சனி, 26 அக்டோபர், 2013

மெல்லினம்

சிறுகதை                   மெல்லினம்
                                                        க்கத்து வீட்டு வினோத் மட்டுமா  சொன்னான்?. எதிர்த்த வீட்டு அஞ்சலையும் தான் சொன்னாள்.அவளுடன்சேர்ந்த ரெங்கம்மாளும்தான் சொன்னாள்.“ எனக்கு கல்யாணம் நடக்கவே நடக்காதாம்”.
                    “   கல்யாணம் நான் பண்ணிக்கிட்டால் நீங்களெல்லாம் என்ன செஞ்சிக்கிறீங்க?“ - நான்கேட்டேன்.   அத்தனைப்பேருமே வாயைப் பொத்திக்கிட்டு நின்றாங்க. ரெங்கம்மாள் மட்டும் நெஞ்சை நிமிர்த்துக்கிட்டு சொன்னாள். “  ஒரு பக்கக் காதை அறுத்துக்கிறே“னு .அவள் வாய்ப்பந்தல் போடுகிறவள்.ரொம்பகூட காதைஅறுத்துக்கிறுவாளே.....!
ரெங்கம்மாளை விடு . அவளுக்கு உடம்பெல்லாம் வாய்.தொனத்தொனத்த பேர்வழி.எந்நேரமும் என்னிடம் வம்புக்கு நிற்கிறவள் .மதுமதிக்கு எங்கே போய்விட்டதாம் புத்தி. அவளும்  நானும்தானேஒன்றாக பள்ளிக்கூடத்திற்கு போய் வருவோம். என் வீட்டுக்கணக்குகளை பார்த்து எழுதி  மேரி டீச்சரிடம் வெரி குட் வாங்கி கொண்டவளாச்சே.அவளுக்கு நான் என்ன குத்தம் செய்தேனாம்.அவளும்தான் சொன்னாள்.“ எனக்கு கல்யாணமே ஆகாதாம் “
அவள்முகம் பார்க்கச் சகிக்காது.  பெங்களுர்கத்திரிக்கா மாதிரி இருப்பாள் கரடு முரடாக.தேவலோகத்தில் உள்ள முப்பத்தி மூன்று கோடி தேவர்கள் இருப்பதை விடவும் அதிகப்படியான முகப்பருக்கள்அவளுக்கு .போதாக்குறைக்கு  ஊசியால்குத்தியதைப்போலமுகமெங்கும் தழும்புகள். ஒருநாள்  பள்ளிக்கூடம் விட்டு திரும்பி வருகையில் அவள்சொன்னாள். என் முகத்தைப் பார்த்துதான் சொன்னாள்.“ எனக்கு ஒரு சோடினு கிடைச்சா   செவ்வாய் கிரகத்திலதான் கிடைக்குமாம்”. இது எப்படி இருக்கு ?எனக்கும் ஓர் உயிர் இருக்கு. இப்படியெல்லாம் பேசினாலும் என் மனது நோகுமென அவளுக்கு அந்த இடத்தில தெரியவில்லை தானே!.என்ன மனுசிஅவள். சீச்சீ.!  அவளெல்லாம் எனக்கு ஒருதோஸ்த்?
என்கூட படித்தசோமன்ஒருநாள் கைகளை இப்படியும் அப்படியுமாகஆட்டி  தலுக் , புலுக்கெனநடந்தான். “ ஏன்டா இப்படி நடக்கே? “ னு  கேட்டேன். அதுக்கு அவன்சொன்னான்.“ என்ன மாதிரி நடந்துப் பார்த்தேனு “. சொல்ல மட்டுமாச்செய்தான்.பல்லெல்லாம் கழண்டு விழுகிற  மாதிரிகெக் , கெக்கேனு சிரிக்கவும் செய்தான். அப்பவேஅவனதுபல்லைபெயர்த்துஅவன் கையில் கொடுத்திருக்கணும்.போனால் போகுதென்று விட்டது என் தப்பு.அவனுக்கு எத்தனை கொழுப்பு இருந்திருந்தால்அந்த வார்த்தையை அவன்சொல்லிருப்பான்..?
பத்தாம் வகுப்பில்இரண்டு தடவை அட்டெம்ப்ட்  அடித்தவன் சேது மாமாமகன் மாதவன்.  அவன் பத்தாம் வகுப்பில்தேர்வான் எனயார்தான் நம்பினார்?. நான்தான் அவனை பாஸ் பண்ணவச்சேன். அந்த நன்றி அவனுக்கு இல்லை. என்னை பார்க்கும் பொழுதெல்லாம் பட்டப்பெயர் வச்சி கூப்பிடுகிறான் .நிலத்திற்கு உச்ச வரம்பு வைக்கிற மாதிரி இந்த கேலி , கிண்டலுக்கும் உச்ச வரம்பு வைக்கணும். அதுக்கு மேல கேலிபண்ணினால் சப்பானி மாதிரி சப்னுஅறைகிறஉரிமையையும் கொடுக்கணும்.அப்பொழுதான் இந்த மாதிரி பையன்கஅடங்குவான்க.
எனக்கு என்ன குறையாம் ?  என் உசரத்திற்கு ஈடு கொடுக்க இந்த ஊரில்யார் இருக்கா ?என் அம்மா சொல்கிற மாதிரி, ஒரு வட்டத்துக்குள்ளஅடங்கிற முகம்எனக்கு.தேய்ச்சு கழுவியதைப்போல பளபளப்பு.பரந்த நெற்றி.வளைந்த நாசி.வெள்ளொளி வீசும் கண்கள்.வாட்டச்சாட்டமான உடல்வாகு.எலுமிச்சம்பழம் நெறம்.நான்பஞ்சத்திற்கு அடிப்பட்ட பரதேசி மாதிரியாகவா இருக்கேன்?.இல்லை  தின்னுக்கொழுத்த காட்டெருமை மாதிரி இருக்கேனா? ஒரு மனுசா எப்படி இருக்கணுமோ அப்படித்தானே இருக்கேன். எல்லாப் பானைக்கும் ஒரு மூடி இருக்கிற மாதிரி எனக்கும் ஒரு சோடி இருந்திருக்குத்தானே! அதனால் தானே எனக்குஇப்பகல்யாணம் நடக்க இருக்கு!
நான்   என் கல்யாணத்தை அப்பா , அம்மா விரும்புறப்படிதான் பண்ணிருந்திருக்கணும். அப்பாக்கிட்ட சொன்னால் அவர் சம்மதிக்கவா செய்வார்?குலம் கேட்பார்.கோத்திரம் கேட்பார்.சாதி கேட்கிறத்தோடு இல்லாமல்சாதிக்குள் இருக்கின்ற பட்டத்தையும் கேட்பார்.அப்பாவைக்கூட ஒரு ரகத்தில் சேர்க்கலாம். நான் எப்படியோ போய் தொலையட்டுமென  தலை மூழ்கிட்டு போயிடுவார். அம்மா இருக்காளே......அப்பப்பா! அழுது புரண்டு ஊரைக்கூட்டி ரணகளம்பண்ணிடுவாளே!  அதான் என் முடிவுக்கு இந்தக் கல்யாணத்தை நானே பண்ணிக்கிறேன்.
 அம்மாவுக்கு  என் மீது எப்பொழுதும் ஒரு கண்ணுதான் . என்னோட நடை, உடை, பேச்சு அத்தனையையும் வச்சக்கண் எடுக்காமல் பார்ப்பாள். அப்பா.......... ?ஊகூம்.நான் குழந்தையாக இருந்தப்ப என்னை தூக்கிக் கொஞ்சினாரோ என்னவோ?
நான் கடந்தவருடம்தான் பள்ளிப்படிப்பை முடிச்சேன்.பனிரெண்டாம் வகுப்பில் நான் எவ்வளவு மார்க் தெரியுமா? தொள்ளாயிரத்து எண்பது.அப்பா  என்னோட மார்க்கைப் பார்த்து கொஞ்சமாவது மெச்சிருக்கணுமே.....?.ஊகூம்.என்னை பாராட்டுவதற்கு அவரிடம் ஏது வார்த்தைகள்.ஒன்று சொன்னார்.“ நீ படிச்சது போதும் “ .
அப்பாகால்களில்விழுந்து அழுதுக்கெஞ்சினேன்.அப்பா இளகி திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு வருவதாக இல்லை. ஒரு நாள்  அப்பாவைப் பார்த்து கேட்டேன்.கேட்க வேண்டுமென்றுதான் கேட்டேன்.முகத்தை தூக்கி வச்சிக்கொண்டு கொஞ்சம் கோபத்தை செயற்கையா வர வச்சிக்கிட்டு கேட்டேன்.“ என்னை இதுக்கு மேலே படிக்க வைக்க முடியலைனா என்னதுக்கு என்னை பெத்தியாம்? ”.நான் கேட்டக்கேள்வியை அவரால்பொறுத்துக்கிற முடியவில்லை. மூக்கு விடைக்க, கண்கள் சிவக்க அம்மாவை சொல்லித் திட்டுகிற அதே அசிங்க வார்த்தையைச் சொல்லி என் கன்னத்தில்ஒர் அறை விட்டார். ஊறவைத்த துணியைப்போல  கூனிக்குறுகி குந்திப்போனேன் நான். எனக்கு அழுகை விக்கி விக்கி அடைத்தது . குந்திப்போனால் குலைந்துப்போயிடுவேனாக்கும்......?
அவர் என்ன என்னை படிக்க  வைக்கிறது? . நானே  படிச்சிக்கிறேனு  கிளம்பினேன் . வளர்ந்த வீட்டை விட்டு, விளையாண்டுத்திரிந்தரோட்டை விட்டு, ஊரைவிட்டு, அண்ணன் , அக்கா ,  அப்பா , அம்மா கண்களில் படாமல்சென்னைக்குச் சென்றேன்.
 நான் இல்லாதவீடு , ஊர் எப்படி இருந்திருக்கும்.......? என்னால் கணிக்கமுடியலை.அம்மாஅடிக்கடி சொல்வாளே “ முத்து ............. நீ ஏன் இவ்ளோ அழகா இருக்கேனு தெரியுமா? எங்களையெல்லாம் படைச்சவர் பிரம்மன். உன்னை படைச்சவர் கிருஷ்ணன்.“என்னைப்படைத்தஅந்த கிருஷ்ணனுக்குத்தான் அது தெரியும்.
                        நான் கொஞ்ச நாட்கள் சென்னையில் தங்கியிருந்தேன். கிடைக்கின்ற வேலைகளை பார்த்துக்கொண்டு  வயிற்றை கழுவிக்கொண்டிருந்தேன். விடிந்தால் , இருட்டினால் வீட்டு ஞாபகங்கள் என் முன்பு நிழலாடும். அப்பா மீதான நினைவுகளைக்கூட என்னால்மென்றுவிழுங்கிக்கொள்ள முடிந்தது.ஆனால் அம்மா, அண்ணன், அக்கா ஞாபகங்கள் கண்களுக்குள்ளே மிதந்தன. அங்கு இருக்கின்ற பொழுது நான் பட்ட இன்னல்கள் சொல்லி மாளாது.ஒன்று மட்டும் புரிஞ்சிக்கிட்டேன்.பூமி சூரியனைச்சுற்றி வரலை.ஆண்களைத்தான்சுற்றி வருதென்று.
ஒரு நாள் எக்மோர் ரயில்வே ஸ்டேசன்க்கு அருகில் கையேந்தி கடையில சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.அப்பொழுதுதான் சுயம்புவை பார்க்க நேரிட்டது. நான் உதவி என்று கேட்காமல் அவர் எனக்கு உதவி செய்தார் .“ என் கூடவே வந்திடுறியா....? “ என  கேட்டார். அவரைநான் முழுவதுமாக நம்பினேன்.அவர் கண்களில் தெரிந்த ஈரம், இரக்கம்  அதற்கு  முன்நான் எங்கேயும் அனுபவிக்காத ஒன்றாக தெரிந்தது. 
அவர் கூட  நான் விழுப்புரத்திற்கு வந்தேன். வந்ததும் அப்பாவிற்கு கடிதம் எழுதினேன். நான் எழுதிய கடிதத்திற்கு  பதில் வராதா..........? என தினம் தினம்  ஏங்கினேன். அப்பாவிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை.போனில் பேசலாமா......? என்று கூட யோசித்தேன்.சுயம்புவிடம் கிடைத்த  அரவணைப்பு  என் வீட்டு நினைவுகளை முழுவதுமாக மறக்கடிச்சிருச்சி.
ஒரு நாள் என்னைத்தேடி அப்பா வந்தார்.அப்பாவைக்கண்டதும் எனக்கு கைகால்கள் புரியவில்லை.வந்ததும் என்னை கட்டிப்பிடித்து அழுதார். என்னை மன்னித்து விடு !என விசும்பினார். என்னை அவர் கூடவே  கூட்டிக்கொண்டு போவார் என நினைத்தேன். அந்த நினைப்பில் மண்தான் விழுந்தது.“ முத்து............. எனக்கொரு காரியம் பண்றீயா.........? “ எனக்கேட்டார். “ என்னதுப்பா....? “ என்று ஆவலோடு கேட்டேன். “  அக்காவுக்கு கல்யாணம் நடக்க இருக்கு. அது நல்லபடியாக முடிகிற வரைக்கும் நீ வீட்டுக்கு வர வேண்டாம் “ எனச்சொன்னார். அந்த ஒரு நொடியில் நான் சிதைந்துப்போனேன். உதடுகளில் முட்டிய அழுகையை மெல்ல விழுங்கிக்கொண்டேன். “ ஏனப்பா....?“ என்று கேட்டேன். “ உன்னை மாதிரியே அக்காளும்இருப்பாளோ என மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சந்தேகப்படுறாங்க“ என்று சொன்னார். அதற்கு பிறகு அப்பா , அம்மா எல்லாமே எனக்கு சுயம்புதான்.
இப்பொழுது நான் விழுப்புரத்தில் சுயம்பு கூடதான்தங்கிருக்கேன்.ஒரு தொண்டு நிறுவனத்தில் பகுதி நேரம்  வேலைப்பார்த்துக்கொண்டு ஒரு யுனிவர்சிட்டியில்அஞ்சல் வழிக்கல்வியில்  பி.எ இங்கிலீஸ் படித்துக்கொண்டிருக்கிறேன்.நான் படிக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.இன்று எனக்கென்று ஒரு தனி உலகம் இயங்குவதாக உணர்கிறேன்.என்னைச்சுற்றியும் நிறைய நல விரும்பிகள் இருக்குறாங்க. அவர்கள் தான் என்னை படிக்க வைக்கிறாங்க. அவர்களுக்காகத்தான் நான் படித்துக்கொண்டிருக்கேன்.இந்தப்படிப்பு முடிந்ததும் அடுத்ததாக பி.எட் படிக்கப்போறேன் .பிறகு போட்டித்தேர்வு எழுதி டீச்சர் போஸ்டிங்க் வாங்கத்தான் போகிறேன்.இது என்னுடைய ஏழடுக்கு கனவு.
 என்னைக் கேலிச் செய்த அத்தனை பையன்களும் ,பெண்களும் அவரவர் குழந்தைகளை  அழைத்துக்கொண்டு வந்து “ என்  பிள்ளைக்கு நல்லாப் பாடம் சொல்லிக்கொடு“ என்று கெஞ்சுகிறக்காலம்மிக விரைவில் வரத்தான் போகிறது. அப்பொழுது தெரியும் இந்த முத்து யார் என்று !கண்ணுக்குத் தெரிந்த பகலும் கண்ணுக்குத் தெரியாத இரவுக்குள்ளே அடங்கித்தான் ஆகணும் என்கிறஉண்மையைஅன்றைக்கு எல்லாரும் தெரிந்துக்கொள்வார்கள்.
என்னுடன் கல்லூரியில் படிக்கின்ற  சுகந்தி ஒரு நாள் தேர்வு எழுதுகின்ற பொழுது என் பரீட்சை தாளை காட்டச்சொல்லி கெஞ்சினாள்.  நானும் பாவமென்று காட்டினேன் .தேர்வு முடிந்ததும் பேச்சுக்கிடையில் சொன்னாள்.“ என்னோட அறிவுக்கு நான் கலெக்டர் கூட ஆவேனாம். ஆனால்   எனக்கு கல்யாணம் மட்டும் ஆகவே  ஆகாதாம் ”.நான் அவளிடம் இதைக் கேட்டேனா?அவளாகவே சொல்லிவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்றுவிட்டாள்.
                                                இதோ சற்று நேரத்தில் எனக்கு கல்யாணம் நடக்கப்போகிறது.  எனக்கு மட்டுமல்ல. என்னைப்போல இன்னும் எத்தனையோ பேருக்கு இந்தக் கோயிலில் கல்யாணம் நடக்கப்போகிறது. ரெங்கம்மாள் என்ன செய்வாளாம்.........?  காதை அறுத்துக்கொள்வாளா......? வினோத் என்ன செய்வானாம்.....? சுகந்தி என்ன செய்வாளாம்.........? என்னைச்சுற்றிலும் எத்தனையோமணப்பெண்கள் இருக்கிறார்கள் . இதையெல்லாம் பார்க்கயாருக்கும் கொடுத்து வைக்கவில்லை.
நான் உடுத்திருக்கின்ற இந்தக் காஞ்சிப்பட்டு எவ்வளவு தெரியுமா?இருபதாயிரம் ரூபாய்.  சுயம்புஎனக்கு கிப்ட்டா வாங்கிக்கொடுத்தது. இதோ என்  காலில் வெள்ளிக் கொலுசு. விரல்களில் மிஞ்சி, பீலி, பில்லணை .கையில் நாகவந்து,  வளைவி .இடுப்பில் ஒட்டியாணம் .கழுத்தில் அட்டியல், கண்டரசம், காசுமாலை. மூக்கில் பேசரி, தொறட்டி. காதில் முருகு, அலுக்கு, ஒன்னப்பு, மாட்டில். தலையில் நெத்தி சுட்டி, சுத்திப்பரிஞ்சி, உச்சி ராக்கடி. முடியில் ஜடை நாகம் .எல்லாமே வாடகை நகைகள்தான். இருந்திட்டு போகட்டுமே .எனக்கு வேலை கிடைத்ததற்குப்பிறகு தங்கத்தில் வாங்கி அணிந்துக்கொள்கிறேன்.
                   எனக்கு தெரிந்தவரைக்கும்  யாருக்கும் இத்தனை நகை நட்டுகளோடு இப்படியொரு கல்யாணம் நடந்ததே இல்லை. யாருக்கு இவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறது?குப்பத்து மக்கள் தேங்காய் பழத்தட்டுகளோடு  கூடி வருகிறார்கள்.ஆயிரம்  தலைகள் கொண்ட அதிசயப்பிறவியைப்போல மனிதக்கூட்டம். பேச்சைக்குறைக்காத உருமி மேளம், டோலக் தளம்.இது போதாதென்று கையை நீட்டி  நீட்டி, தட்டித் தட்டி  கைத்தாளம். .
கெட்டி மேளம், கெட்டி மேளம். ....................
இதோ என் கழுத்தில் தாலி ஏறிவிட்டது. தாலியை எடுத்து கண்களில் ஒற்றி உள்ளுர ரசிக்கிறேன்.என்னுடைய நீண்ட நாள் ஆசைகள் மெல்ல அடங்குகின்றன.அந்தக்காலத்து அணு ஆயுதம் போல வான வேடிக்கைகள்.காற்றைக்கிழிக்கும் சிவகாசி வெடிகள்.இதோ என் கணவர் கல்யாணம் முடிந்து ஊர்வலத்தில் வருகிறார்.ஊர்வலத்தில் ஆட்டம், பாட்டம்,  கொண்டாட்டம் . கைகளை நீட்டி நீட்டி , தட்டித் தட்டிப் போர்ப்பரணி பாடுகிறார்கள் .  மேடும் பள்ளமுமான ராகம்.உடைவும் குடைவுமான பாட்டு.
எனக்கு கல்யாணம் என்பது தூக்குனாங்குருவி கூடு மாதிரி அதிசயமான ஒன்றுதான்.    அம்மா , அப்பா, அக்கா , அண்ணன்  உட்பட என்னைக் கேலிச்செய்த அத்தனைப் பேர் முகங்களையும் மனதிற்குள் நிறுத்தி கர்வம் கொள்ளப்பார்க்கிறேன்.  நான்உயர , உயர போகிறேன். ஆகாயத்தில் அந்தரத்தில் மிதக்கிறேன் . இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்.என்னுடையகல்யாண நாள் அல்லவா!
                                         .திடீரென இரைச்சலோடு கூடிய மழை விட்டது மாதிரியான  அமைதி கோயிலில் நிலவத் தொடங்குகிறது. ஊர்,பெயர் தெரியாத ஒரு நபர் ஓடி வந்து என் தாலியை  அறுக்கிறாள்.என் தலையில் அடித்து முடிகளை பிய்க்கிறாள்.நெற்றிப்பொட்டை அழிக்கிறாள்.என் ஆத்ம உலகம் சூன்யமாகி விட்டதைப் போல உணர்கிறேன்“ என் புருசனுக்கு என்ன ஆச்சு?“  எல்லோரையும் போல பதறியடித்துக்கொண்டு கேட்கிறேன். “ உன் புருசனைவெட்டி காளிக்கு காவிக்கொடுத்திட்டாங்க “ என்றவாறுஒரு  கை என் வளையல்களைஉடைக்கின்றது.
                                என் சகவாசிகள் உடம்பே துண்டானதைப்போலதுடிக்கிறாங்க. சற்று முன் கட்டிக்கொண்ட தாலிகளை அறுத்து எறிகிறாங்க.ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகுறாங்க. முடிச்சு , முடிச்சாக உட்கார்ந்துக்கொண்டு ஒப்பாரி வைக்கிறாங்க. மாரடைப்பு வருவதைப் போல வயிற்றிலும் மார்பில் அடித்துக்கொண்டு , கைகளை ஒன்றோடு ஒன்று மோதி  வளையல்களை உடைத்துக்கொண்டு, முடிகளை பிய்த்து மலர்ச்சரங்களை கசக்கி எறிகிறாங்க.கூத்தாண்டவர் கோயில் திருவிழா  கடைசிக்கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
பகல் மெல்ல  சுருண்டு இருட்டின் மடிக்குள் அடங்குகின்ற நேரத்திற்கு வந்தாகி விட்டது.  மாங்கல்யத்தை இழந்து பூ , பொட்டுகளை இழந்து திருவிழாவை  வேடிக்கைப் பார்த்தபடி தனி மரமாக நிற்கிறேன். சட்டென ஆடவர் கூட்டம் என்னை மொய்க்கிறது. சில கைகள் என் கன்னங்களை வருடுகிறது.பிச்சிப்பூவை பிய்ப்பதைப்போல என் தசைகளை பிய்க்கிறது.என்ஆடைகளை  வேகமாக களைகிறது. மின்சாரம் ஒழுகும் சுவிட்சைத் தொட்டவள் போல திடுக்கிடுகிறேன்.என் விசும்பலை மீறி சிலகைகள் என் அங்கங்களை நெறிக்கிறது .முள்ளம்பன்றியின் சிலிர்த்துப்போன முடிகள் போன்ற பலரின்  மீசைகள் என் கன்னங்களில்குத்துகின்றன .பம்பரமாக சுற்றி தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்கிறேன்.ஆண்களின் அகோரப்பிடிக்குள் நான்.என் அங்கங்களில் காயம் என்பது போல உணர முடிகிறது.வலி பிராணன் வாங்குவதைப்போல ரணமெடுக்கிறது.பூனையின் கால் நகங்களில் சிக்கிய அணிலாகிப் போனேன் நான்.
வியூகங்களை உடைத்துக்கொண்டு அபிமன்யூ மாதிரி வெளியே வர முயற்சிக்கிறேன்.முழுப்பலத்தையும் ஒன்றுத்திரட்டி ஒரு விசும்பு விசும்புகிறேன்.கீழே விழுந்து ,புரண்டு, விக்கித்துகதறுகிறேன். மல்லாக்கத் தூக்கிப்போட்ட கரப்பான்பூச்சி எப்படி தவிக்குமோ அப்படியாக  கைகால்களை உதறிக்கொண்டு தவிக்கிறேன்.“ அம்மா......அப்பா........... சுயம்பு..........“ எனஓலமிடுகிறேன். என்னை   மொய்த்தக்கூட்டம் பதறியடித்துக்கொண்டு விலகி ஓடுகிறது.
நான் தன்னிலை மறந்து மயக்கத்தின் ஆழத்திற்குச் செல்கிறேன்.யார் யாரோ ஒடிவந்து என்னை தூக்குகிறார்கள்.  அவர்கள் பேசிக்கொள்வதுஎன் காதுகளில் விழுகிறது.“ இந்த அரவாணி ( திருநங்கை ) திருவிழாவிற்கு புதுசு போல.  அதான் கூத்தாண்டவருக்காக இப்படி  அழுது , அழுது மயக்கம்  போட்டிருக்கு “ .

                                                                                                                அண்டனூர் சுரா
                                                                                                                1530 பி. மண்டேலா நகர்
                                                                                                                கந்தர்வகோட்டை
                                                                                                                புதுக்கோட்டை மாவட்டம்
                                                                                                    தொடர்புக்கு 958565 - 7108






சைபல் உலகம்

கட்டுரை
                                                                                    சைபர்உலகம்
ஒருபள்ளியில்ஒருகணினிஆசிரியர்“ மோடம் “ எனஅழைக்கப்படுவதைகேட்கமுடிந்தது. அவ்வாறுஅவர்அழைக்கப்படுவதற்கானகாரணம்  “ அந்தகணினிபெண்ஆசிரியர்மாணவர்களின்விடைத்தாள்களைவரிவரியாகபடித்துதிருத்துவாராம்.   ஒவ்வொருபதிலுக்கும்அவர்கொடுக்கும்மதிப்பெண்கள்பூச்சியம்அல்லதுஒன்றுஎனும்அளவில்தான்இருக்குமாம்.எனவேமாணவர்கள்அந்தகணினிஆசிரியரைமோடம்எனஅழைத்திருக்கிறார்கள்“ . என்னஇருந்தாலும்மேடம்என்பதைமோடம்எனஅழைப்பதுதகுமா?எனகேட்கத்தோன்றுகிறதுஅல்லவா!
இணையவழியில்நடைபெறும்கணினிதகவல்தொடர்புகள்யாவும் 0 , 1 என்கிறஇரண்டுகுறியீடுகளைஅடிப்படையாகக்கொண்டேநிகழ்கிறது. ஒருஇடத்திலிருந்துமற்றொருஇடத்திற்குஒருதகவலைஅனுப்புவதற்குமோடுலேசன்(  MOdulation ) என்றும்அந்ததகவலைபெறுவதற்குடீமோடுலேசன் ( DEMOdulation)  என்றும்பெயர். இந்தஇருஆங்கிலவார்த்தைகளின்சுருக்கமேமோடம் .இன்றுஇணையதகவல்தொடர்புகள்யாவும்மோடம்வழியேநிகழ்கின்றன.
ஒருஇணையமுகநூல்காட்டும்புள்ளிவிவரம்இது.“  இந்தியாவில்உள்ளசட்டமன்ற , நாடாளுமன்றஉறுப்பினர்களில்மூன்றில்இரண்டுபங்கினர்கைநாட்டுபேர்வழிகள்” என்னவியப்பாகஇருக்கிறதா! இந்தகணினிஉலகில்கைநாட்டுஎன்றால்எழுத ,படிக்கத்தெரியாதவர்கள்எனபொருள்கொள்ளமுடியாது. . கணினிபயன்படுத்ததெரியாதவர்கள்அல்லதுஇணையத்தைபயன்படுத்தத்தெரியாதவர்கள்என்றேபொருள்கொள்ளவேண்டும்.உலகின்முதல்எலெக்ட்ரானிக்நாடாளுமன்றம்சிங்கப்பூர்நாடாளுமன்றம்தான்.  அந்நாட்டுநாடாளுமன்றஉறுப்பினர்களுக்கானஅமர்வுஇணையதளத்துடன்கூடியஅமர்வாகஅமைக்கப்பட்டிருக்கின்றன.  அதனைத்தொடர்ந்துஅந்நாட்டுபள்ளிக்கூடங்கள்ஆசிரியர் ,மாணவர்வருகைப்பதிவுயாவும்இணையவழியில்நடைப்பெற்றுவருகிறது. உலகில்கணினிபயன்பாடுஅமெரிக்காநாட்டில்தான்அதிகம்என்றாலும்உலகில்மின்னணுபட்டதாரிகள்அதிகம்உள்ளநாடுஇந்தியாதான். உலகமின்னணுபட்டதாரிகளில்இரண்டுபேரில்ஒருவர்இந்தியராகஇருக்கிறார்கள்.  அதில்நான்குபேரில்ஒருவர்ஆந்திரபிரதேசத்தைசேர்ந்தவர்கள்
இரண்டாம்உலகப்போரின்போதுஜப்பான்நாட்டின்ஹிரோசிமா, நாகசாகிஎனும்இருமுக்கியநகரங்களைஅமெரிக்காவல்லரசுதரைமட்டமாக்கியது. அதன்பிறகுஜப்பான்கூட்டமைப்புநாடுகளின்தாக்குதலிலிருந்துதன்னைதற்காத்துக்கொள்ளவும், உலகநாடுகளின்கருத்துகளைஉடனுக்குடன்தெரிந்துக்கொள்ளவும்அமெரிக்கநாட்டினரால்மிகஅவசரமாககண்டுப்பிடிக்கப்பட்டதுதான்இணையம். இந்தஇணையத்தைகண்டறிந்துசெயல்வடிவம்கொடுத்தவர்ராண்ட்கார்பரேஷன்என்றஅமைப்பைச்சேர்ந்ததிருபால்பாரன் .உலகின்முதல்இணையம்ஆர்பாநெட்  (  Advanced Research Projects Administration Network ) எனஅழைக்கப்படுகிறது.
இணையம்முதலில்இராணுவதுறையில்மட்டுமேபயன்பட்டுவந்தது.1991 ஆம்ஆண்டுதிருடிம்.பெர்னர்என்பவரின்www  என்கிறஉலகளாவியமுகவரிவடிவமைப்பிற்குபிறகுஅதுபொதுசொத்தாகிவிட்டது. சுதந்திரம்எனதுபிறப்புரிமைஎனபாலகங்காதரதிலகர்கூக்குரலிட்டதைப்போல, ஜங்லிடாட்காம்எனும்இணையநிறுவனத்தைதொடங்கியராகேஷ்மாதூர், “ இணையசேவையைஇலவசமாகபெறுவதுஎனதுபிறப்புரிமை“ எனஉலகஅரங்கில்அவரதுகருத்தைபதிவுசெய்தார். அன்றுதேனீர்கடைஇல்லாதஊர்இல்லை .இன்றுபிரவுசிங்சென்டர்இல்லாததெருஇல்லை.நம்நாட்டில்நகரப்பகுதிதேனீர்கடைகள்டீகஃபேஎனஅழைக்கப்படுவதைப்போலதொடக்கத்தில்பிரவுசிங்மையங்கள்சைபர்கஃபேஎன்றுஅழைக்கப்பட்டன.
இன்றுஅரட்டை( ச்சாட்) அடித்தலும், அரசியல்விமர்சனும்இணையவழியில்அதிகம்நிகழ்ந்துவருகின்றன. இணையவழிஅரட்டைஎன்பதுகுறியீடுகளால்ஆனவை.அந்தகுறியீகள்சமீபகாலமாகஅலைபேசியிலும்அதிகம்பயன்பட்டுவருகிறது.அந்தகுறியீடுகளுக்கு“ ஸ்மைலி “ என்றுபெயர்.  உதாரணமாக:-(  ,  :-)  ,  :-D:-O , :-II , 8-lபோன்றகுறியீகள்முறையேவருத்தம், புன்னகை,  சிரிப்பு,  வியப்பு, கோபம்,  பிரமிப்புஎன்பதாககாட்டுகிறது .   இளையதலைமுறையினரின்நட்புவட்டம்ஸ்மைலியைஅடிப்படையாகக்கொண்டுநாடு, மொழி , கண்டமெனகடந்துவிரிவடைந்துக்கொண்டுஇருக்கிறது. இதில்ஆறுதலானவிசயம்என்னவென்றால்ஆண்களுக்குஇணையாகபெண்கள்இணையத்தில்அரட்டைஅடிப்பதுதான்.
உலகின்மிகப்பெரியநூலகம்எது ?அமெரிக்ககாங்கிரஸ்( பாராளுமன்றம்)  நூலகம்என்றும், ரஷ்யநாட்டில்உள்ளலெனின்நூலகம்என்றும்இருவேறுபதில்கள்இருந்துக்கொண்டிருக்கின்றன.                   இன்றுமிகப்பெரியநூலகம்எதுவென்றால்அதுஇணையம்தான்.கல்விஆர்வலர்கள்இணையத்தைஅறிவுச்சுரங்கம்என்றுஅழைத்துமகிழ்கிறார்கள்.இணையத்தில்எழுத்தாளர்கள், அரசியல்விமர்சகர்கள் ,நகைச்சுவைமன்னர்கள்எனசெறிந்திருந்தாலும்இணையத்திருடர்களுக்குபஞ்சமில்லை.
கணினிவருகைக்குபிறகானமாற்றம்என்பதுநேரத்தைகுறைத்துபணியின்வேகத்தைஇரட்டிப்புசெய்வதாகஇருந்தது. ஆனால்இணையம்வருகைக்குபிறகுஉண்மைஎது? நகல்எதுஎனபிரித்தறியமுடியவில்லை.அடுத்தவர்களின்கருத்தைதிருடிதனதுகருத்தென்றுமார்த்தட்டிக்கொள்ளும்கீழ்த்தரமிக்கசெய்கைநடந்தேறிக்கொண்டிருக்கிறது. இதற்குமூளைவடிக்கட்டுதல்என்றுபெயர்.
பூசலார்எனஒருநாயன்மார்இருந்தார்.  அவர்செங்கல்  ,மணல்இல்லாமல்மனதில்சிவனுக்குஓர்ஆலயம்எழுப்பிஒருதிருநாளில்அந்தக்கோவிலுக்குகுடமுழக்குநடத்தினார். அதேபோன்றுசெங்கல், மணல்இல்லாமல்சுவர்எழுப்பும்படலம்இணையத்தில்நிகழ்கிறது.அந்தசுவருக்குதீச்சுவர்( Firewall)  என்றுபெயர். நாம்இமெயிலில்பயன்படுத்தும்சீக்ரெட்கோட்அந்தவகையைசார்ந்தது.ஒருநாட்டின்இராணுவஇரகசியங்களைதெரிந்துக்கொள்ளஅந்ததீச்சுவரைஉடைக்கும்வேலையில்சிலநாடுகள்செயல்படுகின்றன.இந்தக்கீழ்த்தரமானசெயலுக்குமுதலில்பிள்ளையார்சுழிபோட்டதுஅண்ணன்அமெரிக்காதான்.கம்ப்யூட்டரில்ஏற்படுத்தப்படும்ரகசியக்குறியீடுகளைஉடைப்பதில்கைதேர்ந்தவர்களைகண்டுப்பிடிப்பதற்காகஒருபோட்டிவைத்தது.1998 ஆம்ஆண்டுஜான்கில்மோர்தலைமையிலானகுழுவெறும் 56 மணிநேரத்திற்குள்ரகசியக்குறியீட்டைஉடைத்துவிட்டது.இதற்குஅவர்கள்பெற்றபரிசுத்தொகைபத்தாயிரம்டாலர்.
இரசியகுறியீடுகளைஉடைத்துமுக்கியபைல்களைஅழிப்பதுஅல்லதுதிருடுவதுசைபர்குற்றங்களின்உச்சமாகும்.இதுதவிரவக்கிரமானபடங்களைபார்த்தால், டவுன்லோடுசெய்தல், அதைஅவரவர்கணினியில்சேமித்தல், வதந்திகளைபரப்புதல்இவையாவும்சைபர்குற்றங்களே. இவ்வகைகுற்றங்களையும், அதற்குண்டானசட்டங்களையும்இன்றையஇளையசமுதாயம்தெரிந்துவைத்திருக்காததுகவலையளிக்கக்கூடியஒன்றாகும்.சைபர்குற்றங்கள்ரௌலட்சட்டத்தைவிடமோசமானது.அவர்களைமுன்அறிவிப்பின்றிகைதுசெய்யலாம்.   சிறையில்அடைக்கலாம்என்பதுஇளையசமுதாயம்தெரிந்துவைத்திருக்கவாய்ப்பில்லை.
சைபர்குற்றங்களைவிசாரித்துஉடனுக்குடன்நீதிவழங்குவதில்பிரேசில்முதன்மையானஇடத்தில்உள்ளது. மடிக்கணினியில்விசுவல்பேசிக்முறையில்உருவாக்கப்பட்டஆணைத்தொகுப்புடன்நீதிபதிஒருவர்போய்க்கொண்டேஇருப்பார்.வழியில்பிடிக்கப்படும்சிறுகுற்றங்களைச்செய்தவர்களுக்குஅங்கேயேதீர்ப்புவழங்கப்படும்.இதற்குசக்கரத்தில்வரும்தீர்ப்புஎன்றுபெயர்.இந்ததீர்ப்புகளுக்குமேல்முறையீடுகிடையாது.
கணினியில்தகவல்பரிமாற்றங்கள் 0, 1 எனும்இரண்டுகுறியீடுகள்அடிப்படையில்நிகழ்வதைப்போலசைபர்குற்றவிசாரணைகள்ஆம், இல்லைஎனஇரண்டுபதில்கள்கிடைக்கப்பெறும்வகையில்விசாரிக்கப்படும். விசாரணையின்போதுநம்அரசியல்வாதிகளைப்போலமுன்னுக்குப்பின்முரணாகபதில்சொன்னால்கணினிதவறு ( எர்ரர்)  எனஎச்சரிக்கும். அவர்கள்சொல்லியபதில்அடிப்படையில்கணினிஒருதீர்ப்புவழங்கும்.இந்ததீர்ப்புநடுநிலையானதாகவும். நம்பகத்தன்மைமிக்கதாகவும், ஏற்புடையாதகவும்இருக்கும்.
இணையத்தின்பயன்பாட்டால்இன்றுநாடுகடந்தஉலகம்தற்போதுஉருவாகிக்கொண்டிருக்கிறது.இந்தஉலகத்திற்குசைபர்உலகம்என்றுபெயர்.நாடுகடந்ததமிழீழம், நாடுகடந்ததிபெத் .................என்றஅமைப்புகள்சைபர்உலகத்தின்ஒருமாகாணமாகசெயல்படத்தொடங்கியுள்ளன.மெல்லவிரிவடைந்துக்கொண்டுவரும்இந்தஉலகத்திற்குதலைமைதாங்கும்தகுதிஇந்தியாமற்றும்சீனாவிற்குமட்டுமேஉண்டு.இந்தியாவில்மின்னணுபட்டதாரிகளும், சீனாவில்இணையத்தைபயன்படுத்துவோர்களும்அதிகம்.இதன்முன்னோட்டமாகதற்போதுஐரோப்பியநாடுகளின்முழுமைக்கும்ஒரேமாதிரியானசைபர்சட்டங்கள்நிறைவேற்றப்பட்டுநடைமுறையில்இருந்துக்கொண்டிருக்கிறது.அந்நாடுகளில்சைபர்குற்றங்களுக்கென்று  இ- பல்கலைக்கழகம்செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 
H2O  என்பதற்கானபொருள்என்னவென்றுகேளுங்கள் . நம்அறிவியல்பிரிவுமாணவர்கள்நீர்என்பார்கள்.ஆனால்சைபர்உலகத்தில்வீட்டிலிருந்துஅலுவலகம்எனபொருளாகும்.சைபர்உலகம்பெரும்பகுதி B2B (வணிகத்திலிருந்துவணிகம்வரை   ) எனும்நோக்கில்செயல்பட்டுவருகின்றது.இந்தவணிகத்திற்காகதற்போது இ- கரன்சிபயன்படுத்தப்பட்டுவருகிறது.இந்தகரன்சிபிட்காயின்(  Bitcoin)  எனஅழைக்கப்படுகிறது. பிட்காயின்எந்தவொருநாட்டினருக்கும்சொந்தமானதுஅல்ல. மின்னணுவல்லுநர்கள்இணையத்தில்பிட்காயினைவடிவமைத்துஇணையத்தில்ஏலத்திற்குவிடுவர்.நல்லவடிவமைப்புடையநாணயங்கள்நல்லவிலையில்ஏலம்எடுக்கப்பட்டு ,இன்சூரன்ஸ்செய்யப்படும். தற்போதுஒருபிட்காயினின்மதிப்புநூற்றிஐம்பதுடாலர்க்குமேல்மதிக்கப்பட்டுவருகிறது.

சைபர்உலகம்சமீபகாலமாகஇரண்டாம்உலகம்எனஅழைக்கப்பட்டுவருகிறது.அவ்வுலகம்தவறானவழிக்காட்டுதலின்படியும்,  குற்றங்களைபரவலாக்குதல்எனும்வகையில்நடந்தேறிவருவதுஆரோக்கியமானதல்ல.  இன்றுஉலகில்கணினியைவிரும்பாதவர்கள்இருக்கிறார்கள். ஆனால்கணினிபிடிக்கும், இணையம்பிடிக்காதுஎன்றுயாரும்இங்கேஇல்லை.

எனது வகுப்பறையில் ஒரு நாள் - தொடர்

எனதுவகுப்பறையில்ஒருநாள்....................
“ நம்நாட்டுத்தியாகிகள் “ எனும்வரலாற்றுபாடத்தைநடத்துவதற்குமுதல்நாள்அப்பாடத்திற்குதொடர்பானஒருவீட்டுவேலைஒன்றுகொடுத்தேன். “ மாணவர்களே...... நாளைக்குவருகின்றபொழுதுஉங்களுக்குபிடித்தமானஒருதியாகியின்படத்தைகத்தரித்துஒட்டிவரவும்“
மறுநாள்மாணவர்கள்ஒருவரையொருவர்போட்டிப்போட்டுக்கொண்டுஅவர்கள்கத்தரித்துஒட்டிருந்ததியாகிகளின்படத்தைகாட்டத்தொடங்கினார்கள்.
காந்திஜி, நேதாஜி, ஈ.வெ.ராபெரியார், ராஜாஜீ, நேருஜீ, அம்பேட்கர், ராஜாராம்மோகன்ராய்,  சுவாமிவிவேகானந்தர், பாலகங்காதரதிலகர், தயானந்தசரஸ்வதி, அன்னிபெசன்ட்அம்மையார், சரோஜினிநாயுடு, இந்திராகாந்தி, ..........................................
மாணவர்கள்எங்கேதான்சேகரித்தார்களோ....!பார்க்கவேவியப்பாகஇருந்தது.
ஒருமாணவன்மட்டும்தயக்கமாகநின்றுக்கொண்டிருந்தான்.அவன்வைத்திருந்தபடத்தைப்பார்த்துமற்றமாணவர்கள்கிண்டல்செய்துக்கொண்டிருந்தார்கள். அந்தமாணவனைஅருகினில்அழைத்தேன்.அவனதுபடத்தைபார்த்தேன்.மிகஅழகானஒருசிறுமியின்புகைப்படத்தைநோட்டில்ஒட்டியிருந்தான்.
அந்தபடத்தைபார்த்தேன்.இதற்குமுன்எங்கேயோபார்த்தஞாபகம்கண்முன்நிழலாடியது.இந்தசிறுமியார்என்றுஎன்னால்சட்டெனஊர்ஜிதம்படுத்தமுடியவில்லை.அந்தசிறுவனிடமேகேட்டேன்.“ தம்பி.............. இந்தசிறுமியார்?“
அந்தசிறுவன்சற்றுதயங்கியபடிசொன்னான்.“தெரஸாசார் “.மாணவர்கள்குபீர்எனசிரித்தார்கள்.“ தம்பி........தெரசாஎன்றால்முகத்தில்சுருக்கங்கள்இருக்கவேண்டுமே, தலையில்முக்காடுபோட்டிருக்கவேண்டுமே “ என்றேன்.
“ இதுசிறுமிதெரஸாசார்“  என்றபடிவிழித்துக்கொண்டிருந்தான். அந்தபடத்தைபொக்கிஸமாககருதிமார்போடுஅணைத்தேன்.கூடவேஅவனையும்!
எனதுவகுப்பறையில்ஒருநாள்.................
பள்ளியில்ஆசிரியர்கள்பட்டப்பெயரால்அழைக்கப்படுவதுதவிர்க்கமுடியாதஒன்றாகிவிட்டது.அந்தவகையில்எனக்குபலபெயர்கள்உண்டு .அதில்ஒருபெயர்ஆய்தஎழுத்து.
அந்தவருடத்தின்முதல்நாள்பாடவேளைஅது.நான்ஒருவகுப்பறைக்குள்நுழைந்தேன் .மாணவர்கள்ஆரவாரத்துடன்எழுந்து“ வணக்கம்ஐயா ” என்றார்கள் .  மானசீகமானசிரிப்புடன்அவர்களுடையமரியாதையைஆமோதித்தேன்.மாணவர்கள்அங்கும்இங்குமாகசிதறிக்கிடந்தவர்களைவரிசையாகஉட்காரவைத்துப்பார்த்தேன்.வகுப்பறைஅழகாகதெரிந்தது.
“ பிள்ளைகளே............. உங்களைப்பார்க்கஉயிராகவும், மெய்யாகவும்தெரிகிறீர்கள் ” என்றேன்.   பெண்கள்“ நாங்கள்தான்உயிர் ” எனஆர்ப்பரித்தார்கள். பதிலுக்குஆண்கள்“ இல்லையில்லைநாங்கள்தான்உயிர் ” என்றார்கள். வகுப்பறைஆரவாரமாகஇருந்தது
நான்ஆண்கள்உட்கார்ந்திருக்கும்பக்கம்திரும்பி “ இவர்கள்தான்உயிர் “ என்றேன்.  பெண்களின்தலைகள்சட்டெனஒடிந்துகீழேதொங்கிப்போகின. அவர்களுடையமுகங்கள்ஏமாற்றத்துடன்தத்தளித்தன.
“ கண்ணுங்களா............ நீங்கள்பதினெட்டுபேர்இருக்கிறீர்கள்அதனால்நீங்கள்மெய். ஆண்கள்பனிரெண்டுபேர்இருப்பதால்அவர்கள்உயிர் ” என்றேன். அப்பொழுதுஒருமாணவன் “ ஐயா......... அப்படியானால்நீங்கள்ஆயுதம்சரிங்களா? ”  என்றான்.அவன்அப்படிசொன்னதும்மாணவர்கள்சில்லரைக்காசுகள்சிதறுவதைப்போலசிரித்தார்கள்.
உயிரும்மெய்யுமாகசேர்ந்துமுப்பதுபேர்சிரித்ததுஇருநூற்றுபதினாறுபேர்சிரிப்பதைப்போலஇருந்தது.

                                                                                                                            akaramblogspot.com
[ எனதுவகுப்பறையில்ஒருநாள்...........................................
                    “சார்................. எனக்குஒருசந்தேகம்“
“  என்னதுப்பா...............?“
“ 21.12.2012அன்றைக்குஉலகம்அழியப்போகுதுனுபேசிக்கிறாங்களேஉண்மையா?“
“ நீஎன்னப்பாநினைக்கிறே? உலகம்அழியுமுனுநினைக்கிறீயா?அழியாதுனுநினைக்கிறீயா?“
“ நான்உலகம்அழியாதுனுதான்சார்நினைக்கிறேன்“
“ ஏன்அப்படிநினைக்கிறே?“
“ இந்தஉலகத்தைநாமலேஅழிச்சிக்கிட்டதான்உண்டு.“
“ அதுவாகவேஅழியாதா?“
“ எப்படிசார்அழியும்?. நம்மஅம்மா ,அப்பாகஷ்டப்பட்டுஒருவீட்டைக்கட்டிட்டுஅவங்களேஅதேஇடிப்பாங்களாசார்?“
“ இடிக்கமாட்டாங்கப்பா “
“ இந்தஉலகத்திலஉள்ளதாவரம், மரம் , செடி,கொடி, பூச்சி , பாம்பு , பூரானுஎத்தனையோஇருக்கு. இத்தனையும்உருவாகஎத்தனைஆண்டுகள்சார்பிடிச்சிருக்கும்?“
“  எப்படியும்கோடிஆண்டுகள்பிடிச்சிருக்கும்“
“ இத்தனையையும்கடவுள்தானேசார்படைச்சிருப்பார்?“
“ இயற்கைபடைச்சது “
“ ஆமாம்சார்இயற்கை . இயற்கைகஷ்டப்பட்டுஇத்தனையையும்உருவாக்கிட்டுஅதுவேஎப்படிசார்அழிக்கும்“
“ அழிக்காதுதாப்பா, அழிக்காது. நீபுத்திசாலிபையன்புரிஞ்சிக்கிட்ட .நம்மமக்கள்விவரம்தெரியாமபேசிக்கிறாங்க.நீசொல்றமாதிரிஉலகம்அழியப்போறதில்ல .அழியவும்அழியாது.“
“ நான்அழியாதுனுசொல்றேன்சார். நம்மவினித்இருக்கான்லசார்.அவன்உலகம்அழியத்தான்போகுதுனுசொல்றான்சார் “
“ தெரியாமசொல்லிருக்கான்“
“அதுமட்டுமில்லசார்.உலகம்அழிஞ்சாலும்அவனுக்குகவலையேஇல்லையாம்“
“ ஏன்னுகேட்டியா?“
                         ” கேட்டேன்சார். ,உலகத்திலேயேபாதுகாப்பானஇடம்அம்மாவோடமடிதானானம்.  உலகம்அழியுறப்பஅவன்அம்மாமடிக்குள்ளபோய்படுத்துக்கிருவேன்னுசொல்றான்சார்“
“ நீயும்அம்மாவோடமடிக்குள்ளபோய்படுத்துக்கோ  “
“ என்னாலமுடியாதேசார்“
“ ஏன்..............?“
“ எனக்குத்தான்அம்மாஇல்லையே.......................“
                          “ .................................................................“
அவனைப்பொறுத்தவரைஅவனுக்கானஉலகம்என்றோஅழிந்துவிட்டது. அவனுக்கானமிச்ச ,சொச்சஉலகம்இந்தபள்ளிக்கூடம்தான். 
எனதுவகுப்பறையில்ஒருநாள்..........................................
      “  கோபிகா.................... இங்கேவாம்மா “
“ என்னங்கசார்......................?“
“ நீஇப்பஎத்தனாம்வகுப்புபிடிக்கிறே?“
“ ஒன்னாம்வகுப்புசார்“
“ நீஅந்தவார்த்தைசொல்லலாமா...............?“
           “.............................................................“
“ ஏன்அவனைஅப்படிசொன்னே?“
“ சார். நானும்சிவனேனுஉட்கார்ந்திருந்தேன்சார்.அவன்என்னைஅடிச்சிட்டுஓடினான்சார்.அதனாலதான்சார்அவனைநான்....................“
“ இந்தவார்த்தைஉனக்குயாருசொல்லிக்கொடுத்தா..............?“
“ எங்கதெருவுலபேசிக்கிருவாங்கசார்“
“ உன்அம்மாவும்இந்தவார்த்தையசொல்லுவாங்களா...............?“
“ எப்பவாவதுசொல்லுவாங்கசார்“
“ எப்பசொல்லுவாங்க?“
“  பைப்லதண்ணீர்பிடிக்கிறப்பஅம்மாசொல்லுவாங்கசார்“
“ பிறகு................?“
“ அம்மாவுக்கும்அடுத்தவீட்டுக்கும்சண்டைவந்தால்அம்மாசொல்லிதிட்டுவாங்கசார்“
“ அதைநீசொல்லலாமா.................?“
             “ ..........................................“
“ சொல்லுஅதைநீசொல்லலாமா......................?“
“ சொல்லக்கூடாதாசார் ?“
“  நீநல்லபுள்ளதானே...........?“
“ ம்சார்“
“ அப்ப ,   நீசொல்லக்கூடாது“
“ ஏன்சார்சொல்லக்கூடாது............? “
“ அதுஅசிங்கவார்த்தை “
“ அசிங்கவார்த்தையாசார்..........?“
“ ஆமாம்மா“
“ அப்படினாஎன்னதுசார்...................?“
            “ .........................................................“
இந்தகேள்விக்கானபதில்எந்தஒருஅகராதியிலிந்தும் ,  நண்பர்சூழலிருந்தும்அவளுக்குகிடைத்துவிடக்கூடாதுஎன்பதேஎனதுவேண்டல் , பிராத்தனை .
எனதுவகுப்பறையில்ஒருநாள்
                                அன்றுஅக்டோபர்30 ,உலகசேமிப்புதினம்.  மாணவர்களிடம்சேமிக்கும்பழக்கத்தைஊக்கிவிக்கவேண்டும்எனும்நோக்கில்அன்றையதினவகுப்பைத்தொடங்கினேன்.
“ மாணவர்களே...................  தேனீக்களின்சேமிப்புதான்நாம்விரும்பிஉண்ணும்தேன் . மேகம்தரும்மழையிலும் ,தென்னைமரம்தரும்இளநீரிலும்,.................. சேமிப்புஇருக்கிறது.  இந்தபூமியில்உள்ளஆறு ,குளம், கடல்எல்லாமேசேமிப்பின்அடையாளங்கள்தான். சிறுதுளி, பெருவெள்ளம்அல்லவா!.“என்றவாறுமாணவர்களின்முகத்தைகவனித்தேன். அவர்கள்முகத்தில்ஒருவிதகெலிப்பு.  எதையோசொல்லிபாராட்டுபெற்றுக்கொள்ளவேண்டும்என்கிறமாதிரியானஆர்ப்பரிப்பு. அவர்களதுஆர்வத்திற்குபச்சைக்கொடிகாட்டினேன்.
“  நான்சேமித்தகாசில்வாங்கியதுதான்சார்இந்தபேனா “ என்றவாறுபேனாவைதூக்கிக்காட்டினான்ஒருவன். மற்றொருவன்“ சார்..........இந்தபுத்தகைப்பைஎன்பாட்டிசேமித்தபணத்தில்வாங்கியது “ என்றான். இப்படியாகபலரும்பலதைசொன்னார்கள்.
இரண்டுபேர்மட்டும்ஒன்றும்சொல்லாமல்உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில்ஒருவனைஎழுப்பிக்கேட்டேன்.“ தம்பிஉன்வீட்டில்யாரும்எதையும்சேமிக்கிறதுஇல்லையா?“. அவன்மெல்லஎழுந்தான்.“ சார்............ எங்கவீட்லமழைநீர்சேமிக்கிறோமேஅதைசொல்லலாமா ?“ எனக்கேட்டான். “  அருமை. நல்லபழக்கம்.“ என்றவாறுஅவனைகையைகுலுக்கினேன். அவனதுமுகத்தில்அப்படியொருபிரசாசம்.
அடுத்ததாகஒருவன்ஒன்றும்சொல்லாமல்திறு , திறுவெனமுழித்தவாறுநின்றுக்கொண்டிருந்தான் “ தம்பி.......  உனக்குசேமிக்கும்பழக்கம்கிடையாதா? ”  எனக்கேட்டேன்.அவன்மௌனமாகநின்றுக்கொண்டிருந்தான்.அவனைப்பார்த்துமற்றமாணவர்கள்கேலிசெய்வதைப்போலசிரித்துக்கொண்டிருந்தார்கள்.அவன்சுற்றும்முற்றும்பார்த்தான்.கணினிப்பொறிஅவன்கண்களில்பட்டது.அதைப்பார்த்ததும்அரும்புபோலசிரித்தான்  “ எனக்கும்சேமிக்கும்பழக்கம்உண்டுசார்“ என்றவாறுநிமிர்ந்துநின்றான். “ என்னடாகண்ணுசேமிக்கிற ?“  கேட்டேன்.
“ நான்கம்ப்யூட்டரில்வரைகிறஓவியங்களைctrl + sமூலமாகசேமிக்கிறேன்சார் “ என்றான்.  அவன்சொன்னப்பதிலால்வகுப்பறையேவியப்புகூடியிருந்தது. இதில்என்னவியப்பு?இதுகணினிஉலகம்அல்லவா!
இதன்பிறகுஎனதுவகுப்புகரும்பலகையில்நிரந்தரஎழுதப்பட்டிருக்கும்வாசகம்  ctrl + s . அதற்குஅருகில்  TIME ,   WATER , POWER , ELECTRIC .................. “ போன்றவார்த்தைகள்காலத்திற்குஏற்பஇடம்பெற்றுவருகிறது.
எனதுவகுப்பறையில்ஒருநாள்
அன்றையதினம், ஒருவிசயத்தைமாணவர்களிடம்மனம்விட்டுபேசஎண்ணினேன்.  “ தம்பிகளா................ நான்படிக்கிறகாலத்தில்எனக்குசொல்லிக்கொடுத்தஆசிரியர்கள்எங்களைஅடித்துதான்சொல்லிக்கொடுத்தார்கள். நீங்கள்ரொம்பவும்கொடுத்துவைத்தவர்கள்.ஆசிரியர்களிடம்அடிவாங்காமல்படிக்கிறீர்கள்“ என்றேன்.
அந்தவகுப்பில்ஒருசுட்டிஇருக்கிறான்.அவன்“  நீங்கள்எங்களைமாதிரிநன்றாகபடித்திருக்கமாட்டீர்கள் “ என்றான். அவன்அப்படிசொன்னதும்மற்றமாணவர்கள்வயிறுகுலுங்கசிரித்துவைத்தார்கள்.
“ ஆமாம். நான்படிக்கிறகாலத்தில்கணினி ,தொலைக்காட்சி , ஆடியோபோன்றவசதிகள்இல்லை..............“  என்றேன்.மாணவர்கள்நான்சொன்னதைஅமைதியாககேட்டுக்கொண்டிருந்தார்கள். “ நான்பள்ளிக்குவரும்பொழுதுஉங்களுக்காகசெய்தித்தாள்கள்வாங்கிவருகிறேன்இல்லையா !. நீங்களும்அதைப்படித்துநாட்டுநடப்புகளைதெரிந்துக்கொள்கிறீர்கள்இல்லையா! ஆனால்நான்படிக்கிறகாலத்தில்செய்தித்தாள்படிக்கவேண்டுமெனில்நகரத்திற்குசெல்லவேண்டும் “ என்றேன்.
ஒருமாணவன்சட்டென்றுஎழுந்தான்.அவனைமற்றொருமாணவன்தடுத்தான்.அவனிடம்“  என்னப்பா .............. சொல்லவந்ததைசொல்லு ”என்றேன். அவன்ஒருகணம்என்னைஆழமாகபார்த்தான்.“ சார்............. இனிநீங்கள்எங்களைஅடித்தால்உங்களுக்குமூன்றுவருசம்ஜெயில்தண்டனையாமே . நான்பேப்பர்லபடிச்சேன்சார்“ என்றபடிஎன்னைபரிதாபமாகபார்த்தான்.
மற்றொருவன்“ சார்....... இனிநீங்கள் , எங்களுக்குஅடிக்ககொடுக்கமாட்டீங்களாசார்?“ எனக்கேட்டான்..
“  ஏன்கொடுக்கமாட்டேன்! தவறுசெய்தால்இரண்டுஅடிகள்கொடுப்பேன்“ என்றேன். அவர்கள்முகத்தில்ஒருமாறுதல். என்னைபயத்தோடுபார்க்கத்தொடங்கினார்கள்.  “
“  ஆமாம்.  மாணவர்கள்தவறுசெய்தால்இரண்டுஅடிகொடுக்கத்தான்போகிறேன்.திருக்குறளுக்குஇரண்டுஅடிகள்தானே.“


சனி, 12 அக்டோபர், 2013

எனது வகுப்பறையில் ஒரு நாள்..................
                                                        அண்டனூர் சுரா - கந்தர்வகோட்டை
              பள்ளியில் ஆசிரியர்கள் பட்டப்பெயரால் அழைக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.  அந்த வகையில் எனக்கு பல பெயர்கள் உண்டு .  அதில் ஒரு பெயர் ஆய்த எழுத்து.
      அந்த வருடத்தின் முதல் நாள் பாடவேளை அது.  நான் ஒரு வகுப்பறைக்குள் நுழைந்தேன் . மாணவர்கள் ஆரவாரத்துடன் எழுந்து “ வணக்கம் ஐயா ” என்றார்கள் .  மானசீகமான சிரிப்புடன் அவர்களுடைய மரியாதையை ஆமோதித்தேன். மாணவர்கள் அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்தவர்களை வரிசையாக உட்கார வைத்துப் பார்த்தேன். வகுப்பறை அழகாக தெரிந்தது.
         “ பிள்ளைகளே............. உங்களைப்பார்க்க உயிராகவும், மெய்யாகவும்  தெரிகிறீர்கள் ” என்றேன்.   பெண்கள் “ நாங்கள்தான் உயிர் ” என ஆர்ப்பரித்தார்கள். பதிலுக்கு ஆண்கள் “ இல்லையில்லை நாங்கள்தான் உயிர் ” என்றார்கள். வகுப்பறை ஆரவாரமாக  இருந்தது
         நான்  ஆண்கள் உட்கார்ந்திருக்கும்  பக்கம் திரும்பி “ இவர்கள்தான்  உயிர் “ என்றேன்.  பெண்களின் தலைகள் சட்டென ஒடிந்து கீழே தொங்கிப்போகின. அவர்களுடைய முகங்கள் ஏமாற்றத்துடன் தத்தளித்தன.
       “ கண்ணுங்களா............ நீங்கள்  பதினெட்டு பேர் இருக்கிறீர்கள் அதனால் நீங்கள் மெய். ஆண்கள்  பனிரெண்டு பேர் இருப்பதால் அவர்கள் உயிர் ” என்றேன். அப்பொழுது  ஒரு மாணவன் “ ஐயா......... அப்படியானால் நீங்கள் ஆயுதம் சரிங்களா? ”  என்றான். அவன் அப்படி சொன்னதும் மாணவர்கள் சில்லரைக்காசுகள் சிதறுவதைப்போல சிரித்தார்கள்.
            உயிரும் மெய்யுமாக சேர்ந்து முப்பது பேர் சிரித்தது இருநூற்று பதினாறு பேர் சிரிப்பதைப்போல இருந்தது.

                                                                                                                                          akaramblogspot.com
கட்டுரை – அஞ்சல் துறை வாரம் ( 9.10.2013 – 15.10.2013 )          
                         அஞ்சல் துறையின் சிவப்பு முகம்
                                                                                       அண்டனூர் சுரா           
                           ஒரு சிறுவன்  புதிரொன்று விடுத்தான் . “ நூறு  லெட்டர்ஸ் கொண்ட  வார்த்தை அது. என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்?” எனக்குத்தெரியவில்லை . அவன் சொன்னான் “ போஸ்ட் பாக்ஸ் ”! .                                                                                             
                        உலகம்  பழைய காலத்தை நோக்கி நடைப்போடுகிறது. மன்னராட்சி காலத்தில் ஒரு மன்னர் மற்றொரு மன்னருக்கு கடிதம் எழுதுவார். அதற்கு அந்த மன்னர் பதில் கடிதம் எழுதுவார். அன்றைக்கு பொதுமக்களுக்கு கடிதம் எழுத உரிமை மறுக்கப்பட்டிருந்தது.  இன்று முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். பதிலுக்கு பிரதமர் முதலமைச்சருக்கு  கடிதம் எழுதுகிறார். பொதுமக்கள் கடிதம் எழுதும் பழக்கத்தை நவீன தகவல் தொழிற்நுட்பம் மறக்கடித்து விட்டது. ஆம்! உலகம் உருண்டை தான்!
                         இந்தியாவை ஆண்ட  பட்டாணிய மன்னர் அலாவுதீன் கில்ஜி காலத்தில் இராணுவ ரகசியங்களை  கொண்டு வந்து சேர்ப்பதற்க்கென்று சில நபர்கள்  நியமிக்கப்பட்டார்கள் .  அவர்களில் சிலர் நேர்முக ஒற்றர் என்றும் , சிலர் மறைமுக ஒற்றர் என்றும் அழைக்கப்பட்டார்கள். அந்த  நேர்முக ஒற்றர்கள்தான் இந்தியாவின் முதல் தபால்காரர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
                      ஷெர்ஷா (1541-45) காலத்தில் அவர்கள் “ தூதுவர் ” என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சேகரித்த தகவல்களை ஒரு இடத்தில் சேமித்தார்கள். அந்த இடம் தகவல் கிடங்கு என  அழைக்கப்பட்டது .  அக்பர் காலத்தில் ( 1556-1605 ) அந்த இடம்  சற்று முன்னேற்றம் கண்டு  தகவல் பரிமாற்றம் அளவிற்கு வளர்ந்தது. இன்றைய தபால் துறையின் முன்னோடி என்று அக்பரை சொல்லாம். தபால் துறையை  அடித்தட்டு மக்கள் வரைக்கும் கொண்டுப்போய் சேர்த்தவர்   ஆங்கிலேயர் டல்ஹௌசி பிரபு.   இந்திய தலைநகரத்தையும்  கிராமங்களையும் இணைக்கும் பாலமாக செயல்படுவது அஞ்சல்துறை . இந்தியாவில் செயல்படும் மத்திய  துறைகளில் மிகவும் பழமையான துறை அஞ்சல்துறைதான் . அதுமட்டுமல்ல உலகில் மிகச்சிறிய துண்டு காகிதத்திற்கு அதிக மதிப்பு  இருக்கிறது என்றால் அது அஞ்சல் வில்லைக்குத்தான்.
                        1965  ஜனவரி 26 . போயிங் - 707 என்கிற  விமானம் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து லண்டன் நகரத்தில் வந்து இறங்கியது. அந்த விமானத்தை பார்க்கவும் படம் பிடிக்கவும்  உலக பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து நின்றார்கள். அந்த விமானத்திலிருந்து இறங்கினார் திரு.ஃபின்பர் கென்னி எனும் இங்கிலாந்து நாட்டுக்காரர் . அவர் பத்திரிக்கையாளர்கள் முன் தோன்றி ஒரு சென்ட் அஞ்சல் தலையைக் காட்டி “ இதை 2,00,000 பவுன்ட் மதிப்பீட்டில் இன்ஷியூர் செய்கிறேன்“  அறிவித்தார். மேலும்  “ இங்கிலாந்து நாட்டில்  நடைபெறவிருக்கிற  ஸ்டான்லி கிப்பன்ஸ் கேடலாக் நூற்றாண்டு விழாவில் இந்த அஞ்சல் தலைதான் கதாநாயகன் “ என்றும் அறிவித்தார்.  ஐரோப்பிய நாடுகளில் அந்த செய்தி  மறுநாள் தலைப்புச்செய்தியானது. அந்த அஞ்சல் தலைக்கு அப்படி என்ன சிறப்பு? . உலகின் முதல் அஞ்சல் தலை அது.
                          உலகில்  முதல் அஞ்சல் தலையை வெளியிட்ட நாடு பிரிட்டிஷாரின் ஏகாதிபத்திய நாடான கியானா. “ நாம் கொடுக்கிறோம் , பதிலுக்கு  நாம் பெறுகிறோம்“ எனும் அதிகாரப்பூர்வமான வாசகத்துடன் அந்த  தபால்தலையை அந்த நாடு வெளியிட்டது.  அந்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டைச்  சரியாக கணிக்க முடியவில்லை  .  அந்த அஞ்சல்தலை திருடுப்போய்  பல ஆண்டுகளுக்கு பிறகு 1856 ஆம் ஆண்டு ஒரு நபர் அதை வெறும் 6 ஷில்லிங் விலைக்கு ஒருவரிடம் விற்றிருக்கிறார். பிறகு அது பல பேரிடம் கை மாறி  கடைசியாக ஒரு ஆஸ்திரேலியர் கைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் அது நியுயார்க் நகரத்தில் வசதி படைத்த ஒருவர்  வீட்டில் அலங்கரிப்பட்ட கண்ணாடியில் காட்சிப்பொருளாக இருந்தது. அதை உளவாளி மூலம் கண்டறிந்தவர் கிப்பன்ஸ் (  உலகின் முதன்முதலில் அஞ்சல் தலை சேகரிப்பாளர் ). அதை பெரிய விலைக்கொடுத்து மீட்டு வந்தவர் ஃபி்ன்பர் கென்னி . அந்த அஞ்சல் தலை  கறுப்பு வெள்ளையில் அச்சடிக்கப்பட்ட  எண்முகம் வடிவம் கொண்டதாக இருக்கிறது
                      உலகில் மக்களுக்கான முதல்  அஞ்சல் தலை எனக் கொண்டாடப்படுவது பென்னி பிளேக்  என அழைக்கப்படும் பிரிட்டிஷ்  நாட்டு அஞ்சல்தலையாகும். 1840 மே 6 அன்று  அந்த தபால் தலையை பிரிட்டிஷ் அரசு வெளியிட்டது. அதற்கு அடுத்ததாக அஞ்சல்தலையை வெளியிட்ட நாடு பிரேசில்.
                         1688 ஆம் ஆண்டு வாக்கில்   கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்றியது. 1766  ஆண்டு ஆற்காட்டு வீரர் என அழைக்கப்பட்ட “ இராபர்ட் கிளேவ் ” தபால் முறையை ஒழுங்குப்படுத்தினார். அவரது நிர்வாகத்தின் கீழ் முதல் தபால் போக்குவரத்து    சென்னைக்கும் , மும்பைக்கும்  இடையே  நடைப்பெற்றது. 1774 ஆண்டிற்கு பிறகு தபால் துறை  பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது . “ 100 மைல் தூரம் வரைக்கும்  2 அணா . தபாலை  உரியவரிடம் கொண்டுப்போய் சேர்க்கப்படும் “ என்கிற உறுதிமொழியுடன் மக்களுக்கான அஞ்சல் துறை செயல்படத்தொடங்கியது. அத்திட்டத்தை  உறுதிப்படுத்தும் பொருட்டு   1837 ஆண்டு போஸ்ட் ஆபிஸ் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டம் இயற்றப்பட காரணமாக இருந்தவர் டல்ஹௌசி பிரபு அவர்கள். அந்தச்சட்டம்தான்  இன்று வரை நடைமுறையில் இருக்கிறது.  இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் அஞ்சல் தலை என்பது  கிழக்கிந்திய கம்பெனியின் சின்னமான அகன்ற அம்பு .
                        இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் அஞ்சல் துறையின் பங்களிப்பு என்பது   அளப்பரியது. தென்னாப்பாரிக்காவில் கறுப்பர் இன மக்களுக்காகப் போராடிக்கொண்டிருந்த காந்தியை இந்தியாவிற்கு கொண்டு வந்துச் சேர்த்தது  அஞ்சல் துறைதான்.   காந்திஜீ உடன் ஜின்னா , படேல், இராஜேந்திர பிரசாத், நேரு , பெரியார், இராஜாஜீ ,........... போன்றவர்களை கை கோர்க்க வைத்ததும் அஞ்சல்துறைதான்.
                        பிரிட்டிஷ் அரசு நினைத்திருந்தால் அஞ்சல் துறையின் வாயிலாக காந்தியின் தலைமையிலான  சுதந்திரப் போராட்டத்தை முற்றிலுமாக முடக்கியிருக்க முடியும். ஆனால் மடித்து ஒட்டப்பட்ட பிறரது  கடிதங்களை பிரித்துப்படிக்கக்கூடாது என்கிற வாய்மொழி உத்தரவை கடைசி வரை  ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மீறவில்லை. அதனால்தான்  இன்று வரை கடிதத்தின் கற்பு போற்றப்பட்டு வருகிறது.
                        ஜாலியன் வாலாபாக் படுகொலை  சம்பவம் நடந்தேறியப்பிறகு பிரிட்டீஸ் வைஸ்ராய் அவர்களுக்கு  காந்தியடிகள்  எழுதிய  கடிதம்   இந்திய சுதந்திரப்போராட்டத்தில்  முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கருதப்படுகிறது .  அந்தக்கடிதத்தை இங்கிலாந்து அரசு தொடர்ந்து  பாதுகாத்து வருகிறது.   பாகிஸ்தானிலிருந்து முகமது அலி ஜின்னா, நேரு அவர்களுக்கு  எழுதிய ஒரு கடிதத்தை இந்திய அரசு பொக்கிஷமாக கருதி வருகிறது. “ என் வாழ்நாட்களில் நான் செய்த பெரிய தவறு , இந்திய தேசத்திலிருந்து பாகிஸ்தானை பிரித்ததுதான் . அதற்காக இப்போது நான் வருந்துகிறேன் “ என்கிற கடிதம்தான் அது.
                 1971 டிசம்பர் 3 ஆம் தேதி  இந்தியா மீது பாகிஸ்தான் திடீரென போர் தொடுக்க அதற்கு ஆதரவாக அமெரிக்கா  பாகிஸ்தானுக்கு போர் கருவிகள் அனுப்ப , அப்பொழுது அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் ரஷ்யா பேரரசுக்கு எழுதிய அவசரக்கடிதம் அமெரிக்கா போரிலிருந்து  பின்வாங்கவும்  இந்தியா அப்போரில் வெற்றிப்பெற்று சுயமரியாதையை  உலகளவில் நிலைநிறுத்தவும் முடிந்தது.
                     2000 ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கு முதல்நாள் குஜராத் புஜ் நகரத்தில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த பூகம்பத்தில் இரண்டு கைகளையும் இழந்த ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளிச்சிறுமி கால்களால் ஒரு ஓவியம் வரைந்து அதை  அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தாள். இந்தியாவின் அழைப்பினை ஏற்று  அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்த பில்கிளிண்டன் அந்தக் கடிதத்துடன் இந்த சிறுமியை சந்தித்து அவளுக்கு ஆறுதல் கூறினார்.
                    கல்கத்தா நகரத்திலிருந்து ஒரு கல்லூரி மாணவி பிரதமர் இந்திராகாந்தி அவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவிக்கும் பொருட்டு ஒரு கடிதம் எழுதினாள். தான் எதிர்காலத்தில் மேயர்  தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் ஒருவேளை நான் கல்கத்தாவின் மேயரானால் நகர முழுமைக்கும் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச திரைப்பட சுவரொட்டிகளை  கிழித்தெறிய அவசரச்சட்டம் கொண்டு வருவேன் என்றும் எழுதினாள். அந்தக்கடிதம் பற்றி மேற்கு வங்கம் அரசுடன் பேசிய இந்திராகாந்தி  கல்கத்தா முழுமைக்கும் ஆபாச சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிக்க கோரி அவசர சட்டம் இயற்ற நிர்ப்பந்தித்தார்.
                 நாடு விடுதலை அடையும் பொழுது இந்தியாவில் மொத்தம் 565 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றில் 552 சமஸ்தானங்களை படேல் அவர்கள் கடிதத்தின் வாயிலாக இணைய வைத்தார் . காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் உடனடியாக இணைய காரணம் ஹரிசிங் என்கிற மன்னன் வல்லபாய் படேல் அவர்களுக்கு எழுதிய அவசர கடிதம்தான்.
                  உலக நாடுகளில்  தபால் வில்லைகளில் அதிகமாக இடம்பெற்றத் தலைவர் மகாத்மா காந்தி.   தபாலை முதலில் விமானத்தில் அனுப்பி  புரட்சிச் செய்த  நாடு நம் இந்தியாதான் . 1911 பிப்ரவரி – 18 அன்று  6500 கடிதங்களுடன் அலகாபாத்திலிருந்து   நைனிடால்  நோக்கிச் சென்றது.   ஏர் மெயில் என்கிற  தபால் வில்லையை வெளியிட்ட முதல் நாடு, அட்ஹிஜிவ் ( adhesive ) வில்லை என அழைக்கப்படக்கூடிய   பின்புறம் பசையுடன் கூடிய  வில்லையை வெளியிட்ட நாடு என அஞ்சல் துறையில் பல்வேறு சாதனைகளை இந்தியா செய்துள்ளது.
                      இன்று “ எனது அஞ்சல் தலை “ என்று  ஒரு  புதுத்திட்டம் நடைமுறையில் இருக்கிறது.  இதன்படி காந்தி , அம்பேட்கர், அன்னை தெரஸா, அண்ணா, நேரு ............... இடம்பெற்ற வரிசையில்  சராசரி இந்தியக்குடிமகன்களின் முகம் பதித்த  அஞ்சல்தலையை வெளியிடும் திட்டம் அது .  உத்திரப்பிரதேசம் , மகாராஷ்டிரா , டெல்லி மாநிலங்களில் செயல்படுத்தப்பட்ட  இத்திட்டம் தற்போது தமிழ்நாட்டில் செயல்படுகிறது.  அத்தகைய சிறப்புமிக்க இந்திய அஞ்சல்துறை  வருமானத்தில் குன்றி , தற்காலிக  ஊழியர்களைக்கொண்டு தத்தளிப்பதை  ஒரு சராசரி இந்தியனால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை . கணினி , கைப்பேசி போன்ற தொழ்நுட்ப வரவுகள் கடிதம் எழுதும் பழகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடடது.
                       தபால் பெட்டி சிவப்பு நிறத்தில் வைக்கப்பட்டிருக்க காரணம் என்ன? என்கிற கேள்விக்கு பெரும்பாலோர் சொல்கிற பதில்  மற்ற நிறங்களுடன் ஒப்பிடுகையில் சிவப்பு நிறத்திற்கான அலைநீளம் அதிகம். ஆனால் இதற்கு மற்றொரு காரணம் ஒன்றுண்டு . தபால் துறை “ நிர்வாகத்தின் இதயம் “ அன்றைய ஆட்சியாளர்கள் கருதினார்கள். இந்தியாவின் மிகப்பழமையான துறை என அடையாளப்படுத்தக்கூடிய அஞ்சல்துறையின் இன்றைய நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. வறுமையின் நிறம் சிவப்பு  என்பது சான்றோர் வாக்கு.  அதனால்தான்  அஞ்சல் பெட்டிகளும் அஞ்சலகங்களும் சிவப்பு நிறத்தில்  காட்சியளிக்கிறதோ! 
                             ஒருவர் சொன்னார் “ எனது தகப்பனார் கடிதம் கொடுத்துதான் பலருக்கு அரசாங்க உத்யோகம் கிடைத்திருக்கிறது.” அதற்கு மற்றொருவர்  “ உன் தகப்பனார் மந்திரியா? ” “ இல்லை  தபால்காரர் ”.
                                                                                                                அண்டனூர் சுரா ( எழுத்தாளர் )
                                                                                    மண்டேலா நகர்
                                                                                    கந்தர்வகோட்டை
                                                                                    புதுக்கோட்டை மாவட்டம்
                                                                                                            613301

                                                            தொடர்புக்கு 958565 - 7108

photoes








புதன், 9 அக்டோபர், 2013

கொக்கரக்கோ.....



இங்கே நிற்கின்ற நூற்றுக்கணக்கான பேர்களில் யார் முன்னால் செல்வது ?“
அவர் ?”
அவர் வேண்டாம்
அப்ப நான் ? ”
நீங்களும் வேண்டாம்
வேறு யார்?”
நான் போகிறேன்
நீங்களா ?”
ஆமாம் நானேதான்
சரி போங்கள்
என்னை தொடர்ந்து எல்லோரும் வாருங்கள்
வருகிறோம். வருகிறோம்
சப்தம் கூடாது
ஆமாம். கூடாது. கூடாது
அதோ நாய்கள் !. ஜாக்கிரதை
உஷ்................!”
நாய்களின் கண்களில் பட்டுவிட்டால் நம் கதி அதோகதிதான்
வேகமாக நடங்கள். யாரும் பார்த்துவிடப்போகிறார்கள்
வரப்பில் பார்த்து நடந்து வாருங்கள். ஈரத்தில் கால்களை வைத்துவிடாதீர்கள்
விளைநிலத்திற்குள் இறங்கி விடாதீர்கள். ”
இது விளைநிலம் அல்ல. விலை நிலம்
அப்படியானால் இந்த இடத்தில் கொஞ்ச நேரம் நின்றுவிட்டு போகலாமே?“
வேண்டாம். இதைவிட நல்ல இடங்களெல்லாம் இருக்கின்றன
நல்ல இடங்கள் என்றால்?”
ஆற்றுப்படுகை, கல்குவாரி, நிலக்கரி சுரங்கம், மலை , காடு
காடு என்றால் இடுகாட்டையும், சுடுகாட்டையும் சொல்கிறீர்களோ ?”
தலைவா.......இவருக்கு வெளியுலமே தெரியவில்லை
ஹக்.ஹக்.ஹக்..................”
காடு என்றால் வனம்.  சந்தனம், சுந்தரம் , தேக்கு மரங்கள் விளைந்து நிற்கும் நிலம்
அப்படி சொல்லுங்கள்
நாம் வந்து போகும் சுவடுகள் யாருக்கும் தெரியக்கூடாது
அப்படியே தெரிந்தாலும் யாரும் யாரையும் காட்டிக்கொடுத்திட கூடாது
அப்படியே காட்டிக்கொடுத்தாலும் நான்தான் என ஒத்துக்கொள்ளக்கூடாது
ஆமாமாம் . எதற்கும் எச்சரிக்கையாக  இருக்க வேண்டும்
அதோ பாருங்கள்!  யாரோ ஒருவர் வருகிறார்
நல்லவேளை அவரிடம் மாட்டிக்கொள்ளத்தெரிந்தோம்
“  வேறு பாதையில் சென்றுவிடுவோம்
நான் அதைத்தான் சொல்ல நினைத்தேன்
அதோ ஒரு வரப்பு தெரிகிறது. அதில் போங்கள்
அதில் போய் ?”
கிழக்கு புறமாகச்சென்று அப்படியே மேற்கு பக்கம் திரும்பி  வடக்கு போங்கள்
“  அந்த பாதையில்தான் நான் போய்கொண்டிருக்கிறேன். நீங்கள் சத்தம் போடாமல் என் பின்னால் வாருங்கள்
ஒரு நிமிடம்
என்னது ? ”
அதோ ஒரு கொட்டகை ! “
ஆமாம் தெரிகிறது. அதற்கு என்னவாம்
கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு செல்லலாம்
செல்லலாம்தான். அதற்குள் விடிந்து விடுமே
மணி எத்தனை ?“
ஒரு மணி
ஒரு மணியாகி விட்டதா? மணியானதே தெரியவில்லை. “
அப்படியென்றால் இங்கே நிற்க வேண்டாம். போய் விடுவோம்
எவ்வளவு நேரம்தான் நடந்துக்கொண்டே இருப்பதாம்? “
இன்னும் கொஞ்ச தூரம் சென்றால் எனக்கு வேண்டியப்பட்டவரின் கல்குவாரி வரும் . அங்கே இளைப்பாறிக்கொள்ளலாம்
நான் சொல்வதைக்கேளுங்கள். என்னால் இதற்கு மேல் நடக்க முடியாது. கொஞ்சநேரம் இந்த கொட்டகையில் ...............................”
இதற்குத்தான் நான் அப்பவே சொன்னேன். இவரை நம்முடன் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று
புதிதாக வந்தவர்.  அதான்  அவருக்கு  கால்கள் கடுக்கின்றனகொஞ்ச நேரம் அவருக்காக  இந்த கொட்டகையில் நின்றுவிட்டுதான் செல்வோமே
சரி.சரி வாருங்கள்
மெதுவாக , மெதுவாக
யார் யாரோ படுத்திருக்கிறார்கள். அவர்களை மிதித்து எழுப்பிவிடாதீர்கள்
ஒருவர் மீது ஒருவராக எத்தனைப்பேர் படுத்திருக்கிறார்கள். ! பார்க்கவே வியப்பாக இருக்கிறது
ஆமாம். வியப்பாகத்தான் இருக்கின்றது
கொட்டகைக்குள் யாரோ ஒருவர் மட்டும் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு  உட்கார்ந்திருக்கிறார் . உங்களுக்கு  தெரிகிறதா?“
ஆம் தெரிகிறது ! அவரிடம் பேச்சு கொடுக்க வேண்டாம்
அவர் யாரென்று பார்க்க வேண்டாமா?  நீங்கள் இருங்கள். நான் கேட்கிறேன்
“  யாரது ? ”
“ -----------------------”
ஒரு பதிலும் வரக்காணோமே . யாரது ?“
நீங்கள் யார் ? “
நான் கேட்ட கேள்வியைதான்நீகேட்டிருக்கிறாய்? ”
இல்லை. இல்லை. நான் கேட்க நினைத்த கேள்வியைத்தான் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்
நீ யாரென்று சொல். பிறகு நாங்கள் யாரென்று சொல்கிறோம்
நான் இந்த இடத்தின்சொந்தக்காரன். இந்த இடம் எனது பெயரில் இருக்கிறது
அப்படியானால் உங்களுக்கு  வணக்கம் . வணக்கம்
“  வணக்கம். இப்படி வாருங்கள். உட்காருங்கள்
பிறகென்னஏன் நிற்கிறோம்? வாருங்கள் உட்காருவோம்
“  இந்த இடத்தை விற்கிற யோசனை எதுவும் இருக்குங்களா?“
“  ஏன் வாங்கிற மாதிரி இருக்கீங்களா?“
இடம் பத்து வேலி அளவிற்கு இருந்தால் வாங்கிக்கொள்கிறோம் . ஒரு காலேஜ் , மருத்துவமனை கட்டிவிடலாம் . அந்த அளவிற்கு இருக்குமா ?“
ஹீ ஹீ ஹீ  “
ஏன் சிரிக்கிறீர்கள் ?”
இது வெறும் எட்டடி நிலம்தாங்களே . அதுவும் புறம்போக்கு இடத்தை வளைத்து பட்டா  மாற்றி வைத்திருக்கிறேன்
அப்படியானால்  இதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். இதற்கும் பக்கத்தில் கல்குவாரி, நிலக்கரி சுரங்கம் , ஆற்றுப்படுகை எதுவும் இருக்குங்களா?“
ஏன் வாங்கப்போறீங்களா ? ”
முடிந்தால் வாங்குவோம்.“
முடியலை என்றால் ?”
சுரண்டுவோம்
காட்டுகிறேன். எனக்கு எவ்வளவு தருவீர்கள் ? “
லாபத்தில் பத்தில் ஒரு பங்கு  ”
சரி . அப்படியானால் என் கூட வாருங்கள்.  ”
அமாவாசை வானம். முகத்தில் அறையும் இருட்டு. நடு ராத்திரி. மரங்கள் அசையவில்லை.கிளைகள் , இலைகளில் நித்திரை சுருக்கங்கள். ஊர் நிசப்தமயம். வடக்கு திசையை நோக்கி , அகோரப் பற்களை காட்டியபடி அவ், அவ்என எகிறும் நாய்கள். தூரத்தில் நரிகளின் ஊழையிடும் சத்தம் . ஆந்தை எழுப்பும் வி்க்கல் ஒலி வேறு.
அதோ பாருங்கள். ஆயிரக்கணக்கான பேர் நிம்மதியாக தூங்குகிறார்கள்
சோம்பேறிகள்
இதோ பாருங்கள் . நூற்றுக்கணக்கான பேர் ஆடை விலகியது கூட தெரியாமல் படுத்திருக்கிறார்கள்
அப்பாவிகள்
அய்யய்யோ ! ”
என்னது ? ”
வெள்ளி முளைத்து விட்டது  ”
அப்படியானால் பொழுது விடியப்போகிறதா?”
ஆமாமாம்
எனக்கு ஒரு சந்தேகம்
எதுவாக இருந்தாலும் வேகமாக கேளுங்கள். தெரிந்தால் பதில் சொல்கிறோம்
இத்தனைப்பேர் நிம்மதியாக உறங்கிக்கிடக்கையில் நாம் மட்டும் ஏன் இப்படி அலைந்து திரிய வேண்டும் ?”
காரணம் இருக்கிறது
என்ன காரணமாம் ?”
அவர்கள்  அப்பாவி மக்கள்
பிறகு  நாம் ? “
முன்னாள் மந்திரிகள்
என்ன  சத்தத்தையும் காணோம் ? ”
“ .....................”
கொக்கரைக்கோ ...............
காலை புலர்ந்து விட்டது. பேய்கள் பகலில் பேசிக்கொள்வதில்லை.

அண்டனூர் சுரா
மண்டேலா நகர்
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை - மாவட்டம்
613301