முன்னத்தி ஏருக்கோர் அஞ்சலி ------------------------------ ------------------------------ ----------------------------- பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தேறிய சம்பவம் இது. நான், நூலகத்திற்கு தொடர்ந்து செல்லத் தொடங்கிய காலம் அது. நூலகத்தில் ஆ னந்த விகடன் இதழ் இருந்தது. அதில் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய சிறுகதையொன்று பிரசுரமாகியிருந்தது. அடுத்து கல்கி இதழைப்பிரித்தேன். அதிலும் அவரது கதை இருந்தது. அடுத்ததாக என் கவனம் குமுதத்தின் பால் சென்றது. அதில் பிரசுரமாகியிருந்த கதையும் அவருடைய கதையாகவே இருந்தது. முந்தைய வாரம் குமுதம் இதழில் புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை வாசித்திருந்தேன். அதற்கும் இந்த வாரம் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய சிறுகதை மூன்று இதழ்களில் பிரசுரமாகியிருந்ததற்கும் நான் விபரீதமாக யோசித்தேன். இக்கதைகள் மூன்றும் மேலாண்மை பொன்னுசாமியின் நினைவுச்சிறுகதைகள் என்று. மூன்று கதைகளை வாசித்ததும் ம...