முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நான் கொலை செய்யும் பெண்கள்

நான் கொலை செய்யும் பெண்கள் ( சிறுகதைத் தொகுப்பு )  - லதா



இலங்கையில் பிறந்த லதா தற்போது சிங்கப்பூரில் வசிப்பதாக ஆசிரியர் குறிப்பு சொல்கிறது. சிங்கப்பூர் தேசிய நாளிதழான தமிழ் முரசு பத்திரிகையின் துணை ஆசிரியரும் கூட.

இவரது முதல் சிறுகதைத்தொகுப்பு - நான் கொலை செய்யும் பெண்கள்.

அடையாளம்

மழை - அப்பா

நாளை ஒரு விடுதலை

இதுவரை

பயணம்

தமிழுக்கு அமுதென்று பேர்

முகாந்திரம்

வீடு

அறை

படுகளம்

என பத்து சிறுகதைகளை உள்ளடக்கிய கச்சிதமான தொகுப்பு இது. 102 பக்கங்கள்.

முதல் கதை அடையாளம் மற்ற பெண் எழுத்தாளர்கள் எழுதும் கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருந்தது.

இந்திய குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் சிங்கப்பூர் மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொண்டு அவள் படும் இன்னலை கதை பேசியிருக்கிறது.

கதையின் தொடக்கமே இவ்வாறு இருக்கிறது. 'யூ இண்டியா...?'

இந்தியக்குடும்பத்து பெண்களைப் போலதான் அவளும் சிங்கப்பூரில் சமைக்க, துவைக்க, கடைத்தெருவிற்குச் செல்ல, குழந்தைகளை வளர்க்க என இருக்கிறாள். கணவன் ,மாமனார்,பிள்ளைகளுக்கு விரும்பும் உணவுகளை சமைத்துகொடுக்கும் அவள் பழைய சோத்தையும் ஊறுகாயும் சாப்பிட்டு பசியாறுகிறாள். ஒருமுறை கணவன் அவளிடம் 'என்ன இது பிச்சைக்காரி மாதிரி சாப்பிட்டுக்கிட்டு' எனக்கேட்குமிடமும் , அதைப் பொறுக்கமுடியாத அவள் சாப்பாட்டை கொட்டுமிடமும் கதையின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பிள்ளை படிக்கக்கூப்பிட அவர்கள் அப்பாவிடம் படித்துக்கொள்கிறேன் என ஓட 'நான் எம்.ஏ உங்க அப்பா ஏ லெவல்தான்' எனச்சொல்ல அதற்கு குழந்தை இந்திய படிப்பெல்லாம் சிங்கப்பூருக்குச் செல்லாது என குழந்தை சொல்லிச்செல்கிற இடத்தில் வாசகன் ஒரு கணம் நின்றுவிடத்தான் செய்கிறான்.

தோழியின் திருமணத்திற்கு செல்கிறாள் அவள் . பல வெள்ளிகள் செலவில் மேக்கப் செய்து... திருமணம் இந்திய திருமணத்தைப்போல ரசிக்கும் படியாக இல்லை. எந்த திருமணத்திற்கு சென்றாலும் அவளுக்கு கணவன் குமரன் நினைவிற்கு வருகிறான்.  ஏன் இங்கே யாருமே தனக்கு நெருக்கமாக இல்லை.... என்கிற யோசனையுடன் மொய் எழுத பர்ஸை திறக்க அதற்குள் சிவப்பு நிற சிங்கப்பூர் குடியுரிமை அட்டை இருக்கிறது.

' ஐ யெம் சிங்கப்பூரியன் '  கட்டுப்படுத்தமுடியாமல் அழுகிறாள் அவள்.

இக்கதை  இரண்டு விடயங்களைப் பேசுகிறது. ஒன்று குடும்பத்தில் பெண்கள் படும் அவலம். மற்றொன்று இந்திய பெண்கள் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றாலும் சக வாசிகளுடன் அவர்கள் சந்திக்கும் அவலம் இரண்டு கூறுகளை பேசியிருக்கும் இக்கதை சிங்கைத்தமிழ் சிறுகதையில் மிக முக்கியமான கதையென்றே எனக்குத் தோன்றுகிறது.

மழை - அப்பா

இக்கதை ஒரு நாள் மழை பெய்கையில் அப்பா ரேடியோ கேட்கிறார்.  நிலவில் நீல் ஆம்ஸ்டோரோங் கால் வைக்கப்போகும் செய்தியைச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

அப்பா - அப்பா மீது வீசும் துர்நாற்றம், மது, புகையிலை, .....என அப்பா குறித்த நினைவுகளைக் கதை பேசிச்செல்கிறது. சில ஆண்டுகளுக்குப்பிறகு வீடு மாற்றுகிறார்கள்.

அதே போன்று ஒரு மழை கொட்டுகிறது. அவளுக்கு முப்பது வருஷத்திற்கு முன் நிலவிற்குச் சென்ற அப்பலோ நினைவிற்குச் சென்றதும் அப்பா ரேடியோ கேட்டதும் நினைவிற்கு வந்துச்செல்கிறது.

இக்கதையில் மாமனார் - மருமகன் - மகள் - பேரப்பிள்ளைகள் குறித்த பந்தம் அழகான காட்சிப்திவு என்றுதான் சொல்ல வேண்டும்.

படுகளம் என்கிற சிறுகதை தீமிதி திருவிழா காட்சியுடன் மகாபாரத இதிகாசக் கதையைத் தழுவி அபிமன்யூ சக்ரவியூகத்திலிருந்து தப்பித்து வர முடியாதச் சூழலைச் சொல்லி பெண்களை காவு வாங்கும் சூழ்ச்சியைச் சொல்லி நிற்கிறது.

இதே போன்று தமிழுக்கு அமுதென்று பேர் என்கிற சிறுகதை ஒரு மாறுபட்ட சிறுகதை. 2200 ஆம் ஆண்டுகளில் எழுத்துகளின் தேவை எப்படியாக இருக்கும் , குறிப்பாக தமிழ் எழுத்துகளின் அவசியமும் அதற்கான தேவையும் எப்படியானதாக இருக்கும் என்பதை நூறு நூறு ஆண்டுகளாக பிரித்து கதை புனையப்பட்டுள்ளது.

இக்கதையின் தலைப்பில் சிறு திருத்தம் செய்ய வேண்டும். பாரதிதாசனின் வரியைத்தான் நூலாசிரியர் கதைக்கு தலைப்பாகச் சூட்டியிருக்கிறார். தமிழுக்கும் அமுதென்று பேர் என்றே அவர் கவிப்பாடினார். அப்படியாகவே தலைப்பு சூட்டப்பட்டிருக்க வேண்டும். 'ம்'.மேலும் தலைப்பின் பெயரில் ஒரு கதையுமில்லை. பிறகு ஏன் இந்தத் தலைப்பு என்கிற கேள்வியும் எழவேச் செய்கிறது.

பொதுவாகச் சொன்னால் பெண்ணியமும் புனைவும் தமிழிசமும் புனைந்து தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு இது. சிறுகதையாசிரியர் லதா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

நான் கொலை செய்யும் பெண்கள்

சிறுகதைகள்

முதல் பதிப்பு - 2008

காலச்சுவடு பதிப்பகம்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...