இன்றைய தினம் எனக்கு பிடித்தமான கட்டமைப்பில் சிற்றிதழிலும் சிறிய இதழாக சேலம் மாவட்டத்திலிருந்து ஒரு இதழ் கைக்கு வந்தது. - வேட்கை - நவீன இலக்கியப் படைப்பாளர்களுக்கான களம் என்கிற அடையாளத்தோடு வந்திருந்த இதழைப் பார்க்கையில் எனக்கும் கூட இப்படியாக ஒரு இதழைத் துவங்கிவிடலாம் என்கிற ஆசை வந்துவிட்டது. - Cool down :( இதழ் முழுக்கவே மா. அரங்கநாதனின் பேட்டி. தூண்டிலாக வீசப்பட்ட கேள்விகள். வலையில் சிக்கிய மீன்களாக பதில்கள். #உண்மையோடு உறவு வைத்துக்ககொள்ளாத எதுவும் படைப்பு ஆவதில்லை. #என்னைப் பொறுத்தவரை படைப்பிலக்கியம் சம்பந்தப்பட்ட பல சந்தேகங்களுக்கு கவிதை அம்சமே நல்ல பதிலைத் தந்தது. #உதைப்பந்து விளையாட்டிற்குக் கூட இலக்கணம் இருக்கிறது. இந்த கவிதைக்கு இல்லையா? என்கிற கேள்விக்கு உதைப்பந்து விளையாட்டிற்கு இலக்கணம் இருக்கிறது. டென்னிஸ் விளையாட்டிற்கு இருக்கிறது. கிரிக்கெட்டிற்கு விளையாட்டிற்கு இருக்கிறது. ஆனால் விளையாட்டிற்கு என்று எதாவது இலக்கணம் இருக்கிறதா? #நான் எழுதி முடித்த பின்னரே என்ன எழுதினேன் என்பது தெரிய வருகிறது...இப்படியான பல பதில்கள். பதில்களின் பிரமாத வரிச...