பி ன்னொரு காலத்தில் ஆசிய நில வரைபடத்தை அழித்து , திருத்தி வரையும் படியான தீர்ப்பு அன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டது . தீர்ப்பை வாசித்தவர் பிரெஞ்சு நீதிபதி லூயிஸ் ட்ரேபஸ்ஸாக இருந்தார் . தீர்ப்பைக் கணித்து சரியாக எழுதுவதில் பிரிட்டிஷ் நீதிபதிகளுக்கு நிகரானவர் அவர் . ஒரு வருடக் கால தொடர் விசாரணைக்குப்பிறகு அவர் இராணுவ தளபதி கேப்டன் ஆல்பர்ட் டிரைபஸ் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கியிருந்தார் . பிரெஞ்சு நாட்டின் மொத்த இராணுவத்தையும் தன் விரல் நுனியில் வைத்திருந்தவன் கேப்டன் டிரைபஸ் . தரைப்படை தளபதி . இளைய வயதில் இத்தகைய உயர் பதவிக்கு வந்தவர்கள் இதற்கு முன்பு யாரும் இருந்திருக்கவில்லை . துடிப்பான , மிடுக்கான இளைஞன் அவன் . பிரெஞ்சு வீதியைப்போல உடல்வாகு கொண்டவன் . டிரைபஸ் குற்றவாளியாக நிறுத்தப்பட்டதும் , அவனுக்கு எதிராக தீர்ப்பு வரப்பெற்றதும் பிரெஞ்சு மக்களுக்கு பெருத்த அவமானமாக இருந்தது . முடியாட்சியிலிருந்து குடியாட்சிக்கு திரும்பியப் பிறகு சீர்க்குலைந்த இராணுவத்தால் நாடு...