முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஒரு நாடோடிக்கலைஞன் மீதான விசாரணை

‘ என்ன வேலை பார்க்கிறாய் நீ...’ ‘ பாடகனாக இருக்கேன்....’  ‘ உன் தொழிலைக்கேட்கிறேன்....?’ ‘ தொழிலைத்தான் சொல்கிறேன்....’ ‘ பாடுறது ஒரு தொழில் கிடையாதே....’ ‘ இருக்கலாம்.  நான் அதை முறைப்படுத்திச் செய்துகிட்ருக்கேன்...’ ‘ எதையெல்லாம் பாடுவ...?’ ‘ என்னெல்லாம் எழுதுறேனோ அதையெல்லாம் பாடுவேன்’  ‘ நீ எழுதியது எதாவது இதழ்களில் வந்திருக்கிறதா....?’ ‘ வந்ததில்லை....’  ‘ பிறகு ஏன் எழுதுறே......?’ ‘ பாடுவதற்காக எழுதுகிறேன்......’ ‘ என்னெல்லாம் எழுதியிருக்கே.....?’ ‘ பாட்டாளியைப்பற்றி எழுதிருக்கேன்... அவன் வாங்குகிற கூலி வீடு போய் சேராததைப்பற்றி எழுதிருக்கேன் ....’ ‘ பாட்டாளியை மட்டும்தான் எழுதுவே....ம்....?’ ‘ அரசியல்வாதிகளையும் எழுதிருக்கேன்....’ ‘ அவர்களைப்பற்றி எப்படி எழுதியிருக்கே..?’ ‘ அவர்கள் செய்கிற ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, அவர்கள் நடத்துகிற சாதி அரசியல், மத அரசியல்,....இதெல்லாம் பற்றி எழுதியிருக்கேன்.....’ ‘ எங்களப்பத்தி எழுதியிருக்கீயா....? ‘ ம்......’ ‘ எப்ப.....?’ ‘ சீர்காழியில ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி ஒரு போலீஸ்...

குருதியில் நனைந்தக் குருளைகள்

அவர்கள் பேசிக்கொள்ளும் அரவம் முன்னே விடவும் பலமாகக் கேட்கத் தொடங்கின. அவர்கள் ஊர்க்கதைப் பேசி, நாட்டு நடப்புகளைச் சுற்றி ‘ஜோஸ் மார்ட்டி’ எனும் போராளியை வட்டம் கட்டினார்கள்.  ஒருவன் சொன்னான் ‘ பிறந்தால் ஜோஸ் மார்ட்டி போல் பிறக்க வேண்டும்’ மற்றொருவன் ‘ அவர் அப்படி என்ன செய்து விட்டார்....?’ முதலானவன் இரண்டாவது நபர் மீது எரிந்து விழுந்தான். அடிக்கக் கையை ஓங்கினான்.‘ நல்லக்கேள்வி கேட்டாயடா நீ... அவரை மட்டும் இந்த சண்டாள ஸ்பானியர்கள் விட்டு வைத்திருந்தால் இன்றைக்கு அமெரிக்கர்கள் நம்மிடம் இப்படி வாலாட்டுவார்களா....? அமெரிக்கர்களின் வாலை அவன் ஒட்ட வெட்டியிருப்பான்.....’       கரும்புத் தோகையால் வேயப்பட்ட குடிசைக்குள் இருந்தபடி அவர்கள் ஜோஸ் மார்ட்டி நிகழ்த்திய சாகசத்தை கர்ஜனையோடுப் பேசிக்கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் அவர்களது பேச்சு உரத்தக்குரலிலும் சில இடங்களில் நிறுத்தி மெல்லமாகவும் இருந்தது.        அவர்கள் ஏஞ்சல் பண்ணையாரின் இரவு நேரக் காவலர்கள். ஒரு அரிக்கேன் விளக்கை ஏற்றி  வைத்துகொண்டு கதைப்பேசுவதும்...

போர் கலகமாகுமா....?

‘ வீட்டுக்கொரு ஆண்மகன் நாட்டைக்காக்க புறப்படுக....’ என்றொரு நாடகம் ஒரு பள்ளி ஆண்டுவிழாவில் நடந்தது. ஒரு மாணவித்தாய் குழந்தையைப்பெற்று, வளர்த்து மன்னனையும், நாட்டையும் காக்க வீர வசனம் பேசி தன் மகனைப் போர்க்களத்திற்கு அனுப்பி வைத்தாள். அப்பொழுது பார்வையாளர் தரப்பிலிருந்து ஒரு மூதாட்டி எதிர்ப்பு தெரிவித்தாள். ‘அவனை நீ அனுப்பாதேடியாத்தா....போனவருசம் இதே நாள்ல ஒரு மகனை அனுப்பி வச்சேல்ல.....அது போதாதாக்கும்....’. அவள் அப்படிச்சொன்னதும் ‘ குபீர்’ ரென எழுந்தச் சிரிப்பொலி  அடங்க நீண்ட நேரம் பிடித்தது.        ‘ என் மகன் எங்கே இருக்கிறான் என்பதை நான் அறியேன்..... ஒரு வேளை அவன் தோன்றக்கூடும் போர்க்களத்தில்.....’ என பெண்பாற்புலவர் காவற்பெண்டு காட்டும் புறநானூற்று தாய் முகத்தில் உண்மையில் வீரம் செறிந்திருக்குமா....? மகன்களை போரில் சிரித்துகொண்டு பலிக்கொடுக்குமளவிற்கு தாய் என்ன வெறும் சடம்தானா....?. ‘அய்யோ.....! நான் கொடுத்த பால் எல்லாம் இப்படி இரத்தமாக ஓடுகிறதே....’ என ஒரு திரைப்படத்தாய் பேசும் வசனத்தைப்போல போர்க்களத்தாய் பேசியிருக்க மாட்டாளா....? பெத்த வயிறு பி...

லெக்கிங்ஸ்

       ‘ எ த்தனை ஆடைகள் இருந்தென்ன.....லெக்கிங்ஸ் அணிவது தனி சுகம்தான். லெக்கிங்ஸை வடிவமைச்சது யாருனு கண்டுப்பிடிச்சு அவருக்கொரு விருதுக்கொடுக்கணும். என்ன சொல்றே நீ.....?’ என்றவாறு யாரிடமோ அவள் அலைபேசியில் அலாவிக்கொண்டிருந்தாள் கண்மணி.        ‘வறுமை நிறம் சிவப்பு அல்ல. லெக்கிங்ஸ்’ இது வறுமைக்கு அவள் வகுத்திருக்கும் இலக்கணம். ஒரு சேலை எடுக்கும் விலையில் பத்து லெக்கிங்ஸ் எடுத்துவிடலாம் என்பது அவளது சமீப பொருளாதாரக் கண்டுபிடிப்பு. குட்டைப்பாவாடை அணிந்து டென்னிஸ் விளையாடும் சானியா மிர்ஸா அக்காவிற்கு இரண்டு மூன்று லெக்கிங்ஸாவது  எடுத்து அனுப்பி வைக்க வேணும் என்பது அவள் கொண்டிருக்கும் இலட்சியங்களில் ஒன்று.           சேலை அணிந்து போட்டி நடனமாடிய பார்வதிதேவி ஒற்றைக்காலைத்தூக்கி காதின் அணிகலனைக் கலட்ட முடியாமல் சிவபெருமானிடம் தோற்றுப்போனவளுக்கு லெக்கிங்ஸ் வாங்கிக்கொடுத்து அந்தப்போட்டியை மறுபடியும் நடத்திப்பார்த்திட வேணும் என்பது அவளது மற்றொரு இலட்சியம்.     ...