முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன் ரெயினீஸ் ஐயர் தெரு குறுநாவல் அளவில் இருக்கிறது. எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவந்த நாவல் அது. இலக்கிய ரீதியில் நான் யாருக்காவது பெரிதும் கடன்பட்டிருக்கிறேன் என்றால் அது க.நா.சு.வுக்குத்தான். ‘ இலக்கிய விசாரம்’ என்ற நூலில் க.நா.சு ‘எழுத்தில் சோதனை முயற்சிகள் செய்து பார்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கருத்தை என் இலக்கியச் செயல்பாடுகளின் அடிப்படை அம்சமாகக் கொண்டுள்ளேன் என்கிறார் முன்னுரையில் வண்ணநிலவன். ரெயினீஸ் ஐயர் தெரு நாவலை வாசிக்கையில் அதன் உருவமும், நடையும் அப்படியாகத்தான் தோன்றுகிறது. ரெயினீஸ் ஐயர் தெருவின் ஆரம்பம் திருவனந்தபுரம் ரோட்டிலிருந்து பிரிகிறது. இருபுறமும் வீடுகள் கொண்ட மொத்தமே ஆறு வீடுகள். அவ்வீடுகள் அவர்களின் வாழ்க்கைச்சூழல் , கொண்டாட்டம், அமைதி, இருப்பு, வாழ்க்கைக்கூறுகள் , அன்றாட பொழுது போக்குகள் இவற்றைச் சொல்லிச்செல்வதுதான் இந்நாவல். முதல்வீடு - இரண்டாவது வீடு - மூன்றாவது வீடு - திரும்பவும் முதல் வீடு - நான்காவது வீடு - இன்றொரு நாள் முதல் வீடு - தெரு -இப்படியாக வடிவமைப்பைக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் நாவல் இத...

ஆப்பிள் கிழவி

நூல் விமர்சனம் - ஆப்பிள் கிழவி நவீனம் கலந்த மனச்சுனை - ஆப்பிள் கிழவி சந்தக் கடை மாதிரி ஆகிவிட்டது இலக்கிய உலகம் என்பதாகத் தொடங்குகிறது இந்நூலின் ஆசிரியர் உரை. அவர் அடுத்து சொல்லியிருப்பதைப்போல இங்கே சப்தங்கள் அதிகம் உண்டு. ஆனால் சரக்கு குறைந்துவிடவில்லை. அதற்கு அவருடைய ஆப்பிள் கிழவி சிறுகதைத் தொகுப்பே சாட்சி. புது உத்தி, மொழி, நடையில் எழுதப்பட்டுக்கொண்டு வருகிறது இன்றைய சிறுகதைகள். அப்படியான நடை மொழியில் எழுதப்பட்டிருக்கும் தொகுப்புதான் ஆப்பிள் கிழவி. இந்த இடத்தில் இந்நூலின் ஆசிரியர் எம். ஆர்.சி. திருமுருகன் பாராட்டப்பட வேண்டியவர். நூலினை அவர் யாருக்கும் காணிக்கை , சமர்ப்பணம் செய்து அவர்களை நீங்கா நினைவில் ஆழ்த்திவிடவில்லை. மற்றொன்று அணிந்துரை எழுத யாருக்கும் அவர் நூலைக் கொடுத்து காத்திருக்கவோ, இதை நீங்கள் படித்தேயாகவேண்டும் என்கிற அன்புக்கட்டளையில் ஆழ்த்தவோ இல்லை. சமீப திரைப்படங்கள் எழுத்து ஓடுகின்ற பொழுதே கதையும் தொடங்கிவிடுவதைப்போலதான் புத்தகத்தைத் திறந்தால் கதை நம்மை அழைத்துக்கொண்டு ஓடத் தொடங்குகிறது. தொகுப்பில் மொத்தம் எட்டு கதைகள். அத்தனையும் பல்வேறு இதழ்களில் பிரசுரமா...
யாரோ ஒருத்தியின் கடிதம் (குறுநாவல் ) - ஸ்டெபான் ஸ்வெய்க் @தமிழில் - ராஜ்ஜா புகழ்பெற்ற நாவலாசிரியர் ரா...வெளியூர் சென்று திரும்பி வருகையில் வீட்டில் குவிந்து கிடக்கும் கடிதத்தில் ஒன்றைப் பிரித்து வாசிக்கிறார். அக்கடிதம் தன் பெயரைக் குறிப்பிடாத ஒரு பெண்ணின் கடிதமாக இருக்கிறது. மகன் இறந்துகிடக்க அவனைச் சுற்றி மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருக்க அந்த வெளிச்சத்தில் எழுதி அனுப்பிய கடிதமாக அக்கடிதம் இருக்கிறது. சின்ன வயதிலிருந்து உங்களை நான் காதலித்து வந்ததாகவும் உங்களைத் தொட , பார்க்க , ரசிக்க , சிரிக்க இருந்ததாகவும் நீங்கள் வசிக்கும் அதே வீட்டில்தான் நான் என் தாயுடன் வசித்து வந்ததாகவும் பிறகு என் தாய் வேறொரு திருமணம் செய்துகொண்டதும் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகவும் நீள்கிறது கதை. ஒரு நாள் எழுத்தாளரை நேரில் சந்திக்கிறாள். தனிமையில் இருக்க  அவளை அவன் அழைக்கிறான். அவனுக்கு அவளைக் கொடுக்கிறாள். அந்த குழந்தைதான் இறந்தக் குழந்தை என்பதை வாசிக்கையில் கதை திருப்பம் கொள்கிறது. என்னை நீங்கள் சந்திக்க வர வேண்டாம். ஒரு வேளை வந்தால் நான் இறந்தே இருப்பேன். உங்கள் பிறந்த நாள் அன்று எப்பொழ...
விக்கிரமன் நினைவு தினக் கட்டுரைப் போட்டி தலைப்புகள் 1. புதுக்கவிதையில் மானுடச் சிந்தனைகள் 2. உலக அரங்கில் இந்தியாவின் பங்களிப்பு 3. இன்றைய இளைய தலைமுறையினரின் சிந்தனையும் செயல்பாடும் 4.ஆன்மிக மறுமலர்ச்சியில் மகான்கள் பனிரெண்டு கட்டுரைகள் தேர்வு. மொத்தப்பரிசு 12000 கடைசி தேதி 30.09.2017 முகவரி இலக்கியப் பீடம் எண் 3 ஜெய்சங்கர் தெரு மேற்கு மேம்பாலம் சென்னை 33 ilakiyapeedam@gmail.com

எல்லா சொல்லும் பொய் குறித்தனவே

நிற வேறுபாடு தலைத்தூக்கியிருந்தக் காலத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற கனவோடு ஒரு கருப்பின மாணவி மருத்துவ கல்லூரிக்குள் நுழைந்தாள். ஒரு கருப்பின பெண் தமக்கு நிகராக மருத்துவம் படிப்பதா…என வெகுண்டெழுந்த ஆங்கிலேய மருத்துவர்கள் அவளை அழைத்து அவளுக்கொரு தேர்வு வைத்தார்கள். அத்தேர்வு இப்படியாக இருந்தது. ‘ கை  நடுக்கமில்லாமல் உனக்கு நீயே இந்த ஊசி மருந்தை செலுத்திக்கொள்ள வேண்டும்’ அவளுக்கு முன்பு ஊசி, சிரஞ்ச், மருந்துக்குப்பி வைக்கப்பட்டிருந்தன. மருந்துக்குப்பியை எடுத்துப்பார்த்தாள் அவள். அக்குப்பியில் இருப்பது விஷமாக இருந்தது. விஷம் எனத் தெரிந்தும் மருத்துவராகும் கனவில் விஷத்தை சிரஞ்ச்சில் எடுத்து கை நடுக்கமுமில்லாமல் அவளது உடம்பில் செலுத்திக்கொண்டு மருத்துவராகிவிட்ட மகிழ்ச்சியில் வேரோடு சாய்ந்தாள். நீக்ரோ என்கிற சொல் தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய பொழுது மருத்துவம் படிக்க விரும்பிய ஒரு கருப்பினப் பெண்ணிற்கு ஏற்பட்ட கோர நிகழ்வு இது. அவளது மரணத்தை  உலகப் பத்திரிக்கைகள் இவ்வாறு எழுதின. ‘அவளது கனவு மருத்துவராக வேண்டும் என்பதுதான்.  மருத்துவராக வாழ்வதில் அல்ல…’ மருத...

ஹெச்.ஜி.ரசூலின் பேட்டிக்கட்டுரை

கொலை செய்வதற்கு ஆயுதங்களோடு எப்போதும் துரத்தி வருகின்றனர் அல்லது தற்கொலை செய்வதற்கான எல்லா சாத்தியங்களையும் திறந்து வைத்திருக்கின்றனர் எலிப்பொறி வைத்து பிடித்துவிட்டால் எழுத்துக்கள் எலிகளாய் செத்துக்கிடக்கும் என நம்புகின்றனர். இப்படியாக நீளும் இக்கவிதை 'உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்' என்கிற கவிதைத்தொகுப்பிற்கு ஹெச்.ஜி.ரசூல் எழுதிக்கொண்ட முன்னுரையின் முதல் பத்தி.  இம்முன்னுரைக்கு அவர் கொடுத்திருக்கும் தலைப்பு  ' கொலை செய்வது அல்லது தற்கொலை செய்வது'. அவரது லப் டப் வாழ்க்கையின் மொத்த  ஓட்டத்தையும் சொல்லி நிறுத்த இத்தலைப்பு ஒன்றே போதும். கடந்த மே மாதம் கன்னியாகுமரியில் கூடிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இரு நாள் முகாமில் ஹெச்.ஜி. ரசூல் அவர்களின் தலைமையில் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் பேசியத் தலைப்பு ‘ அறியப்படாத கதையாளர்களின் கதைகள்’. அவ்வாய்ப்பினைக் கொடுத்தவர் ரசூல் அவர்கள். நான் பேசத் தொடங்குகையில் அறியப்படாத கதையாளர்களின் கதைகள் பட்டியலில் முதல் நபராக ஹெச்.ஜி. ரசூல் அவர்களைத்தான் வைத்தேன். அந்தப் பட்டியலில் இன்னும் பலரையும் வைத்திருந்த...
குட்டியக்கா - மலையாள சிறுகதை - எம்.டி.வாசுதேவன் நாயர் @ மொழிப்பெயர்ப்பு - இராம. குருநாதன் ஜானு , குட்டியக்கா இருவரும் சகோதரிகள். குட்டியக்கா மூத்தவள். படு கருப்பி. காது ஓரத்தில் ஒரு மச்சம். அதுவும் அசிங்கமாக. ஜானு அழகு. எல்லோருக்கும் அவளைத்தான் பிடிக்கிறது. குட்டியக்காவிற்கு வரன் அமையவில்லை. ஆனால் சின்னவளுக்கு வரன் நிறைய வருகிறது. ஒரு நாள் பருவை அறுத்துக்கொள்கிறாள். முகத்தில் பவுடர் ஏற்றிக்கொள்கிறாள். அப்படியும் வரன் அமையவில்லை. ஒரு தாழ்த்தப்பட்டவோடு காதல் பிறக்கிறது. குடும்பத்தினர் கண்டித்து செத்துப்போ என திட்டுகிறார்கள். குட்டியக்காவுடன் முழுக்கவே அவளுடைய சித்தி மகன் இருப்பான். அவனிடம் தூக்கத்தில் சொல்லிக்கொண்டிருப்பாள். ' தம்பி....அம்மாவையும் பெரியம்மாவையும் பத்திரமாப் பார்த்துக்கோ...' 

ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு சிறுகதை

சிவப்பு  ரொட்டித்துண்டு ‘ அடேய் விவசாயி மகனே....என் அரண்மனைக்குள் நுழைந்து சில ரொட்டித்துண்டுகளைத் திருடியிருக்கிறாயடா நீ....?’ கண்களுக்குள் தனலைக்காட்டி கேட்டிக்கொண்டிருந்தான் உருஷ்ய ஜாரரசன் இரண்டாம் நிக்கோலஸ் . உறைக்குள்ளேருந்து வெளிவரும் வாளினைப்போல அவனது கேள்வி வந்திருந்தது. அவனது நாசிகள் துப்பாக்கிக் குழல்களாக விடைத்து நின்றன. புஷ்கின், பொந்துக்கிளியாக இருக்க வேண்டியவன். கூண்டுக்கிளியாக கையறு நிலையில் நின்றுகொண்டிருந்தான். அவனது கால்கள் ஆட்டம் கண்டிருந்தன. அவனுடைய நாசியிலிருந்து ரத்தம் சன்னமாக ஒழுகிக்கொண்டிருந்தது. ஒன்று, இரண்டு, மூன்று - அவனைச்சுற்றி ஒன்பது சிவப்புப்படை காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஜாரரசனின் அதிகாரப்பூர்வ காவலர்கள். அவன் காட்டும் ஒவ்வொரு சமிக்ஞைக்கும் ஒவ்வொரு குத்து புஷ்கின் முகத்தில் விழுந்துகொண்டிருந்தது. ‘ ஜாரரசன் அரண்மனைக்குள் நுழைய உனக்கு யாரடா தைரியம் கொடுத்தது...?’ ‘ எத்தனை நாட்களாக இந்த திருட்டு நடக்கிறது...?’ ‘ கேவலம் நீ விவசாயி மகன்தானா நீ...?’ ‘ போல்ஷவீக் கும்பலைச் சேர்ந்தவனா....?’ ‘ உன் திருட்டுக்கு துணைக்கு வந்...
எது வாழ்க்கை? 💮 *உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம*். "உலகத்திலேயே அழகானப் பிணம்   இங்கே  உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல  வேளை  இவள்  பிணமானாள்,  இல்லாவிட்டால்   இந்தக் கல்லறைக்குள்  ரோமாபுரி  சாம்ராஜ்யமே  பிணமாகியிருக்கும்."  💮 *மகா அலெக்சாண்டரின்  கல்லறை  வாசகங்கள்*. "இந்த  உலகம்  முழுவதுமே  போதாது  என்று  சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி  போதுமானதாக ஆகிவிட்டது." 💮 *ஒரு  தொழிலாளியின் கல்லறை வாசகம*். "இங்கே  புதை குழியில் கூட  இவன்  கறையான்களால்  சுரண்டப்படுகிறான்." 💮 *அரசியல்வாதியின்  கல்லறையில்*, "தயவு செய்து  இங்கே  கை தட்டி  விடாதீர்கள்,  இவன்  எழுந்து விடக்கூடாது." 💮 *ஒரு  விலை மகளின்  கல்லறை  வாசகம்.* "இங்கு  தான்  இவள்  தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு  செய்யாதீர்கள், பாவம்  இனி  வர முடியாது  இவளால்."

இந்தியை இடித்துக்கட்டுதல்

‘ பிரெஞ்ச் மக்களே, வாருங்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வோம். ஆங்கிலேயர்களைப் பார்த்து உம் ஆங்கிலம் எமக்குத் தேவையில்லை எனச் சொல்வதற்கு நமக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்...’  பிரெஞ்சு மொழியில் ஆங்கிலம் கலப்பதற்கு எதிரானப் போராட்டத்தில் அறிஞர் டி.எஸ். எலியட் ஆற்றிய உரை இது. அவர் உரையாற்றி முடித்து கீழே இறங்குகையில் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சு மொழியைக் காப்பாற்ற போராடும் நாம் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ளச் சொல்வது நம் மொழிக்குச் செய்கிறத் துரோகம் இல்லையா...?. எலியட் சொன்னார். ‘வேண்டும் என்பதை நம் மொழியில் சொல்லத் தெரிந்த நாம் , வேண்டாம் என்பதை அவன் மொழியில் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்...’  தமிழர்களின் தந்தை ஈ.வெ.ரா. பெரியார் தன் வாழ்நாட்களின் பிற்பகுதியை இந்தி எதிர்ப்பிற்காகக் கழித்தவர். ஆனால் ஒரு முரண் என்னத்தெரியுமா..? அவர் தொடக்கத்தில் தன் சொந்த செலவில் இந்திக்கென்று பள்ளி நடத்தியவர் அவர். 1922 ஆம் ஆண்டு அவரது வீட்டிற்கு டாக்டர் அன்சாரி, விட்டல்பாய் படேல், பண்டித மோதிலால் நேரு முதலிய காங்கிரஸ்க்காரர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் வந...

நெகிழிச்சோறு

ஆயக் கலை அறுபத்து நான்கில் முதன்மையானக் கலை சமையல் கலை. பிளாஸ்டிக் அரிசி சந்தைக்கு வந்திருக்கிறது என்கிற புரளியைத் தொடர்ந்து பிளாஸ்டிக் அரிசியைச் சமைத்து சோறு ஆக்குதல் அறுபத்து ஐந்தாவது கலையாகி இருக்கிறது. இதுநாள் வரைக்கும் அறுபத்து ஐந்தாவது கலையாக இருந்த கணினி கலை அறுபத்து ஆறாவது கலையை நோக்கி தள்ளப்படுகிறது. பிளாஸ்டிக் அரிசியை சீனாவின் கொடை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியா சீனா இரண்டு நாடுகளுக்கு இடையேயான பகைமை பிளாஸ்டிக் அரிசியை இந்தியாவிற்குள் அனுமதிப்பதன் வாயிலாக முடிவிற்கு வருகிறது. இனி இந்தியாவின் ஒற்றை மொழி இந்தி , ஒற்றை மதம் இந்து , ஒற்றை உணவு பிளாஸ்டிக் சோறு....இந்த வரிசையில் இந்தியாவின் ஒற்றை எதிரி பாகிஸ்தான். உலகின் முதல் மாற்று அறுவைச் சிகிச்சை மனிதத் தலையிடத்தில்  யானையின் தலையைப் பொறுத்திய அறுவை சிகிச்சைதான் என உலகிற்கு பறைசாற்றிய நம்  விஞ்ஞானிகள் இன்னொரு கண்டுப்பிடிப்பை கண்டறிந்துள்ளனர். அது மணிமேகலை காப்பியக் காலத்து யானை பசியுடைய காயசாண்டிகை கடைசியில்  பசியாறியது இந்த பிளாஸ்டிக் அரிசி சோற்றில்தான். அத்துடன் அவள் அட்சயப்பாத்திரத்தில் சமைத்து எடுத...

பானை

பானை - இரா. முருகன். 1997 ல் கணையாழி இதழில் பிரசுரமான இக்கதை நடுநிசியில் ஒரு பேய்ப்படத்தை பார்த்த திருப்தியைக் கொடுத்தது. மூக்குப்பொடி கடை நடத்தும் ஒரு குடும்பம் ஓட்டல்கடை நடத்துகிறது. வீட்டின் மேல்மாடி எப்பொழுதும் சாத்தப்பட்டிருக்கிறது. அதில் தாத்தாவின் அம்மா இறந்தும் ஆவியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என அக்குடும்பம் நினைக்கிறது. அதற்கான சமிஞ்கை அவ்வபோது தென்படுகிறது. ஓட்டல் கடை வைத்ததற்கு பிறகு பலரும் கடைக்கு வருகிறார்கள். கிளார்க் மீது கடை நடத்தும் ரெங்கமாளுக்கு கள்ளத்தொடர்பு ஏற்படுகிறது. கணவனுக்கு தெரியாமல்  அவனுடன் அவள் மேல் வீட்டில் கூடுகிறாள். ஒரு நாள் உருவமற்ற பெரியம்மா என்கிற ஆவி அவளுடன் சண்டைப்பிடிக்கிறது. அவளது செய்கைகளைச் சுட்டிக்காட்டுகிறது. அவளை கிணற்றடிக்கு அழைத்துச்சென்று ஆள் மயக்கும் நீண்ட கூந்தலை அறுக்கிறது. இத்தனையும் அவளது கணவன் இறந்த பதினைந்தாம் நாள் நடக்கிறது. கடைசியில் நடுநிசியில் மாடிப்படியேறும் அவள் அந்த ஆவி இருப்பதாக கருதும் பானை உடைத்து கிணற்றுக்குள் எறிந்து கதறி அழுகிறாள் ரெங்கம்மாள். ஒரு ஆவியைக் கொள்வதை உண்மையில் ஒரு மனிதனைக்கொன்ற குற்ற உணர்வாக அவள...
போர்க்கால கதைகள் தொகுப்பு -தி.ஞானசேகரன் ஈழப்போர் ஏற்படுத்திய பல்லேறு அனர்த்தங்களை இக்கதைகள் பேசியிருக்கின்றன. இத்தொகுப்பில் ஒற்றைக்கூவல் - டிலான் ஜெயந்தன், பிறந்த மண் - ராணிசீதரன், காட்டுப்பூனைகளும் பச்சைக்கிளிகளும் - தி.ஞானசேகரன், இடிபாடுகள் - செ.கந்தசாமி, ஒரு பிடி சோறு - ஓ.கே.குணநாதன், அடையாளம் - தாமரைச்செல்வி, பழுதி- சுதர்மமகாராஜன்,கடற்குருவிகள்- குமுதினி கலையழகன்,நாம் யார் - முல்லையூரான்,அது உடைந்து விடக் கூடாது - யோகேஸ்வரி சிவப்பிரகாசம், தொலையும் பொக்கிசங்கள் - இராஜேஸ்கண்ணன்,அலைகடல் தாண்டி- செங்கை ஆழியான், இன்பம் எங்கே - ச. முருகானந்தம் , பொட்டு - வே. சுப்பிரமணியம், காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம் - தாட்சாயணி, சந்தேகக் கைதிகள் - கே.விஜயன் ,இத்து வரும் சுமைதாங்கிகள் - இராமு சரவணமுத்து ,மணல் - நீரங்க விக்ரசிங்ஹ, யாரிடம் நோவேன்?- சந்திரகாந்த முருகானந்தன் , ஆத்மவிசாரம் - அ.ச.பாய்வா ஆகிய கதைகளின் தொகுப்பாக இக்கதைத்தொகுப்பு வந்திருக்கிறது. மித்ர வெளியீடு. இக்கதைகள் யாவும் ஞானம் இதழில் பிரசுரமானக் கதைகளாக இருக்கிறது. கண்ணப்ப நாயனார் தான் சமைத்து சுவைத்த கறிகளில் நல்லக் கறிகளை சிவனு...