அமெரிக்க எழுத்தாளர் தாமஸ் டிஷ் எழுதிய சிறுகதை இது. ‘ஸ்பீக் ஈஸி ’ ஒரு தேசத்தின் அதிபர் பிடிக்காதவர்களையும், பிடிக்காத விதிகளையும் கழற்றிவிடலாம் என நினைக்கிறார். அதற்காக அவர் சட்ட விதிகளைத் திருத்தம் செய்கிறார். அவர் செய்யும் சட்டத் திருத்தம் இவ்வாறு இருக்கிறது. ‘ பொது இடத்தில் நின்றுகொண்டு யாரும் யாருடனும் பேசிக்கொள்ளக்கூடாது. மீறி பேசுவதாக இருந்தால் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையில் உட்கார்ந்து பேசிக்கொள்ளலாம்’. இக்கதையை சமீப ஒரு நிகழ்வுடன் ஒப்பிட்டு பார்த்துகொள்ளலாம். பொது இடம் என்பது நாடாளுமன்றம். அவரவர் அறை என்பது சட்டமன்றம். சட்டமன்றத்தில் உட்கார்ந்தவாறு பேசிக்கொண்டிருந்த முதலமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காததன் விளைவு இந்த வருடம் நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. சட்ட மாமேதை அம்பேத்கரிடம் கேட்டார்கள். ‘ சட்டமன்றம் பெரியதா , நாடாளுமன்றம் பெரியதா...?’. அம்பேத்கர் சொன்னார். ‘ தற்போது இருக்கும் சட்ட விதிகளின் படி சட்டமன்றமே பெரியது. மாநிலங்கள் அவர்களுக்கான உரிமைகளைத் தக்க வைத்துக்கொள்ளும் வரைக்கும் சட்டமன்றமே ப...