செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன்.


சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது. 


ஆவுடத்தங்க மதினி
சுப்பு மதினி
காளியம்மா மதினி
அமராவதி மதினி
குருவு மதினி
மாணிக்க மதினி


என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.

 இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார்.

முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி.


பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அறிமுகம்படுத்தப்படுகிறது.


இக்கதையின் ஒற்றை விழுமியம்   செம்பகம் தாயில்லாமல் பல பெண்களிடம் வளர்வதும் பிறகு வளர்ந்து பெரியவனாகி திரும்புகையில் அதே ஏக்கம் இருப்பதும் அந்த ஏக்கத்தைத் தணிக்க மதினிகள் மதினிகளாக இல்லாமல் இருப்பதுதான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக