என் உற்ற தோழர் அவர். முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் , அரசு விடுதியில் தங்கிப்படித்தப்பொழுது , எங்கேனும் வெளியூர்க்குச் சென்றால் , நட்பு வட்டங்களில் ,.... என பல இடங்களில் அவர் ஒரு தாழ்த்தப்பட்டவன் பெரும் அத்தனை அவமதிப்பு, சீண்டல்களையும் அவர் சந்தித்துவிடுவார். முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த அவருக்கு ஏன் இந்த நிலை...?. காரணம் இருக்கிறது. அவருடையப் பெயர் அம்பேத்கர்.
அம்பேத்கரின் பிறந்த தினம் ஏப்ரல் 14. அன்றைய தினம் சித்திரை பிறப்பு வேறு. அரசு விடுமுறை. அன்றையதினம் ஏன் விடுமுறை என்று விசாரித்து பார்த்தேன்.
மக்கள் சொல்லும் பதில் தமிழ் வருடப்பிறப்பு சித்திரை 1 என்றுதான் வருகிறதேத் தவிர அம்பேத்கர் பிறந்த தினம் என்று இல்லை. தை ஒன்று அல்ல, சித்திரை முதல் தேதிதான் தமிழ் புத்தாண்டு என சிலர் கொள்கைப்பிடிப்பு கொண்டிருக்க அம்பேத்கரின் பிறந்த தினம் ஒரு காரணம்.
இந்தியாவில் அம்பேத்கர் என்று ஒரு திரைபடம் எடுக்கப்பட்டது. இத்தனைக்கும் அது யு சர்டிபிகேட் படம். பெரியவர்கள் முதல் குழந்தைகள்வரை அத்தனைப்பேரும் பார்க்கலாம் எனும் வகைத் திரைப்படம் அது. ஆனால் அப்படம் அவருடைய பிறந்த நாள், இறந்த நாள், சுதந்திர தினம், அவர் எழுதிய அரசியலமைப்புச்சட்டம் நடைமுறைக்கு வந்த குடியரசு தினம் ,....ஏதாவது ஒரு தினத்தன்று அப்படம் எங்கள், உங்கள் என பறைச்சாற்றிக்கொள்ளும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்பட்டிருக்கிறதா.....? என்றால் இல்லை என்பதே பதில். தனியார் தொலைக்காட்சியை விடுங்கள். அட நமது தொலைக்காட்சி பொதிகையில்.....?. ஊகூம்....கிடையாது!
அம்பேத்கர் என்கிற திரைப்படம் எந்தவொரு தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பப்படவில்லை என்பது செய்தி அல்ல. அப்படம் தணிக்கைக்கு உட்பட்டு பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு கடைசி, கடைசியாக வேறு வழியில்லாமல் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறையின் அனுமதியுடன் அத்திரைப்படம் வெளியானது.
ஒரு திரையரங்கிலும் ஒரு நாள் முழுமையாக திரையிடப்படாமல், யாராலும் அவ்வளவாகக் கொண்டாடப்படாமல் கொல்லைப்புறம் வழியாக ஓடி ஒழிக்கப்பட்ட திரைப்படம் அது. எல்லாப்படங்களிலும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் மம்முட்டி அம்பேத்கர் படத்தில் மிகச்சிறப்பாக வாழ்ந்திருப்பார். தாழ்த்தப்பட்ட மக்கள் அளவிற்கு அம்பேத்கர் இஸ்லாம் மக்களுக்கு அவர் உழைத்தாரா என்று தெரியவில்லை. அதற்கான கால அவகாசம் அவருக்கு கிடைத்ததாகத் தெரியவில்லை. ஆனால் எத்தனையோ இந்து நடிகர்கள் இந்தியாவில் இருக்க ஒரு இஸ்லாம் நடிகர் அப்பாத்திரத்தை ஏற்று அம்பேத்காரரைப்போல வாழ்ந்தமைக்கு மம்முட்டியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அம்பேத்கர் பற்றிய விமர்சனத்தை தன்னை நம்பர் ஒன் வார , மாத இதழ் எனத் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் எந்த இதழிழும் எழுதியதாகத் தெரியவில்லை.
விஸ்வரூபம் என்கிற திரைப்படம்
தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டு முழுமையாக திரையிடப்பட முடியாத அசாதாரண சூழ்நிலையைக் கொண்டிருந்தது. ஆனால் அப்படத்திற்கான விமர்சனம் அந்த வாரமே முக்கிய இதழ்களில் வெளிவந்தது. அப்படம் ஒரு வெளிநாட்டில் ( சிங்கப்பூரோ,மலேசியாவோ ) பார்த்ததன் அடிப்படையில் அப்படத்திற்கான விமர்சனம் எழுதப்படுவதாக அவ்விதழ்கள் குறிப்பிட்டிருந்தது.
வெளிநாட்டிற்கேச் சென்று படம் பார்த்து விமர்சனம் எழுதும் நம்மூர் நம்பர் ஒன் பத்திரிக்கைகளுக்கு சில திரையரங்குகளில் ஒரே ஒரு காட்சியாக மட்டும் திரையிடப்பட்ட அம்பேத்கர் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதாதது ஏனோ...? என்கிற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுவதைப்போல அதற்கான காரணமும்
மனதில் உதித்துவிடுகிறது. வேறென்ன பெயர்தான்!
அம்பேத்கர் வரிசையில் அடுத்தொரு திரைப்படம் இடம் பெற்றிருக்கிறது. அது இந்தாண்டு இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் திரைப்படம் அது ‘கோர்ட்’. வெளி வருமா....? வந்தால் எல்லா திரையரங்குகளிலும் திரையிடப்படுமா...? என்பதையெல்லாம் தாண்டி அப்படம் மகாராஷ்டிரா மாநிலத்தில் திரையிடப்பட்டு பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் தலித் மக்களையும் அவர்களின் போராட்ட வாழ்க்கையையும் சொன்னதோடு மட்டுமல்லாமல் நீதி மன்றத்தின் ஆமை வேகத்தை விமர்சனம் செய்திருக்கிறது.
அம்பேத்கர் திரைப்படத்திற்கு முட்டுக்கட்டைக் கொடுக்க பல காரணங்கள் இருந்தன. அம்பேத்கர் காந்தியை விமர்ச்சித்தவர், இந்து மதத்தை சீண்டியவர்,,...இப்படியாக.... ஆனால் ‘கோர்ட்’ திரைப்பட முட்டுக்கட்டைக்கு என்னக்காரணம்....?
‘
கோர்ட் ’ இந்திய நீதித்துறையையை , அதன் வேகத்தை, அதன் உண்மை முகத்தை சர்வதேசத்திற்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது. அது மட்டும் அன்று. அப்படத்தில் அம்பேத்கர் எழுதிய ஒரு நூல் இடம் பெற்றிருக்கிறது.
அப்படத்தில் ‘நாராயண் காம்ப்ளே’ என்கிற கதாப்பாத்திரம் பெரிய அளவில் பேசப்படுகிறது. அவர் ஒரு தலித் போராட்ட பாடல் ஒன்றைப்பாட அந்நேரத்தில் ஒருவர் சாக்கடைக்குள் மயக்கமுற்று விழ , தலித் பாடல் பாடியதால்தான் அவர் மரணமுற்றார் என்பதாக படம் கோர்ட்க்கு இழுத்துச்செல்கிறது. தாமதிக்கப்படும் நீதியால் நாராயண் காம்ப்ளே குற்றவாளியாக மக்கள் முன் நிற்கிறார். தலித் மக்களையும், தலித் மீது இரக்கம் காட்டும் மக்களையும் இந்திய சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை அம்பேத்கர் கோணத்தில் அப்படம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
படத்தில் நாராயண் காம்ளே கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவர் வீர சகிதர். அவருக்கு காவலர்கள் கொடுக்கும் நெருக்கடி படு எதார்த்தம். அவருடைய வீட்டை திடீரென சோதனை இடுவதும், முக்கியமான கோப்புகள், அம்பேத்கர் எழுதிய புத்தகங்களை அள்ளிக்கொண்டுச்செல்வதுமான காட்சிகள் அதில் இடம் பெறும்.
இதில் இடம் பெறும் புத்தகம் ‘சாதி ஒழிப்பு ’. அப்புத்தகம் இந்து மதத்திலிருந்தபடி அம்பேத்கர் எழுதிய கடைசிப்புத்தகம். இக்காட்சியில் நடித்ததற்காக அவருக்கு பல வகையில் எதிர்ப்பும் பிரச்சனைகளும் வந்திருக்கவே செய்திருக்கிறது.
இப்படம் வெளிவந்ததன் சாதி இழிப்பு என்கிற புத்தகம் தேடிப்பிடித்து வாங்கிப்பிடிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை கூடுவதைக்கண்டு வட இந்திய இந்துத்துவவாதிகள் அப்புத்தகத்தை தேடிப்பிடித்து அழிக்கும் முனைப்பில் ஈடுபடுவது இதுத் தொடர்பான வேறொரு செய்தி.
அம்பேத்கர் எழுதிய புத்தகத்தில் ‘ சாதி ஒழிப்பு ’ என்கிற புத்தகம் பல போராட்ட வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது. ஆம்...அவர் இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறுவதற்கு முன் எழுதப்பட்ட கடைசி புத்தகம் மட்டுமன்று. 1936 ஆம் ஆண்டு லாகூர் ‘ ஜாத் - பட்- தோடக் மண்டல்’ என்கிற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்கு தலைமை உரையாற்ற தயாரிக்கப்பட்ட புத்தகம் அது. ஆனால் அந்தத் தயாரிப்பு உரையை அம்பேத்கர் அவர்கள் அந்த மாநாட்டில் ஆற்ற முடியவில்லை. காரணம் , அம்மாநாட்டு வரவேற்புக்குழு அத்தயாரிப்பில் இடம் பெற்ற ‘ வேதம் ’ என்கிற சொல்லையும், அதன் பின்னணி கருத்துகளையும் நீக்கச்சொல்லி கடிதம் எழுதியது. அம்பேத்கர் அதற்கு மறுப்பு தெரிவித்து கடிதம் எழுதியதுடன் அம்மாநாட்டிற்கு தான் தலைமை ஏற்பதாக இருந்த முடிவையும் விலக்கிக்கொண்டார்.
இந்து மதத்திலிருந்து அவர் ஆற்றப்பட்டிருக்க வேண்டிய கடைசி உரை அவரால் உரையாற்றாமல் போனாலும் சர்வதேச புத்தக விமர்சகர்களின் மிகச்சிறந்த புத்தகங்களின் வரிசையில் ‘ சாதி ஒழிப்பு’ இடம் பெற்றிருப்பதை யாராலும் தவிர்க்க முடியவில்லை. அப்புத்தகம் அத்திரைப்படத்தில் இடம் பெற்றிருப்பது இந்துவா மீது தலை வைத்து படுத்திருக்கும் பலரின் கண்களை உறுத்தவே செய்கிறது. அப்படம் மொழி கடந்து பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்ய இடையூறுகள் இறுக்கவே செய்கிறது.
சமீபத்தில் வெளியான ‘இந்தியாவின் மகள் ’ என்றொரு ஆவணப்படம் நாம் பார்க்கப்படாமலே மறக்கடிக்கப்பட்டது. அத்தனைக்கும் இந்தியாவைப்பற்றியும் இந்தியாவில் பெண் சுதந்திரத்தின் மீதான
ஒடுக்கு முறைப்பற்றிய ஆவணப்படம் அது. நம் முகத்தைக் காட்டும் கண்ணாடி போல நம் தேசத்தை சரியானக் கோணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட படம் அது. அப்படத்தின் வரிசையில் மற்றொரு ஆவணப்படம் இடம் பெற்றிருக்கிறது. அது ‘ காஸ்ட் ஆப் மெனு கார்ட்’. அது மாட்டுக்கறி பற்றிய ஆவணப்படம்.
கடந்த சனிக்கிழமை புது டெல்லியில் ஜீவிகா ஆசியா லைவ்லி ஹீட் ஆவணப்பட விழா நடைபெற்றது. அதில் திரையிடப்பட வேண்டிய படமாக அப்படம் இருந்தது.
அப்படத்திற்கான விலக்குச்சான்றிதழ் அனுமதியை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தர மறுத்துவிட்டது. காரணம் , அப்படத்தின் சுருக்க அறிமுகத்தில் மும்பையில்
பசு மாட்டிறைச்சி உண்டு வாழும் மக்கள் பற்றிய பதிவுகள் இருந்ததாம்.
இந்தியாவில் இன்றைய பிரச்சனை பசு மாட்டுக்கறி. நாளை இதுவே பிரச்சனை அல்ல. கிருஷ்ணன் அவதாரமெடுத்த பன்றி, விநாயகர் பெருமானுக்குப்பிடித்த எலி, இயேசு நாதர் மேய்த்த ஆடு,.... என பல விலங்குகளும் பிரச்சனைக்குரிய விடயமாக மாற வாய்ப்பிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க மாட்டிறைச்சியை ஆதரித்து கட்டுரை எழுதிய அரசு இதழ் ஆசிரியர் ஹரியானாவில் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
தற்போது இந்தியாவில் அதிகமாக வாசிக்கப்படவும், இந்துத்துவத்தால்
எதிர்க்கப்படும் , கோர்ட் திரைப்படத்தில் இடம் பெற்ற புத்தகமான ‘ சாதி ஒழி்ப்பு’ புத்தகத்தில் இப்படியொரு
சம்பத்தை அம்பேத்கர் பதிவு செய்திருக்கிறார்.
முன்னொரு காலத்தில் மகாராட்டினத்தில் ராமதாசர் என்றொரு துறவி இருந்தார். அவர்தான் சிவாஜியை இந்து ராஜ்யம் அமைக்கத் தூண்டியவர். அவரது உரை ‘ தச போதனை ’ என அழைக்கப்பட்டு வருகிறது. அவரது உரையின் மிக முக்கியமானச் சொல் ‘ அந்த்யாஜா’ . இதற்கானப் பொருள் ‘தீண்டத்தகாதவர்’.
தீண்டத்தகாதவர் கல்விக்கற்றுக்கொள்ள உரிமை கிடையாது என்கிறது அவரது போதனை. ஒரு வேளைக்கல்விக்கற்றுக்கொண்டாலும் அவர்களை ஒரு போதும் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அந்தத்துறவி.
அம்பேத்கர் ‘ ஜாத் - பட் - தோடக் மண்டல்’ அமைப்பில் அம்பேத்கர் தலைமை உரை ஆற்றமுடியாமல் போனதற்கு அதுதான் காரணம். இன்று மாட்டு இறைச்சிப்பற்றிய ஆவணப்படம், கோர்ட் என்கிற திரைப்படம் போன்றவைகளுக்கு பலத்த எதிர்ப்புகள் ஏற்படுவதற்கும் அதுதான் காரணம்.
அம்பேத்கரின் பிரபலமான ஒரு வாசகம் ஒன்று உண்டு. ‘ சாதி அமைப்பை உடைக்க உண்மையான வழி, சமபந்தி விருந்துகளோ, கலப்பு மணங்களோ அல்ல. சாதியைத் தோற்றுவிக்க காரணமாக உள்ள மதக்கோட்பாட்டை ஒழிப்பது ஒன்றே.....’
கோர்ட்
உடைக்க வேண்டிய சில முட்டுக்கட்டைகளை ‘ கோர்ட் ’ திரைப்படம் உடைக்க வந்திருக்கிறது.
பெரும்பாலும் தெரிவு செய்த திரைப்படங்களையே சில வருடங்களாகப் பார்த்துவருகிறேன். அம்பேத்கர் திரைப்படத்திற்கு நாங்கள் சென்றபோது எங்களையும் சேர்த்து படம் பார்க்கவந்தவர்கள் 13 பேர் மட்டுமே. வேதனையாக இருந்தது. தேவையானதை, தெரிந்துகொள்ளவேண்டியதை நம்மவர் பலர் விட்டுவிட்டு விலகிச் செல்வது வேதனையாக உள்ளது. கோர்ட் திரைப்படம் பற்றி தங்களது பதிவு மூலமாக அறிந்தேன். நன்றி.
பதிலளிநீக்குகோர்ட் திரைப்படம் அறிந்தேன்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
கோர்ட் திரைப்படம் பார்க்க வேண்டும்... நன்றி...
பதிலளிநீக்குநானும் பார்க்கிறேன்...
பதிலளிநீக்கு