முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மாற்றுத்திறனாளி எழுத்தாளர்களுக்கு....

அசோகமித்திரன் சிறுகதைப்போட்டி - 2018

சிறுகதைப்போட்டி அறிவிப்பு

சிறுகதைப் போட்டி சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018  பற்றிய அறிவிப்பு. விருப்பமுள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளவும் •••• வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது.அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். * சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 20, 2018. * வெற்றி பெற்ற சிறுகதைகள் பற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் 4ம் வாரம் அறிவிக்கப்படும். * யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் கதைகளை அனுப்பி வைக்கவேண்டும். * அனுப்பி வைப்பவரின் நிஜப் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், இமெயில் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். * கதையை தட்டச்சு செய்து பிரிண்ட் எடுத்து தபால் மூலமும் அனுப்பலாம். கதைகள் தேர்ந்தெடுக்கப்படாத பட்சத்தில் அதைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே தேவையான பிரதிகளை எடுத்து வை...

எழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு

Entries invited for The Hindu Prize 2018 http://www.thehindu.com/books/entries-invited-for-the-hindu-prize-2018/article23543168.ece via @the_hindu கடைசி தேதி மே - 15 முகவரி The hindu prize -2018 ( Fiction / Non - fiction) Shalini Arun Sr,Associate editor The hindu Kasturi building 859 - 860 , Anna salai Chennai - 02

அனல் காற்று

நாவல் - அனல்காற்று @ஜெயமோகன் பாலு மகேந்திரா எடுக்கவிருந்த படத்திற்காக தான் எழுதிய கதை இது என்பதாக முன்னுரை பேசுகிறது. ஒரு வேளை எடுத்திருந்தால் படம் நன்றாக ஓடவும் செய்திருக்கும். இந்நாவலை வாசித்ததும் எனக்கு அவள் அப்படித்தான் என்கிற திரைப்படம் நினைவிற்கு வந்தது. அப்படத்தின் சிறப்பாக நான் பார்ப்பது திரைபடத்தின் உரையாடல். படம் முழுக்கவும் கதாநாயகி பேசிக்கொண்டிருப்பாள். அப்படியாகவே இந்நாவல் முழுக்கவும் அருண் ,  தன்னை விட்டு பிரிந்து சென்ற சுசியை நினைத்து மருத்துவமனையில் தனக்குத்தானே பேசுவதுதான் கதை. தன்னை விரும்பும் சுசியிடம் தான் விரும்பும் சந்திரா குறித்து பேசுகிறான் அருண். சநதிரா , விதவைப்பெண். அவளுக்கும் அவனுக்குமான நெருக்கத்தை அப்படியே படமாக்கியிருந்தால் படத்திற்கு A சான்றிதழ் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. இதுதவிர fuck , boobs வார்த்தைகள் வேறு. நாவலின் ஓரிடத்தில் தாய்க்கும் ஜோ என்கிற கதாப்பாத்திரத்திற்கும் இடையேயான நெருக்கத்தையும் பேசுகிறது. உரையாடல்கள் அருமை. சில இடங்கள் காதலையும் , காமத்தையும் , தத்துவத்தையும் பேசுகிறது. நாவலின் முடிவு நாடகத்தனம். சந்திரா அருணிடமிரு...

இந்திய சிறந்த சிறுகதை - 7

இந்திய சிறந்த சிறுகதை - 7 இரண்டு புத்தகங்க மலையாளம் - அசோகன் சருவில். ஒரு திருடன் திருடுவதற்கு ஒரு வீட்டைத் தேர்வு செய்கிறான். முன்னோட்டமாக அவ்வீட்டிற்குச் செல்கிறான். ஒரு பாட்டியும் தாத்தாவும் இருக்கிறார்கள். பாட்டியின் காதில் இரண்டு பெரிய நகைகள். ' நீ யாரப்பா ...? ' வளைந்து குனிந்து கண்களுக்கு கைக்கொடுத்து கேட்கிறாள். ' நான் யாரெனச் சொல்லும் பார்க்கலாம்...' யோசிக்கிறாள். ' திருச்சபையிலிருந்து பாதிரியார் அனுப்பினாரா..?' 'ம்...' ' என்னால நடக்க முடியல... எப்படியாம் நான் திருச்சபைக்கு போறது. கூப்பிட்டு கூப்பிட்டு விடுகிறார்.  எனக்கொரு உதவி செய்யேன்...' ' என்ன உதவி...?' ' இந்த பைபிள் அவர் கொடுத்தது. அவர்கிட்டேயே கொடுத்திடு...' வாங்கிக்கொள்கிறான். அடுத்து அதே வீட்டில் தாத்தா நடக்க முடியாமலிருக்கிறார். அவரிடம் செல்கிறான். ' யாரப்பா நீ...?' ' கண்டுப்பிடிங்க பார்க்கலாம்...' ' வாலிப சங்கத்து பையனா நீ...?' 'ம்..' ' கட்சி நல்லா போய்க்கிட்டிருக்கா...?' 'ம்...'...

நூல்கள் வரவேற்கப்படுகின்றன

நூல்கள் வரவேற்கப்படுகின்றன கடைசி தேதி மார்ச் 31

நினைத்தலுக்கு எதிரான ஓர் ஒடுக்குமுறை

மகர்’ இச்சொல்லிற்கான அரசியல் அதிர்வு இன்றைக்கு வரைக்கும் இருக்கத்தான் செய்கிறது . அதற்குக்காரணம் பீமாராவ் ராம்ஜி என்கிற அம்பேத்கர் பிறந்தது ‘மகர்’ சமூகத்தில் என்பதால் அல்ல !  இந்திய வரலாற்றை காலக்கோட்டில் வரைய முற்படுகையில் மகர் தவிர்க்க முடியாத அளவீடாக மாறிப்போனதுதான் இதற்கு காரணம் !  பிளாசிப்போர் ,  பிரிட்டிசாரின் கிழக்கிந்திய கம்பெனி ,  இராணுவம் ,  மகாராஜா ரவீந்திர சிங் ,  ஆங்கிலோ  -  பேஷாவா போர் ,... இவற்றின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டுகையில் மகர் இனம் தவிர்த்து வரலாற்று பக்கங்கள் நீள்வதில்லை . அவ்வரிசையில்  2018  ஆங்கிலப் புத்தாண்டு அன்று நடந்தேறிய பீமா  -  கொரேன் கலவரம் சேர்ந்து மகர் வரலாற்று பக்கங்களைக் கூட்டியிருக்கிறது . நமது தமிழ் பத்திரிகைகள் இச்சம்பவம் குறித்து அவ்வளவாக கவலைப்பட்டதாகத் தெரியவில்லை . பத்திரிகைகளை நாம் கோபித்துக்கொள்வதற்கொன்றுமில்லை .  பீமா  -  கொரேகன் கலவரத்தை விடவும் முக்கியமானது நமக்கு ரஜினியின் அரசியல் பிரவேசம் .  டெல்லியிலிருந்து வாக்குக்கேட்க தனி விமானத்தில் வரும...

கவிதை நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன

நூல்கள் வரவேற்கப்படுகின்றன சிகரம் இலக்கியப்போட்டி 2017 ஆண்டுகளில் வெளியான கவிதை நூல்கள் மட்டும். இரண்டு படிகள் மரபு ஹைக்கூ புதுக்கவிதை மொத்தப்பரிசு ₹15000 கடைசி தேதி - மார்ச் 31 பழ.அன்புநேசன் ஆசிரியர் சிகரம் 4/14 பெரியார் நகர் சேமங்கி அஞ்சல் கரூர் - 639117 தொடர்புக்கு - 9965246922

2017 நூல்கள் வரவேற்கப்படுகின்றன

சாதி மறுப்பு திருமணம் செந்துகொள்ள விரும்புபவரா நீங்கள்...?

சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு படுகொலை செய்யப்படலாம். அவர்களுக்கு உதவும் பகுதி இது Tamil Nadu Techie Creates App That Protects Couples From Honour Killings! https: // www.thebetterindia.com/?p=131504 via @thebetterindia

நான் கொலை செய்யும் பெண்கள்

நான் கொலை செய்யும் பெண்கள் ( சிறுகதைத் தொகுப்பு )  - லதா இலங்கையில் பிறந்த லதா தற்போது சிங்கப்பூரில் வசிப்பதாக ஆசிரியர் குறிப்பு சொல்கிறது. சிங்கப்பூர் தேசிய நாளிதழான தமிழ் முரசு பத்திரிகையின் துணை ஆசிரியரும் கூட. இவரது முதல் சிறுகதைத்தொகுப்பு - நான் கொலை செய்யும் பெண்கள். அடையாளம் மழை - அப்பா நாளை ஒரு விடுதலை இதுவரை பயணம் தமிழுக்கு அமுதென்று பேர் முகாந்திரம் வீடு அறை படுகளம் என பத்து சிறுகதைகளை உள்ளடக்கிய கச்சிதமான தொகுப்பு இது. 102 பக்கங்கள். முதல் கதை அடையாளம் மற்ற பெண் எழுத்தாளர்கள் எழுதும் கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருந்தது. இந்திய குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் சிங்கப்பூர் மாப்பிள்ளையை கல்யாணம் செய்துகொண்டு அவள் படும் இன்னலை கதை பேசியிருக்கிறது. கதையின் தொடக்கமே இவ்வாறு இருக்கிறது. 'யூ இண்டியா...?' இந்தியக்குடும்பத்து பெண்களைப் போலதான் அவளும் சிங்கப்பூரில் சமைக்க, துவைக்க, கடைத்தெருவிற்குச் செல்ல, குழந்தைகளை வளர்க்க என இருக்கிறாள். கணவன் ,மாமனார்,பிள்ளைகளுக்கு விரும்பும் உணவுகளை சமைத்துகொடுக்கும் அவள் பழைய சோத்தையும் ஊற...

வல்லினம் - சிறுகதைப்போட்டி

சிறுகதைப்போட்டி கடைசி நாள் - 31.03.2018 வல்லினத்தின் ‘படைப்புகளுக்குப் பரிசுத் திட்டம்’ 2017 http://vallinam.com.my/version2/?p=3617

குமுதினி ஏன் பிந்தி வந்தாள்?

எழுத்தாளர் ஷோபா சக்தி - ஆனந்த விகடன் தடம் இதழில் நான் எழுத்துலகத்திற்கு வரக்காரணமான கவிதை இதுவென்று சுட்டிக்காட்டும் கவிதை இது. குமுதினி எனும் படகில் வந்த தமிழர்கள் 60 பேரை இலங்கை கடற்படையினர் வெட்டிக்கொள்கிறார்கள்.  அவ்வுடல்களை அடக்கம் செய்த நிலாந்தன் எழுதிய கவிதை இது. இக்கவிதை - நிலாந்தன் வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது. குமுதினி ஏன் பிந்தி வந்தாள்? http://www.nillanthan.net/?p=215

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...

காணிநிலம் இதழ் அறிமுகம்

2018 ஆம் ஆண்டின் புது இதழ் - காணிநிலம் - கிடைத்தது.  அதன் உபவரி மிகவும் பிடித்திருந்தது. சொல் விளையும் பூமி. பூமி - கேணி- தோணி-ஏணி என தலையங்கக் கட்டுரை வித்தியாசம். அபரஞ்சி சிறுகதை தொழுநோயாளிகளுக்கு சேவை செய்யும் பெண்ணை மையமாக வைத்து கதை நெய்யப்பட்டிருந்தது. வேலைக்கார பெண்கள் வேலை செய்யும் வீட்டில் படும் இன்னல்களை கதை பேசியிருந்தாலும்  ' குணமானதுக்கு அப்புறமும் மருந்து போட வர்றதாச் சொல்லிட்டு எம் புருசன இழுத்துட்டு போவப் பாக்கியா....? என்கிற இடம் பெண் செவிலியர்கள் சந்திக்கும் இன்னலின் உச்சம். வெற்றிப்பேரொளியின் முத்தச்சரித்திரம் கவிதையில் 'ஆனாலும் அழுத்தமாய் மிக அழுத்தமாய்ப் பதிந்து கிடக்கிறது ஒரு கோபப் பொழுதில் நீ கொடுத்த கடிமுத்தம் ' என்கிற வரிகள் நீண்ட கவிதையின் முடிவில் சிரிக்க வைக்கும்படியாக இருந்தது. கல்யாணிஜியின் இக்கவிதை எனககு மிகவும் பிடித்திருந்தது. 'அது பறந்து விடுவதற்கு முன் திறந்துவிட நினைத்தேன் நான் திறந்துவிடும் முன் அது பறந்துவிட நினைத்தது. நான் திறந்துவிடவும் இல்லை அது பறந்துவிடவும் இல்லை இது வரை.' இதே போன்று சுகன்யா ஞானச...

நாய்கள் இப்படிதான் பூனை தேசத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டன

                                  1 வீரபாண்டிய கட்டப்பொம்மன், பாளையக்காரக் கோட்டையைக் கட்ட பாஞ்சாலங்குறிச்சியைத் தேர்வுச் செய்ததற்கு ஒரு காரணமிருந்தது. பூனைகள் சேர்ந்து நாய்களை விரட்டியடித்த இடம் அது. இதைக் கண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் இவ்விடம் வீரமிக்கது என்கிற முடிவிற்கு வந்து அந்த இடத்தில் ஒரு கோட்டையை எழுப்பினான். பூனைகள் அத்தனை உக்கிரத்துடன் நாய்களை விரட்டியக்கும் தைரியம் அவைகளுக்கு எங்கேயிருந்து வந்தது...? பூனைகளுக்கு வந்திருந்த கோபத்தின் காரணக் கதை இது.           2 பூனை தேசம் அது. பூனைகள் வாழும் தேசத்தை பூனையின் தேசமென பூனைகளே பெயர்ச்சூட்டிக்கொண்டன. பூனை தேசம் வனங்களும், புதர்களும், குன்றுகளும் சூழ்ந்தப் பகுதியாக இருந்தது. தன் இனத்தின் பரிணாம வளர்ச்சிதான் புலி என்பதை பூனைகள் தெரிந்து வைத்திருந்தன. ஆனாலும் தான் வேறு புலி வேறு என்று வேறுபடுத்திகொள்ளுமளவிற்கு பூனைகளுக்கு அறிவு இருந்தது. பூனைகள், தான் புலியைப் போலிருக்கிறோம் என ஒரு நாளும் அவை புலி வாழ்க்கை வா...