முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழ் வளர்ச்சித்துறை

கடைசி தேதி ஜூலை 31

நூல்கள் வரவேற்கப்படுகின்றன

நாவல்கள் வரவேற்கப்படுகின்றன

புதின ஆசிரியர் கவனத்திற்கு....

கவிதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன

நண்பர்களே, 2019-ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருதிற்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. 2016 – ஆம் ஆண்டிலிருந்து வெளியான கவிதை தொகுப்புகளைப்  பரிந்துரைக்கலாம். கவிதை தொகுப்புடன் பரிந்துரைக்கடிதம் சேர்த்து அனுப்பவும். கவிதை தொகுப்புடன்  பரிந்துரைக்கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை. 38/22, நான்காவது பிரதான சாலை கஸ்தூரி பாய் நகர், அடையாறு, சென்னை - 600 020. அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 31.03.2019 அன்புடன் , வேல் கண்ணன், கார்த்திகேயன் ராமனுஜம். அறங்காவலர். கவிஞர் ஆத்மநாம் அறக்கட்டளை, சென்னை 20.

விமர்சனங்கள்

 05.01.2019 சபரிமலை விவகாரம் - தினகரன் இதழ் தலையங்கம் கடலுக்குள் பெண்கள் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது, பிராமணர்கள் கடல் தாண்டி வெளிநாடு செல்லக்கூடாது,  பெண்கள் விண்வெளிக்கு பயணிக்கக்கூடாது, இடுகாட்டிற்கு பெண்கள் முச்சந்தியைத் தாண்டி செல்லக்கூடாது, பூப்பெய்த பெண்கள் அந்த மூன்று நாட்கள்  கோயிலுக்குச் செல்லக்கூடாது, ஐயப்பன் கோயிலுக்கு அத்தகைய பெண்கள் எப்பொழுதும் மாலையிட்டு  செல்லக்கூடாது  இப்படியாக இந்து மதம் கட்டமைக்கும் ஐதீகம் நிறைய உண்டு. ஐதீகம் என்பதே நம்பிக்கைகுரிய ஒன்றுதான் மறுப்பதற்கில்லை.   மூன்று வாரத்திற்கு முன்பு THE HINDU  நடுப்பக்கத்தில்   அரபிக்கடலில்  மீன் பிடிக்கும் ஒரு மீனவப் பெண்ணைப் படம் பிடித்து இந்தியாவில் நடுக்கடலில்  மீன் பிடிக்க உரிமைப் பெற்ற முதல் பெண் என்கிற குறிப்புடன் பேட்டி வெளியாகியிருந்தது. விண்வெளிக்குச் சென்று திரும்பி பெண்களின் பட்டியல் நிறைய உண்டு. இடுகாட்டில் பிணத்தை எரிக்கும் பெண்களை நிறைய பார்த்திருக்கிறோம். இதையெல்லாம் வேறு வழியே இல்லாமல் அனுமதித்த நம்மால் ஐயப்பன் கோயிலுக்குள் அன...

2019

ஜனவரி - சங்கு இதழில்  ஜனவரி - அமுதசுரபி இதழில் பேசும் புதிய சக்தி இலக்கிய விழாவில் அழகிய பெரியவனின் ' அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார் ' நூலினை அறிமுஸகம் செய்து பேசிய போது...ஜனவரி இதழில் பிப்ரவரி -

மூங்கில் வனம் - மூன்றடி கானம்

கோவையில்  ஒரு நிகழ்வில் கவிதை நூல் குறித்து பேசிய கவிஞர் இராகவன்  கவிதைகளான கவிதைகள் குறித்து பேசிய அவர் சில கவிதைகளை எடுத்தாண்டார். அதிலொரு கவிதை யானை குறித்த கவிதையாக இருந்தது.  அவர் ஒப்பித்த வேகத்திற்கு என்னால்  அதை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும் கவிதையின் ஒற்றைச் சொல் எனக்குள் தொண்டையில் சிக்கிக்கொண்ட மீன் முள்ளைப்போல வருடிக்கொண்டே இருந்தது. பழனி இலக்கிய சந்திப்பில் கிடைத்த புதிய நட்பான கூடல் தாரிக்கின் மூங்கில் வனம் தொகுப்பில் அக்கவிதை இருந்தது. வனத்தையும் வாழ்வையும் இழந்து சபிக்கப்பட்ட யானையைத்தான் ஆசிர்வதிக்க நிர்ப்பந்திக்கிறான் பாகன் இக்கவிதையில் யானையை வெறும் யானையாக மட்டும் நான் உள்வாங்கிக்கொள்ளவில்லை.  வாழ்வாதாரத்தையும் வாழ்வையும் நாளுக்கு நாள் இழந்து தவிக்கும் நம் வாழ்க்கைதான் யானையின் வாழ்த்தலாக இருக்கிறது. கூடல் தாரிக்கின் மூன்றாவது தொகுப்பு இது. கஜல் வடிவத்தில் எழுதப்பட்ட மூன்றடி நான்கடி சொற்பின்னலே மொத்தக் கவிதையும். அழகை வர்ணிக்கும் வானவில் வரிகள். மழையின் சாயலில்தான் இருக்கிறார்கள் கருணை கொண்ட மனிதர்கள் யாவரும் ம...

செய்திக்கோவை - 2019

இன்னும் பொறுக்குவேன்

வாழ்த்துகள் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். சமரசம் இதழில் 'சாயங்காலத்துப் பறவைகள்' - புதிய நாவலைத் துவங்கியிருக்கிறார். தொடர்ந்து வாசிக்கவும் அதைக்குறித்து எழுதவுமிருக்கிறேன்.  இஸ்லாம் குறித்த கலைச்சொற்களின் தேவையில் எனது வாசிப்பும் எழுத்தும் நிலை குத்தி நிற்கிறது. ஹாஜியார் அப்துல் காதரை அறைந்து விட பேரன் கையை ஓங்குகிறான் காரணம் சொத்துப் பிரச்சனை. பேரனால் ஏற்பட்ட அவமானத்தை இப்பகுதி பேசியிருக்கிறது. இந்த நாவலை நான் வாசிக்க துவங்கியிருப்பதன் நோக்கம் , இஸ்லாமியரிடம் ஊடாடும் சொற்கள் குறித்து அறிந்துகொள்வதும் பொறுக்குவதுமே.. சில சொற்களைப் பொறுக்கி எடுத்தேன். ஹஜ் , வாப்பா, பாங்கு ( சத்தம் ), லுஹர் ( ஒரு வகை தொழுகை ), பெரியாப்பா, மைனி, இன்னும்  பொறுக்குவேன்...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

வேட்கை இலக்கிய இதழ்

இன்றைய தினம் எனக்கு பிடித்தமான கட்டமைப்பில் சிற்றிதழிலும் சிறிய இதழாக சேலம் மாவட்டத்திலிருந்து ஒரு இதழ் கைக்கு வந்தது. - வேட்கை - நவீன இலக்கியப் படைப்பாளர்களுக்கான களம் என்கிற அடையாளத்தோடு வந்திருந்த இதழைப் பார்க்கையில் எனக்கும் கூட இப்படியாக  ஒரு இதழைத் துவங்கிவிடலாம் என்கிற ஆசை வந்துவிட்டது.  - Cool down :( இதழ் முழுக்கவே மா. அரங்கநாதனின் பேட்டி. தூண்டிலாக வீசப்பட்ட கேள்விகள். வலையில் சிக்கிய மீன்களாக பதில்கள். #உண்மையோடு உறவு வைத்துக்ககொள்ளாத எதுவும் படைப்பு ஆவதில்லை. #என்னைப் பொறுத்தவரை படைப்பிலக்கியம் சம்பந்தப்பட்ட பல சந்தேகங்களுக்கு கவிதை அம்சமே நல்ல பதிலைத் தந்தது. #உதைப்பந்து விளையாட்டிற்குக் கூட இலக்கணம் இருக்கிறது. இந்த கவிதைக்கு இல்லையா? என்கிற கேள்விக்கு உதைப்பந்து விளையாட்டிற்கு இலக்கணம் இருக்கிறது. டென்னிஸ் விளையாட்டிற்கு இருக்கிறது. கிரிக்கெட்டிற்கு விளையாட்டிற்கு இருக்கிறது. ஆனால் விளையாட்டிற்கு என்று எதாவது இலக்கணம் இருக்கிறதா? #நான் எழுதி முடித்த பின்னரே என்ன எழுதினேன் என்பது தெரிய வருகிறது...இப்படியான பல பதில்கள். பதில்களின் பிரமாத வரிச...

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...