் ஷு, சாக்ஸ். கைகளில் கையுறை. காதுகளில் ஒரு மெல்லிய தோடு. கழுத்தில் பாசி. மூக்குத்தி அணிந்திருக்கமாட்டாள். அதை அணிய வேண்டுமென வாடிக்கையாளர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது.
      தாய்மொழி தமிழ். திருநெல்வேலி பாஷை. ஆங்கிலம், இந்தி, மலையாளம், உருது, தெலுங்கு மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடியவள். இது தவிர மராட்டி, குஜராத்தி மொழிகளைப் புரிந்து அதற்குத் தகுந்தவாறு பணிவிடைச் செய்பவள்.
      அவளை பணிப்பெண்ணாக அழைத்துச்செல்ல விரும்புபவர்கள் முன்தொகையாக ஒரு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அதை காசோலையாக செலுத்த வேண்டும். இத்தொகை எக்காரணம் கொண்டும் திருப்பித் தர மாட்டாது.
சம்பள விபரம் :
      மாதந்தோறும் முதல் தேதி அன்று அவளது பெயரால் எடுக்கப்பட்ட காசோலையை கம்பெனி முகவரிக்கு விரைவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். மாதச்சம்பளம் ரூபாய் பத்தாயிரம். முதல் தேதி ஞாயிறு என்றால் அதற்கும் முந்தைய நாள் அதாவது சனிக்கிழமை காசோலை எடுக்கப்பட வேண்டும். இது தவிர ஆறு மாதத்திற்கொரு முறை மத்திய, மாநில அரசுகள் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கும் அகவிலைப்படி, போனஸ், அத்தனையும் நிஷா என்கிற நிஷாந்திக்குப் பொருந்தும்.
வார விடுமுறை மற்றும் மற்ற விபரங்கள்:
      வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை அவளுக்கு விடுமுறைக் கொடுத்தாக வேண்டும். தீபாவளி , பொங்கல் போன்ற இந்து பண்டிகைக் காலங்களில் பண்டிகை முடிந்து மறுநாளுக்கும் மறுநாள் போனஸுடன் கூடிய ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்வாள். இது ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற மற்ற மதப்பண்டிகைக்கும் பொருந்தும்.
அவளது பணிவிடை விபரம் -
மு.ப 5.00 மணி
      அவள் எழுந்திருக்கும் நேரம் இது. அலாரம் வைத்துகொண்டுதான் எழுந்திரிப்பாள். அவள் வைத்திருக்கும் அலாரம் குடும்ப முதலாளி, அவரது மனைவி, பிள்ளைகளின் தூக்கத்திற்கு இடையூறாக இருக்காது. அவள் எழுந்ததும் தன் ஆடைகளைச் சரிசெய்துகொள்வாள். ஐந்து நிமிடங்கள் யோகா பயிற்சி மேற்கொள்வாள். வாடிக்கையாளர்களுக்கு தன் சேவை ஒரு போதும் கோபமூட்டும் படி இருந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த யோகா. பிறகு முகத்தைப் புத்துணர்ச்சியுடனும் , சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள சில நறுமண, வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்வாள். தலைச்சீவி கொண்டை இட்டுக்கொள்வாள். நெற்றியில் சின்னதாக ஒரு பொட்டு. குடும்பத்திலிருக்கும் அத்தனை நபருக்கும் தன் மரியாதைக்குரிய வணக்கத்தைக் குனிந்து நிமிர்ந்து சொல்வாள்.
மு.ப 5.30 மணி
      அவள் செய்யும் முதல் வேலை இந்நேரத்தில் தொடங்கும். இரவில் வைத்தப்பொருட்கள் அதனதன் இடத்தில் இருக்கிறதா....என மேலோட்டம் பார்ப்பாள். ஒரு வேளை பொருட்கள் இடம் மாறியிருந்தால் அல்லது களைந்துப்போயிருந்தால் வீட்டிற்குள் அந்நியர்கள் யாரோ வந்திருக்கிறார்கள் என்பதை முதலாளியிடம் முறையிடுவாள்.
மு.ப 6.00 மணி
      சமையல் எரிவாயு அடுப்பைப் பற்ற வைப்பாள். எரிவாயு அடுப்பில் மட்டுமே சமைக்கத் தெரிந்த அவளுக்கு விறகு அடுப்பையோ, ஸ்டவ் அடுப்பையோ கொடுத்து அவளை சமைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது. சமையலில் முதல் வேலையாக நேற்றைய இரவு சமைத்த உணவுப்பொருட்கள் எதுவும் மீதமிருந்தால் அவைகளைச் சூடு செய்வாள். அதன்பின் தேனீர், காஃபி தயாரிக்கும் வேலைகளில் மும்முரமாக இறங்குவாள். யார், யாருக்கு எவ்வளவு சீனி, டிக்காசன், சூடு என்பதை அவளிடம் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும். தேனீருக்கும், காஃபிக்கும் தனித்தனி பாத்திரங்களைப் பயன்படுத்துவாள். நன்றாக ஆற்றி அவரவருக்கு தேவையானச் சூட்டில் அதிகப்பட்ச மரியாதையுடன் அதை அவர்களிடம் நீட்டுவாள். முதலில் குழந்தைகளுக்கும் அதன்பிறகு படிப்படியாக வயதில் மூத்தவர்களுக்குமாக அவளுடைய  பணிவிடை தொடரும்...
மு.ப.7.00 மணி
      அன்றையத் தினசரிகளை அவள் வாசித்துக் காட்டுவாள். முதலில் தலைப்புச் செய்திகளாக வாசிப்பவள் பிறகு மாவட்டச் செய்திகளையும், உள்ளூர் செய்திகளையும் முடித்ததன் பிறகு தேசிய, உலகச் செய்திகளுக்குச் செல்வாள். அரசியல் செய்திகளில் அவள் அவ்வளவாகக் கவனம் செலுத்த மாட்டாள். ஆனால் விளையாட்டுச் செய்திகளுக்கு கூடுதல் நேரம் எடுத்துகொள்வாள்.
மு.ப. 7.30 மணி
      சமையல் தொடங்கும் நேரம் இது. அடுப்பில் சமையல் பாத்திரங்களை வைத்துகொண்டு காய்கறிகளை நறுக்கத் தொடங்குவாள். காலை உணவிற்கு சப்பாத்தி, இட்லி, தோஸை, பொங்கல், இடியாப்பம், ஊத்தாப்பம் இவற்றில் எதாவது ஒன்றினைச் சமைப்பாள். யாரேனும் ஒருவருக்கு மட்டும் வேறொரு உணவு வேண்டுமென்றால் அவருக்கு மட்டும் பிரத்யேகமான உணவைச் சமைத்துக்கொடுக்க முன் வருவாள். அதே நேரம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உணவை சமைக்க அவள் சம்மதிக்க மாட்டாள். ஏனெனில் குடும்பத்தார்கள் ஒரே உணவை சேர்ந்து உண்பது ஒன்றே குடும்ப ஒற்றுமையையும், சந்தோசத்தையும் கூட்டும் என்பதால் அப்படியொரு முடிவை அவள் எடுத்திருக்கிறாள். காலையில் மட்டன், சிக்கன் சமைக்க அவளைக் கட்டாயப்படுத்தக்கூடாது.
      உங்கள் உடம்பிற்கு கறி உணவு எப்பொழுது தேவைப்படுகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து குறித்த நேரத்தில் உங்களை அவள் கறி வாங்கி வர உத்தரவு இடுவாள். கெட்டுப்போன, அழுகிய, இறந்த மாமிச உணவுகளாக இருந்தால் அதை வெளியே விட்டெறிந்துவிடுவாள். இத்தகைய பண விரயத்தைத் தவிர்க்க மட்டன் வாங்கி வரச் செல்கையில் அவளை கூட அழைத்துச் செல்வது நல்லது.
      இது தவிர யாரேனும் உடல் நலிவுற்றிருந்தால் அவர்களைக் கவனிக்கும் பொருட்டு கஞ்சி சமைப்பது, மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொடுப்பது போன்ற பணிவிடைகளைச் செய்வாள்.
மு.ப 8.00 மணி
      அனைவரையும் குளிக்க வைக்கின்ற நேரமிது. முதலில் குழந்தைகளும் அடுத்து பெண்களும், அடுத்ததாக ஆண்களும் குளிக்க வேண்டும். குழந்தைகளாக இருந்தால் அவளே குளிர்ப்பாட்டி, துவிட்டி, மின்விசிறியில் தலைமுடிகளை உலர வைப்பாள். குழந்தைக்கேட்கும் ஆடைகளை அணிவித்து தலை சீவி, பொட்டு வைத்து பள்ளி வயது குழந்தையாக இருந்தால் அக்குழந்தைக்குத் தேவையான சாப்பாடு, சினாக்ஸ், ஹோம் ஒர்க், புத்தகங்களை எடுத்து வைப்பாள்.
      பெண்கள் குளிக்கையில் சில உதவிகளைச் செய்ய தயங்க மாட்டாள். குறிப்பாக, மஞ்சள் தேய்த்துக்கொடுப்பது, முகத்திற்கு சோப்பு போடுகையில் தண்ணீர் முகர்ந்துக்கொடுப்பது, தலைக்கு சாம்பு தேய்த்து முடிகளை நீவி விடுவது, துவட்டி விடுவது போன்ற பணிகளைச் செய்வாள். ஆண்கள் குளிக்கையில் முதுகு தேய்த்துவிடும் வேலை ஒன்றை மட்டுமே செய்வாள்.
மு.ப 9.00 மணி
      உணவு பரிமாறும் நேரம் இது. இடுப்பில் டவல் ஒன்றைக் கட்டிக்கொண்டு கையில் பாலித்தீன் உறையுடன் உணவு பரிமாறுவாள். நிஷா என்கிற நிஷாந்தி என்பவளின் சிறப்பே உணவு பரிமாறுவதுதான். யார், யார்க்கு என்ன உணவு பிடிக்கும், எவ்வளவு பிடிக்கும் என்பதை வாடிக்கையாளர் சாப்பிடும் விதத்தை வைத்தே கணித்துவிடுவாள். சாப்பிடுகையில் புரை ஏறினால் உச்சந்தலையைத் தட்டுவாள். தண்ணீர் கொடுப்பாள். ஒருவேளை உணவில் உப்பு, மிளகு, சர்க்கரை கூடக் குறைய இருந்தால் மன்னிப்புக் கேட்கவும் தயங்கமாட்டாள்.
மு.ப 9.30 மணி
      சாப்பாட்டுத் தட்டுகளை எடுத்து , கழுவி அதனதன் இடத்தில் வைக்கும் நேரமிது. சமையலறையை ஈரத்துணிக்கொண்டு துடைப்பாள். சமையல் மிச்சமிருந்தால் அதை சரியாக அப்புறப்படுத்துவாள். திட, திரவ , மக்கும், மக்காத கழிவுகளை அததற்குரிய குப்பைத் தொட்டிகளில் கொட்டுவாள்.
மு.ப 10.00 மணி
      அவளை அவள் புத்துணர்ச்சி செய்துகொள்ளும் நேரமிது. ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வாள். அவள் ஓய்வு எடுத்துக்கொள்ளும் நேரத்தில் அந்நியர்கள் யாரும் அவளுடைய அறைக்குள் நுழையக்கூடாது.
மு.ப 11.00 மணி
      வீட்டின் கூரையை ஒட்டடை அடிப்பாள். தரையைத் துடைத்தெடுப்பாள்.இந்நேரத்தில் யாரும் வீட்டிற்குள் வருவதோ அல்லது வீட்டினை விட்டு செல்வதோ கூடாது. ஒரு வேளை இதை மீறினால் கோபித்துக்கொள்ளச் செய்வாள்.
மு.ப 12.00 மணி
      மதிய உணவிற்காக சமையல் தொடங்கும் நேரம் இது. காய்கறிகளை உப்புத்தண்ணீரில் கழுவி எடுப்பாள். காய்கறிகளின் கலோரி வீணாகாமல் இருக்க அததற்குரிய சைஸில் நறுக்குவாள். முதலில் கூட்டுப்பொரியல்களையும், அடுத்து சாம்பார் ரசத்தையும் கடைசியில் சாதத்தையும் சமைப்பாள். காய்கறி பாதியளவு வேகுவதுதான் நல்லது என்பதால் அவ்வாறே சமைத்து எடுப்பாள். முழுவதுமாக வெந்த காய்கறிகள்தான் வேணும் என்றால் அதனை அவளிடம் முன் கூட்டியே சொல்லிவிட வேண்டும்.
பி. ப 1.00 மணி
      மதிய உணவு பரிமாறுவாள். முதலாளிக்கு கை அலம்பத்  தண்ணீர் கொடுத்து அன்புடன் அழைப்பாள். கைகளைச் சோப்பிட்டு கழுவுகிறீர்களா என்பதைக் கவனிப்பாள். ஒரு வேளை அவ்வாறு கழுவவில்லை என்றால் அதைச் சுட்டிக்காட்டத் தயங்க மாட்டாள். கைக் கழுவும் முறையுடன்தான் கை கழுவ வேண்டும். ஒரு வேளை தெரியவில்லையென்றால் அதனை சொல்லிக்கொடுக்க முன் வருவாள்.
பி.ப 2.00 மணி
      மதிய உணவு முடிந்து அரை மணி நேரம் தூங்குவது உடல் நலத்திற்கு நல்லது. ஆகவே அனைவரும் தூங்கும்படியாக ஒரு கதையொன்றைச் சொல்வாள். கதையென்றால் ஓர் ஊர்ல...,ஒரு நாட்டுல....போன்ற கதைகள் அல்ல. பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள். உதாரணத்திற்கு கல்கி, கு.அழகிரிசாமி, ராஜநாராயணன், அகிலன், புதுமைப்பித்தன், பிரபஞ்சன், பொன்னீலன், கந்தர்வன், அழகியப்பெரியவன், மேலாண்மை பொன்னுசாமி,....இவர்கள் எழுதிய கதையொன்றை சொல்லித் தூங்க வைப்பாள். மொழிபெயர்ப்பு கதைகளையும் அவள் அவ்வபோது சொல்லக்கூடும். அசாமி எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி, மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர், உருது எழுத்தாளர் சைனீ, அன்வர்கான், ஒரியா எழுத்தாளர் கோபிநாத் மெகந்தி, இந்தி எழுத்தாளர் உஷா மகஜன், தெலுங்கு எழுத்தாளர் லாசா பிரபாவதி, வங்காள எழுத்தாளர் மகேஸ்வதா தேவி,கன்னட எழுத்தாளர் எஸ்.திவாகர்,...இப்படி பலரின் கதைகளையும் அழகாக சாராம்சம் குன்றாமல் சொல்லி தானொரு சிறந்தக் கதைச்சொல்லி என்பதைக் காட்டுவாள்.
பி.ப 2.30 மணி
      துணிகளைத் துவைக்கும் நேரமிது. வாசிங் மிஷினில் அவள் துவைத்தாலும் காலர், கை மடிப்பு, பாக்கெட் போன்ற இடங்களில் கைகளால் அழுக்குகளை தேய்த்தெடுக்க தவறமாட்டாள். துணிகளை மெல்லப்பிழிந்து உதறி கொடியில் காயப்போடுவாள்.
பி.ப 3.00 மணி
      முதல்நாள் துவைத்த துணிகளை இஸ்திரி செய்து மடித்து வைக்கும் நேரமிது.
பி.ப 4.00 மணி
      வீட்டைச் சுற்றிலுமிருக்கும் மரம், செடி, கொடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவாள். தண்ணீர் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க சொட்டு நீர் பாசனத்தை மேற்கொள்வாள். பூஞ்செடி மற்றும் அழகு செடிகளில் அதிக கவனம் செலுத்துவாள். ஒவ்வொரு இலைகளாகப்பார்த்து அதில் ஏதேனும் புழு, பூச்சிகள் இருந்தால் அதைக் கத்தரிக்கோல் கொண்டு கத்தரிக்கும் வேலையைச் செய்வாள். மல்லிகைப் பூக்களைப்பறிப்பாள். பூத்தொடுப்பாள். சரமாகத் தொடுக்கும் பூக்களைக் கொண்டு பூஜையறையில் இருக்கும் சாமிகளுக்கு சூட்டுவாள். வீட்டில் பூச்சூடும் பெண்களின் கூந்தலில் சூட்டி அழகுப்பார்ப்பாள்.
பி.ப 4.00 மணி
      அவள் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் நேரமிது. சதுரங்க சாம்பியனான அவளுடன் சதுரங்கம் விளையாடுவது நல்லப் பொழுதுப்போக்காக அமையும். அவளுடன் பந்தயம் கட்டியும் விளையாடலாம். விளையாடத் தெரியாதவர்களுக்கு அவள் சொல்லிக்கொடுக்கவும் செய்வாள். என்னதான் அவள் சதுரங்க சாம்பியனாக இருந்தாலும் குழந்தைகளுடன் விளையாடுகையில் குழந்தைகளை வெற்றிப்பெறச் செய்து அவள் தோற்றுப்போகச் செய்வாள்.
பி.ப 5.00 மணி
      தேனீர், காஃபி தயாரிக்கும் நேரமிது. கூடவே எள்ளு, கொள்ளு, அவல், கொண்டைக்கடலை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை அவிழ்த்து சுவைப்பட செய்துகொடுப்பாள்.
பி.ப 6.00 - 8.00  மணி
      குழந்தைகள் படிப்பின் மீது கவனம் செலுத்தும் நேரமிது. குழந்தைகளை மிக அருகினில் உட்கார வைத்து அவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பாள். பிரிட்டிஷ் இங்கிலிஷ், அமெரிக்கன் இங்கிலிஷ் இரண்டிலும் தேர்ந்தவள் என்பதால் குழந்தையின் விருப்பத்திற்கேற்ப அவள் சரியான உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தைக் கற்பிப்பாள். பொதுஅறிவு கேள்விகளையும் அன்றைய தினத்து வரலாற்று, அறிவியல் கேள்விகளைக் கேட்டு குழந்தைகளின் நுண்ணறிவை வளர்த்தெடுப்பாள்.
பி.ப 8.00 மணி
      இரவு உணவு நேரம். இரவு உணவை அவள் மிதவான உணவாகவே சமைத்து எடுப்பாள். இடியாப்பம், சப்பாத்தி, இட்லி, பூரி போன்ற உணவுகளையும் அதற்கேற்ற சைடீஸ்டுகளையும் செய்துக் கொடுக்கும் அவள் அதை மிதமான சூட்டுடன் பரிமாறுவாள். மேகி, நூடுல்ஸ் போன்ற உணவுகள் அவளுக்கு சமைக்கத் தெரியாது.
இரவு 9.00 மணி
      குழந்தைகளுடன் பேசி சிரித்து விளையாடுவாள். பெரியவர்களிடம் அன்றையத் தினத்து சந்தோஷம் மற்றும் கசப்பானச் சம்பவங்களைக் கேட்டு முடிந்தால் அதற்கானத் தீர்வுகளைச் சொல்வாள்.
இரவு 9.30 மணி
      குழந்தைகளைத் தோளில் கிடத்திக்கொண்டு தட்டிக்கொடுத்தவாறு தாலாட்டுப்பாடுவாள். தாலாட்டு குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்கும் படியாகவும் , எதிர்காலத்தில் பல்வேறு வெற்றிகளைக் குவிக்கும் வகையிலும் இருக்குமாறு பார்த்துக்கொள்வாள். தூங்கியக் குழந்தைகளை அவர்களுக்குரிய இடத்தில் படுக்க வைப்பாள்.
இரவு 10.00 மணி
      பெரியவர்களைத் தூங்க வைக்கும் நேரமிது. குடும்பத் தலைவர், தலைவிகளின் கால்களைப்பிடித்துவிடுவாள். மின்சாரம் நிறுத்தப்பட்டால் விசிறி விடுவாள். மனதிற்கு சாந்தமான பாடல்கள், கதைகளைக்கூறுவாள். எம்.எஸ் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, ஏ.ஆர் ரகுமான்,...மெல்லிசைப் பாடல்களைப் பாடி குறித்த நேரத்திற்குள் தூங்க வைப்பாள்.
இரவு 10.30 - 11.00 மணி
      பாத்திரங்களை கழுவி வைப்பாள். மீத உணவுகளை அதற்குரியக் தொட்டியில் கொட்டுவாள். சமையலறையை ஈரத்துணிக்கொண்டு துடைப்பாள். சமையல் எரிவாயுவை நிறுத்துவாள். மின்சார விளக்குகளை நிறுத்தி ஜீரோ வோல்டு விளக்கை  குறிப்பட்ட அறைகளில் ஒளிர விடுவாள். அன்றையத் தினத்தின் கடைசியில் அவளைப் படைத்தவர்களுக்கு நன்றி கூறும் அவள் ‘குட் நைட்’ சொல்லிக்கொண்டு அவளது அறைக்குள் நுழைந்துக்கொள்வாள்.
                                          ####
நிஷா என்கிற நிஷாந்தியின் நேர்முகக் கண்காணிப்பாளர் அவர்களுக்கு...
      வாடிக்கையாளர்  திருமூர்த்தி எழுதிக்கொள்வது....
      நிஷா என்கிற நிஷாந்தியை ஒரு இலட்சம் முன்பணம் செலுத்தி எனக்கும் என் குடும்பத்தார்க்கும் பணிவிடை செய்ய அழைத்து வந்தேன். நீங்கள் எனக்குக்கொடுத்த உறுதிமொழி மற்றும் நேர அட்டவணையின் படி அவள் அன்றாட வேலைகளைச் செய்து வந்தாள். ஆனால் நேற்றைய இரவு சரியாக 10.15 மணியளவில் அவளது வேலையை அவள் சட்டென நிறுத்திக்கொண்டாள். அதன் பிறகு நான் எவ்வளவு கட்டளை இட்டும் அவள் அவளது வேலையைத் தொடர்வதாக இல்லை. இதனால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறேன்.
       நிஷா என்கிற நிஷாந்தி வாயிலாக என்னிடம் நீங்கள் திட்டமிட்டு ஒரு இலட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கிறீர்கள். இதுதவிர அவளுக்கான மாதச்சம்பளத்தையும் பெற்றிருக்கிறீர்கள். .உங்கள் மீது நான் இ.பி.கோ 320 ஜீரோ ஆக்ட் 17(ஏ) இன் படி வழக்கு தொடர இருக்கிறேன். அதன் மூலம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்க இருக்கிறேன். இந்நோட்டீஸ் கிடைத்த ஒரு வாரத்திற்குள் என் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் அளிக்க வேண்டுமாய் கேடடுக்கொள்கிறேன்.
                                    #####
வாடிக்கையாளர் திரு. திருமூர்த்தி அவர்களுக்கு....
      நிஷா என்கிற நிஷாந்தியின் திடீர் வேலை நிறுத்தத்திற்கு அவளது நேரடிக் கண்காணிப்பாளர் என்கிறவன் முறையில் தாங்களிடம் பகீரங்க மன்னிப்புக்கோருகிறேன். எங்களிடமிருந்த பணிப்பெண்களில் மிகவும் அழகானவளும், புத்திசாலியுமானவள் நிஷா என்கிற நிஷாந்திதான். அவளது திடீர் வேலை நிறுத்தம் உண்மையில் உங்களைப்போன்று எனக்கும் மன வருத்தம் அளிக்கவே செய்கிறது. நீங்கள் விரும்பினால் அவளை நாங்கள் திரும்ப அழைத்துக்கொண்டு உஷா என்கிற  உஷா தேவி அல்லது பானு என்கிற பானுப்பிரியா இவர்களில் யாரேனும் ஒருவரை அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறேன். ஒருவேளை விருப்பமில்லை என்றால் நீங்கள் கோரும் ஒரு கோடி ரூபாயை நஷ்ட ஈடாகத் தரவும் இருக்கிறேன்.
      நிஷா என்கிற நிஷாந்தியின் திடீர் வேலை நிறுத்தத்திற்கானக் காரணத்தை ஆராய்கையில் இதனால் இருக்கலாம் என எங்களால் ஊர்ஜிதப்படுத்த முடிகிறது. அவளைப்பற்றியும் அவளது பணியைப் பற்றியும் கால அட்டவணையாகக் கொடுத்த எங்கள் கம்பெனி ஒரே ஒரு குறிப்பை வாடிக்கையாளர்களின் மீதான அதீத நல்லெண்ணத்தின் அடிப்படையில் குறிப்பிடாமல் விட்டிருந்தோம். அதை நான் இப்பொழுது தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நிஷா என்கிற நிஷாந்தி உலகத் தரச்சான்று பெற்ற ரோபோ. இரவு பனிரெண்டு மணி முதல் அதிகாலை ஐந்து மணி வரை ஏற்றிக்கொள்ளும் மின்னேற்றத்தைக் கொண்டு அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்புடன் இயங்கக்கூடியவள். அவளது அனைத்துச் செயல்பாடுகளுக்குமான மென்பொருள் மற்றும் மின்பொருளை அவளது அந்தரங்க உறுப்புகளில் அமைத்திருந்தோம். ஒரு வேளை அவளது அந்தரங்க உறுப்புகளின் மீது உங்களது கை சீண்டிருக்குமேயானால் அவளது அன்றாடப் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட வாய்ப்பிருக்கிறது.
      ஒரு வேளை அத்தகைய முயற்சியில் நீங்கள் ஈடுபட்டிருந்தால் இந்நோட்டீஸ் கிடைத்த ஒரு வாரத்திற்குள் அதாவது 27.01.2030 அன்றைய தினத்தின் ஐந்து மணிக்குள் எங்களிடம் நேரடியாகவோ அல்லது கடிதம் வாயிலாகவோ மன்னிப்புக்கோர கேட்டுக்கொள்ளப்படுகிறது. இல்லையென்றால் ரோபோ சட்டம் 2025, பெண் ரோபோக்களின் பாதுகாப்புச் சட்டம் - 2029 ஷரத்து 22(பி) இன் படி உங்கள் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்படும் என்பதை இந்நோட்டீஸ் வாயிலாகத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

                                         

திங்கள், 12 டிசம்பர், 2016

குறுநாவல் போட்டி அறிவிப்பு

வசுமதி ராமசாமி நூற்றாண்டு விழா குறுநாவல் போட்டி
5000 வார்த்தைகள்
கடைசி தேதி  - 31.01.2017
முகவரி
அமுதசுரபி
 R5- A/2இமயம் காலனி  இரண்டாவது தெரு
அண்ணா நகர் மேற்கு விரிவு
சென்னை -600101
amudhasurabi@gmail.com

புதன், 7 டிசம்பர், 2016

ராபெர்த் ரஷ்தேஸ்த்வென்ஸ்கியின் கவிதை இது.
                விசாரணை
‘நான் உன்னை காதலிக்க வேண்டுமா?’
‘ஆமாம்’
‘நான் கறை படிந்தவள்’
‘பரவாயில்லை’
‘உன்னிடம் நான் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன்’
‘ நல்லது! சொல்லலாம்’
‘நான் உன் காதலியானால்...’
‘ மிகவும் நல்லது’
‘நீ எனக்குத் தேவைப்படுகையில்...’
‘கடைக்கண் காட்டினால் போதும்...’
‘உன்னை நான் ஏமாற்றிவிட்டால்...’
‘ பொருட்படுத்தமாட்டேன்’
‘ஆபத்து ஏற்பட்டால்....’
‘தலை கொடுக்கவும் தயார்’
‘பாடச் சொன்னால்...’
‘ பாடுவேன்’
‘ஒரு நண்பனை இழக்கச் சொன்னால்...’
‘பாதகமில்லை’
‘யாரையாவது கொல்லச் சொன்னால்...’
‘ கொன்றுவிடுவேன்...’
‘உன்னைச் சாகச்சொன்னால்....’
‘ செத்துவிடுவேன்...’
‘நம் கப்பல் நாசமாகிவிட்டால்...’
‘ நீ நீரில் மூழ்க விடமாட்டேன்...’
‘வலி வேதனைக்கு அஞ்ச மாட்டாயா....?’
‘அஞ்ச மாட்டேன்’
‘தடையாக ஒரு சுவர் இருந்தால்...?’
‘ அதைத் தகர்த்தெறிவேன்’
‘ஒரு முடிச்சு இருந்தால்...’
‘அதை வெட்டி விடுவேன்...’
‘என்றென்றும் நீ என்னை நேசிப்பாயா...?’
‘ சாகும் வரைக்குமு் நேசிப்பேன்..’
‘ என் உன்னை காதலிக்கத்தான் வேண்டுமா...?’
‘ ஆமாம்..ஆமாம்...’
‘இளைஞனே ! ஒருபோதும் உன்னை நான் நேசிக்க மாட்டேன்’
‘ ஏன்...?’

‘ நான் அடிமைகளை விரும்புவதில்லை’

....ம்


“ வணக்கங்கய்யா......... ”
       “... ம்...ம் ”
‘ ம்....ம்....’ சுந்தரியின் செவிப்பறைக்குள் எண்ணுமையாக ஒலித்தது. ஒலிக்க மட்டுமா செய்தது...? சுயமரியாதையை ‘டர்.....’ரென ஒரு கிழி கிழிக்கவும் செய்தது.
‘எண்ணுமை’ சுந்தரி பள்ளியில் படித்தக்காலத்தில் பிடித்த இலக்கணமாக இருந்ததோ என்னவோ ஆனால் அவளுக்கு அது புரிந்த இலக்கணம். பகுபத உறுப்பிலக்கணம், வியங்கோள் வினைமுற்று, ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம், வினையெச்சம்,...இலக்கணங்களெல்லாம் பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் பொதுத்தேர்வு எழுதிய அடுத்த வினாடியே மறந்துப்போக  எஞ்சி நிற்பது இந்த ‘எண்ணுமை’  மட்டும்தான்!
வயலு‘ம்’ வாழ்வு‘ம்’ , அல்லு‘ம்’ பகலு‘ம்’ , வெற்றியு‘ம்’ தோல்வியு‘ம்‘.....இப்படியாக  இரண்டு முறை ‘ம்’ வந்தால் அதற்கு எண்ணுமை என்று பெயர். “ என்னங்கடி.... நா நடத்துறது புரியுதா...?” கேட்டிருந்தார் தமிழாசிரியர் விஜயலெட்சுமி. 
“ புரிகிறது அம்மா”
“ என்னங்கடி புரியுது...?”
“ இரண்டு முறை ‘ம்’ வந்தால் அது எண்ணுமை” - சுந்தரி  சொன்னதும் ஆசிரியர் அவளது கையைப்பிடித்து குலுக்கு குலுக்கென குலுக்கி எடுத்துவிட்டார். அதுபோதாதென்று மாணவிகளின் பலத்தக் கைத்தட்டல் வேறு. அவளது மனதிற்குள் இரண்டாம் வேற்றுமைத்தொகை ‘ஐ’ துளிர்விட்டது. இதற்கும்பிறகும் எண்ணுமை மறந்துப்போக அவள் என்ன பிரணவ மந்திரத்தை மறந்த பிரம்மனா....?
எண்ணுமையும், முற்றுமையும் ஒரு கரு இரட்டையர்கள். ஒன்றுக்கொன்று தொடர்புடைய தமிழ் இலக்கணங்கள்.
ஒரு ‘ம்’ வந்தால் முற்றுமை. உதாரணம் வணக்கம்.  இரண்டு முறை ‘ம்’ வந்தால் எண்ணுமை. நீயும் நானும்.
‘வணக்கம்’
தமிழ்ச்சொற்களில் மரியாதைக்குரியச் சொல் அது. என்னதான் குட் மார்னிங், ஈவினிங், நைட் ....எனச்சொன்னாலும் ‘வணக்கம்’ இதிலிருக்கின்ற உயிர், பசை  மற்றதில் வருமா....?
‘ வணக்கம்....முக்கியச்செய்திகள்.....’ அகில இந்திய வானொலியில், உங்கள், எங்கள் தொலைக்காட்சி செய்திகளில் கேட்கும் போது எத்தனை மரியாதை அவர்களின் மீது ஏற்படுகிறது. அந்த வணக்கம் என்கிற ஐந்து எழுத்துடன் அய்யா என்கிற பிரிதிப்பெயர்ச்சொல்லையும் சேர்த்து அழகாக, பவ்வியமாக ஒரு கடைநிலை ஊழியருக்கு இருந்தாக வேண்டிய பணிவுடன் சொல்லிருந்தாள் அவள்.
 “ வணக்கம் அய்யா”
நீலகண்டர் அவளுக்கு பதில் ‘வணக்கம்’ வைத்திருக்க வேணும். அதையும் சிரித்து சொல்லிருக்க வேணும். அது என்னதாம் “....ம்...ம்...?”.
சுந்தரிக்கு தலைகால் புரியாமல் கோபம் வந்தது.பெருமூச்சு விடுகையில் ஆயுத எழுத்து தொண்டைக்குள் வந்து சிக்கியது. ‘ ஃ ’ .
வெள்ளைக்காரன் ஆட்சியாக இருந்திருந்தால் ‘...ம்....ம்’ சொல்லியிருக்க முடியுமா...? . துரைமார்கள் விட்டிருப்பார்களா....? ‘ம்’ என்றால் சிறைவாசம் என்கிற எதோ ஒரு சட்டவிதியின் கீழ் கைது செய்து அந்தமான் செல்லுலார் சிறையில்  அடைத்து ‘செக்’ சுற்ற வைத்திருப்பார்கள்.  
சுந்தரி அந்த அலுவலகத்தின் துப்புரவு ஊழியர். தொகுப்பு ஊதியம். மாதம் ஆயிரத்து ஐநூறு.தினம் தினம் அலுவலகத்திற்கு வருவதில் அகரம் அவள். ஒரு கூடை, அதற்குள் ஒரு தூர்வை. கைவீசம்மா.... கைவீசு....என நடந்து வருபவள். கூட்டல், கழித்தல், பெருக்கல் , வகுத்தல் அத்தனையும் தூரிகையால் செய்யக்கூடியவள்.
       மக்கும் குப்பை, மக்காதக்குப்பை எனப்பிரிப்பதில் தொடங்கி கீழே கிடக்கும் தபால்களை எடுத்து மேசையின் மீது வைப்பது வரை எல்லாம் அவள் செயல்தான். அதுமட்டுமா.. ஒட்டடை அடிக்க, தண்ணீர் எடுக்க, அலுவலர்களுக்கு தேநீர் வாங்கி வர, பாத்திரத்தைக் கழுவ....என ‘அம்மாடி இவ்ளோ ஓடியாடி வேலை செய்றீயே, கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்கிறக்கூடாதா....’ எனப்பார்க்கிறவர்கள் இரக்கப்படுமளவிற்கு வேலைகளை வரிந்துக்கட்டிக்கொண்டு செய்து முடிக்கும் இயந்திரப்பெண் அவள்.
நீலகண்டர் அறையில் மின்விசிறி சுற்றிக்கொண்டிருந்தது. பழைய காலத்து மின்விசிறி அது. கிரிச், கிரிச்...என இரட்டைக்கிளவியில் சப்தம் எழுப்பிக்கொண்டிருந்தது. இடையிடையே ஆந்தையின் முணங்களைப்போல ‘ம்....ம்’ சப்தம் வேறு.
‘ம்...ம்’ இதைக்கேட்டதும் அவளால் தொடர்ந்து கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்ய முடியவில்லை. மனதிற்குள் ஓர் அசூசை.  தாழ்வு மனப்பான்மையும், அவமானமும் கலந்தக்கிறக்கம் அவளைப்பற்றியது.  அப்படியே முழங்கால்களை மடக்கி தரையில் உட்கார்ந்தவள் அறைகளைச் சுற்றுமுற்றுமாகப் பார்த்தாள்.  
சுவற்றில் இந்தியத்தலைவர்களின் புகைப்படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. புகைப்படத்தி்ற்கு பின்னால் சிட்டுக்குருவிகளும் சிலந்திகளும் , கறையான்களும், பல்லிகளும் இல்லறமே நல்லறமென  குடும்பம் நடத்திக்கொண்டிருந்தன. ஒரு புகைப்படத்திற்கும் கீழே ‘உண்மையும் உழைப்பும் தனி மனிதனின்  அடையாளம் ’ என்கிற வாசகம் எழுதப்பட்டிருந்தது.  உண்மையையும் உழைப்பையும்...அதைப்படிக்கையில்  மறுபடியும் அவளுக்கு ‘...ம்...ம்’  எண்ணுமை மண்டைக்குள் ஏறி உட்கார்ந்துக்கொண்டு மலைபடுகடாம் ஒப்பித்தது. அவளால் அதற்கு மேல் கூட்டிப்பெருக்க முடியவில்லை. மாவு பிசைவதைப்போல மனதிற்குள் ஒரு பிசைவு பிசைந்தது.  அவளைச்சுற்றிலும் “ம்...ம் ” ஒலித்துக்கொண்டிருந்தது.
சுந்தரிக்கு ஐயவினா எழுந்தது. நீலகண்டர் நான் வைக்கும் வணக்கத்திற்கு மட்டும்தான் “..ம்...ம் ” என்கிறாரா...? இல்லை  இந்த அலுவலகத்தில் பணியாற்றும் எல்லா அலுவலருக்கும் அந்த புளித்துப்போன மரியாதைதானா.....? ”. இதை என்னவென்று  பார்த்து விட வேண்டும்!  முந்தாணையை எடுத்து இடுப்பில் சொறுகிக்கொண்டு  திருப்புதல் தேர்வுக்கு இறங்கினாள் அவள்.
நீலகண்டர் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவாறு கால்களை மெல்ல ஆட்டிக்கொண்டு கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். சித்ரா அலுவலகத்திற்குள் நுழைந்தார். உச்சி வகிட்டில் பெரிய குங்குமப்பொட்டு வைத்திருந்தார். அ1 எழுத்தர் அவர்.
அவர் தலைமை அறைக்குள் நுழைந்ததும்  நீலகண்டரைப்பார்த்து  சொன்னார். ‘‘வணக்கம் அய்யா”
நீலகண்டர் கோப்பிலிருந்து பார்வையை எடுத்து நிமிர்ந்துப்பார்த்தார். உயிர்நெடில் ‘ஐ’யை உச்சரிக்கும் அளவிற்கு சிரித்தவர் “ வணக்கம் சித்ரா ” என்றார்.
 சுந்தரியின் மண்டைக்குள் ‘கிண்ண்’ணென இருந்தது.
“  அய்யா... எப்படி இருக்கீங்க. வீட்டில எப்படி இருக்காங்க....? ”
“ ஒரு கவலையுமில்ல. எல்லாரும் நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்கே..? உன் வீட்டுக்காரர் எப்படி இருக்கார்...?”
       “ நல்லா இருக்கார்’’
       சித்ரா விடைபெறலானார். அடுத்து ரகுராமன். அவர் ஆ2 எழுத்தர். ரகுராமன் பின்பக்க முடியை சீப்பால் ஒடுக்கிக்கொண்டு முன் வழுக்கையை கைக்குட்டையால் துடைத்துவாறு  நீலகண்டர் அறைக்குள் நுழைந்தார்.
       “ வணக்கங்கய்யா”
       “ வணக்கம் ரகுராமன்”
       அவரது தலை அதற்குள் மேல் நிமிர்ந்திருக்கவில்லை. ஒற்றைச்சுழி எழுத்தைப்போல குனிந்துகொண்டது.
       “ அய்யா நாளைக்கு ஒரு நாள் விடுப்பு வேணும்”
       “ ஏன் ரகுராமன்...?”
       “ பையன் வெளிநாடு போறான். வழி அனுப்பி வைக்கணும்.”
       “ யாருடைய விடுப்பை எடுக்குறீங்க...? உங்க விடுப்பைத்தானே....தாராளமாக எடுத்துகொள்ளுங்கள்....’ உயர்அதிகாரிகளுக்கென்று ஒரு முகம் இருக்கிறது. அந்த முகத்தைக்காட்டியவாறு இருந்தார் அவர்.
“ நன்றிங்க அய்யா....”
       ‘ பரவாயில்லை....’
       போனவாரம் நான் ஒரே ஒரு நாள் விடுப்பு கேட்டேனே...இப்படி அனுசரணையான பதில் வரவேயில்லை.. எத்தனைக்கேள்விகள் கேட்டார். பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளிக்கும் வகை கேள்விகளாக அல்லவா கேட்டார். அத்தனைக் கேள்விகளையும் கேட்டு கடைசியில் குற்றியலுகரத்தில் பதில் சொன்னார் “கிடையாது” . அதை நினைக்க நினைக்க அவளது மனதிற்குள் கண்ணகி வைத்த மதுரைத்தீ தகதக...வென எரிந்தது.
       அடுத்ததாக உதவி அதிகாரி கிருஷ்ணன். வரும்பொழுதே அலைபேசியில் உள்ளூர் அரசியல் பேசிக்கொண்டு வந்தார். அறைக்குள் நுழைந்ததும் அலைபேசியை ‘உஷ்’ நிலைக்கு மாற்றிவிட்டு  தலைமை முன் பவ்வியமாக நின்றார்.  
       “ வணக்கங்கய்யா”
       “ வணக்கம் கிருஷ்ணன்” 
       மனிரத்தினம் திரைபட வசனம் அளவிற்கு அந்த உரையாடல் இருந்தது. அவ்வளவேதான்! கிருஷ்ணன் அவரது இடத்தை நோக்கி நடக்கலானார். வழியில் நிறைய அலுவலர்கள் உட்கார்ந்து கோப்பில் மூழ்கிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருத்தரையும் பெயர் சொல்லி அழைத்தார். 
       “ சித்ராம்மா  வணக்கம்”
       “ வணக்கங்கண்ணா
       “ ரகுராமன் அய்யா வணக்கம்”
       “ வணக்கம் அய்யா ”
       “.......”
       “ சுந்தரி.....”
       தனக்கொரு வணக்கம் கிடைக்கப்போகிறது என்கிற வேட்கையுடன் வேகமாக திரும்பினாள் சுந்தரி.
       “ நேற்றைக்கு காலையில என் அறையைக் கூட்டினது யார்...?”
 கேள்வி , பாம்பின் தலையைப்போல தொடுக்கி நின்றது. எல்லோருக்கும் வைத்த வணக்கம் எனக்கு ஏன் இல்லை.....?
‘ என்ன யோசனை கேட்கிறேன்ல....?’
சுந்தரி திடுக்கிட்டாள்.
       “ நான்தான்க..”
       “ கூட்டுறப்ப கீழே ஒரு மஞ்சள்  உறை  கிடந்ததா...?”
       “ இல்லைங்களே....”
       “ எதுக்கும் இனி நல்லாப் பார்த்துக் கூட்டு ”
       கட்டளை வாக்கியம் முகத்தில் ‘ சப்’பென அறைந்திருந்தது.
       “ சரிங்க” பதிலுக்கு அவள் வியங்கோல் வினைமுற்று.  
கிருஷ்ணன் அவருடைய அறைக்குள் சென்றார். தினக்காட்டி தாளைக்கிழித்து அதை  மேசைக்கு கீழுள்ள குப்பைத்தொட்டிக்குள் விட்டெறிந்தார். தன்னுடைய கைக்குட்டையால் நாற்காலியைத்துடைத்து உட்கார்ந்தார். கோப்புகளை அடுக்கினார்.
“ அய்யா.....”  என்றவாறு அவரது அறைக்குள் நுழைந்தாள் சுந்தரி.
“ ம்” என்றவாறு கிருஷ்ணன் மெல்ல நிமிர்ந்தார்.
       “ வணக்கம் ”
       “ ம்...ம்.... ”
 அலுவலகக்குப்பைகளைக் கூட்டிப்பெருக்கும் எனக்கும் இந்த வணக்கத்தி்ற்கும் ரொம்பத்தூரமோ....? மனதிற்குள் சமாதானமடையாத கிறக்கம் அவளை ஆட்கொண்டது. அவளுக்குள் யாரோ ஒருவர் உட்கார்ந்துக்கொண்டு  கைத்தட்டி கேலியாகச் சிரிப்பதைப்போல இருந்தது. அலுவலகத்திற்குள் நேர்வெட்டு,  குறுக்குவெட்டில் நடந்தாள்.
“வ,ண,க்,க,ம்.....” இந்த ஐந்து எழுத்து மரியாதைக்கு கிடைக்கும் பதில் மரியாதையைப் பாருங்கள். ‘ம்...ம்....’. அதுவும் நான் உச்சரித்ததிலிருந்து  கடைசி எழுத்தை உருவி பிச்சையாக போடுவதைப்போல. கறையான் அரிப்பதை விடவும் ஆழ்மனதை  சுயமரியாதை அரித்தது.
நானும் எல்லாரையும் போல  ஓர் ஊழியர்தானே....கடைநிலை ஊழியராகவே இருந்திட்டுப்போகிறேன்...இந்த அலுவலகத்தில் பணியாற்றுபவள்தானே....வணக்கம் வைத்தால் அது என்னதாம் ‘ம்...ம்....?’  
உடுத்தியிருந்த சேலையை அப்படியும் இப்படியுமாக எடுத்து விட்டுக்கொண்டாள். முகத்தைக் கழுவி வாசனை அடித்துக்கொண்டாள். கணுக்காலுக்கு மேல் தூக்கிக்கொண்டிருந்த சேலையை இறக்கிவிட்டுக்கொண்டாள். மறுபடியும் அவள் தலைமை நீலகண்டர் முன் போய் நின்றாள். ஒன்று போல நிமிர்ந்து நின்றாள்.
       ‘ அய்யா...வணக்கம்’
       கும்பிட்டு பழகிய அவளது கைகள் சக ஊழியர்களைப்போல கையை நீட்டி மடக்கி நெற்றியில் வைத்தபடி அதைச்சொல்லிருந்தாள்.
நீலகண்டர் நிமிர்ந்துப்பார்த்தார். மெல்லியதாகச்சிரித்தார். அவ்வளவேதான்! அரைமாத்திரை அளவிற்குள் இத்தனையும் நடந்தேறியது.
அவள் விடுவதாக இல்லை.
‘ அய்யா... வணக்கம்’
நீலகண்டர் கோப்பை மூடினார். மேசையிலிருந்த எடைக்கல்லை சுற்றிவிட்டார்.
“ என்ன சுந்தரி என்றைக்குமில்லாம..... செலவுக்கு பணம் எதுவும் வேணுமா.....?”
“ வேண்டாங்கய்யா ”
“ நாளைக்கு  விடுப்பு வேணுமா....?”
“ இல்லங்கங்கய்யா”
“ பின்னே.....?”
       “ வணக்கங்கய்யா”
“ ...ம்...ம்...”
       கயிறு அறுந்து வாளி ‘தொபுக்’கென்று கிணற்றுக்குள்  விழுவதைப்போல விழுந்தாள் அவள். அவள் சந்தித்திருக்கும் அதிகப்பட்ச அவமான உச்சமாக அதை உணர்ந்தாள்.
       கடைநிலை பணியாளரிடம் உயர் அதிகாரிகள் இப்படிதான் நடந்துக்கொள்வார்களா...? இதை சந்திப்பிழையைப்போல கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டுமா...? இந்த ‘ம்’ வாங்குவதற்காகதான் நான் தினம்தினம் வலிய வந்து இவர்களுக்கு வணக்கம் சொல்கிறேன்.
       மாட்டேன்.... இனி நான் மாட்டேன்.....இதை நான் இத்துடன் விடப்போவதில்லை.... கால்களால் நடந்தவள் தலையால் நடக்கலானாள்.
       ‘என்ன செய்யலாம்....? ’ தலை பலவற்றைச் சுரந்தது. அதில் ஒன்றை  கண் முன் கொண்டு வந்து மெச்சிக்கொண்டாள். அவளுக்கு அவளே கைக்குலுக்கிக்கொண்டாள்.
       அவளது கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டது. ஓர் அறைக்குள் ஓடினாள். ஒரு துண்டுச்சீட்டை எடுத்தாள். அவள் மனதிற்குள் தோன்றியதை ஆங்கிலத்தில் எழுதினாள். தலைமை அலுவலர் நீலகண்டன் முன் கொண்டு போய் நின்றாள்.
       ‘ அய்யா....இதில் என்ன எழுதியிருக்கிறதென வாசித்து சொல்ல முடியுங்களா....’
       கோப்பையும் அவளையும் மாறிமாறிப்பார்த்தவர் அதை வாங்கினார். மனதிற்குள் படித்தார். பிறகு அவளுக்கு கேட்கும்படியாக வாசித்தார்.
       “ வணக்கம் சுந்தரி
       அவளுக்கு இதமாக இருந்தது. அளபெடையில் சிரித்தாள்.
       ‘ என்னங்கய்யா.....?’
       ‘ வணக்கம் சுந்தரி...’
       அவளுக்குள் துப்பாய தூஉம் மழை பெய்யத் தொடங்கியது.