நாவல் - அனல்காற்று @ஜெயமோகன் பாலு மகேந்திரா எடுக்கவிருந்த படத்திற்காக தான் எழுதிய கதை இது என்பதாக முன்னுரை பேசுகிறது. ஒரு வேளை எடுத்திருந்தால் படம் நன்றாக ஓடவும் செய்திருக்கும். இந்நாவலை வாசித்ததும் எனக்கு அவள் அப்படித்தான் என்கிற திரைப்படம் நினைவிற்கு வந்தது. அப்படத்தின் சிறப்பாக நான் பார்ப்பது திரைபடத்தின் உரையாடல். படம் முழுக்கவும் கதாநாயகி பேசிக்கொண்டிருப்பாள். அப்படியாகவே இந்நாவல் முழுக்கவும் அருண் , தன்னை விட்டு பிரிந்து சென்ற சுசியை நினைத்து மருத்துவமனையில் தனக்குத்தானே பேசுவதுதான் கதை. தன்னை விரும்பும் சுசியிடம் தான் விரும்பும் சந்திரா குறித்து பேசுகிறான் அருண். சநதிரா , விதவைப்பெண். அவளுக்கும் அவனுக்குமான நெருக்கத்தை அப்படியே படமாக்கியிருந்தால் படத்திற்கு A சான்றிதழ் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. இதுதவிர fuck , boobs வார்த்தைகள் வேறு. நாவலின் ஓரிடத்தில் தாய்க்கும் ஜோ என்கிற கதாப்பாத்திரத்திற்கும் இடையேயான நெருக்கத்தையும் பேசுகிறது. உரையாடல்கள் அருமை. சில இடங்கள் காதலையும் , காமத்தையும் , தத்துவத்தையும் பேசுகிறது. நாவலின் முடிவு நாடகத்தனம். சந்திரா அருணிடமிரு...