சித்தி - மா. அரங்கநாதன்
சித்தி என்கிற தலைப்பை படித்ததும் அது சித்தி பற்றிய கதை என்று நினைத்துவிட்டேன். இக்கதையில் சித்தி என்பது ' அதுவாகவே ஆகுதல்'.
இக்கதை தனித்துவமாக எழுதப்பட்டிருக்கவில்லை. ஆனால் கதை சொல்லி நிறுத்தும் செய்தி தத்துவத்துவமானது.
ஒரு இளைஞன் எந்நேரமும் ஓடுபவனாக இருக்கிறான். அவனது ஓட்டத்தைக் கண்டு பிரமிக்கும் ஒருவர் அவனிடம ஒரு முகவரியைக் கொடுத்து ஒரு பெரியவரிடம் அனுப்பி வைக்கிறார். பெரியவர் முன்னாள் தடகள வீரர். இவனை வைத்து ஒலிம்பிக் பதக்கம் பெற்றுவிட வேண்டும் என நினைத்து பயிற்சி கொடுக்கிறார். தகுதி பெறுகிறான் அவன். பத்திரிகையாளர் பேட்டி எடுக்கிறார்கள். பதக்கம் பெற்றுவிடுவீர்களா....உங்களால் நாடு பெருமையடையுமா....
எல்லா கேள்விக்கும் அவன் 'எனக்கு ஓட்டம் பிடித்தமான ஒன்று...' என்றே சொல்லி வருகிறான். பயிற்சியாளர் அதிருப்தி அடைக்கிறார்.
பயிற்சியாளரிடம் அவன், எனக்கு நிலவின் மீது ஓட ஆசை. இப்போதைக்கு அதோ அந்த மலையின் உச்சிக்கு ஓட ஆசை.....என தன் ஆசையைத் தெரிவிக்கிறான். அதற்கு அந்த பயிற்சியாளர் சொல்கிறார் ' ஆம்...ஓடு...ஓடிப்போய் உச்சியிலிருந்து குதித்து செத்துப்போ...' என்கிறார்.
இக்கதை சொல்லவரும் செய்தி ஒன்றுதான். அவன் ஓட்டத்தை ஓட்டமாக பார்க்கிறான். பெரியவர் ஓட்டத்தில் ஒலிம்பிக் பதக்கத்தைப் பார்ககிறார்..

கருத்துகள்
கருத்துரையிடுக