செவ்வாய், 11 மார்ச், 2014

கட்டுரை ஓம்எனும்வாக்குக்குறியீடுஓம்விதியைவரையறுக்கவும்.பத்தாம்வகுப்புபடிக்கின்றபொழுதுஒருஅறிவியல்கேள்வித்தாளில்கேட்கப்பட்டிருந்தகேள்விஇது.அதற்கானபதில்மறந்துவிட்டது.ஆனாலும்அதற்குநான்பதில்எழுதியிருந்தேன்.“ ஓம்என்பதுபிரணவமந்திரம்” .
ஓம்விதிஎன்பதுமின்னோட்டவியலில்ஒருதவிர்க்கமுடியாததத்துவம்எனலாம்.ஓம்மின்தடையின்அலகாகும்.அதாவதுமின்னோட்டத்திற்கும்மின்னழுத்தத்திற்கும்இடையேயுள்ளதொடர்பைவிளக்கும்விதிஅது. அந்தவிதியைவரையறுத்தவர்ஜார்ஜ்சைமன்ஓம்எனும்ஜெர்மனிவிஞ்ஞானிஆவார்.இந்தஓம்விதியைமறந்துபோனதால்ஒருநாள்முழுதும்வகுப்பறையில்முட்டிக்காலிட்டிருக்கிறேன். நான்மட்டுமா?
       புராணக்கதைஒன்றுஉண்டு.“ பிரணவமந்திரம்என்பதுஓம்”.இந்தமந்திரத்தைபடைத்தல்தொழிற்கடவுள்பிரம்மன்மறந்துவிட்டான்.அதனால்பிரம்மனைதமிழ்க்கடவுளானமுருகன்சிறையில்அடைத்தான்என்கிறதுதிருமுருகாற்றுப்படை.அவனைவிடுவிக்கஎல்லாகடவுள்களும்தமிழ்கடவுளானமுருகன்முன்முட்டிக்காலிட்டுகெஞ்சியபடலத்தைதமிழறிஞர்கள்பெருமைப்படகூறுவார்கள். சரி, “ஓம்என்கிறசொல்லைபிரம்மன்மறந்ததும்முருகனுக்குஏன்கோபம்வந்ததாம்?” காரணம்உண்டு. ஓம்என்பதுதமிழ்ச்சொல்.
ஆம்என்கிறசொல்லின்திரிபேஓம்என்கிறார்மொழிஞாயிறுதேவநேயப்பாவாணார்.இல்லைஎன்பதன்எதிர்ப்பதம்ஆம்.இந்தஆம்ஈழம்மற்றும்தென்னாப்பிரிக்காவில்ஓம்எனஇன்றும்விளிக்கப்படுகிறது.ஓம்என்கிறசொல்லுக்குஏற்றுக்கொள்கிறோம், அல்லதுஆமோதிக்கிறோம்எனபொருள்கொள்ளலாம். ஓம்என்பதுபலர்பால்வினைமுற்றுவிகுதியாகும்.ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றிபெறுவோம்....சங்கங்கள்உதிர்க்கும்போராட்டக்குரல்கள்ஓம்எனும்விகுதிப்பெற்றுமுடிவதைகாணலாம்.
       ஓம்என்கிறசொல்லின்பிராமியஎழுத்துவடிவம் என்கிற குறுக்கு வடிவ குறியீடாகும்.இக்குறியீடு சிந்துவெளி ஹாரப்பா மற்றும் மொகஞ்சதாராவிலும், எகிப்து மற்றும் சுமேரிய எழுத்து வடிவத்திலும், சீன வரிவடிவத்தில்  காணப்படுகிறது.  இந்தக்குறியீட்டின்மூலம்தென்னகம்என்கிறார்பன்மொழிப்புலவர்கா.அப்பாத்துரையார்.
இக்குறியீடுதென்னகத்திலிருந்துஎகிப்திற்கும்அதிலிருந்துசுமேரியர் , சிந்துசமவெளிவழியாகசீனா, இலங்கைவரைபரவியிருக்கிறது. சிந்துவெளிமொழிஇன்னும்விளக்கமடையாநிலையில்உள்ளது.எனினும்அதன்எழுத்துக்கள்தமிழிலுள்ள 31 எழுத்துக்களேஎன்றும், அதில் 12 உயிர், 18 மெய்எனச்சொல்கிறார்திருத்தந்தைஹீராஸ்.அத்துடன்சிந்துவெளிமொழிதமிழேஎனக்கூறுகிறார்அவர்.
       திருவண்ணாமலைமலையிலுள்ளசேத்தாரைசித்தர்மலையில்இக்குறியீடுபொறிக்கப்பட்டுள்ளதாகமுனைவர்மதிவாணன்பதிவுசெய்துள்ளார்.இந்தக்குறியீடுமூவாயிரம்ஆண்டுகளுக்குமுற்பட்டவடிவம்என்கிறார்அவர்.இதுஒருபுறமிருக்கஇக்குறியீடுஇசுரேல்நாட்டிலுள்ளசாக்கடலைஅடுத்தமலக்குகைஒன்றில்பொறிக்கப்பட்டுள்ளது.இதுஇரண்டாயிரம்ஆண்டுகளுக்குமுற்பட்டஎழுத்துவடிவம்என்கிறதுதொல்லியல்ஆய்வு.
       தமிழிலுள்ளஉயிர்மெய்எழுத்துகள்யாவும்என்கிறவரிவடிவத்தின்நீட்சிதான். குறிப்பாக க, ச , ட , த, ப, ரஎனும்எழுத்துகள். கூட்டல்குறியீடு+  என்பதும்அந்தகுறியீட்டின்சுருங்கியவடிவமேயாகும்
தமிழ்மொழியில்அக்குறியீட்டிற்கானதொடக்கக்காலஓசைஓம்என்றும்ஆம்என்றும்ஒலிக்கப்பட்டிருக்கிறது.இக்குறியீடும், அதன்ஓசையும்மெல்லப்பரவிஇயேசுபேசியமொழியானஎபிரேயம்மொழியில்ஆமென்உச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஆமென்என்பதுஆம்என்பதன்திரிபேயாகும்.ஓம்என்கிற ( ) குறுக்குவடிவக்குறியீட்டிலிருந்துபிறந்ததுதான்இயேசுவைஅடையாளப்படுத்தும்என்கிறசிலுவைகுறியீடாகும்.
       இயேசுநாதரின்அன்னை“ மரியா”என்பதும்தமிழ்ச்சொல்லேயாகும். இயேசுநாதரின்மூதாதையர்கள்ஆடுமேய்ப்பவர்கள்.மறிஎன்றால்ஆடு.செம்மறிஎன்றால்சிவப்புஉரோமங்களைஉடையஆடுஎனப்பொருளாகும்.மறிஎன்பதுதான்மெல்லத்திரிந்துமரிஎன்றானது.பிறகுஅதுமேரிஎன்றானது.ஓம்என்கிறச்சொல்இஸ்லாமியமொழியானஅரபியிலும்புழக்கத்தில்இருக்கிறது.அம்மொழியில்ஓமென்என்றால்சம்மதம்எனப்பொருளாகும்.ஓம்என்பதுதான்அங்குஓமென்எனதிரிந்துள்ளது.
       1741 ஆம்ஆண்டுதுருக்கியஏகாதிபத்தியத்திலிருந்துஒருபரிவுமக்கள்தனியாகபிரிந்துப்போகசம்மதம்தெரிவித்தார்கள். அதன்படிபுதிதாகஒருநாடுஉதயமானது.அந்தநாடுதான்ஓமன்.ஓமன்என்பதற்குசம்மதப்பகுதிஎனபொருள்கொள்ளப்படுகிறது.இந்தநாடுஅரேபியதீபகற்பத்தின்தென்கிழக்கில்அமைந்துள்ளது.
       இதற்கெல்லாம்மேலாகஓம்எனவும்ஆம்எனவும்பொருள்கொள்ளும்வடிவபிராமிஎழுத்துவடிவம்இந்தியஅரசியலில்முக்கியஇடத்தைப்பிடித்துள்ளன.ஆம்!இந்தியவாக்காளர்கள்தன்னுடையவாக்கினைபதிவுசெய்யும்குறியீடாகஅந்தக்குறியீடுவிளங்குகிறது.
       1952 , 1957 ஆண்டுகளில்நடைப்பெற்றஇவ்விருநாடாளுமனறத்தேர்தல்களிலும்ஒவ்வொருவேட்பாளர்களுக்கென்றும்தனித்தனியானவாக்குப்பெட்டிகள்வைக்கப்பட்டன.பொதுமக்கள்தனக்குதேவையானவேட்பாளர்களைதேர்வுச்செய்யும்பொருட்டுதன்னுடையவாக்கினைஅவர்களுக்குஒதுக்கப்பட்டபெட்டியில்செலுத்தினார்கள்.இந்ததேர்தல்முறைமுறைமுகமாவும், ரகசியத்தன்னைஇல்லாமலும்இருந்ததால்அதன்பிறகுஅனைத்துவேட்பாளர்களுக்கும்ஒரேபெட்டிஎன்கிறபுதியமுறைகையாளப்பட்டது.இந்தபுதியநடைமுறைமூன்றாவதுநாடாளுமன்றத்தேர்தலிலிருந்துநடைமுறைக்குவந்தது.
       ஒரேசீட்டில்கொடுக்கப்படும்வேட்பாளர்பெயர்மற்றும்சின்னத்திற்குஅருகில்பொதுமக்கள்என்கிறகுறியீட்டினைபதிவுசெய்வதன்மூலம்புதியவேட்பாளர்களைதேர்வுசெய்தார்கள். இக்குறியீடுமின்னணுவாக்குப்பதிவுஎந்திரங்கள்பயன்பாட்டிற்குவருவதற்குமுன்புவரைநடைமுறையில்இருந்தது.மேலும்வாக்கு( vote ) என்கிறசொல்லின்குறியீடாகவும்விளங்குகிறது.
அக்குறியீடுஇந்தியாவில்மட்டுமன்று.ஐரோப்பியநாடுகளிலும்பிரசித்திப்பெற்றகுறியீடாககருதப்படுகிறது.ஜெர்மனிநாட்டின்சர்வதிகாரிஹிட்லர்() இக்குறியீட்டைதன்னுடையகட்சியின்அடையாளத்திற்குபயன்படுத்தினார்.மேலும்இக்குறியீடுஜெர்மனிமொழியில்எழுத்துவடிவம்கொண்டுள்ளது.
       தேர்தலைமுதலில்உலகிற்குஅறிமுகப்படுத்தியவர்கள்சோழர்கள்தான்! .ஆம் !குடவேலைமுறையில்அவர்கள்நடத்தியதேர்தல்பற்றியகுறிப்புகள்சோழர்கள்கட்டிஎழுப்பியகோயில்களில்கல்வெட்டுகளாகபொறிக்கப்பட்டுள்ளன.இந்தத்தேர்தலைமுதலில்நடத்தியப்பெருமைமுதலாம்இராசராசன்சோழனையேச்சாரும்.பதினேழாம்நூற்றாண்டில்பிரிட்டிஸார்நடத்தியதேர்தல்சோழர்காலதேர்தலுக்குபலநூற்றாண்டுகள்பின்தங்கியவை.
தேர்தல்வாக்குச்சீட்டுகளில்வேட்பாளர்களின்பெயர்களுக்குப்பதிலாகசின்னங்களைஅறிமுகப்படுத்தியநாடுஇந்தியா.அந்தச்சின்னத்திற்குஅருகில்பதிக்கப்பட்டஎன்கிறகுறுக்குவரிவடிவச்சின்னம்தமிழ்எழுத்தானபிராமிவரிவடிவம்என்பதைநினைத்துநாம்பெருமைக்கொள்ளாமல்இருக்கமுடியுமா?                                  
                                  

திங்கள், 20 ஜனவரி, 2014

பரீட்சைசிறுகதை                  

தேர்வு எண்  259742
வகுப்பு ஆறு
பாடம் கணக்கு
அ. சுருக்கமான விடை                                                       
1.      “ சிக்புக், சிக்புக் , சிக்புக்..............................”
2.      இரயில் சத்தத்தைக் கேட்டதும் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தேன் . உடம்பெல்லாம் வலி. தீ சுட்டதைப்போல  ஆடைக்குள் எரிச்சல். ஆடையை இரத்தம் நனைத்திருந்தது.  அதை லாவகமாக மறைத்துகொண்டேன். இரவெல்லாம் தூக்கம்இல்லாததால் இதயம் திடும்திடும் என மார்புக்கூட்டை இடித்துகொண்டிருந்தது. கண்களை உருட்டித்திரட்டி விழிக்க முடியவில்லை.  கண்ணாடித்துகள்கள்  கிடந்து அறுப்பதைப்போல கண்களை உறுத்தியது.
3.நான் எழுந்ததும் சித்தி மின் விளக்கிற்கு உயிர் கொடுத்தாள். ஒளிவெள்ளத்திற்குள் நான். ஒளிக்கீற்றுகள் என்னை துலாவி பார்ப்பதைப்போல பளீச்சிட்டன.  சித்தி கண்களை தேய்த்துகொண்டு என்னைப்பார்த்தாள்.  பிற்கு மணியைப்பார்த்தாள்.   மணி ஆறாவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன.
4.     “ சரண்யா ............. மணிஆறு ஆச்சு.  இவ்ளோ நேரமா தூங்குறது?முழுப்பரீட்சை இல்லையா.  கணக்கு பரீட்சை வேற.  எழுந்திருச்சு மொகத்தைக்கழுவு . படி........... ” . சித்தி உச்சந்தலையில் கையை வைத்து ஆசி வழங்குவதைப்போலசொன்னாள்.
5. “ சித்தி............ நான் வீட்டுக்கு போகணும்என்றேன்.
6.     ஏன்.............?”
7.     அம்மாவைப்பார்க்கணும்”
8.      சித்தி என் அருகினில் வந்தாள்.  எனது கன்னங்களை வருடினாள். என் கண்களில் பெருக்கெடுத்திருந்த கண்ணீரை முந்தாணையால் துடைத்தாள்.  “ பரீட்சை முடிஞ்சதும் சித்தப்பாவை கொண்டு வந்து வீட்ல விடச்சொல்றேன்.  இன்னும் ரெண்டு நாள்தானே .  இன்னைக்கு கணக்கு, நாளைக்கு அறிவியல், அடுத்த நாளு சமூகவியல்.  அவ்வளவேதான்!  அப்புறம் ஒரு மாதம் லீவு .  நீ அம்மா, அப்பா கூடவே இருக்கலாம்.  கொஞ்சம் பொறுத்துக்கோ ” என்றாள்.
9.     பொறுத்துக்கோ என்கிற சொல் என்னை குடைந்தெடுத்தது. “ ப்ளீஸ் சித்தி . என்னை கொண்டு வந்து அம்மாக்கிட்ட விடு
10.  சித்தி சொன்னா புரிஞ்சுக்கோம்மா” என செல்லமாக கோபித்தப்படி  மிரட்டி, அனுதாபம் காட்டிவிட்டு சமையலறைக்குள் சென்றாள்.  ஆவியாகிக்கொண்டிருக்கும் டீயை கொண்டு வந்து   என் முன்னால் ஆற்றினாள்.  கொஞ்சம் போல குடித்துப்பார்த்துநாக்கை சப்பிக்கொட்டி உள்ளுரச் சுவைத்தாள். சிறிய தம்ளரில் டீயை ஊற்றி என்னிடம் நீட்டினாள்.
11. “ சித்தி நான் வீட்டுப் போகணும்”
12.    “ போகலாம். முதல்ல இதை குடி”
13.     நான் ஒரு மிடறு பருகினேன்.
14.        சித்தி கேட்டாள் “ சீனி சரியா இருக்கா?”
15. “ ம்.  சித்தி” என்றபடி அவளைப்பார்த்தேன்.
16. சித்தி சொன்னாள். நீ பொய் சொல்கிறாய்.  போய் சீனி டப்பாவை எடுத்துக்கிட்டு வா “
17. நான் எழுந்தேன் .  நிற்க முடியவில்லை. வலிஉடம்பிற்குள் சுருக்,சுருக் என தைத்தது .  அழுதுவிடலாமென தோன்றியது. கீழ் உடம்பு அசையாமல்  கால்களை  மெதுவாக எடுத்துவைத்து நடந்தேன்.  ஏன் இப்படி நடக்கிறாய்? சித்தி கேட்டிருக்க வேண்டும்.  கேட்கவில்லை.
18.  “ஏன்தான் இந்த கணக்கு பாடத்தைப்பார்த்து இப்படி பயப்படுகிறாயோ ? ” என்று மட்டும் கேட்டாள் . பிறகு சொன்னாள்.  “ நேற்றைய தினம் சித்தப்பா எந்ததெந்த கணக்கெல்லாம் சொல்லி்க்கொடுத்தாரோ அந்த கணக்கையெல்லாம் சரியாச் செய். எந்தக்கணக்கு தெரியலைனாலும்  சித்தப்பா சொல்லிக்கொடுத்தகணக்கை மட்டுமாவது சரியா செய்திட்டு வா .கண்டிப்புடன் கூடிய அறிவுரையை எனக்கு வழங்கினாள் .
ஆ. விரிவான விடை
1.     நேற்று மதியம் நடந்தது இது .  சித்திவீட்டில் இல்லை.  பரீட்சை எழுதுவதற்காக தஞ்சாவூர் சென்றிருந்தாள்.  சித்தப்பா மட்டும் வீட்டில் இருந்தார்.  அவருக்கு குழந்தை இல்லை.  ஒரு வேளை இருந்திருந்தால் குழந்தைகள் வீட்டில் இருந்திருக்கும். தூங்கி இருக்கும், இல்லை விளையாடிக்கொண்டிருந்திருக்கும்.  இல்லை எதற்காகவோ அடம் பிடித்து அழுதுகொண்டிருந்திருக்கும் .
           நான் வீட்டிற்குள் நுழைந்ததும் சித்திப்பா என்னை பார்த்து சிரித்து வைத்தார். “ பரீட்சை நல்லா எழுதினாயா ?” எனக்கேட்டார். நான் பதிலுக்கு சிரித்தபடி “ ம். எழுதினேன் சித்தப்பா ” என்றேன்.  “ எத்தனை மார்க் வரும்? ” எனக்கேட்டார்.  “ வரும் சித்தப்பா ” என்றேன்.  “ வரும் என்றால் அம்பது மார்க் ?” என ஒரு இழு இழுத்தார்.  “ எழுபது வரும்” என்றேன்.  சித்தப்பா என்னைப்பார்த்து “ நல்லது.  அதுபோதும் . அடுத்த பரீட்சைக்கு படி ” என்றார்.
                        நான் சாப்பிட்டேன்.  கொஞ்ச நேரம் தூங்கினேன்.  நான் எழுந்திருக்கும் பொழுது மாலை  மூன்றுமணி . எழுந்ததும் சித்தப்பா எனக்கு டீ வைத்து கொடுத்தார்.  “ அடுத்த பரீட்சைக்கு  படி ” என்றார்.  நான் “ சரிங்க சித்தப்பா ” என்றேன். கொஞ்ச நேரம் டீச்சர் நடத்திய கணக்குகளை எடுத்து பார்த்துகொண்டிருந்தேன். சித்தப்பா என் அருகினில் வந்து உட்கார்ந்தார்.
                        நான் சற்று விலகி உட்கார்ந்தேன்.  என் கண்களைப்பார்த்து சிரித்தார்.  நான் நோட்டின் பக்கத்தை திருப்பிக்கொண்டிருந்தேன்.  எனது நோட்டை வாங்கி எழுபத்து ஐந்து பெருக்கல் ஐம்பது என எழுதி அதைப்பெருக்கச்சொன்னார்.  நான் பெருக்கிக்காட்டினேன்.  அதை செய்து முடிப்பதற்கு ஐந்து நிமிடங்கள் எடுத்திருந்தேன்.
2.                     சித்தப்பா அதை வாங்கிப்பார்த்தார். “சரிதான்” என்றார்.  எனது கைகளைப்பற்றி குலுக்கினார்.  “ இதைவிட எளிமையாக செய்யலாமே ” என்றார்.  நான் “ எப்படி சித்தப்பா ?” என்றேன்.  எழுபத்து ஐந்துடன் நூறைப்பெருக்கினால் எவ்வளவு ?” எனக்கேட்டார். நான் அதையும் பெருக்கிக்கொண்டிருந்தேன்.  அவர் எனது கன்னத்தை மெதுவாக கிள்ளி “ அழகு இருக்கு.  அறிவு இல்ல ” என்றார்.  அவர் கிள்ளியதை விட அறிவு இல்லை என்கிற வார்த்தைதான் எனக்கு சட்டென தைத்தது.
                        “ எந்த எண்களையும் நூறால் பெருக்க வேண்டியதில்லை. அந்த எண்ணிற்கு பக்கத்தில ரெண்டு ஜீரோ போட்டால் போதுமே” என்றார். எழுபத்து ஐந்திற்கும் பக்கத்தில் இரண்டு ஜீரோ போட்டு “ இப்ப இது எவ்வளவு ?“ எனக்கேட்டார்.  நான் “ ஏழாயிரத்து ஐநூறு ” என்றேன்.  “சரியாகச் சொன்னாய்” என்றவாறு என் முதுகை தட்டிக்கொடுத்தார்.
                         “ சரி இந்த ஏழாயிரத்து ஐநூறில் பாதி எவ்வளவு ?” எனக்கேட்டார். நான் திறு, திறுவென முழித்தேன்.  அவர் என்னுடைய உதடுகளை குவித்து விரல்களால்  தடவினார் .  “ இதை ரெண்டால் வகு ” என்றார்.  நான் வகுத்துக் காட்டினேன்.  “ எவ்வளவு வருகிறது ? ” என்றார்.  “ மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது ” என்றேன். அவர் என் கன்னங்களை வருடினார்.
3.                     எனக்கு பொதுவாகவே கணக்குப்பாடம் பிடிப்பதி்ல்லை. அதில் சித்தப்பா சொல்லிக்கொடுத்தது கணக்குதானா ? என்கிற சந்தேகம் எழுந்தது.  அவர் சித்தப்பா தானா? நான்,  நான் தானா? என் பெயர் சரண்யா தானா? நான்  மனிதப்பிறப்பா இல்லை பிச்சிப்பூவா? எனும் மாதிரியான கேள்விகள் எனக்குள் எழுந்தன. ”எனக்கு பயமா இருக்கு. நானே படிச்சிக்றேன்” என்றேன்.   சித்தப்பா என்கிற வார்த்தையை அப்போது  நான் உச்சரிக்கவில்லை.  அவர் ”ஏன் ?” என்றார்.  நான்  கீழே குனிந்துகொண்டேன்.
                        அவன் என் முகத்தை உயர்த்திப்பார்த்தான். அவர் என்பதை இனி அவன் என்று சொல்லவே விரும்புகிறேன்.  “ பிடிக்கலையா ?” என்றான்.  “ ம்” என்றேன்.  என்னைப்பிடிக்கலையா ? இல்ல கணக்கு பிடிக்கலையா? ” எனக்கேட்டான். கேட்கிறான் பார் கேள்வி! கொஞ்சநேரம் என்னையே பார்த்தவண்ணம் உட்கார்ந்திருந்தான்.  என் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தான். அவனது விரல்கள் என்னுடைய கன்னத்தில் பட்டது கம்பளி பூச்சி நெளிவதைப்போல அருவருப்பாக இருந்தது.
                    “ சொல்லு சரண்யா .  என்னைப்பிடிக்கலையா? இல்ல கணக்கு பிடிக்கலையா ?” எனக்கேட்டான்.  நான் மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.  “ சனியனே . நான் உனக்கு மகளடா. நீ எனக்கு கணக்கு நடத்த வில்லை.  கணக்கு பண்ணுகிறாயடா ” . அவன் சொன்னான். “ சரண்யா................என்னமோ சொல்லுகிறாய் , ஆனால் புரியவில்லை ” என்றான். எனது விரல்களைப்பற்றி சொடுக்கெடுத்தான்.
4.                     “ ஏ பிளஸ் பி கோல்ஸ்  ஸ்கொயர்  இதுக்கு என்ன பார்முலா ?” எனக்கேட்டான்.  நான் வெறுமென உட்கார்ந்திருந்தேன்.  தெரியாதா ? ” எனக் கேட்டான்.  “ நான் “ ம்” என்றேன். ஏ என்பது நீ , பி என்பது நான் என  வச்சிக்கிட்டால் , நீ ஸ்கொயர் பிளஸ் நான் ஸ்கொயர் பிளஸ் டூ நீநான் ” என்றான்.  நீநான் என சொல்லும் பொழுது என்னை அவன் அவனோட அணைத்துகொண்டான்.  நான் திமிறினேன்.  விசும்பினேன். என்னை அறியாமல் சிறுநீர் கழித்தேன். அவன் என்னையும் ஈரத்தையும்  ஈரமில்லாமல் பார்த்தான்.அசிங்கமா சிரித்தான்.
                        நீ வீட்டை நாசம் செய்ததை உன் சித்தி வந்ததும் சொல்லிவிடுகிறேன் ” என மிரட்டினான். “சொல்லட்டுமா ? ம்................. சொல்லட்டுமா ? ” தாவங்கொட்டையை உயர்த்தி சிரித்து வைத்தபடி  கேட்டான்.  நான்  “ வேண்டாம் ”  என்றேன்.  “ அப்படியென்றால் இங்கே வா ” என்றான். நான் சுவற்றில் ஒன்றினேன். என்னை அவன்  இழுத்துச்சென்றான்.
5.          மன்னிக்க வேண்டும். இந்த கேள்விக்கு பதில் தெரியும் .  ஆனால் எப்படி எழுத வேண்டும் என்றுதான் தெரியவில்லை.
6.               மேற்கண்ட கேள்விக்கு பதில் எழுதாமல் விட்டது ஒரு வகையில் நல்லது என்றே எனக்குப்படுகிறது.  ஏன் தெரியுமா ? நான் என்ன பதில் எழுதினாலும் என்னை நீங்கள் அசிங்கப்படுத்தவே செய்வீர்கள். அனுதாபம் காட்ட மாட்டீர்கள். காரணம் நான் ஓர் இந்தியப்பிரஜை ! எனது கதையை சினிமா எடுப்பீர்கள்.  தொலைக்காட்சியில் வட்டமேஜை மாநாடு நடத்துவீர்கள். தின, நாள் , வார பத்திரிக்கைகளில் கிசுகிசு எழுதுவீர்கள். ஆனால் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்  காட்டமாட்டீர்கள்.
7.                     ஐந்தாவது கேள்விக்கான  பதிலை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் உன் சித்தி உயிரோடு இருக்கமாட்டாள்.உன்னையும் கொன்று புதைத்து விடுவேன். ஒரு கத்தியைக்காட்டி மிரட்டினான்.  அதுமட்டுமா சொன்னான். என் அம்மா அப்பாவையும் கொன்று விடுவானாம்.
8.                     எனக்கு நிகழ்ந்த அத்துமீறலை, பலாத்காரத்தை, அவமரியாதையை   சித்தியிடம் சொல்ல எனக்கு தைரியம் இல்லை. அவள் அழுது ஊரைக்கூட்டிவிடும் வம்சாவளி . என்னை நடத்தைக்கெட்டவள் எனச்சொல்லி என்னை  ஒதுக்கி வைத்தாளும் வைத்துவிடுவாள்.  கணவன் மனைவி உறவை பிரிக்கவா நீ வந்து முளைத்தாய் என குத்திக்காட்டுவாள்.  அவள் பட்டப்படிப்பெல்லாம் படித்திருக்கிறாள் என்றுதான் பெயர்.  பழமைவாதி . சராசரி இந்தியப்பெண். கற்பு விசயத்தில் கறார் பேர்வழி.
9.                     அம்மாவிடம் சொல்லி அனுதாபம் தேடிக்கொள்ள துடிக்கிறேன். அம்மாவை கட்டிப்பிடித்து அழுது தீர்க்க தவிக்கிறேன்.  அம்மா................. அம்மா................... என்னை ஏன்மா இத்தனைத்தூரம் கடந்து என்னை இங்கு சேர்த்து விட்டாய்? தூரத்தில் இருக்கிற பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தால் நான் டாக்டராவேன் என்றா ? போம்மா ............. உன் கூட நான் டுக்கா.
10.     சித்தி என்னை இன்று பள்ளிக்கூடத்தில் கொண்டு வந்து விட்டு விட்டு அவள் பரீட்சைக்கு போய்விட்டாள். என்னைப்போல அவளும் பரீட்சை எழுதிக்கொண்டிருப்பாள். நான் பரீட்சை முடிந்ததும் வீட்டுக்கு பத்திரமாக போக வேண்டுமாம். சித்தி சொல்லிருந்தாள்.   சித்தப்பா மட்டும் வீட்டில் இருப்பார்.  அவரிடம் அறிவியல் பாடத்தில் முக்கியமான கேள்விகள் எதுவென்று கேட்டு அதை மட்டும் படிக்க வேண்டும் என சொல்லிவிட்டு சென்றிருக்கிறாள். சொன்னவள் நின்று எனக்கு டாட்டா கூட காட்டவில்லை. அவளுக்கு நேரமாகி விட்டதன்று திரும்பிப்பார்க்காமல் ஓடியே விட்டாள். நான் தேர்வு முடிந்ததும் சித்தி வீட்டிற்கு போகத்தான் வேண்டுமா? மாட்டேன் மாட்டவே மாட்டேன் .  அது என்னால் முடியாது.  எனக்கு பயமாக இருக்கிறது. அவனை நினைக்கும் பொழுதே எனக்கு தலைச்சுற்றுகிறது.  இதயம் பளேர் பளேர் என அறைகிறது.
11.            போனால் என்ன நடக்கும்.............? யாருக்குத் தெரியும். நாளைக்கு இப்படியெல்லாம் வலிக்காது எனச் சொன்னானே.   சொல்ல முடியாத இடத்தில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்து இடுவதாக சொல்லிருந்தானே.  புது ட்ரெஸ் ஒன்று எடுத்து தருவதாகவும் அத்துடன்  சத்தம் கொடுக்காத கொலுசு ஒன்றும் வாங்கித்தருவதாக சத்தியம் செய்தானே . அடச்சீச்சி ! அவனும் எதிர்க்காலத்தில் ஒரு குழந்தை அப்பாவாகத்தான் போகிறான்.
இ. வரைபடம்
1.   அவசரத்தில் ஜாமன்ட்ரி பாக்ஸ் எடுத்து வராததால்  என்னால் படம் வரையமுடியவில்லை. வரைபடத்திற்கான வரைமுறையை  மட்டும் எழுதுகிறேன்.
2.    முதலில் தேர்வறையை  விட்டு சக மாணவர்களுக்கு முன் முதல் நபராக வெளியேறுகிறேன்
3.     ரயில்வே ட்ராக்கிற்கு அருகில் சென்று  ஒளிந்துக்கொள்கிறேன்.
4.     யாரேனும் மிரட்டி கேட்டால் வயிற்றுப்போக்கு  கக்கா இருப்பதாக சொல்லிக்கொள்வேன்.
5.     ரயில் தூரத்தில் வருகிற பொழுது  ஒத்த தண்டவாளத்தில் நீள்வாக்கில்படுத்துகொண்டு கண்களை மூடி அம்மாவை நினைத்துகொள்வேன்.
6.     ரயில் என் மேல் ஏறி கால், தொடை, வயிறு எனக்கடந்து  இதயத்தை தொடும் பொழுது அம்மா ஆசையை  நிச்சயம் நிவர்த்தி செய்திருப்பேன்.  என் உடம்பிலிருந்து இரத்தம் வெளியேறுவதன் மூலமாக பூப்பெய்த பெண்ணாக மாறியிருப்பேன்.
7.     இதன்மூலம்  வாழ்நாட்கள் முழுவதும்  எந்தவொரு  ஆடவனுக்கும்  அடிமையாக ஆட்கொள்ளாமல் , பெண்களின் அணிகலன்களான அச்சம், நாணம், மடம், பயிர்ப்புகளில் சிக்காமல்  அணு அணுவாக சிதையாமல்ஒரு சராசரி இந்திய பிரஜையாக இறந்துவிடுகிறேன்.
8.    மீண்டும் பிறப்பேன். மீண்டு வர பிறப்பேன்.  அவனுக்கும் சித்திக்கும் குழந்தையாக பிறப்பேன். திருநங்கையாகவே பிறப்பேன்!                   
                                                       
அண்டனூர் சுரா
                                                        மண்டேலா நகர்
கந்தர்வகோட்டை
                                                        புதுக்கோட்டை மாவட்டம்613301
                                                                                        தொடர்புக்கு 958565 - 7108
                                                       

                       
                                                       

மயக்கம் வருவது எதனால் ?கட்டுரை                         அண்டனூர் சுரா
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                                                முனைவர் பட்டம் பெற்ற  வேலையில்லா தமிழ் பட்டதாரி ஒருவர் ஒரு பல்கலைக்கழகம் நடத்திய நேர்முகத்தேர்வில் கலந்துக்கொண்டிருந்திருக்கிறார் . அவரிடம் இப்படியொரு கேள்வி கேட்கப்பட்டது .  “ மயக்கம் எதனால் வருகிறது? ” .  அதற்கு அவர் இவ்வாறு பதில் சொன்னார்  . “ நேரத்திற்கு  சாப்பிடாததால் வருகிறது ” .  இந்தப்பதிலைக் கேட்டதும் கேள்வி தொடுத்தவருக்கு  மயக்கம் வந்துவிட்டது. அடுத்து கேட்டார்  “ மயக்கத்தை எத்தனை வகைப்படுத்தலாம்?” .  “ இரண்டு வகைப்படுத்தலாம்” .  கேட்டவருக்கு இன்ப அதிர்ச்சி.  அவரைப்பாராட்டாமல் இருக்க முடியவில்லை. “ அவை என்னனென்ன?”.   அதற்கு அந்தப் பட்டதாரி சொன்னார் “ பசி மயக்கம், வியப்பு மயக்கம் ” .
               மொழியில் உள்ள சொற்களின் ஓசையை செழுமைப்படுத்தவே மயக்கம் வருகிறது . அதாவது   எழுத்துகள் ஒலியின் அளவை நீட்டிக்கும் பொருட்டு தமக்குள்ளாக மயங்குவதே மயக்கமாகும் . ஒன்று உயிர் மயக்கம்.  உதாரணம்  சொல்லிசைஇ (ஐஇ) .  மற்றொன்று மெய்ம்மயக்கம்.  உதாரணம் வளர்ச்சி (ர்ச்) .  இந்திய மொழிகளில் தமிழ் மொழிக்கு மட்டுமே இருக்கின்ற சிறப்பு இலக்கணம் இது.  அந்நிய நாட்டு மொழிகளில் மயக்கத்தை  ஆங்கில மொழி மட்டுமே  பெற்றுள்ளது.  தமிழ் மொழியில்  மயக்கம்  மொழியின் தொடக்கத்தில் , இறுதியில் வராது.  இடையில் மட்டுமே வரும்.  
                        தொலைக்காட்சி என்கிற சொல்லில் மயக்கம் இல்லை . தொலைக்காட்சியில் இடம்பெறும் சினிமா, செய்தி, விவாதம், பேட்டி, கருத்தரங்கம், விளம்பரம் ,ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இவற்றில் ஒன்றில் கூட மயக்கம் இல்லை .  ஆனால் பாருங்கள்!  தொலைக்காட்சியை பாரக்கும் பொழுது நம்  ஒவ்வொருவருக்கும் மயக்கம் வரவே செய்கிறது  !
              மக்களின் மூன்றாவது கண் என குறிப்பிடப்படுவது  தொலைக்காட்சி. கண்  என்பதே விகாரம் பெற்று காண்  என்றானது.  அதுவே  காட்சியானது .   காட்சியை  பௌதீகம் இரு வகைப்படுத்துகிறது. ஒன்று    குறுங்காட்சி.   மற்றொன்று  தொலைக்காட்சி.  தொலைவில் நிகழும் காட்சிகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதே தொலைக்காட்சி .  அப்படியெனில் வளர்ந்திருக்கும் அறிவியல் முன்னேற்றத்தில்  கணினி இணைய  வளர்ச்சியில் தமிழ்நாட்டையும், மாவட்டத்தையும் நடிகர்,நடிகைகளையும், சினிமாவையும் மட்டுமே காட்டிவிட்டு தொலைக்காட்சி என்பதற்கான முழு பொருளையும் அறுவடை செய்திட முடியாது.  செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் எந்த இடத்தில் இருக்கிறது ? நூறு ஆண்டுகளுக்குப்பின்  நயாகரா வீழ்ச்சி பனிக்கட்டி வீழ்ச்சியாகிப்போனது ஏன்? இந்த நிகழ்வு  பூமிக்கு அது அறிவிக்கும் எச்சரிக்கை என்ன? தென்னிந்தியாவில் இரண்டு ஆண்டுகளாக தொடர் மழை இல்லாமல் போனது எதனால் ? இந்த நிலை நீடித்தால் இந்தியா , தமிழகம் என்னவாகும் ? இதுபோன்ற கண்ணுக்குத்தெரியாத தொலைத்தூர நிகழ்வுகளை விவாதித்தல், செய்தியாக்குதல், ஒளிப்பரப்பினால் மட்டுமே தொலைக்காட்சி  என்பதற்கான முழுப்பொருளையும் அடைய முடியும்.  அப்படிப்பார்க்கையில் நம் பார்த்துக்கொண்டிருப்பது உங்கள், எமது, நமது தொலைக்காட்சி தொலைக்காட்சியே  அல்ல.    தொல்லைக்காட்சிகளே!
               “ நம் நாட்டின் முதுகெலும்பு பஞ்சாயத்து (கிராமம்)  ” இது காந்தியடிகள் சொன்னது.   பஞ்ச என்றால் ஐந்து .  ஒரு நாட்டிற்கு தேவையான உழவு, உற்பத்தி, நாணயம், அரசியல், நிர்வாகம் இவை ஐந்தும் கிராமத்திலிருந்து பிறப்பதால் கிராமத்தை அவர் பஞ்சாயத்து என்றார்.  இது ஒரு புறம் இருக்க, ஒரு நாட்டின் கட்டமைப்பை  பஞ்சாயத்து ( ஐந்து அங்கங்கள் )  என்கிறார் எழுத்தாளர் அகிலன். தலை – அறவோர் , சிந்தனையாளர்.  நெஞ்சு – கட்சி ,அரசியல், நிர்வாகம், போலீஸ், இராணுவம் .  வயிறு – வாணிபம், உற்பத்தி, வாங்குபவர், விற்பவர்.  கை- உழவர்கள்.    கால்- இயந்திரத்தொழில், கனிம உற்பத்திகள். அப்படிப்பார்க்கையில் நம்  நாடு பஞ்சாயத்திற்கு கட்டுப்பட்டதே.   
                 இன்று  தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகளாகிப்போனதும் இந்த பஞ்சாயத்தால்தான்.  கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்து ஒளிக்கப்பட்டு விட்டதாக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது.  ஆனால் அது தொலைக்காட்சிகளில் வேர்விட தொடங்கியிருக்கிறது.    வட்ட மேஜை மாநாடு போல உட்கார்ந்துக்கொண்டு தினம் தினம் நடக்கும் நிகழ்வுகளை கலந்துரையாடுவது ஒருவகை பஞ்சாயத்துதான். இது ஆரோக்கியமான நிகழ்ச்சி .   அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.    ஆனால் ஒரு நாட்டின் நெஞ்சு என குறிப்பிடப்படும் அரசியல் மற்றும்  கட்சிகளை மட்டும் விவாதிப்பது ஆரோக்கியம் இல்லையே! ‘அந்தக்கட்சி இந்தக்கட்சியுடன் கூட்டுச்சேர்வதால் அந்த அணிக்கு சாதகமா? பாதகமா? ‘  சாதகமா? பாதகமா? என்கிற அவர்களின் கேள்வி நாட்டுக்கு அல்ல.   அணிக்கு! பிறகு எதற்காம் தேர்தல்?
                          கிராமங்களில் இப்போதெல்லாம் குழாயடி சண்டை நடப்பதில்லை. அப்படியெனில்  தண்ணீர்  தேவைகளில் தன்னிறைவு  அடைந்து விட்டதாக எடுத்துகொள்ளக் கூடாது . என்ன விலை கொடுத்தேனும் மக்களிடமிருந்து  வாக்குகளை வாங்குவிட முடியும் என்கிற நம்பிக்கை அரசியல்வாதிகளுக்கு வந்திருப்பதைப்போல தண்ணீரையும் விலைக்கு வாங்கிவிடமுடியும் என்கிற நம்பிக்கை மக்களிடம் வளர்ந்திருக்கிறது .   ஆகவே இன்றைய கிராமங்கள் அமைதியாக இருக்கிறது. ஆனால் பாருங்கள் தொலைக்காட்சியில் நிகழும் அரசியல் கட்சிகளுக்கிடையேயான கருத்து யுத்தம்  பைப்படி சண்டையை தோற்கடித்து விட்டது. இதில் மிகவும் பரிதாபத்திற்குரிய நிகழ்வு என்னத்தெரியுமா? ஒரு அரசியல் தலைவர்  மாநிலம் கடந்து தேசியத்தலைவராக அவதாரமெடுக்கிறார்.  மக்களிடம் நன்மதிப்பை பெற்று ஒரு மாற்றுத்தலைவராக உருவாகிறார்.  ஆனால் அவர் கட்சியைச்சார்ந்த சிலர் நேரடி விவாத்தில் கலந்துகொண்டு  கட்சியை  வளர்க்கிறோம் எனும் பெயரில்  முன்னுக்குப்பின் முரனாகவும் அகடவிகடமாகவும் பேசி மக்கள் வைத்திருக்கும் கட்சியின் மீதான நம்பிக்கையை குழைக்கிறார்கள் . இதை என்னவென்று சொல்வதோ?
                இன்னொரு  பஞ்சாயத்து பெண்கள் மத்தியில் மூன்றாவது காதாக மாறிப்போயிருக்கிறது.  கள்ளக்காதல், கொலைக்காதல்,  பொல்லாக்காதலை  சேர்த்து – பிரித்து வைக்கும் நிகழ்ச்சி அது .  அந்தரங்கத்தை உலகச்சந்தையில் கூவி விற்கும் நிகழ்ச்சியும் கூட . அந்த நிகழ்ச்சியில் தோன்றும் திடீர் நீதிபதிகள் கறுப்பு உடை அணிவதில்லை. கையில் சட்டத்துறை நூல்கள் இல்லை.      கண் கட்டிய நீதி தேவதை , தராசு இல்லை. சுத்தியல் இல்லை.   அவர்கள்   அளிக்கும் தீர்ப்புக்கு மறுதீர்ப்பும் இல்லை.  மேல்முறையீடும் இல்லை.   அவர்கள் பளேர் நீதிபதிகள்.  ஆம். அண்ணாவின் வாசகத்தை சற்று மாற்றி எழுதலாம்.   சட்டம் ஒரு தொலைக்காட்சிப்பெட்டி    .  அதில் சம்மந்தப்பட்டவர்களின் வாதம் ஒளி  விளக்கு.   
                              இது ஒரு புறம் இருக்க,  வரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலை  முன்னிட்டு கட்சிக்கு நிதி வசூலிக்கும் தாண்டவம் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.  ஒரு கட்சியின் கொள்கை இது.    ‘ நோட்டும் ஓட்டும் ஒன்றே‘ .    இதுபரவாயில்லை.     கட்சிக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் ஏதேனும் ஒரு தொகுதியில் நின்று விடலாம்”  அரசாண்ட ஒரு கட்சி உறுப்பினரின் வாக்கு மூலம் இது”  .  ஒரு மாநில கட்சி உறுப்பினரின் விமர்சனத்தை பாருங்கள்.   ‘ கோடான கோடி கொடுப்பினும் இந்த முறை அவருக்கு அங்கே சீட் இல்லை‘. சுதந்திரப்போராட்டத்தை வீறு நடையில் கொண்டுச்செல்ல காந்தியடிகள் கையெழுத்து வேட்டை நடத்தினார் .  ஒரு கையெழுத்திற்கு ஐந்து ரூபாய்.   போதுமான நிதி வசூலானதும் அதை அவர் நிறுத்திக்கொண்டார்.  ஆனால் அவர் பெயர் கொண்ட தேசத்தில் கட்சி நடத்தும் நம் அரசியல்வாதிகள் அதிரடி  வசூலை நிறுத்துக்கொள்வதாக தெரியவில்லையே!
               ‘ நாங்கள் எந்தக்கட்சியுடன் கூட்டணி என்பதை மாநாடு கூட்டியே முடிவு செய்வோம் ‘ இன்றைய தமிழத்தின் நவீன அரசியல் பாடம் இது .   எந்தவொரு கட்சியும் ஒரு மாநாட்டை திட்டமிட்டு நடத்தி முடிக்க குறைந்தப்பட்சம் இரண்டு கோடி ரூபாய் செலவு செய்வதாக  ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது .   ஏழ்மையை  அகற்ற வந்த கட்சிகள் முதல் தமிழகத்தை உயர்த்திப்பிடிக்க வந்த கட்சிகள் வரை கூட்டம் சேர்த்து மாநாடு நடத்துவதையே  கொள்கையாக கொண்டுள்ளது .   இதெல்லாம் தேர்தல் கணக்கில் சேராது என்பது மயக்கத்தை வரவைக்கக்கூடிய  செய்தியாகும்.   
                1930 – 32 ஆண்டுகளில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசர்  ‘ பொப்பிலி ராஜா ‘.    திருவண்ணாமலைக்கு வருகைத்தந்த காந்தியடிகளை வரவேற்க   அவர் அந்நகரத்திற்கு வருகைத்தந்தார்.   அந்நகர நிகழ்ச்சியின் முடிவில்  திலக் சாஸ்திரி எனும் ஒரு நிரூபர் காந்தியடிகளிடம் ஒரு கேள்விக்கேட்டார்.  “ சுதந்திரம் பெற நீங்கள் இத்தனை வேகம் காட்டக்காரணம் என்ன?” காந்தியடிகள் சொன்னார் .    வடஇந்தியாவிலிருந்து தென் இந்தியாவிற்கு வருகைத்தந்த எனக்கு  ஆகியிருக்கும் ஒரு நாள் சாப்பாடு செலவு வெறும் ஐந்தரை அணா.  ஆனால் என்னை வரவேற்க வந்த இம்மாகாண முதலமைச்சருக்கான சாப்பாடு செலவு எழுத்து ஐந்து ரூபாய் .    இந்த நிலை இனிமேலும் தொடராமல் தடுக்கவே பூர்ண சுதந்திரம் பெற முனைகிறேன் ” என்றார்.  
               தேசம் முழுமைக்கும் ஒரு தேர்தலை நடத்தி முடிக்க அரசு எத்தனைக்கோடி ரூபாய் செலவு செய்கிறதோ அதை விட கூடுதலான செலவை ஒரு மாநில கட்சி அந்த  மாநிலத்தில் தேர்தலை சந்திக்க  செலவு செய்வதாக தேர்தல் ஆணையம் கருத்து  தெரிவித்திருக்கிறது.   மயக்கம் வருவதைப்போல இருக்கிறது அல்லவா!
                        வருகிற நாடாளுமன்றத்தேர்தலில்  இந்திய நாட்டின் பிரதமர் யார்  என முடிவு செய்வது  பொதுமக்கள்  அல்லவாம்!  பிறகு........... ? .     அமெரிக்காவின் வெளியுறவுத்துறை, ஜப்பானின் பத்திரிக்கைத்துறை , ரஷ்யாவின் அணு சக்தித்துறை இவை மூன்றும்தானாம் ! இதற்கான முன்னோட்டமாக  நாடாள துடிக்கும் இந்தியத்தலைவர்கள் தங்களின் ஆளுமையை உயர்த்திப்பிடிக்க வெளிநாடுகளில் மூன்று இலக்க மதிப்புகளில் பல  கோடிகள் செலவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கிறது.   
               தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.   எந்தக்கட்சி  யாருடன் கூட்டணி என முடிவாகவில்லை.  யார்க்கு எத்தனை இடம் என பிரிக்கவில்லை.   எந்தத்தொகுதிக்கு யார் வேட்பாளர் என அடையாளப்படுத்தவில்லை .  அதற்குள் இத்தனை கண் கட்டி வித்தை, மயக்கம் வர வைக்கக்கூடிய மூடு மந்திரம் தொடங்கிவிட்டது.   இத்தனையும் அறிவிக்கப்பட்டுவிட்டால் ...............? 
                தமிழக மக்களே ............... இப்பொழுது சொல்லுங்கள் மயக்கம் எதனால் வருகிறது?     எழுத்துகள் ஒலியின் அளவை நீட்டிக்கும் பொருட்டு தமக்குள்ளாக மயங்குவதால் மயக்கம் வருகிறது என்கிறீர்களா ?  . அதுதான்   இல்லை ! தேர்தல் வருவதால் வருகிறது!
                                                               
                                                                      அண்டனூர் சுரா
                                                                                                ( எழுத்தாளர் )
                                                                                                மண்டேலா நகர்
                                                                                                கந்தர்வகோட்டை
                                                                                                புதுக்கோட்டை மாவட்டம்
                                                                                                                                613301
                                                                                                தொடர்புக்கு 958565 - 7108