ஜஸ்டிஸ் சிரில் ரெட்க்ளிப் , அறையில் தன்னந்தனியாக உட்கார்ந்திருந்தார் . அந்தஅறை நூல்களால் நிரப்பப்பட்டிருந்தது . இந்துஸ்தான் , அதன் பரந்து விரிந்த எல்லை , பண்பாடு , கலாச்சாரம் பற்றி முழுமையாக விவரிக்கும் நூல்கள் அதிகமாக இருந்தன . பாபரின் சுயசரிதை பாமர்நாமா , பாபரின் மகள் குல்பதன் எழுதிய ஹுமாயின் நாமா , அக்பரின் ஆட்சிப்பகுதியை விவரிக்கும் அப்துல் ஃபஸல் எழுதிய அக்பர்நாமா நூல்களின் ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் விரித்து மேசையின் மீது கவிழ்க்கப்பட்டிருந்தன . அறையின் மையத்தில் மற்றொரு மேசை இருந்தது . அதுசதுர வடிவிலானது . அதன் பரப்பைமுழுமையாக அடைத்து இந்துஸ்தானின் நிலவரைப்படம் விரிக்கப்பட்டிருந்தது . நர்மதை நதி்க்கு வடக்கு நிலப்பகுதிகளே இந்துஸ்தான் . அதற்கான ஆதாரத்தை அவர் பல்வேறு நூல்களில் அடிக்கோடிட்டிருந்தார் . இந்துஸ்தான் என்பதைத்தான் இந்திய தலைவர்கள் வட இந்தியா என உச்சரித்துக்கொண்டிப்பதையும் அவர் அறிந்தே வைத்திருந்தார் . மேசையில் விரிக்கப்பட்டிருந்த நிலவரைப்படம் 1 : 8,300,000 மைல்என்கிற அளவுக்கோளுடன் வரையப்பட்டிர...