நிற வேறுபாடு தலைத்தூக்கியிருந்தக் காலத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற கனவோடு ஒரு கருப்பின மாணவி மருத்துவ கல்லூரிக்குள் நுழைந்தாள். ஒரு கருப்பின பெண் தமக்கு நிகராக மருத்துவம் படிப்பதா…என வெகுண்டெழுந்த ஆங்கிலேய மருத்துவர்கள் அவளை அழைத்து அவளுக்கொரு தேர்வு வைத்தார்கள். அத்தேர்வு இப்படியாக இருந்தது. ‘ கை நடுக்கமில்லாமல் உனக்கு நீயே இந்த ஊசி மருந்தை செலுத்திக்கொள்ள வேண்டும்’ அவளுக்கு முன்பு ஊசி, சிரஞ்ச், மருந்துக்குப்பி வைக்கப்பட்டிருந்தன. மருந்துக்குப்பியை எடுத்துப்பார்த்தாள் அவள். அக்குப்பியில் இருப்பது விஷமாக இருந்தது. விஷம் எனத் தெரிந்தும் மருத்துவராகும் கனவில் விஷத்தை சிரஞ்ச்சில் எடுத்து கை நடுக்கமுமில்லாமல் அவளது உடம்பில் செலுத்திக்கொண்டு மருத்துவராகிவிட்ட மகிழ்ச்சியில் வேரோடு சாய்ந்தாள். நீக்ரோ என்கிற சொல் தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய பொழுது மருத்துவம் படிக்க விரும்பிய ஒரு கருப்பினப் பெண்ணிற்கு ஏற்பட்ட கோர நிகழ்வு இது. அவளது மரணத்தை உலகப் பத்திரிக்கைகள் இவ்வாறு எழுதின. ‘அவளது கனவு மருத்துவராக வேண்டும் என்பதுதான். மருத்துவராக வாழ்வதில் அல்ல…’ மருத...