முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நூல் பரிசுப்போட்டி

இராஜபாளையம் மணிமேகலை மன்றம் 59-ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு நடத்தும் நூல்களுக்கான பரிசுப் போட்டி 2015, 2016 ஆம் ஆண்டுகளில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, சிறுவர் இலக்கியம், மொழியாக்கம் ஆகிய துறைகளில் வெளியான முதல் பதிப்பு நூல்களில் மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ரூ 5000 பரிசளிக்கப்படும். எழுத்தாளர் முகவரி, கைப்பேசி எண், தன்முகவரியிட்ட இரண்டு அஞ்சலட்டைகள் அனுப்ப வேண்டும். நூலில் ஏதும் எழுதுதல் கூடாது. ஏற்கனவே பரிசு பெற்றவர்கள் கலந்து கொள்ள வேண்டாம். முடிவு நாள் : 15-07-2017 அனுப்பவேண்டிய முகவரி: தலைவர், மணிமேகலை மன்றம், 146/1 குறிஞ்சித்தெரு, பி.எஸ்.கே. நகர் அஞ்சல், இராஜபாளையம் 626 108 பேசி : 99444 15322

இலக்கியப்போட்ட2017

தேவைதானா தேக்கம்..?

ஆண்டன் செகாவ் எழுதிய ஒரு சிறுகதை ' தும்மல் '. ஒரு தொழிலாளி நாடகக் கொட்டகையில் நாடகம் பார்ப்பார். எதேச்சையாக தும்மல் வந்து விடும். தும்மலின் ஒரு துளி அவர் வேலை பார்க்கும் பெரிய அதிகாரியின் மீது தெறித்து விழுந்து விடும். எச்சில் தெறித்திருப்பது அதிகாரி எனத் தெரிந்ததும் தொழிலாளிக்கு பயம் தொற்றிக்கொள்ளும். அதிகாரியிடம் மன்னிப்பு கேட்பார் தொழிலாளி. அதிகாரி முகத்தைக் கோபமாக வைத்துகொண்டு ஆமோதிப்பார். அதிகாரி மீதான பயம் அவரை விட்டு போகாது. அதிகாரியை பார்க்கும் இடமெல்லாம் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்பார். அதிகாரி தலையாட்ட மட்டும் செய்வார். தன்னை இன்னும் அதிகாரி முழுமையாக மன்னிக்கவில்லை என நினைத்து கொண்டு அத்தொழிலாளி அர்த்த ராத்திரியில் தூக்கம் வராமல் தவித்து அதிகாரியின் வீட்டு கதவைத் தட்டி மன்னிப்பு கேட்பார். அதிகாரியின் கோபத்தால் அத்தொழிலாளியின் வேலை பறிபோகும். இக்கதையை வாசிக்கும் பொழுதெல்லாம் எனக்கு பதினைந்து இருபது வருடங்களுக்கு முந்தைய பள்ளிக்கல்வி முறை நினைவிற்கு வரும். தும்மல் கதையில் இடம்பெற்றுள்ள அதிகாரி பாத்திரத்தில் ஆசிரியரையு...

கவிமுகில் அறக்கட்டளை விருது

நூல்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி - காக்கைச் சிறகினிலே

22 இலட்சங்கள் பரிசுத்தொகை விருதுகள்

22 இலட்சங்கள் பரிசுத்தொகை விருதுகள் நூல்கள் வரவேற்கப்படுகின்றன. Google+ Calendar Web more Primary Fwd: தமிழ்ப்பேராய விருதுகள் - 2017 V Venugopalan SV to 31 minutes agoDetails அன்பானவர்களுக்கு படைப்புகளுக்கான விருது குறித்த மெயிலை யாரோ அன்பர் அனுப்பியிருந்தார்- forward செய்துள்ளேன், பார்க்கவும். இணையதள முகவரி இங்கே: http://www.srmuniv.ac.in/sites/default/files/2016/tp_awards2017.pdf எஸ் வி வி பேரன்புடையீர், வணக்கம். இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் என்ற ஓர் அமைப்பை நிறுவி கடந்த ஆறு ஆண்டுகளாக அரிய தமிழ்ப்பணிகளை ஆற்றிவருகிறது. அதன் பணிகளில் ஒன்றாக ரூ. 22,00,000 மதிப்பிலான 12 தலைப்புகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, பாரதியார் கவிதை விருது, அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது, ஜி.யூ. மொழிபெயர்ப்பு விருது, பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது, ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது அல்லது முத்துத்தாண்டவர் தமிழிசை விருது, புலம்பெயர்ந்த படைப்பாளிகளுக்கான விபுலானந்தர் பட...