வியாழன், 20 ஜூலை, 2017

பானை

பானை - இரா. முருகன்.

1997 ல் கணையாழி இதழில் பிரசுரமான இக்கதை நடுநிசியில் ஒரு பேய்ப்படத்தை பார்த்த திருப்தியைக் கொடுத்தது.
மூக்குப்பொடி கடை நடத்தும் ஒரு குடும்பம் ஓட்டல்கடை நடத்துகிறது. வீட்டின் மேல்மாடி எப்பொழுதும் சாத்தப்பட்டிருக்கிறது. அதில் தாத்தாவின் அம்மா இறந்தும் ஆவியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என அக்குடும்பம் நினைக்கிறது. அதற்கான சமிஞ்கை அவ்வபோது தென்படுகிறது.
ஓட்டல் கடை வைத்ததற்கு பிறகு பலரும் கடைக்கு வருகிறார்கள். கிளார்க் மீது கடை நடத்தும் ரெங்கமாளுக்கு கள்ளத்தொடர்பு ஏற்படுகிறது. கணவனுக்கு தெரியாமல்  அவனுடன் அவள் மேல் வீட்டில் கூடுகிறாள்.
ஒரு நாள் உருவமற்ற பெரியம்மா என்கிற ஆவி அவளுடன் சண்டைப்பிடிக்கிறது. அவளது செய்கைகளைச் சுட்டிக்காட்டுகிறது. அவளை கிணற்றடிக்கு அழைத்துச்சென்று ஆள் மயக்கும் நீண்ட கூந்தலை அறுக்கிறது. இத்தனையும் அவளது கணவன் இறந்த பதினைந்தாம் நாள் நடக்கிறது. கடைசியில் நடுநிசியில் மாடிப்படியேறும் அவள் அந்த ஆவி இருப்பதாக கருதும் பானை உடைத்து கிணற்றுக்குள் எறிந்து கதறி அழுகிறாள் ரெங்கம்மாள்.
ஒரு ஆவியைக் கொள்வதை உண்மையில் ஒரு மனிதனைக்கொன்ற குற்ற உணர்வாக அவளது அழுகை இருக்கிறது என்பதுதான்  இக்கதையின் சிறப்பு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக