இடுகைகள்

January, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
நூல் போட்டி - மொத்தப்பரிசு 50000 ரூபாய்.
கவிதை , கட்டுரை , நாவல் , சிறுகதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன
2013 , 2014 , 2015 , 2016 ஆண்டுகளில் வெளிவந்த நூல்கள்.
முகவரி
சாலோம் அறக்கட்டளை
350 , ஆஜியார் நகர்
புதுப்பட்டினம்
கல்பாக்கம்
       603102
கடைசி தேதி 20.01.2017
நன்றி (நமது உரத்த சிந்தனை மாத இதழ்)
படம்
ஆஸ்திரேலியா அக்னிக்குஞ்சு இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் ' கானல் நீர் ' என்கிற சிறுகதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்திருக்கிறது. இதழுக்கும்  ஆசிரியர் குழுவினருக்கும் நன்றி

எஸ்.பொ குறுநாவல் போட்டி முடிவு

படம்
அக்னிக்குஞ்சு இணைய இதழும் எழுத்தாளர் எஸ்.பொ நினைவாக நடத்தப்பட்ட குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றவர்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

கவிதைப் போட்டி

கவிதைப் போட்டி
பரிசுகள் 2000 ,1000 ரூபாய்
24 வரிகளுக்குள்
முகவரி
தமிழ்நிலவன் செயலர்
7 ஞானகிரீசுவரன் பேட்டை
கருங்குழி
காஞ்சிபுரம் மாவட்டம்
603303


சிறுகதை லத்தி

லத்தி

இரண்டு பூதங்கள் நெருங்குவதைப்போலதான் அந்த நான்கு கால்களும் என்னை நெருங்கியிருந்தன. நான் பூப்பெய்த அன்றைய தினம் ஒடுங்கி உட்கார்ந்ததைப்போல கால்,தொடைகள் மார்போடு அணைய கால்களை இறுகக் கட்டிக்கொண்டு சுவற்றில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தேன்.
‘டக்,..டுக்....டக்...டுக்....’ -  பூட்ஸ்களின் அரவம்.
ஒரு கையில் டார்ச் லைட் இருந்தது. அதன் மண்டை போலீஸ்க்கே உரித்தான தீர்க்கமான முழியைப் போலிருந்தது. அந்த டார்ச் ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாறி இன்னொரு கைக்கு மாறியது. அதை வாங்கியக் கை வெளிச்சத்தை என் மீது அடிப்பதும் நிறுத்துவதுமாக இருந்தது.
ஈட்டி பாய்வதைப்போல பாய்ந்த வெளிச்சத்தின் ஊடே அந்த இரண்டு உருவங்களையும் பார்த்தேன். நான்கு பூட்ஸ் கால்களும் என்னை மிக அருகில் நெருங்கியிருந்தன. பூட்ஸ்களின் நிறம் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் வெளிர்த்துபோன அப்பாவிகளின்  தோல் நிறத்தில் இருந்தன.
எனக்கும் பூட்ஸ் கால்களுக்குமிடையே இரும்புக்கம்பிகளான கிறில் கேட் இருந்தது. பெண்களுக்கு கன்னித்திரையைப்போல விசாரணைக் கைதிகளுக்கு இரும்புக் கேட். விசாரணைக்கைதி தப்பித்து விடக் கூடாது என்பதற்காக அமைக்கப்பட்ட கதவாக அத…

ஹைக்கூ நூல் போட்டி -2017

நீலநிலா இதழ்,   விருதுநகர், கந்தகப்பூக்கள்  இணைந்து நடத்தும்
ஹைக்கூ நூல் போட்டி -  2017
நூல் இரண்டு படிகள் அனுப்ப வேண்டும்
நூல் இல்லாதவர்கள்  ஒளிநகல் பிரதி அனுப்பலாம்
கடைசி நாள் 01.07.2017
முகவரி
நீலநிலா இதழ் குழுமம்
23, க.யி.ச கிட்டங்கித் தெரு
விருதுநகர் 626001
( நன்றி - இனிய நந்தவனம்)