ரெயினீஸ் ஐயர் தெரு - வண்ணநிலவன் ரெயினீஸ் ஐயர் தெரு குறுநாவல் அளவில் இருக்கிறது. எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவந்த நாவல் அது. இலக்கிய ரீதியில் நான் யாருக்காவது பெரிதும் கடன்பட்டிருக்கிறேன் என்றால் அது க.நா.சு.வுக்குத்தான். ‘ இலக்கிய விசாரம்’ என்ற நூலில் க.நா.சு ‘எழுத்தில் சோதனை முயற்சிகள் செய்து பார்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கருத்தை என் இலக்கியச் செயல்பாடுகளின் அடிப்படை அம்சமாகக் கொண்டுள்ளேன் என்கிறார் முன்னுரையில் வண்ணநிலவன். ரெயினீஸ் ஐயர் தெரு நாவலை வாசிக்கையில் அதன் உருவமும், நடையும் அப்படியாகத்தான் தோன்றுகிறது. ரெயினீஸ் ஐயர் தெருவின் ஆரம்பம் திருவனந்தபுரம் ரோட்டிலிருந்து பிரிகிறது. இருபுறமும் வீடுகள் கொண்ட மொத்தமே ஆறு வீடுகள். அவ்வீடுகள் அவர்களின் வாழ்க்கைச்சூழல் , கொண்டாட்டம், அமைதி, இருப்பு, வாழ்க்கைக்கூறுகள் , அன்றாட பொழுது போக்குகள் இவற்றைச் சொல்லிச்செல்வதுதான் இந்நாவல். முதல்வீடு - இரண்டாவது வீடு - மூன்றாவது வீடு - திரும்பவும் முதல் வீடு - நான்காவது வீடு - இன்றொரு நாள் முதல் வீடு - தெரு -இப்படியாக வடிவமைப்பைக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் நாவல் இத...