திங்கள், 7 நவம்பர், 2016

அசந்தர்ப்பம்

எழுத்தாளர் - வைதீஸ்வரன்
     அம்ருதா இதழில் ‘அசந்தர்ப்பம்’ என்றொரு கதை. ஒன்றரை பக்கம்தான் அக்கதை. வாசித்த கனம் எனக்குள் இன்னும் கனத்துகொண்டிருக்கிறது.
     மனைவிக்கு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தை பிறந்திருக்கிறது. செவிலி அக்கணவனிடம் தகவலைத் தெரிவிக்கிறார். அவருக்கு அத்தனை சந்தோசம். மகிழ்ச்சியில் குழந்தையையும் மனைவியையும் பார்க்க தன் சொந்தக் காரை எடுத்துகொண்டு பயணிக்கிறார். ஒரு சுரங்க வழிப்பாதையில் ஒரு லாரியுடன் மோதி கார் விபத்துக்குள்ளாகிவிடுகிறது. லாரியுடன் மோதியதை வைத்து அவரது நிலையை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்....!!

     மனைவி மருத்துவமனையில் தவித்துகொண்டிருக்கிறாள். தான் இரண்டும் பெண் குழந்தையாகப் பெற்றெடுத்ததால்தான் கணவர் என்னையும் குழந்தையையும் பார்க்க வரவில்லையோ....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக