ஒரு வழியாக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசியக் கல்விக் கொள்கை - 2016 இன் முன்னோட்டம் பொது மக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டிருக்கிறது. தொழிற்நுட்பக் கல்வி, தேர்வு முறைகளில் மாற்றம், பத்தாம் வகுப்புகளில் கணிதம், ஆங்கிலம், அறிவியல் தவிர்த்து தொழிற்பாடங்கள் அறிமுகம், அங்கன்வாடி மாணவர்களை பள்ளியுடன் இணைத்து முன்பருவக்கல்வி, மீத்திறம் மாணவர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு, உதவித்தொகை, ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பயிற்சி, ஐந்து ஆண்டுகளுக்கொரு முறை ஆசிரியர்களுக்கு கட்டாயத் தேர்வு,...என பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு, முன்னோக்கிய திட்டமிடல் இருந்தாலும் வழக்கம் போலவே ஆரம்பக்கல்வியை விடவும் உயர்கல்விக்கு அதிக முன்னுரிமை, நிதி ஒதுக்கீடு, திட்டமிடல் இருக்கத்தான் செய்கிறது. இயல் - 1 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தேசியக் கல்விக்கொள்கை - 2016 இன் முகப்புரையை வாசித்தால் இம்முகப்புரை யாருடைய ஆட்சிக்காலத்தில் வடிவமைக்கப்பட்டது என சொல்லிவிடுமளவிற்கு முகப்புரை...