சிறுகதை தேர்வு எண் 259742 வகுப்பு ஆறு பாடம் கணக்கு அ. சுருக்கமான விடை 1. “ சிக்புக், சிக்புக் , சிக்புக்..............................” 2. இரயில் சத்தத்தைக் கேட்டதும் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தேன் . உடம்பெல்லாம் வலி . தீ சுட்டதைப்போல ஆடைக்குள் எரிச்சல் . ஆடையை இரத்தம் நனைத்திருந்தது . அதை லாவகமாக மறைத்துகொண்டேன் . இரவெல்லாம் தூக்கம்இல்லாததால் இதயம் திடும்திடும் என மார்புக்கூட்டை இடித்துகொண்டிருந்தது . கண்களை உருட்டித்திரட்டி விழிக்க முடியவில்லை . ...