யாரோ ஒருத்தியின் கடிதம் (குறுநாவல் ) - ஸ்டெபான் ஸ்வெய்க் @தமிழில் - ராஜ்ஜா
புகழ்பெற்ற நாவலாசிரியர் ரா...வெளியூர் சென்று திரும்பி வருகையில் வீட்டில் குவிந்து கிடக்கும் கடிதத்தில் ஒன்றைப் பிரித்து வாசிக்கிறார். அக்கடிதம் தன் பெயரைக் குறிப்பிடாத ஒரு பெண்ணின் கடிதமாக இருக்கிறது.
மகன் இறந்துகிடக்க அவனைச் சுற்றி மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருக்க அந்த வெளிச்சத்தில் எழுதி அனுப்பிய கடிதமாக அக்கடிதம் இருக்கிறது. சின்ன வயதிலிருந்து உங்களை நான் காதலித்து வந்ததாகவும் உங்களைத் தொட , பார்க்க , ரசிக்க , சிரிக்க இருந்ததாகவும் நீங்கள் வசிக்கும் அதே வீட்டில்தான் நான் என் தாயுடன் வசித்து வந்ததாகவும் பிறகு என் தாய் வேறொரு திருமணம் செய்துகொண்டதும் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகவும் நீள்கிறது கதை.
ஒரு நாள் எழுத்தாளரை நேரில் சந்திக்கிறாள். தனிமையில் இருக்க அவளை அவன் அழைக்கிறான். அவனுக்கு அவளைக் கொடுக்கிறாள். அந்த குழந்தைதான் இறந்தக் குழந்தை என்பதை வாசிக்கையில் கதை திருப்பம் கொள்கிறது.
என்னை நீங்கள் சந்திக்க வர வேண்டாம். ஒரு வேளை வந்தால் நான் இறந்தே இருப்பேன். உங்கள் பிறந்த நாள் அன்று எப்பொழுதும் நான் வெள்ளை ரோஜா அனுப்பி வைப்பேன். இனி என்னால் அனுப்பி வைக்க முடியாது. நீங்களே பூஞ்சாடியில் ஒரு வெள்ளை ரோஜாவை வைத்து என் நினைவூட்டிக்கொள்ளுங்கள் என்பதாக கடைசி பத்தியை நோக்கி நகரும் கடிதம் உங்களை நான் காதலிக்கிறேன்...மனதார நேசிக்கிறேன்...என் அன்பே நான் போகிறேன்...
என்பதோடு கதை முடிகிறது.
இக்குறுநாவலையொட்டி ஆசிரியரைக்குறித்தும் சொல்லியாக வேண்டும். யூதர். ஜெர்மனியிலிருந்து விரட்டப்பட்டவர் அமெரிக்கா , பிரேசில் என அடைக்கலம் தேடி கடைசியில் தற்கொலைக்கு உள்ளானவர். சிக்மண்ட் ப்ராய்டின் சீடர்.
Letter from an unwoman.
தமிழினி பதிப்பகம்.

கருத்துகள்
கருத்துரையிடுக