ஏன்
பெண்ணென்று பிறந்தாய்....! கிருஷ்ணன் அவர்களின் கவிதைத் தொகுப்பு வாசித்தேன். முழுக்க
முழுக்க காதல் கவிதைகளின் தொகுப்பு அது. தொகுப்பில் பழநிபாரதியின் அணிந்துரை மிகச்சிறப்பு.
அவர் அணிந்துரையை இவ்வாறு முடித்திருக்கிறார்.
கடவுளால்
படைக்கப்பட்ட பெண்....
காதலால்
படைக்கப்பட்ட பெண்....
இருவரை
விடவும் அழகாக இருக்கிறாள்
இங்கே
கவிதையால் படைக்கப்பட்ட பெண்!
தொகுப்பின் காதல் கவிதைக்குள் வருகிறேன்..!
முதல் கவிதை காதலிக்காதவர்களையும் காதல் மறந்து போனவர்களையும் மீண்டும் காதலிக்க வைத்துவிடுகிறது.
தன்னைக் கடந்து செல்லும்
பெண்களில் ஒருத்தியைக்
காதலிக்க வேண்டுமென்ற எண்ணம்
ஆண்களுக்கு இருப்பதென்னவோ
இயல்புதான்!
ஆனால்
நீ கடந்து செல்லும் போதெல்லாம்
உன்னைக்
காதலிக்க வேண்டும்
என்ற
எண்ணம் ஆண்களையும் தாண்டி
காதலுக்கும்
வந்துவிடுகிறது!!
இத்தொகுப்பை 104 பக்கம் திகட்டத்திகட்ட காதலால்
நிரப்பியிருக்கிறார். ஒரு கவிதை செம்புலப்பெயல் நீரை நினைவூட்டுகிறது. அக்கவிதை இதுதான்..
நானும் நீயும் சந்திக்கும்போதெல்லாம்
பேசிக்கொண்டிருப்பது என்னவோ
நீயும் நீயும் தான்!.
. - ஒரு பொறியாளர் மாணவனால் இப்படியும்
எழுத முடிகிறதே....கவிஞர் கிருஷ்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்...
எனது வாழ்த்துக்களும்
பதிலளிநீக்குநூல் அறிமுகத்திற்கு நன்றி.
பதிலளிநீக்கு