முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேள்வித்தீ - நாவல்

வேள்வித்தீயும் சில வேள்விகளும்

வேள்வித்தீ  - நாவலை முன் வைத்து

இதற்கு முன்பு தொ.மு.சி ரகுநாதனின் பஞ்சும் பசியும் வாசித்திருக்கிறேன். தமிழின் முதல் கம்யூனிச நாவல் என்கிற அடையாளம் அதற்கு உண்டு.  அந்நாவல் பேசும் அதே நெசவாளர்களின் பிரச்சனையைத்தான் வேள்வித்தீ என்கிற நாவலும் பேசுகிறது. பஞ்சும் பசியும் நாவலில் பஞ்சாலை தொழிலாளர்கள், முதலாளிகள் இருவரும் உழைக்கும் வர்க்கத்தினரின்  எதிரும் புதிருமான பாத்திரங்களாக படைத்திருப்பார் ரகுநாதன். தொழிலாளர்களின் உழைப்பையும் , அவர்களின் சார் உரிமைகளையும் , அதை நோக்கி முன்னெடுக்கும்  போராட்டக்களத்தையும் அந்நாவல் பேசும். மேலும் அந்நாவலில் சாதி, இனக் கூறுகளை எப்படித் துருவிப் பார்த்தாலும் கண்டடைய முடியாது. ஆனால் வேள்வித்தீ அப்படியன்று.


வேள்வித்தீ சௌராஷ்டிரா மக்கள் , அவர்களின் வாழ்வியல் பின்னணி, உறவு முறைச் சிக்கல், அவர்களின் வாழ்வாதார நெசவுத்தொழில், அத்தொழில் மீது எழுப்பப்படும் கடன் , தொழிலாளி முதலாளியாகத் துடிக்கும் தொழிற்சார் முன்னேற்றம், காதல் , விதவை, காதல் காமம் சார்ந்த நெருக்கம் , பிணக்கம் , அரசுக்கும் முதலாளிகளுக்கும் எதிராக சம்பள உயர்வு பிரச்சனை என பலதையும் இந்நாவலுக்குள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்  எம்.வி.வெங்கட்ராம்.

இந்நாவலின் கதைக்காலம் காங்கிரஸ் வீழ்ச்சிக்கும் திமுக எழுச்சிக்கும் இடைப்பட்ட காலம். ' இப்படி எல்லாம் பொறுப்பில்லாமப் பேசித்தான் , காளை மாட்டுக்குத் தினவு கொடுத்து சண்டித் தனம் செய்யுது. சாட்டையைச் சொடுக்கி, ரெண்டு வச்சாத்தான் காளை மாட்டுக்கு ரோசம் பிறக்கும்!'
' மழையிலே உதயசூரியன் கரைஞ்சுபோயிட்டுது!காளை மாட்டைப்பத்தி இவர் புகார்  செய்ய வந்துட்டாரு. எதுக்கு வீண் பேச்சு ' சுப்பையா , சாரநாதன் என்கிற இரு கிளை பாத்திரங்கள் பேசிக்கொள்வதைக்கொண்டு காலத்தை தீர்மானிக்க முடிகிறது.

சௌராஷ்டிரர்கள் தொன்று தொட்டு தமிழ்நாட்டில் வாழ்கிறவர்கள் அல்ல. அவர்களது ஆதித் தாயகம் சௌராஷ்டிரா. கஜினி முகமது இந்தியாவின் மீது படையெடுத்து, ஆலயங்களை இடித்தும், விக்கிரகங்களை உடைத்தும் ஹிந்து மதத்தையே ஒழிக்க முனைந்தான் அல்லவா? அச்சமயத்தில், சௌராஷ்டிரத்தில் இருந்த பல குடும்பங்கள் தங்கள் மதத்தையும் பண்பாட்டையும் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பிறந்த மண்ணைத் துறந்து பிழைப்பைத் தேடித் தெற்கே குடிபெயர்ந்தார்கள். அவர்கள் சாதியில் பிராமணர்கள். ஆயினும் நெசவுத் தொழிலில் வல்லவர்கள்...என்பதாக நாவல் அவர்களின் இடம்பெயர்வைக் குறிப்பிடுகிறது.
இந்நாவலின் நாயகன் கண்ணன் நெசவு தொழிலாளியாக இருந்து முதலாளியாக உயர உழைக்கிறவன். பணமே வாழ்க்கையெனக் கொண்ட உறவுகள், பணத்திற்காக அல்லாடும் மனைவி கௌசலை, பணம் உதவி செய்ய முன்வரும் ஹேமாவுடன் நெருங்கி  மனைவியிடமிருந்து விலகும் கண்ணன்,...என நெசவுத்தொழில் சிக்கலுடன் உறவுச் சிக்கலையும் இந்நாவல் பேசியிருக்கிறது.

மனைவி கௌசலை செய்து கொண்டது சரியா, அவளது இறப்பிற்குப்பிறகு கண்ணன் ஹேமாவுடன் இணைந்தது சரியா என்பதெல்லாம் சமூகத்தின் நீட்சிக்கொண்டுதான் பார்க்க வேண்டுமே தவிர வாசிப்பின் நீட்சியால்  அதை அளந்துவிட முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடர் - புதிய சொல் பழைய தேடல்

புதிய சொல் , பழைய தேடல் - 25 பரிநிர்வாணம் - அண்டனூர் சுரா 'தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும் ' - முனைவர் சு.மாதவனின் ஆய்வு நூல். தமிழ் அற இலக்கியங்கள் , பௌத்த மெய்யியல் - அறவியல் , சமண மெய்யியல் - அறவியல் என மூன்று தளங்கள் கொண்ட இந்நூலில் இப்படியாக ஓரிடம், புத்தரின் போதனைகள் கொண்ட  தொகுப்பு நூல் உதானவக்கம். அந்நூலிருந்து தத்துவப் போராட்டங்கள் எனும் தலைப்பில் புத்தர், தன் பிக்குகளுக்குச் சொல்லும் கதை. சிராஸ்வஸ்தி நாட்டின் அரசன் குருடர்களையெல்லாம் ஒன்றுத் திரட்டி , அவர்கள் முன் ஒரு யானையை நிறுத்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பைத் தடவச்சொல்லி யானை எப்படி இருக்கிறது என்று கேட்டான். அவர்கள், முறம் போலிருக்கிறது, பானை போலிருக்கிறது, கலப்பைக்கால் போலிருக்கிறது, உலக்கைப் போலிருக்கிறது,...என்று அவரவர் புரிதலை சொல்லத் துவங்க அவர்களுடையில் சச்சரவு மூண்டு கைகலப்பில் வந்து நின்றது. புத்தர் சொன்னார்  - பிக்குகளே,சமயச் சார்புடையவர்கள் கண் அவிழ்ந்தவர்கள், உண்மை எதுவென்று உணராதவர்கள். இப்படியான மாறுபட்ட கொள்கையினால்தான் சச்சரவுகள் வருகின்றன. திரிபிடகம் - புத்தரின் மெய்ய...

அமைதி,விசாரணை நடந்துகொண்டிருக்கிறது

சிறுகதை அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.              *************** ‘ அப்படியென்றால், உமக்குத் தெரியாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே..?’ கண்களை விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தன் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்க வேண்டிய அவரின் கண்கள் முகத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. ‘ கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கி சூடு நடந்தேறியதற்குப் பிறகே எனக்கு தகவல் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்...’ நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டுக்கொண்டிருந்தது. ‘ தகவல் தெரிவித்தவர் யார்...?’ அவரது இமைகள் ஏறி இறங்கின. கலெக்டர் விரல்களால் மீசையை நீவிக்கொண்டார். கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீ...

மதினிமார்கள் கதை

கோணங்கி எழுதிய சிறுகதைகளில் மதினிமார்கள் கதை பரவலான கவனிப்பைப் பெற்றது. அக்கதையை  இன்றைய தினம் வாசித்தேன். சாத்தூரையொட்டிய நென்மேனி மேட்டுப்பட்டியில்  வாழும் பெண்கள் செம்பகத்திற்கு மதினிகளாக இருக்கிறார்கள். அவனது மூக்கில் சின்ன வயதில் அணிவித்த செம்புகம்பியால் அவன் செம்புகோம் என கேலியாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகிறான். அவனை வேலைக்காரனாக , எடுபிடி ஆளாக,... சோறுப்போட்டு ஒரு ஊரே வளர்க்கிறது.  ஆவுடத்தங்க மதினி சுப்பு மதினி காளியம்மா மதினி அமராவதி மதினி குருவு மதினி மாணிக்க மதினி என மதினிமார்களுடன் வளர்ந்த செம்பகம் வெளியூரிலிருந்து  அக்கிராமத்திற்கு செல்கையில் அவ்வூர் எப்படியாக இருக்கிறது என்பதுதான் கதை சொல்லவரும் செய்தி.  இருண்ட தார் விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - என்கிற முடிவுப்பத்தியால் கிராமம் அடைந்த பரிணாமத்தைக் காட்டுகிறார். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக்குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது என்கிற இடம் துக்கத்தை நனைக்கும் வரி. பனையிலிருந்து கிடைக்கும் பொருளில் ஒன்றாக தவுண் அ...