ராபெர்த் ரஷ்தேஸ்த்வென்ஸ்கியின்
கவிதை இது.
விசாரணை
‘நான் உன்னை காதலிக்க வேண்டுமா?’
‘ஆமாம்’
‘நான் கறை படிந்தவள்’
‘பரவாயில்லை’
‘உன்னிடம் நான் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன்’
‘ நல்லது! சொல்லலாம்’
‘நான் உன் காதலியானால்...’
‘ மிகவும் நல்லது’
‘நீ எனக்குத் தேவைப்படுகையில்...’
‘கடைக்கண் காட்டினால் போதும்...’
‘உன்னை நான் ஏமாற்றிவிட்டால்...’
‘ பொருட்படுத்தமாட்டேன்’
‘ஆபத்து ஏற்பட்டால்....’
‘தலை கொடுக்கவும் தயார்’
‘பாடச் சொன்னால்...’
‘ பாடுவேன்’
‘ஒரு நண்பனை இழக்கச் சொன்னால்...’
‘பாதகமில்லை’
‘யாரையாவது கொல்லச் சொன்னால்...’
‘ கொன்றுவிடுவேன்...’
‘உன்னைச் சாகச்சொன்னால்....’
‘ செத்துவிடுவேன்...’
‘ செத்துவிடுவேன்...’
‘நம் கப்பல் நாசமாகிவிட்டால்...’
‘ நீ நீரில் மூழ்க விடமாட்டேன்...’
‘வலி வேதனைக்கு அஞ்ச மாட்டாயா....?’
‘அஞ்ச மாட்டேன்’
‘தடையாக ஒரு சுவர் இருந்தால்...?’
‘ அதைத் தகர்த்தெறிவேன்’
‘ஒரு முடிச்சு இருந்தால்...’
‘அதை வெட்டி விடுவேன்...’
‘என்றென்றும் நீ என்னை நேசிப்பாயா...?’
‘ சாகும் வரைக்குமு் நேசிப்பேன்..’
‘ என் உன்னை காதலிக்கத்தான் வேண்டுமா...?’
‘ ஆமாம்..ஆமாம்...’
‘இளைஞனே ! ஒருபோதும் உன்னை நான் நேசிக்க மாட்டேன்’
‘ ஏன்...?’
‘ நான் அடிமைகளை விரும்புவதில்லை’
கருத்துகள்
கருத்துரையிடுக