தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்படும், சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு போட்டிக்கு 2016ல் வெளியிடப்பட்ட நூல்கள், 33 வகைப்பாடுகளின் கீழ் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு வகைப்பாட்டில், ஒரு நூல் தேர்வு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு 30 ஆயிரம் ரூபாய்; பதிப்பகத்தாருக்கு, 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் விபரங்களை, www.tamilvalarchithurai.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை எழும்பூர், தமிழ் சாலையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்திலும், நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, விண்ணப்பம் பெறலாம்; ஜூலை 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.