வாரத்தின் முதல்நாள், ஞாயிற்றுக்கிழமை பிறந்தால் போதும். உங்கள், எமது, நமது தொலைக்காட்சிகளுக்கு படுகொண்டாட்டம்தான். அதிலும் செய்தி சேனல்களுக்கு சொல்லவே வேண்டியதில்லை. செய்தியோடு விளையாடி, செய்தியோடு உறவாடி, செய்தியோடு மல்லுக்கட்டும் செய்தி, செய்தி, செய்திகள்தான். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தொடங்கும் செய்திகள் இரவு பனிரெண்டு மணியானால் ‘குட் நைட்’ அவர்களின் வாயிலிருந்து வரணுமே......! மணி ஐந்துக்கு திரைச்செய்திகள். ஆறுக்கு வரிச்செய்திகள். ஏழு மணிக்கு தலைப்பு செய்திகளுடன் கூடிய அரசியல், விளையாட்டு, உலக செய்திகள் மணி எட்டுக்கு அரை வட்ட அமர்வுகள். மணி ஒன்பதுக்கு நேர்க்காணல். நேர்க்காணல், விவாதங்கள் நடத்திடாத தொலைக்காட்சி ஒரு தொலைக்காட்சியா.... எனச் சொல்லும் அளவிற்கு எல்லா தொலைக்காட்சிகளும் நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தத்தொடங்...