மலேசியா பெண் எழுத்தாளர் நிர்மலா ராகவனின் சிறுகதைத்தொகுப்பு' நான் பெண்தான் ' வாசித்தேன். அத்தனையும் பெண் வலி சார்ந்தக் கதைகள். ஒரு எழுத்தாளர் மனைவியாகிறாள் என்று ஒரு சிறுகதை. ஒரு பெண் எழுத்தாளராக பிரபலமடைகிற பொழுது ஆண் ஆதிக்க சமூகத்தில் அவளுடைய கணவன் எத்தகைய மனநிலைக்கு உள்ளாவான் என்பதை அக்கதை மிகச் சிறப்பாக கண் முன் காட்டுகிறது. கதையின் முடிவு கண்களில் கண்ணீர் துளிர்க்க வைக்கிறது.
நான் பெண்தான் என்ற சிறுகதை சிங்கப்பூரில் பல முறை தற்கொலை முயற்சிக்கு உள்ளான ஒரு திருநங்கை மாற்று அறுவைச்சிகிச்சை செய்துகொண்ட நபரைப்பற்றியக் கதை. வாரிசு என்ற கதை மாதருபாகன் நாவல் கதையின் மையோட்டத்தை நினைவுப்படுத்துகிறது. மொத்தத்தில் இத்தொகுப்பு பெண் பால் பிரச்சினைகளை வலியின் அதிர்வை ஆண்களும் உணரும் வகையில் படைக்கப்பட்டிருக்கிறது. கடல் கடந்து அவரது கரங்களைக் குலுக்கத் தோன்றிருக்கிறது. எழுத்தாளர் நிர்மலா
ராகவன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக