முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நரகாசுரன்

ப ட்டாசுப்பாண்டியின் பட்டாசுக்கடை களையிழந்துப்போயிருக்கிறது . கடையைப்பார்க்க தீபாவளி கடையாகத்தெரியவில்லை . கடை துடைச்சிக்கிடக்கிறது . “ அண்ணே .... இந்த வெடி எவ்வளவுண்ணே ...” “ இது என்ன வெடிண்ணே ...” “ அண்ணன்ணே ...... எனக்குக் கொடுத்திருங்கண்ணே .....” பலா பழத்தில மொய்க்கும் ஈக்களைப்போல கடையில்கூட்டம் மொய்யோ மொய்னு மொய்க்கும் . கூட்டம் , நெரிசல் , கைநீட்ட , எக்கிப்பார்க்க , தள்ளுமுள்ளு , சச்சரவென ... கடை எப்படியெல்லாமோ இருக்கும் .... கடையில்எதிர்ப்பார்த்தக்கூட்டமில்லை . ஒன்றிரண்டுப்பேர்கடையச்சுற்றி நின்றுக்கொண்டு பட்டாசுகளை எடுத்துப்பார்க்கிறதும் , விலையைக்கேட்கிறதும் , ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கிறதும் , உதட்டைப் பிதுக்கிறதுமாக இருக்கிறார்கள் . கடையில்இருக்கிற ஒரு பெரிய் .... ய மேசையில பட்டாசுகள்குவிந்துக்கிடக்கிறது . ஆய்ந்துக்கட்டிய பைத்தங்காய் பிஞ்சுகளைப்போல சரவெடி . குவித்த பல்லாரியைப்போல வெங்காய வெடி . கோபுரம் சாய்ந்த புஸ்வானமென ...... விதவிதமான பட்டாசுகள் . கந்தகத்தையும் நைட்ரேட் உப்பையும் கலந்துச்செய்தப் பட்டாசுகள் . டெசிபலைக...