இந்திய சிறந்தச் சிறுகதை -6
பத்திரிகையில் எழுதாதீர்கள்
( மணிப்பூரி மொழி ) - ஸோனாமணி சிங்.
ஒரு கிராமத்திற்குள் நுழைகிறார்கள் ஏழு பேர். அவனைத் தூக்கிக்கொண்டு ஜீப்பில் ஏறி கடத்திச் செல்கிறார்கள்.
அவன் கெஞ்சுகிறான் . என்னை விட்டுவிடுங்கள். என்னை நம்பி ஒரு தங்கை , அம்மா இருக்கிறார்கள்
நீ எங்கள் எதிரி
நான் என்ன குற்றம் செய்தேன்....?
நீ ஒரு பெண்ணை கும்பலோடு சேர்ந்து கற்பழித்தவன்
கிடையாது. எனக்கொரு தங்கை இருக்கிறது. அப்படியான செயலில் நான் ஈடுபடுபவன் அல்ல.
நீ துப்பாக்கி வைத்திருக்கிறாய். நீ தேச விரோதி
என்னிடம் அப்படியொரு ஆயுதமில்லை
நீ கள்ளச்சாராயம் எரித்தவன்
அப்படியான அவசியம் எனக்கு வந்ததில்லை
போதை மருந்து கடத்தியிருக்கிறாய்
இல்லை. நீங்கள் தவறான ஆளை கடத்தி வந்திருக்கிறீர்கள்
எங்களை நீ முட்டாள் என்கிறாயா...? அப்படியானால் நீ நிச்சயமாக கொலை செய்யப்பட வேண்டியவன்
அவன் முன் துப்பாக்கியை எடுத்து நீட்டுகிறார்கள். சுடுகிறார்கள். குண்டு அவனது நெற்றியில் பாய்கிறது.
அவனது வாய் முணுமுணுக்கிறது.
நான் ஒரு தவறும் செய்யலை. சாராயம் போதை மருந்து கடத்தலை. யார்க்கிட்டேயும் பணம் வாங்கலை. சாராயம் எரிக்கலை. என்னிடம் துப்பாக்கியும் இல்லை. நானொரு அப்பாவி. நான் செத்ததற்குப் பிறகு என்னை பத்தரிக்கையில் எழுதாதீங்க. ஏன்னா , அதை மறுக்க எனக்கென்று யாருமில்லை. நானும் கூட.
( சுருக்கமாக )

உங்கள் கருத்துகள் இங்கு தேவை
பதிலளிநீக்கு