போர்க்கால கதைகள்
தொகுப்பு -தி.ஞானசேகரன்
ஈழப்போர் ஏற்படுத்திய பல்லேறு அனர்த்தங்களை இக்கதைகள் பேசியிருக்கின்றன. இத்தொகுப்பில்
ஒற்றைக்கூவல் - டிலான் ஜெயந்தன், பிறந்த மண் - ராணிசீதரன், காட்டுப்பூனைகளும் பச்சைக்கிளிகளும் - தி.ஞானசேகரன், இடிபாடுகள் - செ.கந்தசாமி, ஒரு பிடி சோறு - ஓ.கே.குணநாதன், அடையாளம் - தாமரைச்செல்வி, பழுதி- சுதர்மமகாராஜன்,கடற்குருவிகள்- குமுதினி கலையழகன்,நாம் யார் - முல்லையூரான்,அது உடைந்து விடக் கூடாது - யோகேஸ்வரி சிவப்பிரகாசம், தொலையும் பொக்கிசங்கள் - இராஜேஸ்கண்ணன்,அலைகடல் தாண்டி- செங்கை ஆழியான், இன்பம் எங்கே - ச. முருகானந்தம் , பொட்டு - வே. சுப்பிரமணியம், காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம் - தாட்சாயணி, சந்தேகக் கைதிகள் - கே.விஜயன் ,இத்து வரும் சுமைதாங்கிகள் - இராமு சரவணமுத்து ,மணல் - நீரங்க விக்ரசிங்ஹ, யாரிடம் நோவேன்?- சந்திரகாந்த முருகானந்தன் , ஆத்மவிசாரம் - அ.ச.பாய்வா ஆகிய கதைகளின் தொகுப்பாக இக்கதைத்தொகுப்பு வந்திருக்கிறது. மித்ர வெளியீடு.
இக்கதைகள் யாவும் ஞானம் இதழில் பிரசுரமானக் கதைகளாக இருக்கிறது. கண்ணப்ப நாயனார் தான் சமைத்து சுவைத்த கறிகளில் நல்லக் கறிகளை சிவனுக்கு படைத்ததைப்போல தொகுப்பாசிரியர் முதல் ஐம்பது இதழ்களின் கதைகளில் தேர்ந்தக் கதைகளைத் தொகுத்துள்ளார். தொகுப்பாசிரியர் முன்னுரையில் சொல்லியிருப்பதைப் போல தமிழில் வெளிவந்திருக்கும் தொகுப்புகளில் சிறந்த சிறுகதைத் தொகுப்பு இத்தொகுப்புதான் என்பதில மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதே நேரம் இக்கதைகள் யாவும் ஒருவரின் கதைகளாக இருந்திருக்குமாயின் இத்தொகுப்பு இன்னும் சற்று கூடுதல் கவனத்தை பெறும்...
இத்தொகுப்பில் காட்டுப்பூனைகளும் பச்சைக்கிளிகளும் என்கிற சிறுகதை சொல்லப்பட்டிருக்கும் விதத்தால் கவனம் பெறுகிறது. பள்ளிக்கு செல்லும் ஒரு தமிழ் மாணவியை ஒரு சிங்களவன் காமப்பசியாறுவதை வீட்டில் வளர்க்கும் ஒரு பச்சைக்கிளியை ஒரு காட்டுப்பூனை கடிச்சுக்குதறுவதுடன் ஒப்பிட்டு கதையாக்கம் செய்யப்பட்டிருக்கும் விதம் புதுமையானது. இக்கதையில் வரும் மியாவ்....பச்சைக்கிளியோடு நம்மை பதைக்க வைக்கிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக