முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சத்ரபதி தாஜ்மகால்

சிறுகதை  வகுப்பறைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக வகுப்பறையின் கதவை இறுக அடைத்துகொண்டேன். மேல், கீழ் தாழ்ப்பாழ் இட்டுக்கொண்டேன். இத்தகைய இறுக அடைத்தல் எனக்குத் தேவையென இருந்தது. அருகாமை வகுப்புகளின் இரைச்சலிலிருந்து என் வகுப்பு மீளவும், என் சரித்திரப் போதனை அடுத்த வகுப்பிற்குக் கேட்காமல் இருக்கவும் இந்த கதவடைத்தலும் தாழ்ப்பாழ்கள் இடுதலும் எனக்கு தேவைப்பட்டிருந்தது. நான் எந்த வகுப்பையும், எந்தப் பாடவேளையையும் யோகா இல்லாமல் தொடங்குவதில்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகள் என் வகுப்பு மாணவர்கள் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் எடுப்பதற்கும், நூறு சதம் தேர்ச்சி பெறுவதற்கும் காரணம் இந்த யோகாதான். நான் என்றேனும் ஒரு நாள் பாடம் நடத்தாமல் கூட இருந்துவிடுவதுண்டு. ஆனால் யோகா வகுப்பு நடத்தாமல்  இருந்ததில்லை. நான், என் வகுப்பிற்குள் நுழைகையில் என் வகுப்பு மாணவர்கள் தாமாகவே முன் வந்து யோகா செய்யத் தொடங்கிவிடுவார்கள். யோகாவிற்கு நான் ஒதுக்கும் நேரம் ஐந்து நிமிடங்கள். அவ்வளவே! யோகா முடிந்ததும் அடுத்து தேச நல உறுதிமொழி. நான் கண்கள் திறந்துவைத்துகொண்டு சொல்வதை மாணவர்கள் கண்களை மூடிக...

2018 இல் நான்

சிறந்த எழுத்தாளர் விருது  29 ஆவது ஆண்டாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நடத்தும் பாரம்பரியமிக்க  புத்தகக் கண்காட்சி நெய்வேலியில் நடந்துவருகிறது. இக்கண்காட்சியில்  ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர் , பதிப்பாளர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு விருதும் பொற்கிழியும் வழங்குவது வழக்கம். அவ்வகையில்  இவ்வாண்டு  முத்தன் பள்ளம் நாவலாசிரியர் அண்டனூர் சுரா அவர்கள் சிறந்த எழுத்தாளராகத் தேர்வு செய்யப்பட்டு  அவருக்கு விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டது.  18.08.2017 சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.எ அரங்கில் நடைபெறும் புத்தகக் கணகாட்சியில்   பாரதி புத்தகலாயம் அரங்கில் அண்டனூர் சுராவின் கொங்கை நாவல் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை  நடிகரும் முற்போக்கு செயற்பாட்டாளருமான தோழர் ரோகிணி வெளியிட  , மாநில ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் க.சு.சங்கீதா பெற்றுகொண்டார். அடுத்தடுத்த பிரதிகளை கவிஞர் ஆர்.நீலா, வெய்யில், மு.கீதா, விஜயலெட்சுமி, உமா மோகன் , மனுஷி, பெருமாள் ஆச்சி, வடுவூர் சிவ. முரளி எனப் பலரும் ...

ஆண் எழுதிய பெண் புத்தகம்! | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories http://www.noolveli.com/detail.php?id=932

ஆண் எழுதிய பெண் புத்தகம்! | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories http://www.noolveli.com/detail.php?id=932

சிறுகதை - வீட்டில் யாருமில்லை

தான்  தங்கியிருக்கும் ஓட்டலின் கீழ்த்தளத்தில் நடிகை சுஷ்மிதா தங்கியிருக்கிறச் செய்தியை தன் அதீதமான மோப்பச் சக்தியால் கண்டறிந்தார் அமைச்சர் சுந்தரலிங்கம். அவர், எந்த ஓட்டலுக்குச் சென்றாலும் இங்கு யார், யாரெல்லாம் தங்கியிருக்கிறார்கள் என்பதை தன் அனுபவத்தின் வாயிலாக கண்டுப்பிடித்துவிடும் அசாத்திய திறமைமிக்கவர். அன்றைய தினம் நட்சத்திர ஓட்டல் இருந்த படபடப்பு, சுறுசுறுப்பு,,. இதை வைத்துப் பார்க்கையில் ஒரு நடிகர் அல்லது நடிகை இவர்களில் யாரேனும் ஒருவர்தான்  தங்கியிருக்க வேண்டும் என்பதாக ஊகித்தார். அவரது ஊகத்தின் படியே திரைத்துறையைச் சார்ந்தவர்களின் நடமாட்டம் ஓட்டலில் அதிகமாக இருந்தது. ஒரு இளைஞனைக் கூப்பிட்டு கேட்டார் ‘ தம்பி , பக்கத்தில் படம் சூட்டிங்க் எதுவும் நடக்குதா..?’ ‘ இம்...’ என்றவாறு அவன் பூரித்தான்.  ‘ ஹீரோ, ஹீரோயின்...?’ ‘ வினோத், சுஷ்மிதா’ சுந்தரலிங்கம் இருவரையும் மனதிற்குள் ஓடவிட்டு பார்த்தார். சுஷ்மிதா சினிமா துறையில் உச்சத்தில் இருக்கின்ற நடிகை. அதை நினைக்கையில் அவருக்கு பெருமிதமாக இருந்தது. நேராக அவர் வரவேற்பு அறைக்குச் சென்று தானொரு அமைச்சர் என்பதைக் காட்டி...

மாற்றுத்திறனாளி எழுத்தாளர்களுக்கு....

அசோகமித்திரன் சிறுகதைப்போட்டி - 2018

சிறுகதைப்போட்டி அறிவிப்பு

சிறுகதைப் போட்டி சென்னை தினத்தை முன்னிட்டு கிழக்கு பதிப்பகம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018  பற்றிய அறிவிப்பு. விருப்பமுள்ளவர்கள் அவசியம் கலந்து கொள்ளவும் •••• வணக்கம். சென்னை தினம் (மெட்ராஸ் டே) சென்னையால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கூட்டு நிகழ்வாகும். இந்நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறுகதைப் போட்டியை நடத்த கிழக்கு பதிப்பகம் முடிவெடுத்துள்ளது.அனைவரும் இந்த சிறுகதைப் போட்டியில் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். * சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். * சிறுகதைப் போட்டிக்கு தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் ஜூலை 20, 2018. * வெற்றி பெற்ற சிறுகதைகள் பற்றிய அறிவிப்பு ஆகஸ்ட் 4ம் வாரம் அறிவிக்கப்படும். * யூனிகோட் எழுத்துருவில் டைப் செய்து மின்னஞ்சலில் கதைகளை அனுப்பி வைக்கவேண்டும். * அனுப்பி வைப்பவரின் நிஜப் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், இமெயில் முகவரி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். * கதையை தட்டச்சு செய்து பிரிண்ட் எடுத்து தபால் மூலமும் அனுப்பலாம். கதைகள் தேர்ந்தெடுக்கப்படாத பட்சத்தில் அதைத் திருப்பி அனுப்ப இயலாது. எனவே தேவையான பிரதிகளை எடுத்து வை...

எழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு

Entries invited for The Hindu Prize 2018 http://www.thehindu.com/books/entries-invited-for-the-hindu-prize-2018/article23543168.ece via @the_hindu கடைசி தேதி மே - 15 முகவரி The hindu prize -2018 ( Fiction / Non - fiction) Shalini Arun Sr,Associate editor The hindu Kasturi building 859 - 860 , Anna salai Chennai - 02

அனல் காற்று

நாவல் - அனல்காற்று @ஜெயமோகன் பாலு மகேந்திரா எடுக்கவிருந்த படத்திற்காக தான் எழுதிய கதை இது என்பதாக முன்னுரை பேசுகிறது. ஒரு வேளை எடுத்திருந்தால் படம் நன்றாக ஓடவும் செய்திருக்கும். இந்நாவலை வாசித்ததும் எனக்கு அவள் அப்படித்தான் என்கிற திரைப்படம் நினைவிற்கு வந்தது. அப்படத்தின் சிறப்பாக நான் பார்ப்பது திரைபடத்தின் உரையாடல். படம் முழுக்கவும் கதாநாயகி பேசிக்கொண்டிருப்பாள். அப்படியாகவே இந்நாவல் முழுக்கவும் அருண் ,  தன்னை விட்டு பிரிந்து சென்ற சுசியை நினைத்து மருத்துவமனையில் தனக்குத்தானே பேசுவதுதான் கதை. தன்னை விரும்பும் சுசியிடம் தான் விரும்பும் சந்திரா குறித்து பேசுகிறான் அருண். சநதிரா , விதவைப்பெண். அவளுக்கும் அவனுக்குமான நெருக்கத்தை அப்படியே படமாக்கியிருந்தால் படத்திற்கு A சான்றிதழ் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. இதுதவிர fuck , boobs வார்த்தைகள் வேறு. நாவலின் ஓரிடத்தில் தாய்க்கும் ஜோ என்கிற கதாப்பாத்திரத்திற்கும் இடையேயான நெருக்கத்தையும் பேசுகிறது. உரையாடல்கள் அருமை. சில இடங்கள் காதலையும் , காமத்தையும் , தத்துவத்தையும் பேசுகிறது. நாவலின் முடிவு நாடகத்தனம். சந்திரா அருணிடமிரு...

இந்திய சிறந்த சிறுகதை - 7

இந்திய சிறந்த சிறுகதை - 7 இரண்டு புத்தகங்க மலையாளம் - அசோகன் சருவில். ஒரு திருடன் திருடுவதற்கு ஒரு வீட்டைத் தேர்வு செய்கிறான். முன்னோட்டமாக அவ்வீட்டிற்குச் செல்கிறான். ஒரு பாட்டியும் தாத்தாவும் இருக்கிறார்கள். பாட்டியின் காதில் இரண்டு பெரிய நகைகள். ' நீ யாரப்பா ...? ' வளைந்து குனிந்து கண்களுக்கு கைக்கொடுத்து கேட்கிறாள். ' நான் யாரெனச் சொல்லும் பார்க்கலாம்...' யோசிக்கிறாள். ' திருச்சபையிலிருந்து பாதிரியார் அனுப்பினாரா..?' 'ம்...' ' என்னால நடக்க முடியல... எப்படியாம் நான் திருச்சபைக்கு போறது. கூப்பிட்டு கூப்பிட்டு விடுகிறார்.  எனக்கொரு உதவி செய்யேன்...' ' என்ன உதவி...?' ' இந்த பைபிள் அவர் கொடுத்தது. அவர்கிட்டேயே கொடுத்திடு...' வாங்கிக்கொள்கிறான். அடுத்து அதே வீட்டில் தாத்தா நடக்க முடியாமலிருக்கிறார். அவரிடம் செல்கிறான். ' யாரப்பா நீ...?' ' கண்டுப்பிடிங்க பார்க்கலாம்...' ' வாலிப சங்கத்து பையனா நீ...?' 'ம்..' ' கட்சி நல்லா போய்க்கிட்டிருக்கா...?' 'ம்...'...

நூல்கள் வரவேற்கப்படுகின்றன

நூல்கள் வரவேற்கப்படுகின்றன கடைசி தேதி மார்ச் 31

நினைத்தலுக்கு எதிரான ஓர் ஒடுக்குமுறை

மகர்’ இச்சொல்லிற்கான அரசியல் அதிர்வு இன்றைக்கு வரைக்கும் இருக்கத்தான் செய்கிறது . அதற்குக்காரணம் பீமாராவ் ராம்ஜி என்கிற அம்பேத்கர் பிறந்தது ‘மகர்’ சமூகத்தில் என்பதால் அல்ல !  இந்திய வரலாற்றை காலக்கோட்டில் வரைய முற்படுகையில் மகர் தவிர்க்க முடியாத அளவீடாக மாறிப்போனதுதான் இதற்கு காரணம் !  பிளாசிப்போர் ,  பிரிட்டிசாரின் கிழக்கிந்திய கம்பெனி ,  இராணுவம் ,  மகாராஜா ரவீந்திர சிங் ,  ஆங்கிலோ  -  பேஷாவா போர் ,... இவற்றின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டுகையில் மகர் இனம் தவிர்த்து வரலாற்று பக்கங்கள் நீள்வதில்லை . அவ்வரிசையில்  2018  ஆங்கிலப் புத்தாண்டு அன்று நடந்தேறிய பீமா  -  கொரேன் கலவரம் சேர்ந்து மகர் வரலாற்று பக்கங்களைக் கூட்டியிருக்கிறது . நமது தமிழ் பத்திரிகைகள் இச்சம்பவம் குறித்து அவ்வளவாக கவலைப்பட்டதாகத் தெரியவில்லை . பத்திரிகைகளை நாம் கோபித்துக்கொள்வதற்கொன்றுமில்லை .  பீமா  -  கொரேகன் கலவரத்தை விடவும் முக்கியமானது நமக்கு ரஜினியின் அரசியல் பிரவேசம் .  டெல்லியிலிருந்து வாக்குக்கேட்க தனி விமானத்தில் வரும...