ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

சாதனை

இன்றைய( 11.09.2016) தீக்கதிர் - வண்ணக்கதிரில் ஒரு கவிதை. சுஜித் எழுதியது. அக்கவிதையை வாசிக்கையில்  என் மகன் என்னிடம் சொல்வதைப் போலிருந்தது.
                சாதனை
படுக்கையில் பாத்ரூம்
போறதெல்லாம் நிறுத்திட்டேன்
கட்டைவிரல் சப்புறதையும்
சத்தியமா குறைச்சுட்டேன்ல
ஸ்ட்ரா வச்ச டம்ளரையும்
தம்பிக்கிட்ட கொடுத்துட்டேன்ல
நாலு சக்கர சைக்கிளையும்
ரெண்டாக மாத்திட்டேன்ல
அப்பா ஸ்கூட்டிலேயே நான்
முன்னாடி உக்காருரதில்ல
தெரு கிரிக்கெட்ல கூட
இப்ப நான் உப்புக்கு சப்பாணி இல்ல
பேனா ரப்பரெல்லாம்
நானிப்ப தொலைக்கிறதில்ல
பக்கத்து வீட்டு பாபுவ விட
இப்ப நான் ஹெயிட்டு தெரியும்ல
இந்த தடவையாவது

எனக்கு முழு டிக்கெட் எடுமா!

1 கருத்து: