முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழ் வளர்ச்சித்துறை நூல் போட்டி

தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்படும், சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு போட்டிக்கு 2016ல் வெளியிடப்பட்ட நூல்கள், 33 வகைப்பாடுகளின் கீழ் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு வகைப்பாட்டில், ஒரு நூல் தேர்வு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு 30 ஆயிரம் ரூபாய்; பதிப்பகத்தாருக்கு, 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் விபரங்களை, www.tamilvalarchithurai.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை எழும்பூர், தமிழ் சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்திலும், நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, விண்ணப்பம் பெறலாம்; ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பயனுள்ள இணைய தளங்கள்

சான்றிதழ்கள் :- 1) பட்டா / சிட்டா அடங்கல் http://taluk.tn.nic....chitta_ta.html… 2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட http://taluk.tn.nic...._ta.html?lan=ta 3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet...n/EC.asp?tams=0 4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் http://www.tn.gov.in...forms/birth.pdf http://www.tn.gov.in...forms/death.pdf 5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ் http://www.tn.gov.in...t-community.pdf 6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ் http://www.tn.gov.in...cert-income.pdf C. E-டிக்கெட் முன் பதிவு 1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு http://tnstc.ticketc...in/TNSTCOnline/ http://www.irctc.co.in/ http://www.yatra.com/ http://www.redbus.in/ 2) விமான பயண சீட்டு http://www.cleartrip.com/ http://www.makemytrip.com/ http://www.ezeego1.co.in/ D. E-Payments (Online) 1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி http://portal.bsnl.i...iles/login.aspx 2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி https://www.oximall.com/ http://www.rechargeitnow.com/ http://www.itzcash.com/ 3...
இளவேனில் பதிப்பகம் நடத்தும் எழுத்தாளர் வே.சபாநாயகம் நினைவுத் சிறுகதைப்போட்டி பரிசுகள் ₹ 5000, ₹3000,₹2000 கடைசி நாள் 30.06.2017 மின்னஞ்சலில் மட்டும் கதை அனுப்பப்பட வேண்டும் iectvdm@gmail.com நன்றி வே.ரத்தினசபாபதி சென்னை

நூல்கள் வரவேற்கப்படுகின்றன

பாரதி கலை இலக்கியப் பேரவை சிறுகதை, கவிதை, கட்டுரை நூல்களுக்கானப் போட்டி 2015 முதல் 2017 ஜூலை மாதம் வரை வெளியிட்டுள்ள நூல்கள் பரிசுகள் தலா ₹4000 , ₹2000 மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும். கடைசி தேதி 15.7.2017 முகவரி கவிஞர் பரதன் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை பாரதி அச்சகம் , அமராவதி திரையரங்கச் சந்து கம்பம் 625516 உத்தமபாளையம் வட்டம் தேனி மாவட்டம்
அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2017 எட்டு பக்கங்களுக்கு மிகாமல். கடைசி தேதி ஜூன் 15. பரிசுகள் ₹ 10000 , ₹7000,₹5000. முகவரி அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி 2017 கல்கி பில்டிங்க்ஸ் 47 NP ஜவாஹர்லால் சாலை ஈக்காடுதாங்கல் சென்னை 32. தகவல்- கல்கி வார இதழ்.
பொன்.குலேந்திரன் - கனடா எழுத்தாளர். அக்னிக்குஞ்சு இணைய இதழ் வழியே இவரது படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்து பல கதைகளை உடனுக்குடன் விமர்சனம் செய்திருக்கிறேன். அவரது விதி என்கிற ஒரு கதையை சற்று ஆழமாக விமர்சனம் செய்யப்போய் நேரடி அழைப்பிற்கு வந்தார். அவ்வபோது அவரது படைப்புகளை இணைய வழியில் அனுப்பி வந்தவர் அவரது நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சமீபத்தில் அவர் வெளியிட்ட இரண்டு நூல்களை எனக்கு அனுப்பி வைத்தார். 1. Generation ( the story of a estate worker) 2. Strange Relationship Generation நாவலை முதலில் ஆங்கிலத்தில் எழுதி பிறகு அதை தமிழில் குறுநாவலாக வடிவாக்கம் செய்ததை எனக்கு அனுப்பி வைத்தார். நான் அதை ஒவ்வொரு அத்யாயமாக வாசித்து விமர்சனம் எழுதிக்கொண்டு வந்தேன் . கனடாவிலிருந்து அவர் எழுதியிருந்தாலும் கதை நமூர் திருநெல்வேலி வழியே சிலோனில் அடைக்கலம் கொள்கிறது. சிங்களர்கள் இவருடைய பார்வையில் வேறொரு விதமாகத் தெரிகிறது. எனது தாத்தா கண்டியில் தேயிலைத் தோட்டத்தில் வேலைப்பார்த்ததும் என் அம்மா கண்டியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் அவர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டதன் அடிப்படையில் தலைமுறை நாவலை ஒப...
கவிதைப்போட்டி முதல் பரிசு ₹5000 இரண்டாவது பரிசு ₹3000 மூன்றாவது பரிசு ₹2000 கவிதை செய்யுள் பத்தி கொண்டதாக இருக்க வேண்டும். 16 - 24 வரிகள். கடைசி தேதி 07.05.2017 முகவரி நம் உரத்த சிந்தனை 6, வீரசவார்கார் தெரு இரமணா நகர் பெரம்பூர் சென்னை 11
சிறந்த சிறுகதை நூலுக்கான விருது 2016 ஆம் ஆண்டு வெளியான நூல்கள் மட்டுமே. மூன்று பிரதிகள். கடைசி தேதி ஜுலை 31 வாழ்க்கை சட்டம் பப்ளிகேஷன் & மீடியா எண் 18 / 3 காவிரி தெரு சாலிகிராமம், சென்னை - 93 04445510282

சிறுகதைப்போட்டி 2017

வானதி விருது சிறுகதைப் போட்டி - 2017 முதல் பரிசு - ₹ 5000 இரண்டாம் பரிசு - ₹ 3000 மூன்றாம் பரிசு - ₹ 2000 மேலும் இருபது சிறுகதைகளுக்கு விருதுகள் பக்க அளவு 5-8 கடைசி தேதி - 31.07.2017 vanathinovels@gmail.com Skr.light1966@gmail.com
வா.செ.குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை சார்பில் தமிழ் மேம்பாட்டு விருதுக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. தொல்லியல் கல்வெட்டியல் நாணயவியல் அகழ்வாய்வு பல்தொழில் துறை மொழிச்சீர்த்திருத்தம் முன்னேற்ற சிந்தனை கொண்ட முத்தமிழ் படைப்புகள். பரிசுத்தொகை ₹20000 2016 ஆம் ஆண்டில் வெளியான நூல்கள் மட்டும். முகவரி ப.தங்கராசு தலைவர் டாக்டர்.வா.செ.குழந்தைசாமி கல்வி ஆய்வு அறக்கட்டளை தமிழ் மேம்பாட்டு விருது 5/45 ,எல்ஆர்ஜி நகர் ஆண்டாங்கோவில் கிழக்கு கரூர் 639008 கடைசி திகதி ஏப்ரல் 30
ஃபர்ஸானே கொஜண்டி (far Zanetti khojandi) தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். அவரது மொழிப்பெயர்ப்பு கவிதைகள் சில நன்றி தி இந்து. ஆசை.
சு.வேணுகோபால் கணையாழி இதழில் 'மறைந்த பின்னும் பறக்கும் பறவை' குறுநாவல் வாசித்தேன். ஒரு ஓவியக் கலைஞனின் வாழ்க்கை அவனது ஏமாற்றம், குடும்ப சூழலை இந்நாவல் கனத்துடன் பதிவு செய்திருந்தது. நாவல் வால்பாறை சுற்றுலா கொண்டாட்டத்துடன் தொடங்கியது. கல்லூரி மாணவர்கள் டீச்சரின் அந்தரங்க உறுப்புகள் உட்பட பலதையும் கேலி செய்து அவர்கள் பெற்ற தண்டனைகளுடன் நகரும் கதை ஓரிடத்தில் யாரென்று தெரியாத ஒருவர் தற்கொலைச் செய்துகொள்ள அதை அவர்கள் காவல் துறையிடம் முறையிட காவலர்கள் அவர்களின் மீது சந்தேகம் கொள்ள என திகிலுடன் நகரும் கதை தற்கொலை செய்துகொண்டவர் யாரென தெரியவருகிற பொழுது மனது கனத்து விடுகிறது. தற்கொலைஞன் தமுஎகச, கலை இலக்கிய கூட்டங்களுக்கு ஓவியம் வரையும் மணிமாறனாக இருக்கிறான். ஓவியம் இனி தீட்டவேண்டாம் என்றும் மகள் பூப்பெய்துவிட்டதால் தினக்கூலி வேலைக்கு போக வேண்டும் என அவரது மனைவி பணிக்கிறாள். அவருக்கு ஒரு கலை இலக்கியக் கூட்டத்திலிருந்து ஓவியம் தீட்ட அழைப்பு வருகிறது. மனைவி தடுக்கிறாள். இதற்கிடையில் அவள் தினக்கூலிக்கு வேலைக்குச் செல்லுமிடத்தில் ஒருவன் உன் மகளுக்கு நான் நகை எடுத்து தருவதாகவும் உன...
நூல் போட்டி -2017 €€€€€€€€€€£££££££££££££££££££££££££££££₹₹₹₹₹ 2015 , 16 , 17 ஆண்டுகளில் வெளியான கவிதை, கட்டுரை, சிறுகதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன. பரிசுகள் முறையே ₹5000,₹3000,₹2000 கடைசி தேதி மே 30 - 2017 முகவரி @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ டாக்டர். எ.பி.ஜோதிலிங்கம் சியோ அறக்கட்டளை 1268 சி, பகுதி 2 50 - தெரு சதுவாச்சாரி வேலூர் -9 குறிப்பு- வாட்ஸ்அப் பகிர்வு செய்தி.
தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2017 - (குறும்படங்களுக்கு மட்டும்) நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ் ஸ்டுடியோ. நான்காம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி நடைபெறவிருக்கிறது. விருதுத் தொகை: ரூபாய் 25000/- தேர்ந்தெடுக்கும் சிறந்த குறும்படத்திற்கு பாலுமகேந்திரா பெயரிலான கேடயமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். கலந்துக்கொள்ளும் குறும்படங்களில் இருந்து முதல் சுற்றில் தெரிவு செய்யப்படும் பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் விருது வழங்கும் நிகழ்வில் திரையிடப்பட்டு ஒரே ஒரு குறும்படம் மட்டுமே விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்படும். விதிமுறைகள்: * பாலுமகேந்திரா விருதுக்கு குறும்படங்களை அனுப்ப நுழைவுக் கட்டணம் ரூபாய் 250/- "PADACHURUL" என்கிற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க DD யாக, கீழ்க்கண்ட முகவரிக்கு படங்களோடு சேர்த்து அனுப்ப வேண்டும். காசோலை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. நேரில் பியூர் சினிமா புத்தக அங்காடியில...

குறைந்தப்பட்சத் தேவை ஒரு பிணம்.

மூன்று மாத வயதுடைய ஐந்து குஞ்சுகளுடன் ஒரு தாய்க்கழுகு மனிதப் பார்வைக்கு எட்டாத உயரத்தில் தன் விசாலமான இறக்கையை அகல விரித்து பறந்துகொண்டிருந்தது. தாயானதற்குப்பிறகு தன் குஞ்சுகளுடன் இரை தேடி வலசை செல்வது இதுவே முதன் முறை. ஐந்து குஞ்சுகளில் மூன்றின் கழுத்துகள் வெள்ளைப் பட்டைகளாக இருந்தன. பிணம் தின்னும் கழுகுகளில் வெண் கழுத்து கழுகுகள் ஆண் கழுகுகள். அமெரிக்காவின் தேசியச்சின்னம் அக்கழுகுதான். சூடான் நாட்டினை ஒட்டி மலைகள் சூழ்ந்த காடுகளுக்கிடையில், ஓர் உயர்ந்த மரமொன்றின் உச்சியில் கூடு கட்டி வாழ்ந்து வந்த அக்கழுகு முட்டைகளிட்டு குஞ்சுகள் பொறித்திருந்தது. ஆறு முட்டைகளிருந்து ஐந்து குஞ்சுகள் வெளிவந்திருந்தன. வெளிவந்த நாட்களிலிருந்து மூன்று மாதங்களாக அக்குஞ்சுகளுக்குத் தேவையான உணவுகள், மாமிசத் துண்டுகளைத் தேடிப்பிடித்து, ஊட்டிக்கொண்டிருந்தது அத்தாய்க்கழுகு. அக்கழுகிற்கும் அதன் குஞ்சுகளுக்கும் தேவையான உணவுகள் மனிதப்பிணங்களாக சூடானைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறையக் கிடைத்தன. ஆற்றின் விளம்புகள், பள்ளத்தாக்கு பகுதிகளில் கேட்பாரற்று பல பிணங்கள் தண்ணீரில் மிதந்தன. அப்பிணங்கள் கழுகுகளுக்கு பெரு...
அமரர் செம்பியன் செல்வன்  ( ஆ.இராஜகோபால் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி ) அனுசரணை - செம்பியன் செல்வன் குடும்பத்தினர் முதல், இரண்டாம்,மூன்றாம் பரிசுகள் முறையே ரூபா 5000,3000,2000 ஏனைய பரிசுகள் ஏழு சான்றிதழுடன் முகவரி ஞானம் அலுவலகம் 3B, 46 ஆவது ஒழுங்கை கொழும்பு 06 கடைசி தேதி மே 31 - 2017 குறிப்பு - இலங்கை வாழ் தமிழ் எழுத்தாளர்கள் மட்டும்
புலியூர் முருகேசன் வாயிலாக ' புழுதி' இதழ் கைக்கு வந்திருந்தது. பிப்ரவரி - 2017 மாதத்தின் இதழ் அது. ஆசிரியர் கு.ஜெயபிரகாஷ். இளம் படைப்பாளிகளின் படைப்புகளை கொண்டாட வேண்டும் என்கிற கோணத்தில் இதழ் கொண்டுவந்திருப்பதாக இதழ்முகம் எழுதியிருந்தது.  இந்த இதழின் ஒரு கவிதையைப் பற்றி   உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. கண்மணிராசாவின் கவிதை அது. தலைப்பு - அப்பாவுக்கு அப்பா...அம்மாவோட போட்டோ புடிக்கனுமாம். தப்பாம உங்கள கூட்டிக்கிட்டு வரனுமாம். எல்லாப் புள்ளைகளும் நல்லபடியாக தெரியனும்னு ஹெட்மாஸ்டர் சார் சொல்லிவிட்டாங்கப்பா.....! புதுசா துணிமணி இருந்தாத்தான் போட்டோவுல நல்லா தெரியும்னு பவிசா பேசி அவங்கப்பன்கிட்ட பாவாட சட்ட வாங்கிட்டா பவுன்தாயி செருப்பில்லாம போஸ் கொடுத்தா சின்னப் புள்ளயா தெரியும்னு அரியா அரிச்சு அவங்கப்பன்கிட்ட புதுச்செருப்பு வாங்கிட்டா பூமாரி களையா முகம் தெரியனும்னு கறுப்பு பாசிய வீசிப்புட்டு கண்ணக் கசக்கி அவங்கப்பன்கிட்ட கவரிங் செயின் வாங்கிட்டா கஸ்தூரி செருப்பு...செயினு.....சட்டனு... உன்ன சிரமப்படுத்த மாட்டேம்பா.. கும்பிட்டு ...
நூல் போட்டி 2015 2016 ஆண்டுகளில் வெளியான இரண்டு நூல்கள். கடைசி தேதி ஏப்ரல் 30
தற்கால கன்னடச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்படும் மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் தேர்ந்த சிறுகதைகளை வாசிக்கும் வாய்ப்பு நூலகத்தின் வாயிலாகக் கிடைத்தது. இக்கதைகளை மொழிப்பெயர்த்திருப்பவர் சேஷநாராயணா. இத்தொகுப்பில் ' தர்ம சேவகன் பிட்ஸ் ஸ்டீபன் ' என்றொரு சிறுகதை. மனுநீதி சோழன் தன் மகனை தேர்க்காலிலிட்டு ஏற்றி நீதியை நிலை நாட்டியதைப்போன்ற கதைக்களத்தைக் கொண்ட கதையாக அக்கதை எழுதப்பட்டிருக்கிறது. ஐயர்லாண்டில் கியால்வே என்பது ஒரு நகரம். நானூறு வருடங்களுக்கு முன்பு ஜேம்ஸ் லிஞ்சுபிட்ஸ் ஸ்டீபன் நகரச் சபை தலைவராக இருந்தான். அவருடைய ஒரே மகன் ஸ்பெயின் நண்பரின் மகனிடம் நண்பனாகிறான். இருவரும் ஒரே பெண்ணை காதலிக்கிறார்கள். இருவருக்கும் பெண்ணை அடைவதில் போட்டி வருகிறது. பெண் ஸ்பெயின் இளைஞனை பெரிதும் விரும்புகிறாள். என் நாட்டுப் பெண் எனக்கே உரிமையென ஸ்பெயின் இளைஞனைக் கத்தியால் குத்தி கொன்றுவிடுகிறான். கொலை விசாரணை நகரச் சபை தலைவரிடம் விசாரணைக்கு வருகிறது. மகனுக்கு மரணத்தண்டனை விதிக்கிறார். மரணத்தண்டனையை நிறைவேற்ற பணியாளர்கள் முன் வர மறுக்கிறார்கள். அந்நிய இளைஞனுக்காக நம் நாட்டு குடிமகனுக்கு  ஏன் தண்...
நான் வாசித்த மொழிப்பெயர்ப்பு கதைத்தொகுப்புகளில் மிக முக்கியமானத் தொகுப்பாக 'உலக கிளாசிக் கதைகள்' என்கிறத் தொகுப்பைத்தான் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. ஓ.ஹென்றியின் The gift of the magic  ஹொராசியோ கிரோகாவின் Three letters and a footnote லியோ டால்ஸ்டாயின் How much land does a man need? ஹெர்பர்ட் கோல்ட் ஸ்டோனின் Virtuoso காப்ரியல் கார்சியா மார்க்கேஸின் One of these days ஆஸ்கர் ஒயில்டின் The devoted friend நடின் கோர்டிமரின் Once upon a time முல்க் ராஜ் ஆனந்தின் The lost child எட்கர் ஆலன் போவின் The tell tale heart  லாங்ஸ்டன் ஹியூஸின் Thank you ,M'  am ஃப்ரான்ஸ் காஃப்காவின் A country doctor கி டு மாப்பாசானின் The necklace மெக் முண்டெலின் Small change நிஜாம் கஞ்சவியின் Lamlash Manuel கரெல் சப்பெகின்The shirts கதைகளின் தொகுப்பாக  இந்நூல்  வெளிவந்திருக்கிறது. புதிய வாழ்வியல் வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்நூல் 2014 ஆம் ஆண்டின் சிறந்த வெளியீடு. மேற்காணும் கதைகளை பலரும் மொழிப்பெயர்த்திருந்தாலும் அ.ஜெனி டாலியின் மொழிப்பெயர்ப்பு தமிழ்க்கதைகளைப்போல காட்ச...