செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

காணிநிலம் இதழ் அறிமுகம்

2018 ஆம் ஆண்டின் புது இதழ் - காணிநிலம் - கிடைத்தது.  அதன் உபவரி மிகவும் பிடித்திருந்தது. சொல் விளையும் பூமி.

பூமி - கேணி- தோணி-ஏணி என தலையங்கக் கட்டுரை வித்தியாசம்.

அபரஞ்சி சிறுகதை தொழுநோயாளிகளுக்கு சேவை செய்யும் பெண்ணை மையமாக வைத்து கதை நெய்யப்பட்டிருந்தது. வேலைக்கார பெண்கள் வேலை செய்யும் வீட்டில் படும் இன்னல்களை கதை பேசியிருந்தாலும்  ' குணமானதுக்கு அப்புறமும் மருந்து போட வர்றதாச் சொல்லிட்டு எம் புருசன இழுத்துட்டு போவப் பாக்கியா....? என்கிற இடம் பெண் செவிலியர்கள் சந்திக்கும் இன்னலின் உச்சம்.

வெற்றிப்பேரொளியின் முத்தச்சரித்திரம் கவிதையில்

'ஆனாலும் அழுத்தமாய்
மிக அழுத்தமாய்ப் பதிந்து கிடக்கிறது
ஒரு கோபப் பொழுதில்
நீ கொடுத்த கடிமுத்தம் '

என்கிற வரிகள் நீண்ட கவிதையின் முடிவில் சிரிக்க வைக்கும்படியாக இருந்தது.

கல்யாணிஜியின் இக்கவிதை எனககு மிகவும் பிடித்திருந்தது.

'அது பறந்து விடுவதற்கு முன்
திறந்துவிட நினைத்தேன்

நான் திறந்துவிடும் முன்
அது பறந்துவிட நினைத்தது.

நான் திறந்துவிடவும் இல்லை
அது பறந்துவிடவும் இல்லை
இது வரை.'

இதே போன்று சுகன்யா ஞானசூரியின்
யாழினிகள் தெரிவதில்லை என்கிற இரு கவிதைகள் ஈழ உக்கிரப்போர் வடுக்களை நினைவுப்படுத்தியது.

ஷான் எழுதியிருக்கும் டான் பிரவுனின் ஆரிஜின் என்கிற கட்டுரை டாவினசி கோட்டில் தொடங்கி மதம் , பிரச்சாரம் , கண்டுப்பிடிப்பு என ஆழமான பதிவுகளைக் கண்டது.

இதுதவிரவும் இந்த இதழில்

எஸ்.சங்கரநாராயணன் , வ.தெ.சு.கவுதமன், சந்திரா மனோகரன், தமிழ் உதயா, பாலைவன லாந்தர் என பலரும் எழுதியிருக்கிறார்கள்

ஆண்டு சந்தா ₹100  ஆயுள் சந்தா ₹1000

முகவரி
காணிநிலம்
29,தமிழ் அகம் வி.ஐ.பி நகர்
தியாகராஜ நகர்
திருநெல்வேலி -11

9442112763
kaaninilam2018@gmail.com




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக