‘ தலித் ’ என்னொரு தலைப்பில் ஒருவர் சிறுகதை எழுதி ‘ இதுதான் தமிழ்நாடு ’ என்றார் . அக்கதையின் தலைப்பை ‘ பீகாரி ’ என மாற்றி ‘ இதுதான் இந்தியா ’ என்றேன் . மநுதர்மத்தின் படி ஊருக்கொரு சேரி தேவை. இந்தியாவின் சேரி பீகார். பீகார் மீதான இந்தியப் பார்வை இது. இந்தியாவில் உள்ள அனைத்து சாதிகளுக்கும் தோற்றுவாய் பீகார்தான் . இந்தியாவில் அதிகமான சாதிகளையும் , சாதிகளுக்குரிய பிசுபிசுப்புகளையும் கொண்ட மாநிலம் அது. ‘ மதம் பெரிதா .... சாதி பெரிதா ....?’ - சந்தேகமே வேண்டாம். மதம்தான் பெரியது . ஆம் ! அது நேற்றைய வரைக்கும் . இன்றைக்கு சாதிதான் பெரியது . மதத்தை அடித்தளமாகக் கொண்ட ஆளும் பிஜேபி கட்சியை சாதியை அடித்தளமாகக் கொண்ட லாலு என்கிறப்பிம்பம் வீழ்த்திருக்க...