முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் வளர்ச்சித்துறை

கடைசி தேதி ஜூலை 31

நூல்கள் வரவேற்கப்படுகின்றன

நாவல்கள் வரவேற்கப்படுகின்றன

புதின ஆசிரியர் கவனத்திற்கு....

கவிதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன

நண்பர்களே, 2019-ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருதிற்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. 2016 – ஆம் ஆண்டிலிருந்து வெளியான கவிதை தொகுப்புகளைப்  பரிந்துரைக்கலாம். கவிதை தொகுப்புடன் பரிந்துரைக்கடிதம் சேர்த்து அனுப்பவும். கவிதை தொகுப்புடன்  பரிந்துரைக்கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை. 38/22, நான்காவது பிரதான சாலை கஸ்தூரி பாய் நகர், அடையாறு, சென்னை - 600 020. அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 31.03.2019 அன்புடன் , வேல் கண்ணன், கார்த்திகேயன் ராமனுஜம். அறங்காவலர். கவிஞர் ஆத்மநாம் அறக்கட்டளை, சென்னை 20.

விமர்சனங்கள்

 05.01.2019 சபரிமலை விவகாரம் - தினகரன் இதழ் தலையங்கம் கடலுக்குள் பெண்கள் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது, பிராமணர்கள் கடல் தாண்டி வெளிநாடு செல்லக்கூடாது,  பெண்கள் விண்வெளிக்கு பயணிக்கக்கூடாது, இடுகாட்டிற்கு பெண்கள் முச்சந்தியைத் தாண்டி செல்லக்கூடாது, பூப்பெய்த பெண்கள் அந்த மூன்று நாட்கள்  கோயிலுக்குச் செல்லக்கூடாது, ஐயப்பன் கோயிலுக்கு அத்தகைய பெண்கள் எப்பொழுதும் மாலையிட்டு  செல்லக்கூடாது  இப்படியாக இந்து மதம் கட்டமைக்கும் ஐதீகம் நிறைய உண்டு. ஐதீகம் என்பதே நம்பிக்கைகுரிய ஒன்றுதான் மறுப்பதற்கில்லை.   மூன்று வாரத்திற்கு முன்பு THE HINDU  நடுப்பக்கத்தில்   அரபிக்கடலில்  மீன் பிடிக்கும் ஒரு மீனவப் பெண்ணைப் படம் பிடித்து இந்தியாவில் நடுக்கடலில்  மீன் பிடிக்க உரிமைப் பெற்ற முதல் பெண் என்கிற குறிப்புடன் பேட்டி வெளியாகியிருந்தது. விண்வெளிக்குச் சென்று திரும்பி பெண்களின் பட்டியல் நிறைய உண்டு. இடுகாட்டில் பிணத்தை எரிக்கும் பெண்களை நிறைய பார்த்திருக்கிறோம். இதையெல்லாம் வேறு வழியே இல்லாமல் அனுமதித்த நம்மால் ஐயப்பன் கோயிலுக்குள் அன...

2019

ஜனவரி - சங்கு இதழில்  ஜனவரி - அமுதசுரபி இதழில் பேசும் புதிய சக்தி இலக்கிய விழாவில் அழகிய பெரியவனின் ' அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார் ' நூலினை அறிமுஸகம் செய்து பேசிய போது...ஜனவரி இதழில் பிப்ரவரி -

மூங்கில் வனம் - மூன்றடி கானம்

கோவையில்  ஒரு நிகழ்வில் கவிதை நூல் குறித்து பேசிய கவிஞர் இராகவன்  கவிதைகளான கவிதைகள் குறித்து பேசிய அவர் சில கவிதைகளை எடுத்தாண்டார். அதிலொரு கவிதை யானை குறித்த கவிதையாக இருந்தது.  அவர் ஒப்பித்த வேகத்திற்கு என்னால்  அதை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும் கவிதையின் ஒற்றைச் சொல் எனக்குள் தொண்டையில் சிக்கிக்கொண்ட மீன் முள்ளைப்போல வருடிக்கொண்டே இருந்தது. பழனி இலக்கிய சந்திப்பில் கிடைத்த புதிய நட்பான கூடல் தாரிக்கின் மூங்கில் வனம் தொகுப்பில் அக்கவிதை இருந்தது. வனத்தையும் வாழ்வையும் இழந்து சபிக்கப்பட்ட யானையைத்தான் ஆசிர்வதிக்க நிர்ப்பந்திக்கிறான் பாகன் இக்கவிதையில் யானையை வெறும் யானையாக மட்டும் நான் உள்வாங்கிக்கொள்ளவில்லை.  வாழ்வாதாரத்தையும் வாழ்வையும் நாளுக்கு நாள் இழந்து தவிக்கும் நம் வாழ்க்கைதான் யானையின் வாழ்த்தலாக இருக்கிறது. கூடல் தாரிக்கின் மூன்றாவது தொகுப்பு இது. கஜல் வடிவத்தில் எழுதப்பட்ட மூன்றடி நான்கடி சொற்பின்னலே மொத்தக் கவிதையும். அழகை வர்ணிக்கும் வானவில் வரிகள். மழையின் சாயலில்தான் இருக்கிறார்கள் கருணை கொண்ட மனிதர்கள் யாவரும் ம...