மகர்’ இச்சொல்லிற்கான அரசியல் அதிர்வு இன்றைக்கு வரைக்கும் இருக்கத்தான் செய்கிறது . அதற்குக்காரணம் பீமாராவ் ராம்ஜி என்கிற அம்பேத்கர் பிறந்தது ‘மகர்’ சமூகத்தில் என்பதால் அல்ல ! இந்திய வரலாற்றை காலக்கோட்டில் வரைய முற்படுகையில் மகர் தவிர்க்க முடியாத அளவீடாக மாறிப்போனதுதான் இதற்கு காரணம் ! பிளாசிப்போர் , பிரிட்டிசாரின் கிழக்கிந்திய கம்பெனி , இராணுவம் , மகாராஜா ரவீந்திர சிங் , ஆங்கிலோ - பேஷாவா போர் ,... இவற்றின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டுகையில் மகர் இனம் தவிர்த்து வரலாற்று பக்கங்கள் நீள்வதில்லை . அவ்வரிசையில் 2018 ஆங்கிலப் புத்தாண்டு அன்று நடந்தேறிய பீமா - கொரேன் கலவரம் சேர்ந்து மகர் வரலாற்று பக்கங்களைக் கூட்டியிருக்கிறது . நமது தமிழ் பத்திரிகைகள் இச்சம்பவம் குறித்து அவ்வளவாக கவலைப்பட்டதாகத் தெரியவில்லை . பத்திரிகைகளை நாம் கோபித்துக்கொள்வதற்கொன்றுமில்லை . பீமா - கொரேகன் கலவரத்தை விடவும் முக்கியமானது நமக்கு ரஜினியின் அரசியல் பிரவேசம் . டெல்லியிலிருந்து வாக்குக்கேட்க தனி விமானத்தில் வரும...