இடுகைகள்

June, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிறுகதை இவனல்ல இவன்

‘எங்கள் சாதிச்சங்கத் தலைவரின் மீது கொலைப்பழி சுமத்தி கைது செய்திருக்கும் இன்ஸ்பெக்டரை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.....’        தெரு, மூத்திரச்சந்து, குட்டிச்சுவரென எங்கும் ஒட்டிக்கிடந்த சுவரொட்டிகள் காவல்துறைக்குச் சொந்தமான ‘பளே சிவப்பு’ சுவற்றிலும் ஒட்டியிருந்தன. வெளிரிய மஞ்சளில் சிவப்பு எழுத்துகளளான சுவரொட்டிகள் அவை. இருபதுக்கு பத்து அளவிலான பதாகை ஒன்று மூன்று சாலைகள் சந்தித்துகொள்ளும் முச்சந்தியில் விசாலமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதில் அவர்களது சாதி, குலப்பெருமைகள் மயங்கொலி, சந்திப்பிழைகளுடன் அச்சாகியிருந்தன. ஆண்ட வம்சம் ஆன்ட வம்சம் என்றும் குலப்பெருமை  குளப்பெருமை எனவும் இருப்பதைக்கண்டு அந்த ஊரில் தமிழ்ச்சாதிக்காகக் கோபப்பட யாரும் இல்லாமல் இருந்தார்கள்.        இவைதவிர எந்தப்பக்கம் திரும்பினாலும் மக்கள் கண்களில் படும்படியான பதாகைகள் சாலைகள் , சந்திப்புகள், திருப்பங்களில் வைக்கப்பட்டிருந்தன. பல இடங்களில் அவர்களது சாதிக்கான அகோர நிறத்துடன் கூடிய கொடிகள் பறந்துகொண்டிருந்தன. இத்துடன் நான்கிற்கு மூன்று அளவிலான செவ்வக சுவரொட்டிகள் வேறு.        சுவரொட்டியின் இருபுற விளிம்புகளிலும் சாதி…