மீன்கள், ஜனநாயகத்தின் மீதிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டிருந்தன. குட்டிகள், வளரினங்கள், முட்டையிடும் மீன்கள் யாவும் தலைமையின் மீது அதிருப்தி கொண்டன. அக்கிணற்றில் மிகச்சிறிய மீனான நெத்திலி முதல் கட்லா, ரோகு, மிர்கால், வெள்ளிக்கெண்டை, புல்கெண்டை, சாதாக் கெண்டை,...என இருபதுக்கும் மேற்பட்ட மீனினங்கள் வாழ்ந்து வந்தன. அம்மீனினத்தில் பெரிய இனமாக புல் கெண்டை இருந்தது. அம்மீன் கூட்டத்திற்கு தலைவனாக இருந்தது. அம்மீனிற்கு எதிராகத்தான் மற்ற மீனினங்கள் தன் எதிர்ப்புகளைக் காட்டியிருந்தன. சிறு, பெரும் அலைகளை உருவாக்கி கிணற்றைக் கொந்தளிக்க வைத்தன. சிறிய மீன்கள் வாயை ‘ஆ...’வெனத் திறந்து வானத்தைப் பார்த்து செத்ததைப்போல காட்டி தன் அதிருப்திகளைக் காட்டின. நடுத்தர மீன்கள் வால் துடிப்புகளால் தண்ணீரை அடித்தும் பெரிய மீன்கள் தாவிக்குதிப்பதுமாக இருந்தன. இக்கூட்டத்திற்கு தலைவனாக இருக்கின்ற புல் கெண்டை கிணற்றின் அடியில் உயிர் வாழக்கூடியது. கிணற்றின் சகதிக்குள், துடிப்புகளைப் புதைத்து ஓய்வு எடுப்பவை. சகதி தரும் குளுமையும் அதன் கொழகொழுப்பும் அதற்கு இனிமைாக இருப்பவை. அம்மீன் தன் பிள்ளைக்குஞ்சுகளுடன் உல்லாசமாக...