முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேள்வித்தீ - நாவல்

வேள்வித்தீயும் சில வேள்விகளும் வேள்வித்தீ  - நாவலை முன் வைத்து இதற்கு முன்பு தொ.மு.சி ரகுநாதனின் பஞ்சும் பசியும் வாசித்திருக்கிறேன். தமிழின் முதல் கம்யூனிச நாவல் என்கிற அடையாளம் அதற்கு உண்டு.  அந்நாவல் பேசும் அதே நெசவாளர்களின் பிரச்சனையைத்தான் வேள்வித்தீ என்கிற நாவலும் பேசுகிறது. பஞ்சும் பசியும் நாவலில் பஞ்சாலை தொழிலாளர்கள், முதலாளிகள் இருவரும் உழைக்கும் வர்க்கத்தினரின்  எதிரும் புதிருமான பாத்திரங்களாக படைத்திருப்பார் ரகுநாதன். தொழிலாளர்களின் உழைப்பையும் , அவர்களின் சார் உரிமைகளையும் , அதை நோக்கி முன்னெடுக்கும்  போராட்டக்களத்தையும் அந்நாவல் பேசும். மேலும் அந்நாவலில் சாதி, இனக் கூறுகளை எப்படித் துருவிப் பார்த்தாலும் கண்டடைய முடியாது. ஆனால் வேள்வித்தீ அப்படியன்று. வேள்வித்தீ சௌராஷ்டிரா மக்கள் , அவர்களின் வாழ்வியல் பின்னணி, உறவு முறைச் சிக்கல், அவர்களின் வாழ்வாதார நெசவுத்தொழில், அத்தொழில் மீது எழுப்பப்படும் கடன் , தொழிலாளி முதலாளியாகத் துடிக்கும் தொழிற்சார் முன்னேற்றம், காதல் , விதவை, காதல் காமம் சார்ந்த நெருக்கம் , பிணக்கம் , அரசுக்கும் முதலாளிகளுக்கும் எதிரா...